பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

லஞ்சத்தை மட்டுமே காரணம் காட்டி சுயதொழிலை குறை கூறுவது சிறந்தது இல்லை. தடைகள் பல வந்தாலும் அதனை சமாளித்து முன்னேற வேண்டும். அதனால் சுய தொழிலே சிறந்தது என சாந்தினி சொல்கிறார்.

(லஞ்சத்தை பற்றி நம் பட்டி இல்லை என்ராலும் கூட) லஞ்சத்தை காரணம் காட்டி தான் பலர் வேலைக்கு போவது சிறந்தது என சொல்கின்றனர். இது உண்மையா?

மற்றவர்கள் என்ன சொல்ல போறீங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//எதிரணி தோழி சுய தொழில் செய்வதற்கு பல வழியில் முயன்றதை பற்றி எழுதியிருந்தார்.அவர் முயற்சிக்கு hats up . அவர் எழுதியிருந்த தொழில் அவர்களுக்கு பொருத்தமானது இல்லை என்று நினைகிறேன் அதனால் தான் அவர்கள் அதை கைவிட்டு விட்டீர்கள். மீண்டும் தொழில் செய்யவேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு கட்டாயம் வரும் இதுவே மனித இயல்பு//

நன்றி தோழி! உங்களணியினர்தான் சொன்னார்கள் நமக்குப்பிடித்ததைச் செய்ய வேண்டுமென்றால் சுயதொழிலில்தான் முடியும் என்றார்கள். அப்படி எனக்குப் பிடித்த ஓரளவு அனுபவம் உள்ள தொழிலில் நாங்கள் இறங்க நாட்டின் சூழ்நிலை ஒத்துவரவில்லையென்றால் அதை என்னவென்று சொல்வது? இங்கு எங்கள் அனுபவமோ பணமோ இல்லை பிரச்சினை. அப்புறம் எப்படி எனக்குப் பொருத்தமில்லாத தொழில் என சொல்ல முடியும்.

இது என்னுடைய அனுபவம் மட்டும் இல்லை. பலரின் அனுபவம் இதுதான். போதுமய்யா போதும்னுதான் எல்லோரும் அவங்கவங்க வேலையை பார்த்துக்கிட்டு இருக்கோம்.

லஞ்சம் கேட்டால் கொடுக்கமுடியாது அதை அழிக்கப் போராடணும்னு எதிரணியினர் சொல்றாங்க. ஒத்துக்கறேன். அதனால்தான் லஞ்சமே கொடுக்க வேண்டாம்னு முடிவு செய்தோம். இதுவரை யாருக்கும் லஞ்சம் கொடுத்ததும் இல்லை இனி கொடுக்கப்போவதும் இல்லை. அதில் உறுதியாக இருக்கிறோம். இப்படிப்பட்ட கொள்கை உடையவர்களுக்கு நம் நாட்டைப் பொறுத்தவரை சுயதொழில் முடியாத காரியம். அது நம்நாட்டின் சாபக்கேடு :-(

இன்னும் இங்கே சொல்லமுடியாத பல விஷயங்கள் இருக்கின்றன நடுவர் அவர்களே! அறுசுவை விதிகள் அனுமதிக்காத காரணத்தால் அவற்றை நான் சொல்ல விரும்பவில்லை.

எப்படிப் பார்த்தாலும் வேலை பார்ப்பதே சுகம் நிம்மதி ஆத்ம திருப்தி தரும்.

நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருவேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//இப்படிப்பட்ட கொள்கை உடையவர்களுக்கு நம் நாட்டைப் பொறுத்தவரை சுயதொழில் முடியாத காரியம். அது நம்நாட்டின் சாபக்கேடு :-(//
சிவாஜி படம்லாம் யாரும் பாக்கலையா? அவர் ஒரு தொழில் ஆரம்பிக்க என்னமா கஷ்ட்டபடுறார்?
அவர் சூப்பர் ஸ்டார் என்பதால் ஒரு ரூபா வச்சு சமாளிச்சுட்டார். சாமானிய மக்களால் முடியுமோ?
அதுனால தான் வேலைக்கு போறாங்க. கவிசிவா சொன்னதுல என்ன தப்பு இருக்கு? வந்து சொல்லுங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இந்தியா இன்னும் தன்னிறைவு பெற்ற நாடாக மாறவில்லையே!

இந்திய மக்கள் தொகையப் பற்றி நன்றாகவே தெரியும்.சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் தான் அதிக மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளனர் என்கிறது.. நம்ப முடிகிறதா உங்களால்??..ஏனெனில் அந்த கண்டத்தின் பரப்புக்கும் மக்கள் தொகைக்கும் உள்ள விகிதம் அப்படி.. இந்தியாவோ மக்களால் பிதுங்கி வழிகிறது..

அப்படி இருக்கும் போது நாம் எப்படி பொருளாதார தன்னிறைவு அடைய முடியும்? உள்நாட்டில் அனைவருக்கும் வேலை இருக்கிறது என்ற நிலை வர வேண்டும்.அதற்கு வேலை வாய்ப்புகள் பல உருவாக்கப்பட வேண்டும்.

மேலும் இன்று படித்து வெளிவரும் அனைவரும் தான் வேலை வாய்ப்பு பெருகிறார்களா? இல்லையே!! எதேனும் ஒரு கம்பனியில் போய் உட்காரவைத்து விட்டால் போதும் என்று நினைக்கும் எத்தனையோ பெற்றோரால் படிக்கும் போது மன உலைச்சலுடன் படிப்பில் ஆர்வம் இல்லாமலே படித்து வெளி வருபவர்கள் எத்தனையோ பேர்...

அப்படி வெளி வந்து வேலையில் மனம் ஒன்றாமல் வேலையை விட்டவர்களும் இருக்கிறார்கள்.சுய தொழிலிலை விட வேலைக்குச் செல்வதே சிறந்ததது என நினைக்கும் ஒரு சிலரால் அவர்கள் பிள்ளைகளே பாதிக்கப்படும் நிலையும் உள்ளது என்பது தான் நிதற்சனம்.

ஒரு சுய தொழிலாளி தன் பையன் இன்னொருவரிடம் வேலைக்குச் செல்வதை விரும்பமாட்டான் தான். ஆனால் தன் மகன் முதலாளி ஆவதைப் பார்த்து எந்த தொழிலாளியும் ஆனந்தப்பவே செய்வான் இல்லையா??

//இப்படிப்பட்ட கொள்கை உடையவர்களுக்கு நம் நாட்டைப் பொறுத்தவரை சுயதொழில் முடியாத காரியம். அது நம்நாட்டின் சாபக்கேடு :-(//
சிவாஜி படம்லாம் யாரும் பாக்கலையா? அவர் ஒரு தொழில் ஆரம்பிக்க என்னமா கஷ்ட்டபடுறார்?
அவர் சூப்பர் ஸ்டார் என்பதால் ஒரு ரூபா வச்சு சமாளிச்சுட்டார். சாமானிய மக்களால் முடியுமோ?
அதுனால தான் வேலைக்கு போறாங்க. கவிசிவா சொன்னதுல என்ன தப்பு இருக்கு? வந்து சொல்லுங்க!//

அதற்குத்தான் இப்பொது லஞ்சத்தை நிரூபிக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்கிறோமே! இப்படிப்பட்ட சூழ்நிலையைக் கையாளத்தான் “மனமிருந்தால் மார்க்கம் உண்டு’ என்று நம் பெரியவர்கள் கூறி உள்ளனர்.நேற்றைய செய்தியில்கூட லஞ்சஒழிப்புத் துரையினரால் ஒரு அதிகாரி பிடிக்கப்பட்டர் என காட்டினார்கள் நடுவரே! இப்போது என்ன சொல்கிறிர்கள்.. மேலும் மணிரத்னம் அவர்களின் குரு படத்தை நீங்கள் பார்க்க வில்லையா? உழைப்பு தான் வென்றது கடைசியில்... ‘முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்” நடுவர் அவர்களே!!!!

//லஞ்சம் கேட்டால் கொடுக்கமுடியாது அதை அழிக்கப் போராடணும்னு எதிரணியினர் சொல்றாங்க. ஒத்துக்கறேன். அதனால்தான் லஞ்சமே கொடுக்க வேண்டாம்னு முடிவு செய்தோம். இதுவரை யாருக்கும் லஞ்சம் கொடுத்ததும் இல்லை இனி கொடுக்கப்போவதும் இல்லை. அதில் உறுதியாக இருக்கிறோம். இப்படிப்பட்ட கொள்கை உடையவர்களுக்கு நம் நாட்டைப் பொறுத்தவரை சுயதொழில் முடியாத காரியம். அது நம்நாட்டின் சாபக்கேடு :-(//

நீங்கள் சொல்வதை பார்த்தால் பெரிய அளவில் சுயதொழில் செய்பவர்கள் எல்லோரும் லஞ்சம் கொடுத்து தான் முன்னேறுகிறார்கள் என்பது போல் புரிகிறது. நீங்கள் லஞ்சத்தை ஒழிக்க நினைப்பவர் என்பதும் தெளிவாக இருக்கிறது. அப்படியானால் நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் வேலை செய்யும் இடத்திற்கு முதலாளியும் லஞ்சம் கொடுத்துதான் தொழில் செய்கிறார்கள் என்கிறீர்களா. "இல்லை" என்றால் ஒரு பெரிய தொழிலை லஞ்சம் கொடுக்காமலும் செய்யலாம் என்பதற்கு அந்த நிறுவனமே உதாரணம். "ஆமாம்" என்றால், நான் கொடுக்கவில்லை ஒதுங்கிக்கொள்கிறேன், ஆனால் பிறர் கொடுத்து செய்யட்டும், அங்கே வேலை செய்கிறேன் என்று மறைமுகமாக லஞ்சம் வளர துணை போகிறீர்களா.

இதுவும் கடந்து போகும்.

சாந்தினி

ஆமாம்...ஆமாம்.....
தலைவர் படம் பாத்தேன். ஒருத்தர் கிட்ட வேலை பாக்க புடிக்காம கஷ்ட்டப்பட்டு சுய தொழில் வச்சு பெரிய தொழி அதிபரே ஆய்ட்டார். தலைவர் சொன்னா சரியா தான் இருக்கும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சபாஷ் சரியான போட்டி

இந்த வார்த்தையை உபயோகிக்கவே கூடாதுன்னு நெனைக்கிறேன். முடியல. கவிசிவாவை எதிர்த்து யோகா வாதாடியுள்ளார்.அருமை....அற்புதம்!

வேலைக்கு செல்லும் அணியினர் என்ன சொல்ல போகிறீர்கள்?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//நீங்கள் சொல்வதை பார்த்தால் பெரிய அளவில் சுயதொழில் செய்பவர்கள் எல்லோரும் லஞ்சம் கொடுத்து தான் முன்னேறுகிறார்கள் என்பது போல் புரிகிறது. நீங்கள் லஞ்சத்தை ஒழிக்க நினைப்பவர் என்பதும் தெளிவாக இருக்கிறது. அப்படியானால் நீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தினர் வேலை செய்யும் இடத்திற்கு முதலாளியும் லஞ்சம் கொடுத்துதான் தொழில் செய்கிறார்கள் என்கிறீர்களா. "இல்லை" என்றால் ஒரு பெரிய தொழிலை லஞ்சம் கொடுக்காமலும் செய்யலாம் என்பதற்கு அந்த நிறுவனமே உதாரணம். "ஆமாம்" என்றால், நான் கொடுக்கவில்லை ஒதுங்கிக்கொள்கிறேன், ஆனால் பிறர் கொடுத்து செய்யட்டும், அங்கே வேலை செய்கிறேன் என்று மறைமுகமாக லஞ்சம் வளர துணை போகிறீர்களா.//

நிச்சயமாக நான் லஞ்சத்தை வெறுக்கிறேன். என்னளவில் நான் அதை எதிர்க்கவும் செய்கிறேன். என் உறவினர்கள் அந்த நிறுவனங்களில் பணிபுரிகிறார்கள் என்றால் அவர்கள் லஞ்சத்திற்கு துணை போகவில்லை. நாட்டில் ஜீவிக்க பணம் வேண்டும். புரட்சி செய்கிறேன் என்று பிள்ளைகளை நட்டாற்றில் விட விரும்பவில்லை. அதனால்தான் வேலை செய்கிறோமே தவீர லஞ்சத்தை என்றுமே ஆதரிக்கவில்லை.

ஒரு சிறிய உணவகம் தொடங்க வேண்டும் என்றாலே முனிசிப்பாலிட்டி ப்யூனிலிருந்து மேலதிகாரி வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. நான் எல்லோரையும் குறிப்பிடவில்லை. லஞ்சம் வாங்குபவர்களைப் பிடித்துக் கொடுக்கிறேன் என்று நான் அதன் பின்னால் போனால் என் வீட்டில் அடுப்பெரியாது. என் வீட்டிலுள்ளவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். இதுதான் நிதர்சனம். இதுதான் நாட்டு நிலைமை.

சினிமாவில் எல்லாம் காண்பிக்கலாம். ஹீரோ ஒரே பாட்டில் உயர்ந்து விடுவார். வாழ்க்கை சினிமா அல்ல. அப்படி சினிமாவில் காண்பிப்பது போல் எல்லாம் நடந்து விட்டால் 'இந்தியன்', 'முதல்வன்' போன்ற படங்கள் வெளிவந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? அப்புறமும் ஏன் லஞ்சம் ஒழியவில்லை? அட்லீஸ்ட் அந்நியன் வந்த பிறகாவது ஒழிந்திருக்க வேண்டும் இல்லையே!

ட்ராஃபிக் ராமசாமி ஐயா அவர்கள் பொதுநலனுக்காக போராடுகிறார். வழக்குகள் தொடுக்கிறார். இன்று அவர்மீதே வழக்கு அபராதம் ஏன் தெரியுமா? சிறு சிறு விஷயங்களுக்கு கூட கேஸ் போட்டு நீதிமன்ற நேரத்தை வீணடிக்கிராராம். இந்த அரசியல்வியாதிகள் வாய்தா வாய்தா என்று கோர்ட் நேரத்தை வீணடிப்பது அந்த அப்பாவி நீதிபதிக்கு தெரியாமல் போனது ஏனோ? இதே நிலைமைதான் நியாயத்துக்காக போராடுபவனின் நிலை. பட்டிமன்றம் திசை மாறுகிறது என்பதால் இந்த விஷயத்தை இன்னும் நான் விளக்க விரும்பவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் மனமிருந்தால் மார்க்கமுண்டுன்னு சொல்றது எல்லாம் எல்லா நேரத்துக்கும் எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தாது. அதற்காக உரோடு ஒத்து வாழ்னு சொல்லி லஞ்சம் கொடுத்து சுயதொழில் செய்ய எல்லோராலும் முடியாது.

எதிரணியினர் சொல்வது போல் சுயதொழில் செய்ய அந்த மன உறுதியும் எல்லோருக்கும் இருக்காது. குடும்ப சூழ்நிலையும் அதை அனுமதிக்காது. அதனால் எல்லோருக்கும் ஏற்றது வேலை செய்வதே என்பதே எங்கள் அணியின் வாதம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

"It is better to lose an arguement than to lose a friend." (HAPPY FRIENDSHIP DAY). தலைப்பில் இருந்தும் தடம் மாறாமல் இருக்க, லஞ்சப் பிரச்சனையை விட்டுவிடுவோம்.

இங்கே எதிரணியில் இருக்கும் பலரும் சுயதொழிலே சிறந்தது என மனம் சொன்னாலும், அந்த ஏக்கம் இருந்தாலும், சில காரணங்களால் வேலைக்கு போகிறார்கள் என தெரிகிறது. பலர் இன்றைய சூழலில் சுயதொழில் ஒத்துவராது என நினைக்கின்றனர்.

"You can eat a big elephant, but one bite a day." என்பதற்கு ஏற்ப, புதிதாக தொழில் துவங்க நினைப்பவர்கள் சற்று சிறிதாக ஆரம்பித்து பின்பு தான் அதை மேல் கொண்டுவரமுடியும். என்னதான் வேலை செய்யும் பொழுது ஒரு தொழிலில் அனுபவம் இருந்தாலும், அதையே சுயதொழிலாக ஆரம்பிக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பலவற்றை கற்று கொள்ள வேண்டியுள்ளது. "Slow and steady wins the race."

வாடகை வீட்டில் இருக்கும் அனைவருக்குமே சொந்த வீடு கட்டும் ஆசை கண்டிப்பாக இருக்கும். அதில் பல தடங்கல்கள் வந்தாலும், அதீத உழைப்பு தேவைபட்டாலும், ஒரு வீடு நமக்கு பிடித்தார் போல் இந்த ரூம் இங்கே, டிவி இங்கே வைக்கலாம், என்று பார்த்து பார்த்து அழகாய் கட்டி, குடிபோகும் அன்று, ஒரு தாய் பிள்ளைபேரு பெற்ற அன்று பெரும் சந்தோஷத்தை ஒரு குடும்பம் பெறுகிறது. அப்பொழுது, அவர்கள் அதற்காக பட்ட துன்பங்கள் அனைத்தும் தூசியாக தெரிகிறது. இதே போல் தானே சுயதொழில் செய்வதும். மெல்ல மெல்ல அடிகளை பார்த்து வைத்து முன்னேறினால், நம் இலக்கை அடையும் பொழுது கால் வலி தெரியாது, மக்ஹிழ்ச்சி மட்டுமே மிஞ்சும் அல்லவா.

எனவே இன்றைய சூழலில் மட்டும் அல்ல, எந்த சூழலிலும், சுயதொழிலே சிறந்தது. சுயதொழிலே நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என கூறி என் வாதத்தை வைக்கிறேன்.

நடுவர் அவர்கள் நன்கு சிந்தித்து நல்ல தீர்ப்பினை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தேவைபட்டால், நேரமிருந்தால், மீண்டும் வருவேன்.

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்