பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

கவிசிவாவுக்கு ஈடுகொடுத்து யோகா பேசியது பாராட்டிற்குரியது. வாழ்த்துக்கள் யோகா. நேரமிருந்தால் நிச்சயம் வாங்க. இன்று தான் கடைசிவாதம். நாளை மதியம் தீர்ப்பு!

கவிசிவா சொன்னது போல் லஞ்சம் கொடுக்க மனமில்லையென்றாலும் பிள்ளைகளை,குடும்பத்தை காப்பாற்ற தனக்கு நிதி வேண்டுமென்பதால் தான் சுயதொழிலை தவிர்த்து வேலைக்கு செல்கின்றனர். அத்தகைய லஞ்சங்கள் கொடுத்து தான் இப்போது சுயதொழில் செய்யமுடியும் என்ற நிலை பரவலாக பரவிவருவகிறது.

யோகா சொல்வதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே!
கஷ்ட்டப்பட்டு முன்னேறிய பின் தான் அதன் சுவை இனிக்கும். எதுவும் எளிதில் அடைய முடியாது.

பார்க்கலாம். மற்றவர்கள் வாதத்தையும் கேட்டுவிட்டு தான் நாளை காலை முடிவெடுக்க இயலும்:(

வாதாட நினைப்பவர்கள் உங்க பொன்னான நேரத்தை சற்று பட்டிக்காக செலவிட அழைக்கிறேன். வாருங்கள்! வாதத்தோடு...!!!!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

யோகலெக்ஷ்மி பட்டியில் மட்டுமே வாத பிரதிவாதங்கள். மற்றபடி எல்லோரும் தோழிகளே!

//இங்கே எதிரணியில் இருக்கும் பலரும் சுயதொழிலே சிறந்தது என மனம் சொன்னாலும், அந்த ஏக்கம் இருந்தாலும், சில காரணங்களால் வேலைக்கு போகிறார்கள் என தெரிகிறது. பலர் இன்றைய சூழலில் சுயதொழில் ஒத்துவராது என நினைக்கின்றனர்.//

எண்ணம் இருந்து ஏக்கம் இருந்தும் சுயதொழில் செய்ய முடியலேன்னா என்ன அர்த்தம். அது எல்லோருக்கும் ஏற்றது இல்லேன்னுதானே! அதைத்தான் இத்தனை வாதங்களிலும் எங்கள் அணியினர் சொல்கிறோம். எல்லோருக்கும் ஏற்றது சிறந்தது வேலைசெய்வது மட்டுமே. சுயதொழில் எல்லோருக்கும் ஏற்றதல்ல. அதனாலேயே அது சிறந்தது என்பதற்கான தகுதியை இழக்கிறது.

வாடகை வீட்டிலிருப்பவர்களுக்கு சொந்தவீடு ஆசை இருக்கும்தான். ஆனால் அந்த கனவு எல்லோருக்கும் நிறைவேறுவதில்லைத் தோழி. அதுவே நிதர்சனம். அதுபோல்தான் சுயதொழிலும். எல்லோரும் கனவு காணலாம் எந்த தடையும் இல்லை. ஆனால் அந்த கனவு நனவாவது சிலருக்கு மட்டுமே. கனவல்ல நிஜம். நனவே நிஜம். நாங்கள் நிஜத்தை பார்க்கிறோம். அதனால்தான் வேலைசெய்வதே சிறந்தது என்கிறோம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//எண்ணம் இருந்து ஏக்கம் இருந்தும் சுயதொழில் செய்ய முடியலேன்னா என்ன அர்த்தம். அது எல்லோருக்கும் ஏற்றது இல்லேன்னுதானே! //
”எல்லோருக்கும் ஏற்றது இல்லை” என்பதல்ல காரணம். செயல் படுத்துவதற்கான தீவிர முயற்சி இல்லை என்பது தான் காரணம். இன்றைய மாறிவரும் சூழலில்
நேர்மையான வழியிலேயே செய்ய முடியும் என வழிகள் கூறினாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாத, மனநிலையும் காரணம்.
வாததிற்கு மருந்து உண்டு.. ஆனால் பிடிவாதத்திற்கு மருந்தே இல்லை நடுவர் அவர்களே!! எதிரணியினர் பிடிவாதம் செய்வது போல் தான் உள்ளது..
அடுத்தவரிடம் கை கட்டி வேலை பார்க்கப் பிடிக்காதவர்களும் நிறைய பேர் இந்த பூமியில் உள்ளனர். அப்படிப் பார்த்தால் வேலைக்குச் செல்வதும் தான் மேலும் எல்லோருக்கும் பொருந்தாது.

தொழிலில் நஷ்டம் என உயிரையே விடுவது இன்றைய சூழலில் பெரும்பாலும் இல்லை என்பது தான் உண்மை.

இந்தியாவில் மன உறுதி இல்லாமல் உயிரை மாய்த்துக் கொள்பவர்களில் பெரும்பாலனவர்கள் பதின் பருவத்தினர் தான்..
காரணம் குடும்ப பிரச்சினையும்,காதல் விவகாரங்களும்.தொழில் நஷ்டம் இல்லை.

தமிழகத்தில் தேர்வு முடிவு வெளியாகும் நேரத்தில் மட்டும் சராசரியாக 270 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களாம்.படிப்பே சுமையாகி வருகிற காலம் இது.
படித்தால் மட்டும் போதும் எல்லாம் வந்து விடும் என நினைப்பவர்கள் முழித்துக் கொள்ள வேண்டிய நேரம் இது எதிரணியினரே!!!

மன உறுதி எல்லோருக்கும் இருக்காது என்கிறார்களே... நுகர்வு கலாச்சாரம் பெருகி வரும் இன்றைய சூழலில் மன உறுதி இல்லாதவன் அன்றாட வாழ்க்கையையே வாழ முடியாதே !!
மன உறுதி ஏதோ பிறக்கும் போதே இவ்வளவு தான் என நிர்ணயிக்கப் பட்டது அல்ல..வளரும்/வளர்க்கப்படும் சூழலினால் உருவாவது அது. மேலும் விவரங்கள் தேவை எனில் 30.7.10 தேதியிட்ட
அவள் விகடன் படியுங்கள். உண்மை சுடும்.

படிப்பறிவே இல்லாமல் குலத்தொழிலைச் செய்து வந்த நம் முன்னோர்களிடம் வாழ்க்கையில் இருந்த மன உறுதி மெத்தப் படித்தவர்கள், படிப்பவர்கள் நிறைந்த இன்றைய காலத்தில் இல்லாமல் போவது வேதனைக்கு உரிய விஷயம்.
கல்வியே மன உறுதியைக் குலைக்கிறது என்பது கொடுமையிலும் கொடுமை. எல்லோரும் வேலைக்குப் போக நினைப்பதால் தான் competition பெருகிவருகிறது.
இருக்கும் கம்பனிகளும் நுழைவுத் தகுதிகளை உயர்த்தி வருகின்றன. கடைசியில் சுமை மாணவர்கள் மேல் விழுகிறது. எனவே இயலாமைகளைக் களைந்து விட்டு மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய சூழலில் தான் நாம் இருக்கிறோம்,

கெட்ட விஷயத்தில் இருந்து கூட நல்லதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பார்கள் .ட்ராஃபிக் ராமசாமி அய்யா மேல் தொடரப்பட்டது வழக்கு மட்டும் அல்ல அடி உதை என எல்லாமே பட்டவர் அவர்.
அப்போது கூட அவர் என்ன சொன்னார் தெரியுமா? நான் இதற்காக இனி வழக்கு தொடராமல் இருக்க மாட்டேன்.என் வேலையை நான் செய்து கொண்டுதான் இருப்பேன் என்றார்.அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அந்த மன உறுதி தான்.
அதை விட்டு விட்டு நல்லவனுக்கு காலமில்லை என்பதுடன் முடித்துக் கொள்வது அல்ல.. அவரைப்போல் குடும்பத்தை விட்டு விட்டு போராடப் போவது அனைவராலும் முடியாது தான்.
ஆனால் ஊடகங்கள், தொழில் நுட்ப வாய்ப்புகள் பெருகிவரும் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த நம்மால் முடிந்ததை செய்யலாமே.

மேலும் சுயதொழில் செய்பவர்கள் ஏதோ பேராசைப் படுபவர்கள் என்பது போன்ற வாதமும் முன் வைக்கப்பட்டது. வேலைக்குச் சேரும் நீங்கள் “போதும் என்ற மனமே பொன் செய்யும் என சேர்ந்த நிலையிலேவா (designation) இருக்கிறீர்கள். அடுத்தடுத்த நிலைக்குச் செல்வதில்லையா? ஹைக் வரவேண்டும் ,team leader ஆக வேண்டும், project manager,project lead .... CEO வரை என எத்தனை ”ஆகவேண்டும்கள்” இருக்கின்றன. அவை எல்லாமே வேலையின் அடுத்தடுத்த படிகள்.
அது போலத்தான் சுயதொழிலிலும் முதலில் தன்னிறைவு, அடுத்து விரிவு படுத்துதல் என்பது தொழிலின் அடுத்தடுத்த கட்டங்கள்.இதில் பேராசை ஒன்றும் இல்லை.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வேலை வாய்ப்புகளும் பெருக வேண்டும். இல்லையேல் தேக்க நிலை தான் வரும்.

வெற்றி யாருக்கும் எளிதில் வந்து விடாது.பல இடர்ப்பாடுகளையும் தாண்டி தொடங்கியவரை உயர்த்தி, ஆரம்ப காலத் தடைகளிலும்,இடர்ப்பாடுகளிலும் பங்கு கொள்ளாத அடுத்தவர்களுக்கும் வேலை வாய்ப்பையும் வசதிகளையும் வழங்கி உயர்த்துவது சுயதொழிலே!!

எனவே சுயதொழிலே சிறந்தது! சிறந்தது! எனக் கூறி என் வாதத்தை முடித்துக்கொள்கிறேன்.வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி!

நன்றி கவி சிவா!

நன்றி சாந்தினி!

இருவர் வாதத்திலும் மிரண்டு போய்ட்டேன். அருமை,அருமை,அருமை,.........!

இன்று தான் கடைசி நாள்! வாதங்கள் பேப்பரில் எழுதி வைத்திருந்தால் அப்படியே இங்கே பேஸ்ட் பன்ணிருங்க!

முடிஞ்சதுக்கு பிறகு ஆமி இப்படி சொல்லிட்டியே? என்று அழுக கூடாது....!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//வாததிற்கு மருந்து உண்டு.. ஆனால் பிடிவாதத்திற்கு மருந்தே இல்லை நடுவர் அவர்களே!! எதிரணியினர் பிடிவாதம் செய்வது போல் தான் உள்ளது..//

இது எதிரணியினருக்குத்தான் பொருந்தும். அதனால்தான் சுயதொழிலில் உள்ள பிரச்சினைகளையும் அது எல்லாருக்கும் ஒத்து வராதுன்னு சொன்ன போதும் மன உறுதி, கல்விச்சுமை, பதின்மவயது தற்கொலைன்னு என்னென்னவோ சொல்றாங்க.

அவங்களே சொல்லியிருக்காங்க மன உறுதி பிறக்கும் போதே உருவாவதில்லை சூழல்தான் உருவாக்குதுன்னு. எல்லோருடைய சூழலும் மன உறுதியை வளர்க்கும் விதத்தில் அமைவதில்லை. வேலைக்குச் செல்லும் போது தேவைப்படும் மன உறுதியை விட அதிகமான மன உறுதி சுய தொழில் செய்பவருக்கு வேண்டும். அந்த சூழலில் வளர்பவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.

//தொழிலில் நஷ்டம் என உயிரையே விடுவது இன்றைய சூழலில் பெரும்பாலும் இல்லை என்பது தான் உண்மை.//
இப்படி முழு பூசணிக்கயை சோற்றில் மறைக்க முயல்க் கூடாது எதிரணியினரே! காதல் தோல்வி பரீட்சையில் தோல்வி இதிலெல்லாம் சம்பந்தப்பட்ட தனிநபர் மட்டுமே மன உறுதியை இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் தொழிலில் வீழ்ச்சியடந்த மன உறுதியற்றவர்கள் தான் மட்டுமல்லாமல் குடும்பத்தோடு சேர்ந்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். இது மட்டும்தான் உண்மை நடுவர் அவர்களே!

//இருக்கும் கம்பனிகளும் நுழைவுத் தகுதிகளை உயர்த்தி வருகின்றன.//

பார்த்தீங்களா நீங்களே சொல்லிட்டீங்க சுயதொழில் செய்யற கம்பெனிகள்தான் நுழைவுத் தகுதியை உயர்த்தி மாணவர்கள் சுமையை உயர்த்தறாங்கன்னு. ஆனா வசதியா பழியைத் தூக்கி எங்க அணி மேல போட்டுட்டீங்க. இதெல்லாம் நியாயமா நடுவர் அவர்களே! இதுக்குப் பேர்தான் பழி ஓரிடம் பாவம் ஓரிடம்ன்னு சொல்றது :-(

//அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது அந்த மன உறுதி தான்.
அதை விட்டு விட்டு நல்லவனுக்கு காலமில்லை என்பதுடன் முடித்துக் கொள்வது அல்ல//

அடடா இதைத்தானே ஆரம்பத்துல இருந்தே சொல்றோம். மன உறுதி எல்லோர்கிட்டயும் இருக்காதுன்னு.

நடுவர் அவர்களே நல்ல முடிவா சொல்லுங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவரே
வந்துட்டேன்...
//கல்வியே மன உறுதியைக் குலைக்கிறது என்பது கொடுமையிலும் கொடுமை. எல்லோரும் வேலைக்குப் போக நினைப்பதால் தான் competition பெருகிவருகிறது.//
competition ரொம்ப அவசியம். அதில்லைன்னா சுயதொழில்லயும் யாரும் முன்னேற முடியாது.
monopoly ப்ரச்னை வரும்.

நான் பேச எதுவுமில்லை...

அவ்வளவும் எமதணியினர் சொல்லிட்டாங்க...

//ஆனால் ஊடகங்கள், தொழில் நுட்ப வாய்ப்புகள் பெருகிவரும் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்த நம்மால் முடிந்ததை செய்யலாமே.//

ரொம்ப சரி... அந்த மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வேலைக்கு செல்கிறோம்....

மாற்றத்தை ஏற்படுத்த மன ஊறதியுள்ள எங்களால் மட்டுமல்ல ..எல்லோராலும் முடிந்தது....வேலைக்ககு செல்வோம்.

நன்றி கவிசிவா...

அழகான வாதங்களை முன்நிறுத்தி வைத்துள்ளீர்கள்!
நன்றி!

நன்றி தேன்மொழி!

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துட்டீங்க. உங்க தரப்பில் உள்ள கருத்துக்கள் அருமை:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//competition ரொம்ப அவசியம். அதில்லைன்னா சுயதொழில்லயும் யாரும் முன்னேற முடியாது.
monopoly ப்ரச்னை வரும்... // மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்தி வேலைக்கு செல்கிறோம்....//

அப்படியாங்க!!! நல்லது அதனாலதான் சுயதொழில் ஆரம்பிச்சு இப்போ இருக்கிற நிறுவனங்களுக்கு competition கொடுங்க என கூறுகிறோம். இவ்வளவு நாள் வேலைக்குப்போனது
போதுங்க!! இனியும் அதே மன நிலையில் இருந்தீங்கனா வேலைத்தேடுபவர்கள் பக்கம் நீங்க சொல்ற அதே monopoly மாதிரியான தேக்க நிலை வராதாங்க??
ம்ம்ம்.. புரிஞ்சுக்கவே மாட்டேன்.. என்கிறீர்களே!!

//இப்படி முழு பூசணிக்கயை சோற்றில் மறைக்க முயல்க் கூடாது எதிரணியினரே! தொழிலில் வீழ்ச்சியடந்த மன உறுதியற்றவர்கள் தான் மட்டுமல்லாமல் குடும்பத்தோடு சேர்ந்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். //
அப்படிப் பட்ட சூழல் இப்பொ இல்லைனு தான் ஆதாரமா இதழ், தேதி எல்லாம் குறிப்பிட்டேன். இருந்தும்.. பயனில்லை... :( இப்படி பேசினால் ?!!! யார் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் நடுவரே!

//இருக்கும் கம்பனிகளும் நுழைவுத் தகுதிகளை உயர்த்தி வருகின்றன.//

//பார்த்தீங்களா நீங்களே சொல்லிட்டீங்க சுயதொழில் செய்யற கம்பெனிகள்தான் நுழைவுத் தகுதியை உயர்த்தி மாணவர்கள் சுமையை உயர்த்தறாங்கன்னு. ஆனா வசதியா பழியைத் தூக்கி எங்க அணி மேல போட்டுட்டீங்க. இதெல்லாம் நியாயமா நடுவர் அவர்களே! இதுக்குப் பேர்தான் பழி ஓரிடம் பாவம் ஓரிடம்ன்னு சொல்றது :-(//

இவருக்கு வசதியான வக்கியங்களை மட்டும் எடுத்து பேசினால் அது சரி ஆகி விடுமா நடுவரே!!? எதனால் தகுதிகள் உயர்த்தப் படுகின்றன என்பதையும் நான் கூறி உள்ளேன்.இதிலிருந்தே தெரிகிறது எதிரணியினர் நாங்கள் சொல்லிய கருத்தையே புரிந்து கொள்ளாமல் பேசுகின்றனர் என்று..

வாங்க சாந்தினி

பதிலுக்கு பதில் வந்து தாக்குறீங்க!
அருமை!அருமை....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

போட்டி போட்டுக் கொண்டு எலலோரும் ஒரே தொழில் தொடங்குவதில் எந்த லாபமும் இல்லை....

எல்லாரும் முதலாளி என்பது கனவாக இருக்கலாம்....

ஆனால் இன்றைய சூழலுக்கு எல்லோருக்கும் கல்வி....அந்த கல்வியினால் நல்ல வேலை ....அத்னால் உயர்வு தாழ்வற்ற ஒரு சூழல்...

அதன் பிறகே எல்லோரும் முதலாளி என்ற சூழலுக்குள் செல்ல முடியும்...

//இனியும் அதே மன நிலையில் இருந்தீங்கனா வேலைத்தேடுபவர்கள் பக்கம் நீங்க சொல்ற அதே monopoly மாதிரியான தேக்க நிலை வராதாங்க??//

வராதுங்க...

எனவே இன்றைய சூழலுக்கு வேலைக்கு செல்வதே சிறந்தது....

மேலும் சில பதிவுகள்