பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

//இவ்வளவு நாள் வேலைக்குப்போனது
போதுங்க!! //
இப்படி எல்லாரும் சுயதொழில் ஆரம்பிச்சுட்டா எங்ககிட்ட வேலை பார்ப்பது யாருங்க? சந்தையில் மோனோபோலி எப்படி நல்லதில்லையோ அதே போல்தான் ஒரேதொழிலை பலர் செய்வதும் நல்லதில்லை. அதாவது தேவையை விட சப்ளை அதிகமானா நிலைமை என்னாகும்னு யோசிக்கணும்ங்க. சும்மா எல்லாரும் செய்யறாங்கன்னு நானும் சுயதொழிலில் இறங்கினா என்னாகும்னு வேலை செய்யற எங்களுக்கு நல்லாவே தெரியுமுங்க. அதனாலத்தான் வேலை செய்வதே சிறந்தது என்கிறோம்.

//அப்படிப் பட்ட சூழல் இப்பொ இல்லைனு தான் ஆதாரமா இதழ், தேதி எல்லாம் குறிப்பிட்டேன். இருந்தும்.. பயனில்லை... :( //
இதழ் தேதி எல்லாம் சொன்னாலும் இருந்தாத்தானே படிக்க முடியும் இதைக் கூட புரிஞ்சுக்கலேன்னா என்னங்க பண்ண முடியும். இப்படித்தாங்க நாங்க சொல்றதையும் இவங்க புரிஞ்சுக்கவெ மாட்டேங்குறாங்க. ஒருவரிடம் அதற்கான தகுதி சூழல் இருக்கான்னு தெரியாமலேயே சுயதொழில்தான் சிறந்ததுனு சொல்லிகிட்டு இருக்காங்க. பாருங்க அவங்க ஆதாரமா சொன்ன இதழை எல்லோராலும் படிக்க முடியுமா அதற்கான சூழல் உள்ளதான்னே யோசிக்காம நாங்க புரிஞ்சுக்க மாட்டேங்கறோம்னு சொல்றாங்க நியாயமா நடுவரே!
//இவருக்கு வசதியான வக்கியங்களை மட்டும் எடுத்து பேசினால் அது சரி ஆகி விடுமா நடுவரே!!?//
அதுதாங்க பட்டிமன்றமே :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சுயதொழில் தான் சிறந்தது

நடுவர் அவர்களே வணக்கம்.

கூட்டமா ஓடி பந்தை உதைத்து முதலாளிக்கு கோல் போட உதவும் வேலைக்கு போகும் அணியில்லை நான்
சிங்கிளா இருந்து ரன் எடுக்கிற தேவைனா பார்டனரையும் சேர்த்துக்கற சுய தொழில் அணிதான் நான் என்று கூறி என் வாதத்தை உங்கள் முன் வைக்கிறேன்.

எப்படியாவது வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல
இப்படிதான் வாழனும் என்பதுதான் வாழ்க்கை

நம்மோட 8 மணி நேரத்தை ஒரு அடிமாட்டு விலைக்கு விற்று அந்தக் கூலியில் நான் சுகமாக இருப்பேன் என்பது நம்மை நாமே நம்பாததுக்கு சமம்.
55 வயது வரை தான் உனக்கு தெம்பு இதற்கு மேல் உழைக்கத் தகுதியில்லை என்று வெளியேற்றுவது ஒரு தலைமுறைக்கு சொத்து சேர்த்தவருக்கு வேண்டுமானால் சந்தோஷத்தைக் கொடுக்கலாம்.அடுத்தமாதம் தன் பிள்ளையின் காலேஜ் ஃபிஸ் கட்ட மீண்டும் வேளைக்கு செல்லவேண்டிய கட்டாயம் இன்று அனேக நடுத்தர வர்க்கத்திலும் நடப்பதுதான்.. வேலைக்கு சென்றாலும் அதே ஊதியம் கிடைக்குமா என்பதுதான் என் கேள்வி.

மலைவாழ் சமுகத்தினர் இன்று முன்னேறியிருக்காங்க என்றால் அதற்கு சுயதொழிலை அவங்க நம்பினதுதான் காரணம்.

சுயதொழில் என்பது லஞ்சம் கொடுத்துதான் தொடங்கப்படுகிறது என்றால் தையல், சலூன், சலவைத்தொழில் போன்றவை எல்லாம் இல்லாமலே போயிருக்கும். திறமையானவன் பதவிஉயர்வு பெருகிறான் என்றால் சுயதொழிலில் அத்தொழில் பற்றி தெரிந்தவன் முன்னேறுகிறான்.

அன்று நமக்கு தெரிந்தது தையல் தொழில் என்பது ஒரு சிறிய அளவிலான இடத்தில் ஒன்று அல்லது இரண்டு தையல் இயந்திரத்தை ஓட்டிக் கொண்டு கடினமாக உழைத்து அதற்கு ஏற்ற கூலி இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்துவதுதான்.

இன்று அப்படியா துணி ஆர்டர் எடுப்பவர் ஒருவர். அளவு எடுப்பவர் ஒருவர். வெட்டுபவர்,தைப்பவர் இவர்களை நாம் காணவே முடியாது.
இடமும் ஏர்கண்டிசன்,பக்காவான இண்டீரியர் செய்யப்பட்டு இருக்கும். இப்பொழுது தையல் படிப்புக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருப்பதே சுயதொழிலில் உள்ள முன்னேற்றம் தானே. இதுபோல் பல சாதாரண தொழில்கள் சாதனை படைச்சுருக்கு என்றால் சுயத்தொழில் உள்ள முன்னேற்றம் தானே காரணம்.

இன்று எங்கெங்கிலும் சுயதொழில் மயமாக இருப்பது அது வளர்ந்ததினால்தானே. இதில் முன்னேற்றம் கண்டிருப்பதானாலும், அத்தகைய முன்னேற்றத்தில் கண்டவர்களை நாம் கண்டதனாலும் தானே.

நம் முன்னோர்கள் கூட கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்,
கவலை உனக்கு இல்லை ஒத்துக்கொள் என்று கூறி சுயதொழிலின் பயனைத்தான் நமக்கு உணரச்செய்து இருக்கிறார்கள்.

இன்று நான் செய்யும் சுயத்தொழில் நாளை என் சந்ததியையும் கைப்பிடித்து செல்லும்.

எனவே இன்னொரு கரத்தை நம்பி வேலைப்பார்க்கும் தொழிலை விட நம் கையை நம்பும் சுயத்தொழில்தான் சிறந்தது என்று கூறி விடைபெருகிறேன். நன்றி.

Don't Worry Be Happy.

நன்றி ஜெய லெட்சுமி

கடைசி நேரத்திலாவது வந்தீங்களே!

வாதத்தின் தொடக்கமே அருமை!

சுய தொழில் பற்றிய கருத்துக்கள் சூப்பர்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//இன்று அப்படியா துணி ஆர்டர் எடுப்பவர் ஒருவர். அளவு எடுப்பவர் ஒருவர். வெட்டுபவர்,தைப்பவர் இவர்களை நாம் காணவே முடியாது.//

இவ்வளவக் கூட்டத்தையும் வச்சுக்கிட்டு ரன் தான் எடுப்பேன்.. கோல் போடமாட்டேன்னு பஞ்ச் டயலாக்...

//55 வயது வரை தான் உனக்கு தெம்பு இதற்கு மேல் உழைக்கத் தகுதியில்லை என்று வெளியேற்றுவது//

55வயது வரை உழைத்தவருக்கு கொடுக்கும் ஓய்வை தவறாகப் புரிந்துக் கொணடிருக்கிறீர்கள்......

//நம்மோட 8 மணி நேரத்தை ஒரு அடிமாட்டு விலைக்கு விற்று அந்தக் கூலியில் நான் சுகமாக இருப்பேன் என்பது நம்மை நாமே நம்பாததுக்கு சமம்.//

அய்யோ! நேரத்தை எப்பவுமே விக்காதீங்க...கிடைக்கற நேரத்தை உபயோகித்து....நல்ல வாழ்க்கைத் தரத்தைப்பெற்றுக் கொள்ளுங்க...

சாரி பட்டிமன்றம் தீர்ப்பு எப்போது நடுவர் அவர்களே!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

///கூட்டமா ஓடி பந்தை உதைத்து முதலாளிக்கு கோல் போட உதவும் வேலைக்கு போகும் அணியில்லை நான்
சிங்கிளா இருந்து ரன் எடுக்கிற தேவைனா பார்டனரையும் சேர்த்துக்கற சுய தொழில் அணிதான் நான் என்று கூறி என் வாதத்தை உங்கள் முன் வைக்கிறேன்.///

சோ கும்பலான வேலையாட்கள் இல்லையென்றால் முதழாளி கோல் போடமுடியாது என்று ஒத்துக் கொண்ட எதிர் அணிக்கு என் முதல் நன்றி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

///நம்மோட 8 மணி நேரத்தை ஒரு அடிமாட்டு விலைக்கு விற்று அந்தக் கூலியில் நான் சுகமாக இருப்பேன் என்பது நம்மை நாமே நம்பாததுக்கு சமம்.
55 வயது வரை தான் உனக்கு தெம்பு இதற்கு மேல் உழைக்கத் தகுதியில்லை என்று வெளியேற்றுவது ஒரு தலைமுறைக்கு சொத்து சேர்த்தவருக்கு வேண்டுமானால் சந்தோஷத்தைக் கொடுக்கலாம்.அடுத்தமாதம் தன் பிள்ளையின் காலேஜ் ஃபிஸ் கட்ட மீண்டும் வேளைக்கு செல்லவேண்டிய கட்டாயம் இன்று அனேக நடுத்தர வர்க்கத்திலும் நடப்பதுதான்.. வேலைக்கு சென்றாலும் அதே ஊதியம் கிடைக்குமா என்பதுதான் என் கேள்வி.////

ஒரு துயரமான சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்தது...எல்லோருக்கும் நினைவிருக்கும்..பெஸ்ட் பேக்கரி வழக்கு!அவர்கள் இன்றுவரை மீளவே இல்லை....இதுபோன்ற ஆக்ஸிடன்டுகளை சுயதொழில் செய்பவர்களால் தாங்கவே முடியாது...வேலை செல்பவர்களுக்கு விபத்தைபற்றி கவலையில்லை...ஏனென்றால் இது போன்ற பல விபத்துக்களை கடந்து வந்தவர்கள் அவர்கள்!
///மலைவாழ் சமுகத்தினர் இன்று முன்னேறியிருக்காங்க என்றால் அதற்கு சுயதொழிலை அவங்க நம்பினதுதான் காரணம்.////

மலைவாழ் மக்கள் முன்னேறிவிட்டார்களா?எங்கே?எத்துறையில்?உதாரணம் சொல்லமுடியுமா?
///சுயதொழில் என்பது லஞ்சம் கொடுத்துதான் தொடங்கப்படுகிறது என்றால் தையல், சலூன், சலவைத்தொழில் போன்றவை எல்லாம் இல்லாமலே போயிருக்கும். திறமையானவன் பதவிஉயர்வு பெருகிறான் என்றால் சுயதொழிலில் அத்தொழில் பற்றி தெரிந்தவன் முன்னேறுகிறான்.

அன்று நமக்கு தெரிந்தது தையல் தொழில் என்பது ஒரு சிறிய அளவிலான இடத்தில் ஒன்று அல்லது இரண்டு தையல் இயந்திரத்தை ஓட்டிக் கொண்டு கடினமாக உழைத்து அதற்கு ஏற்ற கூலி இல்லாமல் கஷ்ட ஜீவனம் நடத்துவதுதான்.

இன்று அப்படியா துணி ஆர்டர் எடுப்பவர் ஒருவர். அளவு எடுப்பவர் ஒருவர். வெட்டுபவர்,தைப்பவர் இவர்களை நாம் காணவே முடியாது.
இடமும் ஏர்கண்டிசன்,பக்காவான இண்டீரியர் செய்யப்பட்டு இருக்கும். இப்பொழுது தையல் படிப்புக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருப்பதே சுயதொழிலில் உள்ள முன்னேற்றம் தானே. இதுபோல் பல சாதாரண தொழில்கள் சாதனை படைச்சுருக்கு என்றால் சுயத்தொழில் உள்ள முன்னேற்றம் தானே காரணம்.

இன்று எங்கெங்கிலும் சுயதொழில் மயமாக இருப்பது அது வளர்ந்ததினால்தானே. இதில் முன்னேற்றம் கண்டிருப்பதானாலும், அத்தகைய முன்னேற்றத்தில் கண்டவர்களை நாம் கண்டதனாலும் தானே.///
சரியா போச்சு....ஒன்றை கவனிக்க வேண்டும் சுயதொழில் செய்பவர்கள்! வேலைக்கு செல்பவர்கள் மட்டும் இல்லையென்றால் சுயதொழில் எங்கெ நடக்கும்?ஆள் இல்லாமால் முடிவெட்டும் தொழிலையும்,சலவைத் தொழிலையும் முதழாளி மார்களே முன்வந்து செய்வார்களா?
//நம் முன்னோர்கள் கூட கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்,
கவலை உனக்கு இல்லை ஒத்துக்கொள் என்று கூறி சுயதொழிலின் பயனைத்தான் நமக்கு உணரச்செய்து இருக்கிறார்கள்.///
முன்னோர்கள் ஆயிரம் சொல்வார்கள்..களவையும் கற்று மற என்றார்கள்..அப்ப திருடி ஜெயிலுக்கு சென்று தருமா அடி வாங்கலாமா?

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அனைவருக்கும் வணக்கம். முதலில் பட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பட்டிமன்றத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் நீங்களன்றி வேறில்லை. ஆரம்பித்த நாள் முதல் தீர்ப்பு சொல்லும் இந்த நிமிடம் வரை பொலிவு குன்றாமல் புத்துயிர் கொடுத்துள்ளீர்கள். அனைவரும் அழகாக வாதாடுனீர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. புதிதாய் பட்டியில் பலர் தங்கள் திறமையை அரங்கேற்றியது கண்டு மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் ஆதரவுக்கு கடன்பட்டவளாய் இருப்பேன்.

தேன் மொழி, சாந்தினி, கவிசிவா, யோகா, சேக் அண்ணா, தவமணி அண்ணா, ராதா, பொன்னி, ஜமுனா, மாமி, கோமு, காந்தி, ரம்யா, கல்பனா,நிஷா, தேவிசுரேஷ், பவி, பாலசுந்தரி, நாகவளர், சித்ரா, ரேணுகா, சுந்தரி, கீதா, தமிழரசி, கிருத்திகா, பார்கவி, இலா , இஷானி, ஆஷிக், கலைவானி, நித்யா, குணா , ரேவதி , மீரா ,ஜெயலெட்சுமி

அனைவருக்கும் மிக்க,மிக்க,நன்றி

குறிப்பாக கடைசிவரை போராடி தங்கள் கட்சிக்கு பலம் சேர்க்க உதவிய தோழ தோழியர்க்கு நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நீங்களெல்லாம் உங்க பங்குக்கு வாதாடி என் தலையில பெரிய பாரத்தை தூக்கி வச்சிட்டு நிம்மதியா போய்ட்டீங்க, இங்கே இரண்டு தரப்பு வாதங்களிலும் அனல் பறந்துச்சு, இரண்டு தரப்பும் ஒன்னுக்கொன்னு சளைக்காமல் வாதாடியது ரெம்பவே ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததில் எள்ளளவும் ஐயமில்லை.

வேலைக்கு செல்லுதல்:

வேலைக்கு செல்லும் தொழிலாளியாக இருப்பதால் சுதந்திரம் இருக்கிறது, முதலீட்டுக்கான பணம் தேடும் சிரமம் இல்லை, மேலும் பண நஷ்டம் என்ற பிரச்சனை இல்லை. வேலை நேரம் போக நாம் நிம்மதியாக இருக்கலாம் எனபதை அந்த அணியில் உள்ள எல்லாரும் தங்களுடைய வாததிறமையால் மிக அழகாக ஆணித்தரமாக நிரூபித்து காட்டினார்கள். அது மட்டுமில்லாமல் ஒரு கம்பெனியின் உயர்வுக்கு தொழிலாளிகளே காரணமாயிருக்கிறார்கள் என்றெல்லாம் பல நல்ல விளக்கங்களை சொன்னார்கள், சுய தொழில் அனைவருக்கும் ஏற்றது அல்ல நிச்சயமா.இதில் எதையும் மறுத்துவிட முடியாது. எல்லாமே ஏற்புடைய விஷயங்களே.

சுயதொழில்
அடுத்து சுயதொழில்னு பார்த்தால் அவர்களும் சரிக்கு சரியா நின்னு போராட்டகுணதோடு வாதாடி அவர்கள் பக்கம் உள்ள பல நல்ல கருத்துக்களை சொன்னார்கள். மனம் இருந்தால் எதையும் தகற்தெரிந்து விடலாம். தடைகள் ஒரு பொருட்டே அல்ல என்றும் பல நிறைகளையும் சொன்னார்கள்.
இப்படியாக இவர்களும் பல பலமான வாதங்களை வைத்து தீர்ப்புக்கு மிகவும் நெருக்கடி கொடுத்துள்ளார்கள்.

இரு தரப்பு வாதங்களையும் பார்க்கும்போது ஒவ்வொரு மனிதனுடைய சூழ்நிலைபொறுத்தும், அவன் மேற்கொள்ளும் தொழில்கள் பொருத்தும், வேலைக்கு செல்வது, சுயதொழில் செல்வது எனபது மாறுபட வாய்ப்புகள் இருந்தாலும், பொதுவில் பார்க்கும்போது எதாவது ஒன்றுதான் சிறப்புக்குள் இருக்கமுடியும். இரண்டையும் சொல்லிவிடமுடியாது, அப்படி இரண்டையும் சொல்லிவிட்டு நான் உயிர் தப்பிவிடவும் முடியாது.ஒரு வேளை அப்படி நான் சொன்னால்...இது வரை இரு வேறு அணிகளாக பிரிந்து நின்ற இவர்கள் இன்று என்னை தாக்குவதற்காகவே ஓரணியில் சேர்ந்து விடுவார்கள். எனவே என்னை பாதுகாத்துகொள்ளவதற்காவது ஒரு சரியான தீர்ப்பை சொல்லி என் உயிரை காப்பாறிக்கொள்ளும் நிலையில் உள்ளேன்.இதெல்லாம் நான் நடுவராக சம்மதிக்கும்முன் யோசிச்சிருக்கனும், இப்ப வேற வழியில்லை, ஒரு நியாயமான சரியான தீர்ப்பை சொல்லிவிட்டு ஓடிவிடுகிறேன். எல்லாரும் கொஞ்சம் ஒதுங்கி நிள்ளுங்கள்..

தீர்ப்பு:
அதாவது நம்முடைய மனித வாழ்க்கைக்கு தேவையான பணம் என்ற விசயத்தை நோக்கிதான் எல்லாருடைய ஓட்டங்களும்,எல்லா இயக்கங்களும் இருக்கிறது. பணத்துக்கு ஆசைப்படாதோர் யாருமே இல்லை, அதுவும் நிறைய பணத்துக்கே நாம நிறைய பேர் ஆசைப்படுகிறோம். எப்படா லட்சாதிபதியாகலாம்?, எப்படா கோடிஸ்வரனாகலாம்? என்றே எல்லாருடைய ஏக்கமும்.இதில் முடிந்தவர்கள் அந்த இலக்கை அடைகிறார்கள், இயலயாதவர்கள் இன்னும் ஏக்க நிலையிலேயே:(!
அதே சமயம் மனிதன் சுதந்திரத்தை விரும்புகிறானா என்றால் அதுவும் உண்மைதான்.ஆனால் “சுதந்திரமா? பணமா?” என்றால் சுதந்திரத்தை இரண்டாவதாக்கா அவன் தயங்குவதில்லை.

மேலும், ஒரு தொழிலாளி முதலாளியானால், அதை முன்னேற்றம் என்று நாம எல்லாரும் கோரஸாக சொல்லுவோம், ஆனால் ஒரு முதலாளி தொழிலாளியானால் அதை முன்னேற்றம் என்று யாராவது ஒருத்தர் சொல்லுவாரா? ம்ம்? சொல்லுங்க ? யாராவது சொல்லுவாங்களா? சொல்லவே மாட்டாங்க,அதை பின்னடைவு என்பார்கள்; ஏன் சீரழிவு என்றுகூட சொல்லுவார்கள்.

மேலும் நம்மில் எல்லாரும் முன்னேற்றத்தை பற்றி பேசும்போது இப்படி பேசித்தான் பழகியிருக்கோம், “நேத்து ஒரு பஸ்ல ட்ரைவரா இருந்தவன் இன்னைக்கு பல பஸ்களுக்கு ஓனரா இருக்கான்”
ஒருத்தருடைய பின்னடைவை பேசுபோது ... “ஒரு நேரத்துல இந்த கடைக்கே ஓனரா இருந்தான் இன்னைக்கு இவன் இன்னொரு கடையில டீஆத்திகிட்டு இருக்கானு” இப்படித்தான் பேசுவோம்.

இதை எல்லாவற்றையும் விட இந்த தொழில் தான் சிறந்ததென நான் முடிவு செய்ததற்கு காரணம் நாட்டில் நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டம். வேலைக்கு தான் செல்வேன் என அடம்பிடித்து இன்றும் வேலையில்லாமல் திரியும் இளைஞர்களை நாம் பார்க்கிறோம். இதனால் தான் நம் நாட்டில் இன்னும் வளர்ச்சியை நோக்கி செல்ல முடியவில்லை.வேலையில்லா திண்டாட்டம் போக்க அரசு எவ்வளவோ முயற்சித்தும் இயலவில்லை. வேண்டுமானால் வேலைக்காக காத்திருக்காமல் முடிந்த அளவு சுயமாய் தொழில் செய்யலாம்.தகுதி இல்லதவர்கள் கூட வேலைக்கு தான் போவேன் என அடம் பிடிப்பது வேதனைக்குறியது:(
இதை பற்றி யாராவது சொன்னீர்களா?(ஒரு வேளை நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம்)
எனவே என்னுடைய தீர்ப்பு என்னவென்றால்

இன்றைய சூழலுக்கு ஏற்றதும், (சிறந்தது என சொல்ல மாட்டேன்), தொலைநோக்கு பார்வையில் பார்க்கும் போதும் சுய தொழிலுக்கு தான் என் தீர்ப்பு.

இரு தொழிகளும் பணத்திற்காக தான் செய்கிறோம்.நம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தான் உழைக்கிறோம்.அதை இரு தொழில்களின் மூலம் நாம் பெறலாம் என்பதில் சற்றும் ஐயம் இல்லை.அதற்காக வேலைக்கு செல்வதை ஏற்றது அல்ல என சொல்ல முடியாது. நம் நாட்டின் வணிக முன்னேற்ற தராசு ஒரு பக்காமாக மட்டும் அதிகரித்தால் நல்லதல்ல. இரு தரப்பும் ஒன்றுக்கொன்று சமமாக இருந்தால் தான் அது வளர்ச்சி.ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இரண்டுமே இரு கண்கள்.

இந்த தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்:)
பட்டியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பட்டியின் ஆரம்பத்தில் மேன் ஆப் தி மேட்ச் பட்டம் வழங்கப்போவதாக சொல்லியிருந்தேன். இது பட்டியில் நல்ல பயனுள்ள வாதத்தை கொண்டுவருவதற்காகவு, ஊக்கம் கொடுப்பதற்காகவும் தான். அட்மின் அண்ணா இதை முன்னால் நடந்த பட்டியில் சொல்லியிருந்தார்.அதை தான் இங்கு செயல்படுத்தினேன்.

எல்லாரும் அருமையாக வாதாடுனீர்கள். ஆனால் முன்பு அட்மின் அண்ணா சொன்னதை போல் ஒருவருக்கு மட்டுமே அந்த பட்டத்தை கொடுக்க வேண்டுமென்பதால் ஒரு நபரை மட்டும் தேர்ந்தெடுத்தேன். இதை சொல்வதினால் மற்றவர்கள் சிறந்த பேச்சாளர் என அர்த்தமில்லை.

இந்த பட்டத்தை அவருக்கு கொடுக்க காரணம்:
மூத்த உறுப்பினர்களே பல பதிவுகளுக்கு போனால் கலந்துக்கொள்ள தயங்குவார்கள். நானும் கூட:)
ஆனால் இடையில் கலந்துக்கொண்டாலும் பயமின்றி வாதாடினார். ஒவ்வொருவரின் பதிவுகலுக்கும் எதி வாதம் கொடுத்தார். கட்சியின் பலத்தை அதிகப்படுத்தினார்.
அந்த வகையில் சாந்தினியை தான் தேர்ந்தெடுத்தேன்!

வாழ்த்துக்கள் சாந்தினி!
இது போலவே இனி வரும் பட்டிகளிலும் கலந்துக்கொண்டு கலக்குங்க:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்