பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

கவுத்திப்புட்டீங்களே நடுவரே!

நல்ல அருமையா தீர்ப்பு சொல்லியிருக்கீங்க நடுவரே! வாழ்த்துக்கள். எதிர்பார்த்த நல்ல தீர்ப்புதான்.

வுமன் ஆஃப் த மேட்ச் சாந்தினிக்கு வாழ்த்துக்கள். உங்கள் வாதம் மிக அருமை. தொடரும் பட்டிகளிலும் கலந்து கொண்டு கலக்குங்கள்.

தோழிகளுக்கு ஒரு வேண்டுகோள். இங்கு பட்டியில் ஒருவரை ஒருவர் எதிர்த்தாலும் வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம் செய்தாலும் பட்டிக்கு வெளியே தோழிகள் மட்டுமே. எதையும் தனிப்பட்ட தாக்குதல்களாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

அப்புறம் எங்க அணி தோற்றதற்கு காரணம் கண்டு பிடிச்சுட்டேன். நானும் வனியும் சேர்ந்து ஒரு அணியில் இருந்தால்தான் வெற்றிபெறுவோம்.
இல்லேன்னா அம்புட்டுத்தான் எங்க ராசி அப்படி :-(

பட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வாதங்களை அலசிப்பார்த்து தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள்.நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்பதால் ஏற்றுக்கொள்கிறேன்.2 பதிவுகள் போட்டாலும் நன்றியுரையில் என் பெயரையும் சேர்த்ததற்கு மிக்க நன்றி

அமீனா, எங்க அணிக்கு நல்ல தீர்ப்பு சொன்னதற்காக இந்தாங்க பிடிங்க ஸ்வீட்ட. என்னால் தொடர்ந்து கலந்து கொள்ள முடியாததற்கு வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் எங்கள் அணியின் தோழிகள் அணிக்கு வலிமை சேர்த்து வெற்றிக்கனியை பறித்துத் தந்தார்கள். சாந்தினி உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். அமீனா, அடுத்து ஒரு நல்ல நகைச்சுவை கலந்த பட்டிமன்றத்தலைப்போடு சீக்கிரமா வாங்க. வெளுத்து வாங்குறோம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹலோலோலோலோ....................................................

என்னதிது! தீர்ப்ப இன்னைக்கே சொல்லிட்டேளா!

பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாருக்குகுகுகுகுகுகு!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

எங்கள் அணிக்கு வெற்றிக்கனியை தந்த நடுவருக்கு (ஆமினா) மிக்க நன்றி. எங்கள் அணி தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.man of the match சாந்தினிக்கு வாழ்த்துக்கள்பா (நான் முன்பே நினைத்தேன் நீங்கள் தான் வருவீர்கள் என்று) எதிரணி என்று நாங்கள் சொன்னாலும் எல்லோரும் பட்டியை விட்டு வெளியே வந்ததும் நாங்கள் அனைவரும் .நண்பர்களே.பட்டிமன்றத்தை அருமையாக நடத்திய ஆமினாவிற்கு எல்லோரும் ஒ போடுங்கப்பா

சாந்தினிக்கு எனது வாழ்த்துக்கள், ரொம்ப அருமையா அனல் பறக்க வாதாடுனீர்கள்.
பட்டியில் பங்கேற்ற அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எமது நன்றிகள்.

அன்புடன்
பவித்ரா

ஆமினா..

நல்ல தீர்ப்பு.எதிர்பார்த்தபடி அமைந்தது. என்னால் தான் பங்கு பெற முடியவில்லை ;-(.. வாழ்த்துகள் சாந்தினி..

பட்டியில் கலந்து கலக்கிய தோழர் தோழிகளுக்கு வாழ்த்துகள்..

நடுவர் பணியை செவ்வனே செய்த ஆமினாக்கும் என் நன்றி மற்றும் வாழ்த்துகள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அப்துல் கலாம் கூட "வேலையில்லாத் திண்டாட்டத்தை தீர்க்க நீங்கள் தொழில்செய்து நாலுபேருக்கு வேலை கொடுங்கள்" என்றே சொன்னார்..அதிலிருந்து புரிந்து கொள்ளலாம்(இதை யாருமே குறிப்பிட்டு சொல்லவில்லை)
அனல் பறக்கும் விவாதம்..வாவ்..குறிப்பாக சாந்தினி மேடம்..யோகலட்ஷ்மி மேடம்..கவிசிவா..எல்லோரும் கலக்கினார்கள்.இதில் நடுவராக சிறப்பாக செயல்பட்டார் ஆமினாமேடம்..ஸ்பெஸல் தேங்ஸ் கோஸ் டூ ஆமினா மேம்..இதில் பங்கு கொண்ட சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல..

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நன்றி கவிசிவா
//அப்புறம் எங்க அணி தோற்றதற்கு காரணம் கண்டு பிடிச்சுட்டேன். நானும் வனியும் சேர்ந்து ஒரு அணியில் இருந்தால்தான் வெற்றிபெறுவோம்.
இல்லேன்னா அம்புட்டுத்தான் எங்க ராசி அப்படி :-(//
நானும் அதை தான் நினைத்தேன்:)

//2 பதிவுகள் போட்டாலும் நன்றியுரையில் என் பெயரையும் சேர்த்ததற்கு மிக்க நன்றி//
அதுக்காக விட்டுடுவேனா?
கீதா 2 பதிவு என்றாலும் உங்க வாதம் அருமை.
தீர்ப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி!

கல்பனா:
ஐய்யோ அதுக்காக இப்படியா வாய்ல அள்ளி திணீப்பீங்க. கைல உள்ளதை அப்படியே எடுத்துட்டு போனா எப்படி? குடுத்துட்டு போங்க. வச்சு வச்சு சாப்பிடுவேன்:)
உங்க பதிவை காக்கா தூக்கிட்டு போன துக்கத்துல தான் பட்டிக்கு வரலன்னு நெனச்சேன்:(
பிரியாணிக்கு ஏற்றது சிக்கனா? மட்டனா? தலைப்பு நல்லா இருக்கா?
அடுத்த பட்டிக்கு மீண்டும் நான் வந்தா வனி அக்கா என்னைய பெஞ்ச் மேல ஏத்திற்வாங்க:(

மாமி:
பட்டில நீங்க இல்லாம ரொம்ப போராச்சு.அதுவும் என் பட்டிலையா நீங்க பாதியோட நிக்கணும்?
நன்றி மாமி

சுந்தரி:
ரொம்ப நன்றி பா. கொஞ்சமா பேசினாலும் அதிகமா சிந்திக்க வச்ச ஆள் நீங்க தான். அடுத்து வரும் பட்டிகளிலும் தொடரட்டும் உங்கள் வாதம்:)

பவி:
நன்றி பவி

ரம்யா:
தீர்ப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி ரம்யா. உங்களின் வேலை பழுவுக்கிடையில் போட்ட அந்த பதிவுக்கு மதிப்பு அதிகம். கலந்துக்கொண்டதற்கு நன்றி

நன்றி சேக் அண்ணா!

நீங்கள் சொன்னது உண்மை தான். சுய தொழில் செய்யும் ஆர்வமிருந்து அதில் செயல்பட்டால் வேலையில்லா திண்டாட்டம் நீங்கும்:)
கலந்துக்கொண்டு சிறப்பாக வாதாடிய உங்கலுக்கு மிக்க நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹா ஹா ஒரு ரகசியத்தையும் சொல்லிட்டுப் போறென். யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. இந்தியாவில் சுயதொழில் ஆரம்பிக்க முடியலேன்னாலும் இங்க ஒண்ணை ஆரம்பிச்சு நல்லாவே போய்கிட்டு இருக்கு :-).

இந்தியாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால்தான் அந்த அணிக்கு போய்ட்டேன் :-(. இன்னொரு காரணம் எங்க அணி வெற்றி பெற்றதுன்னாலும் சந்தோஷம். இல்லேன்னா நாமும் சுயதொழில் செய்வோர்தானே நமக்குத்தான் வெற்றின்னு ஒரு சந்தோஷம் கிடைக்கும் பாருங்க எப்பூடி?

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்