பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

அன்பு ஆமினா, மற்றும் பட்டிமன்றத்தில் வாதாடிய அன்புத் தோழிகள் அனவருக்கும்

முதலில் மனம் நிறைந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!

ஆமினா,

ரொம்ப சிறப்பாக பட்டிமன்றத்தை நடத்தினீங்க, நல்லதொரு தீர்ப்பையும் கொடுத்திருக்கீங்க. நான் எதிர்பார்த்த தீர்ப்பும் இதுதான். ரொம்ப அழகாக அலசி ஆராய்ந்து, சரியான முறையில் JUSTIFY செய்து, தீர்ப்பை வழங்கியிருக்கீங்க.

ஸ்கூலில் படிக்கிற சிறுமி துறுதுறுன்னு விளையாடிட்டு இருக்கும், கல்லூரிக்குப் போனதும் ஒரு உற்சாகம் ததும்பும், அதே பெண், அந்தக் கல்லூரியில் ஆசிரியப் பணியாற்ற வந்தால், பக்குவமும், மெருகும் தெரியும். அதே போல, முதல் முதலாக பட்டிமன்றத்தில் வாதாடியபோது பேசிய ஆமினாவுக்கும், இன்னிக்கு நடுவராக பொறுப்பேற்று, சிறப்பாக அந்தப் பொறுப்பை நிறைவேற்றியிருக்கும் ஆமினாவுக்கும் தெரிகிற வித்தியாசம் இருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் இந்த அற்புதமான மாற்றம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.தீர்ப்பு மட்டுமில்லாமல், முதல் தடவையாக மான் ஆஃப் த மாட்ச் என்ற பட்டத்தையும் கொடுத்திருக்கீங்க. வாழ்த்துகள், பாராட்டுகள், ஆமினா! இதோ பிடியுங்கள் அழகிய ரோஜாக்களால் ஆன பூங்கொத்து உங்களுக்கு!

இந்த பட்டிமன்றத்தில் புதிய முகங்கள் நிறைய பேர் பங்கேற்றார்கள். எல்லோரும் ரொம்ப ரொம்ப பிரமாதமாக வாதாடினாங்க. அவங்க அனைவருக்கும் இனிய மணம் தரும் பூச்செண்டுகள் பரிசு! பெற்றுக் கொள்ளுங்க!

அவங்க அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதத்தில், ஒரு விதத்தில் சொன்னால், எப்படி கருத்துகளை எடுத்து சொல்லணும் என்கிற வழிகாட்டியாக, வாதாடிய சீனியர் கவிசிவாவுக்கு சிறப்பு தகதக பொன்னாடை!

மான் ஆஃப் த மாட்ச் விருது பெற்று, அதிலும் முதல் முறை வாதாடும்போதே, யார் இந்த தோழி, இந்தப் போடு போடுகிறாரே என்று எல்லோரையும் வியக்க வைத்த சாந்தினிக்கு, இதோ பல வண்ண ரோஜாக்கள் உள்ள மலர்க் கூடை, வாங்கிக்குங்க!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு கவிசிவா,

இப்படி ஒரு ரகசியம் இருக்கும்னு நிச்சயமாக எதிர்பார்க்கலை! எல்லோரையும் திகைக்க வச்சுட்டீங்களே.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

தகதக பொன்னாடைக்கு நன்றி சீதாலெக்ஷ்மி மேம். உங்கள் எழுத்துக்கு முன்னால் நானெல்லாம் ஒன்றுமே இல்லை.

தோழிகளே சீனியர்னு சொன்னாலும் நான் சீனியர் சிட்டிசன் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :-)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சீதாம்மா.....

என் ஒவ்வொர் வளர்ச்சியை கவனித்து வந்த உங்களுக்கு தான் என் நன்றியை சொல்ல வேண்டும். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த கவிசிவாவுக்கும்,ரம்யாவுக்கும் தான் என் நன்றிகளை சொல்ல வேண்டும்:)

கடையில் வாங்கும் ரோஜாவைவிட நீங்கள் தந்த இந்த ரோஜாவுக்கு மணம் அதிகம்.ஆனால் விலைமதிப்பற்றது.

பட்டியில் இம்முறை அதிக புது உறுப்பினர்கள் வந்தது தான் சிறப்பு.

(சீதாம்மா!பூக்கடை வீதிக்கு போய்ட்டு வந்தீங்களோ:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சீதாலக்ஷ்மி

அடடா... நீங்கள் எழுதிய எழுத்தில் உண்மையாகவே மேடை அமைத்து பட்டிமன்றத்தை பாராட்டி பூங்கொத்து மற்றும் பொன்னடை போர்த்தும் சம்பவம் நேரிலேயே தெரிகிறது.. ;-)

உங்கள் பேச்சு ஏற்கனவே அழகு. இதில் வாசனை மிகுந்த பூக்கள் மற்றும் தகத்தக பொன்னாடை வேறு.. சொல்லவே வேண்டாம். ;-)

நீங்கள் அனைவரையும் வாழ்த்தியதற்கே என் நன்றி.. நானும் கலந்து கொண்டிருந்திருந்தால் உங்களின் பாராட்டு மட்டும் அன்பை பெற்றிருப்பேன் ;-(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஆமினா... என்ன தீர்ப்பு சொன்னீங்கன்னு பார்க்க ஓட்டொடி வந்தேன். என்னால் கலந்துக்க முடியலன்னு வருத்தமா இருக்கு. நிச்சயம் அடுத்த பட்டிக்கு ஆஜராயிடுவேன். நல்ல தீர்ப்பு, அதுக்கு அழகான விளக்கம்'னு கலக்கிட்டீங்க ஆமினா. புதுசா வந்து இப்படி கலக்குறீங்க. சூப்பர். நடுவராக இருந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி. :)

கலந்து கொண்ட புது முகங்கள், மூத்த உறுப்பினர்கள், மற்றும் அனைவருக்கும் என் நன்றிகள் பல. இப்பட்டியில் வழக்கத்தை விட அதிகமான வாதங்கள், வாதாடும் புது முகங்களை கண்டது மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து எல்லா பட்டியிலும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கறேன். :)

சிறப்பு பரிசு பெற்ற சாந்தினி'கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கலக்கிட்டீங்க. :)

அப்படியே சூடு குறையும் முன்னாடி அடுத்த நடுவர் பதவிக்கு யாராது கை தூக்குங்க பார்ப்போம்.... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி அக்கா!

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி! எல்லாம் உங்க பாணி தான். நீங்க கலந்துக்க்காதது எனக்கும் சற்று வருத்தம் தான்.ஆனால் வேலைபழு என நினைத்து சமாதானப்படுத்திக்கொண்டேன். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லியிருந்தீர்கள்!
இப்போது நலமா?

சீக்கிரம் நடுவர தேர்ந்துடுங்க:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வெற்றி! வெற்றி!!

அருமையான தீர்ப்பு வழங்கிய நடுவர் அவர்களுக்கு நன்றி.

நான் ஒரு வேலை காரணமாக வெளியில் போய்விட்டதால், என்னால் கடைசி நேரத்தில் பட்டிமன்றத்தில் பங்கு கொள்ள முடியாமல் போய்விட்டது. இங்கே இருக்கும் அனல் பறக்கும் கடைசி நேர பரபரப்பு விவாதங்களை இப்பதான் படிச்சு முதிச்சேன், மிஸ் பண்ணிட்டோமே இந்த போயண்டுக்கு இப்படி பதில் கொடுத்து இருக்கலாமே அப்படீன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. வெளியில் இருந்தாலும், என்ன தீர்ப்போ அப்படீன்னு நினைவெல்லாம் இங்கேதான் இருந்தது.

நல்ல தீர்ப்பு தான். ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. ஜெயிச்ச கட்சியில இருக்கிறோம் என்கிறதால ஏற்படற சந்தோஷத்த விட, பட்டிமன்றத்தில் கலந்துகிட்டதே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

"மேன் ஆப் மேட்ச்" பொருத்தமான நபருக்கு கொடுத்திருக்கீங்க. அன்பு தோழி சாந்தினிக்கு பாராட்டுக்கள். சாந்தினி, நீங்க அடிச்சா சிக்ஸர் தான் போலிருக்கே. ரொம்ப அருமையா வாதாடுறீங்க. கவிசிவா அவர்களே, அப்பவே எனக்கு ஒரு டவுட் இருந்துது நீங்க இப்படி ஏதோ பண்ணியிருப்பீங்கன்னு. எதிரணியில் இருந்ததால், உங்களுக்கு உடனே ஹோ ஹோ போடா முடியல, ஆனால் மனசுக்குள்ள கை தட்டிக்கிடேன், நல்ல வாதங்கள். சுந்தரி அவர்களே, சாந்தினி அதிரடீனா, நீங்க நச்சுன்னு ஒரு விசயத்த நாசூக்கா சொல்றீங்க. எனக்கு அந்த ஸ்டைல் புடிச்சிருக்கு. சேக் அண்ணா, நீங்க தடாலடிதான். இன்னும் கலந்துகிட்ட அனைவரும், அருமையா வாதாடினாங்க. அனைவருக்கும் வாழ்த்துக்கள் (முக்கியமா சூப்பரா விளக்கங்களோட, தீர்ப்பு கூறிய நடுவருக்கு).

யோகா

இதுவும் கடந்து போகும்.

நடுவர் அவர்களே நான் என்ன சொல்கிறேன் என்றால்....
வேலைக்கு சென்று பிழைப்பதுதான் நன்று என்று சொல்லுவேன்..மேலும் சுயதொழில் செய்பவர்கள்...ஹலோ என்னய்யா....ஏய்!!..ஏய்!!
இன்னாய்யா?
ஹேய் மேன் மைக்க எங்க மேன் தூக்கிட்டு போற...பேசிகிட்டு இருக்கிறேனல
இன்னாது பேசிக்கினுகீறீயா யோவ்....பட்டி மன்றமெல்லாம் முஞ்சு..அல்லாம் ஊட்டுக்கு போகீனுறாங்க....இப்ப வந்த இன்னாயா பேச்சு வேண்டிக்கீது....
போ..போ...வூட்டாண்ட போ...இன்னா முறைகிற போய்கீனே இரு
அப்ப முடிஞ்சு போச்சா?

அது என்ங்க Ladies க்கு Man Of The Match? புரியலையே
ஆஷிக்

மேலும் சில பதிவுகள்