பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

உங்களை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. ரொம்ப ரொம்ப சிறப்பா பட்டிமன்றத்தை எடுத்துச் சென்றீர்கள். தீர்ப்பும் மிக மிக அருமையாக விளக்கமாக கூறியுள்ளீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தொடர்ந்து வாதாடிய அனைவருக்கும் பாராட்டுக்கள்.

கவிசிவா - சொல்லவே வேண்டாம். வாதத்திற்கென்றே பிறந்தவர்கள். எப்போதும்போல் சிறப்பாக வாதாடினார்கள்

சாந்தினி - எல்லோரையும் அவர்பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். அருமையான வாதங்கள். தொடர்ந்து கலந்துகொள்ள வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

சரிதான் ஆஷிக்..ஆமினா யானை மாதிரி... ஐ மீன் யானைக்கும் அடி சறுக்கும் என்று சொன்னேன்...நம்ம தங்கைதானே பொறுத்துக் கொள்வோம்!அப்ப ஆஷிக் வுமன் ஃஆப் மேட்ச்னு சொல்லலாமா?மேன் ஃஆப் தி மேட்சுனா அது கண்டிப்பா எனக்கு அல்லது தவமணி அண்ணாவுக்குதான் சேரனும்....தவமணி அண்ணா ஆரம்பமே மிஸ்ஸிங்..சோ நாந்தாங்க மேன் ஃஆப் தி மேட்ச்..சரியா ஆஷிக்??

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

இதுல தயங்கி சொல்ல என்ன இருக்கு!

அருசுவைக்கே தெரியும். ஆமிக்கு ஆங்கிலம் தெரியாது என்று! அதுனால தான் அருசுவை தவிர எந்த ப்ளாகிலும்,எந்த சைட்டிலும் தலை காட்டுவதில்லை. அருசுவை தவிர எந்த இடத்திலும் பெயர் பதிவு செய்யவில்லை!

ஆண்களும் பெண்களும் ஒன்றாய் வாதாடினால் ஜெய்ப்பவர்களை எப்படி சொல்வது? தங்கைக்கு கற்று கொடுங்க ஆஷிக்!

நன்றி அண்ணா! எனக்காக பேசியதுக்கு.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//தேன் மொழி, சாந்தினி, கவிசிவா, யோகா, சேக் அண்ணா, தவமணி அண்ணா, ராதா, பொன்னி, ஜமுனா, மாமி, கோமு, காந்தி, ரம்யா, கல்பனா,நிஷா, தேவிசுரேஷ், பவி, பாலசுந்தரி, நாகவளர், சித்ரா, ரேணுகா, சுந்தரி, கீதா, தமிழரசி, கிருத்திகா, பார்கவி, இலா , இஷானி, ஆஷிக், கலைவானி, நித்யா, குணா , ரேவதி , மீரா ,ஜெயலெட்சுமி//

ஐ! கடைசியாக வந்தும் முலில் இடம் பிடிச்சிட்டேன்...

நன்றி நடுவரே....

தீர்ப்பு - அதுதான் கவுந்துட்டேன்ல அப்புறம் அதைப் பற்றிப் பேச்சு...

ஆமினா

பட்டிமன்றத் தீர்ப்புல கலக்கிட்டீங்க. ம்ம்ம்ம்ம்ம்....... என்ன பண்றது எங்க டீம் தோத்துப்போச்சே..... பரவாயில்ல... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.......

அடுத்த பட்டிமன்றத்துலயாவது ஒழுங்கா கலந்துக்கணும். தெரியாத ஒரு தலைப்புக்கு பேசும் போது எதைப்பற்றி பேசுவது என்று சற்று நிறையவே யோசிக்க வேண்டியிருந்தது... அடுத்த முறை நன்கு தெரிந்த தலைப்பாக இருந்தால் அவசியம் நன்கு பேசவேண்டும் என்றிருக்கிறேன்..........

மேன் ஆப் தி மேட்ச் வாங்கிய சாந்தினிக்கு வாழ்த்துக்கள்.....

சீதாலஷ்மி மேடம் உங்க பூச்செண்டுக்கு நன்றி..... (பரவாயில்லை தோத்தா கூட பூச்செண்டு கொடுத்துள்ளீா்கள். மிக்க நன்றி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

தாமதத்திற்கு மன்னிக்கவும்..

நேற்று மாலை வெளியில் சென்று திரும்ப நடு நிசி ஆகி விட்டது ( எல்லாம் செகண்ட் ஷோ சினிமாவால் தான் ) .. எனவே என்னால் தீர்ப்பைப் படிக்க மட்டுமே முடிந்தது.. பதிலிட முடிய வில்லை.. நல்ல தீர்ப்பு வழங்கி உள்ளீர்கள் நடுவரே!! இன்றைய சூழலுக்கு ஏற்றது என்பதையும் தெளிவு படக் கூறி உள்ளீர்கள். நன்றி.

"(wo)man of the match " பட்டம் வென்றது மகிழ்சியாக உள்ளது.
அதை விட எனக்குள் எண்ணங்களாக மட்டுமே பதிந்திருந்தவற்றை எழுத்துக்களாக வெளிக்கொண்டு வந்ததற்கும் என்னால் இவ்வளவு தூரம் வாதாட முடியும் என்பதை எனக்கே உணர்த்திய அறுசுவைக்கும் தலைப்பை நல்கிய நடுவருக்கும் மிக்க நன்றி.

பட்டி மன்ற தலைப்பைப் பார்த்த போது வாதாடுவது எல்லாம் பெரிய விஷயம் என்று நினைத்து freeyaga விட்டு விட்டேன்.. யதேச்சையாக நண்பர் "ஷேக்" அவர்களின் வாதத்தைப் பார்த்தேன்.
உண்மையில் எனக்குக் சற்று கோபமே வந்து விட்டது.. :) அந்தக் கோபத்தில் பதிவிட்டது தான் என் முதல் பதிவு.. :) எனவே என்னைப் பதிவிடத் தூண்டிய நண்பர் ஷேக் அவர்களுக்கு சிறப்பு நன்றி :)

கவிசிவா:
சொல்லப் போனால் எனக்கு சரியான போட்டியே நீங்கள் தான்.. இந்த விளக்கத்திற்கு மேலும் எதிரணியால் என்ன கூற முடியும் என நினைத்துக் கொண்டு இருந்த சமயத்தில் எல்லாம் புது புது
பிரச்சினையுடன் வந்தீர்கள் நீங்கள்..
//இந்தியாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால்தான் அந்த அணிக்கு போய்ட்டேன் :-(.// உங்கள் வாதத்தில் இது அப்பட்டமாகத் தெரிந்தது..
பட்டி முடிந்து விட்டது எனினும் அக்கறையின் பேரில் கேட்கிறேன்.. விகடன் இதழ்கள் இணையத்திலேயே வருகின்றனவே உங்களுக்குத் தெரியாத? http://www.vikatan.com/vc/2010/jan/vc.asp
சென்று பாருங்கள்.. "subscribe" செய்ய வேண்டும்..

பவித்ரா :
உங்களைப் போன்ற எதிரணியினரின் துண்டுதல் தான் காரணம்.. நன்றி பவித்ரா :)

சீதாலக்ஷ்மி :
உங்களைப் போன்ற பெரியவர்களின் அன்பும் ஆசியும் தான் காரணம் சீதாம்மா.. பூங்கொத்து எல்லாம் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். மிக்க நன்றி.. உங்கள் மலர்க் கூடை மிக அழகாய் உள்ளது.. :)

இஷானி:
உங்களின் எழுத்து நடைக்கு நான் ரசிகை. உங்கள் வாயால் பாராட்டுப் பெறுவது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.. :)

யோகலக்ஷ்மி :
நீங்கள் மட்டும் என்னவாம் ?... உங்களின் பல வாதங்கள் எனக்கு மிகவும் சப்போர்டாக இருந்தது என்பதே உண்மை தோழி :)

ஆஷிக்:
பட்டியின் இடையிலேயே வாழ்த்தி இருந்தீர்கள்.. தாமதமாகத் தான் பார்த்தேன்.. நன்றி.. :)

மற்றும் என்னை வாழ்த்திய உள்ளங்கள் கல்பனா ,சுந்தரி,ரம்யா, வனிதா,ராதா அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.. (யாராவது விட்டுப் போயிருந்தால் கோவித்துக் கொள்ளாதீர்கள்பா!!)

//பட்டி முடிந்து விட்டது எனினும் அக்கறையின் பேரில் கேட்கிறேன்.. விகடன் இதழ்கள் இணையத்திலேயே வருகின்றனவே உங்களுக்குத் தெரியாத? http://www.vikatan.com/vc/2010/jan/vc.asp
சென்று பாருங்கள்.. "subscribe" செய்ய வேண்டும்..//

நன்றி சாந்தினி. நான் ஏற்கெனவே அவள்விகடன் படித்து விட்டேன். விகடன் இணைய சந்தாதாரர்தான் நான் :-). இது பட்டிமன்றம் இல்லையா அதான் எங்கள் அணிக்கு எது சாதகமோ அதைப் பேசினேன். அவ்வளவுதான். அதெல்லாம் பட்டிமன்றத்தில் சகஜம். இதே நான் உங்கள் அணியில் இருந்தால் என் பேச்சு வேற மாதிரி இருந்திருக்கும் :-).

அதனால பட்டியில் பேசற பேச்சுக்களை அவர்களின் சொந்தக்கருத்தா எடுத்துக்க வேண்டாம்.

நல்ல கடுமையான போட்டி கொடுத்தீங்க சாந்தினி. வாழ்த்துக்கள். தொடர்ந்து அசத்துங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஆமினா நல்ல தீர்ப்பு. ரொம்பவே நடுநிலையா யோசிச்சு தான் சொல்லி இருக்கீங்க. இந்த முறை கலந்துக் கொள்ள முடியவைல்லை அடுத்தமுறை வருகிறேன்.

சாந்தினி வாழ்த்துக்கள். உங்கள் வாதங்களை வாசித்தேன் அத்தனையும் ரொம்பவே செண்ஸ்டிவ்வா இருந்துச்சு.

நன்றி இஷானி!

தேன் மொழி:
கடைசியில் பந்திக்கு உக்காருபவர்க்கு சில நேரம் அதிஷ்ட்டம் அடிக்கும். சில நேரம் எல்லா உணவுகளும் தீர்ந்துபோய் துரதிஷ்ட்டம் அடிக்கும்.
உங்களுக்கு இந்த முறை அதிஷ்ட்டம் தான்:)
//நன்றி நடுவரே....// நன்றி தேன்மொழி!
//தீர்ப்பு// அதான் அதைபத்தி சொல்லலையே.அப்பறம் அதை பற்றி பேச்சு......

ராதா:
பேச தெரியாமலே அழகா பேசிட்டீங்க. இனி வரும்பட்டிகளிலும் சிறப்பா கலந்துக்கொள்ள வேண்டும்:)

சந்தினி:
நன்றி சாந்தினி. சுயதொழில் கட்சிக்கு வலுவூட்டிய நபர்களில் நீங்களும் ஒருவர். இதே போல் இனி வரும் பட்டிகளிலும் அணிக்கு பலம் சேர்க்க வேண்டும்:)

கௌரி:
நன்றி பா. இனிவரும் பட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிபெற வாழ்த்துக்கள்!

ஆஷிக்:
அப்பா! அருமையான பேச்சு. பாதிய்யோட விட்டுட்டீங்களே!
அதை மொதலிலேயே பேசிற்க்கலாமே?

நல்லவேளை பல உயிர் தப்பியது:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி இஷானி! வாதத்திற்கென்றே பிறந்தவர்கள்னு சொல்லும் போது கூச்சமா இருக்கு. ஏன்னா எனக்கு அந்த தகுதி இருக்கான்னு சந்தேகமே!

எப்படியிருந்தாலும் பாராட்டுக்கள் கிடைக்கும் போது மகிழ்ச்சியே. ரொம்ப நன்றி இஷானி பாராட்டுக்களுக்கு.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்