பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

நடுவர் அவர்களே,
நல்ல தலைப்பு ஆமினா,

என்னோட வாதம் வேலைக்கு செல்வதே, இதை நான் தே தேர்ந்தெடுத்தது நான் வேலைக்கு செல்வதால் இல்லை, இப்போது வாதாட நேரம் இல்லை, நேரம் கிடைக்கும் போது வாதத்துடன் வருகிறேன்.

அன்புடன்
பவித்ரா

தவமணி அண்ணா, என்ணண்ணா இப்படி சொதப்பிட்டீங்க? இந்த தங்கச்சி கூடவே நின்னு சுய தொழிலுக்கு வாதாடுவீங்கன்னு பார்த்தா, இப்படி கவுத்துட்டீங்களே, இது கொஞ்சம் கூட நல்லாயில்லேண்ணா, சொல்லிப்பிட்டேன் ஆமாம்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

வேலைக்குப் போவதுதான் சரி என சொல்லும் சகோதர சகோதரிகளே என்னோட கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க ஒரு நாளைக்கு நீங்க எத்தனை மணி நேரம் உழைக்கிறீர்கள்??? மன உளைச்சளே இல்லாமல் வேலை செய்திருக்கிறீர்களா?? சம்பளம் தவிர உங்கள் உழைப்பிற்கு ஏதேனும் அதிகப்படியான பாராட்டு கிடைத்திருக்கிற்தா?? செய்த வேலையில் திருப்தி இருத்திருக்கிறதா?? சொல்லுங்கள்

அன்பான வேண்டுகோள்

இங்கே கண்டிப்பாக அரட்டை கூடவே கூடாது.அரட்டைகென்றே தனி பகுதியில் அரட்டை பேசலாம்.

தங்கள் சொந்த விஷயம் இங்கே வேண்டாம். தோழிகள் அறிமுகம் சென்று பதியவும்.

வாதங்கள் மட்டுமே பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.இதனால் பட்டியின் அழகு கூடும்

யார் பேரை சொல்லியும் வாதாட கூடாது. இது பகையை ஏற்படுத்தும்.

பட்டிமன்றம் சம்மந்தமில்லாத பேச்சுக்கள் இங்கே வேண்டாம். இது படிப்பவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

எந்த கட்சிக்கு வாதாட போகிறீர்களோ அந்த கட்சியின் பெயரை மேல் எழுதினால் புதிதாய் படிக்க வருபவர்களுக்கு சுலபமாக இருக்கும்.

இரு பக்கத்திற்கு சப்போர்ட் பண்ணி பேச வேண்டாம். இது குழப்பத்தை ஏற்படுத்தும்.

அடுத்தவர் மனத்தினை புண்படுத்தும் படி பேச வேண்டாம்.

தவறாக நினைக்க வேண்டாம். பட்டிமன்ற நலனை கருத்தில் கொண்டு இதை உங்கள் முன் வைக்கிறேன். உங்கள் ஒத்துழைப்பு தாருங்கள். இதை மீறினால் அவர் அணிக்கு ஒரு மார்க் குறையும்:)

பட்டிமன்ற முடிவில் சிறப்பாய் வாதாடிய நபர் ஒருவருக்கு மேன் ஆப் தி மேட்ச் பட்டம் உண்டு.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நடுவருக்கும் தோழிகளுக்கும் என் அன்பான வணக்கங்கள் :-)

வேலைக்கு சென்று சம்பாதிப்பதே சிறந்தது என்ற அணிக்காக என் வாதங்களை வைக்க வந்திருக்கிறேன்.

சுயதொழில்...அது எல்லோராலும் செய்ய முடியும் விஷயம் இல்லை. நிறைய பொறுமை வேண்டும். சவால்களை சந்திக்கும் மன உறுதி வேண்டும். நஷ்டம் வந்தாலும் எதிர்கொள்ளும் மனவலிமை வேண்டும்.

வேலைபார்ப்பது என்பது எல்லோராலும் முடியும் மேலே சொன்ன திறமை உள்ளவர்களாலும் முடியும். இல்லாதவர்களாலும் அவரவர் தகுதிக்கேற்ப வேலைக்கு சென்று சம்பாதித்து தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும்.

சுயதொழில் ஆரம்பித்து நஷ்டம் ஏற்பட்டு வீழ்ந்தவர்கள் உண்டு. ஆனால் யாரும் வேலைக்குப் போனதால் எனக்கு நஷ்டம் வந்திடுச்சுன்னு சொல்ல முடியாது.

சுயதொழில் செய்பவருக்குத்தான் ஆத்ம திருப்தி கிடைக்குதுன்னு சொல்றாங்க. முழு ஈடுபாட்டுடன் தன் வேலையை செய்யும் ஒருவனுக்குத்தான் ஆத்ம திருப்தி கிடைக்கும். தான் செய்யும் வேலையில் ஈடுபாடு இல்லாதவனால் சுயதொழிலே செய்ய முடியாது. அப்படி செய்பவனுக்கு முதலுக்கே வேட்டுதான். அப்படிப்பட்டவனால் ஆத்ம திருப்தியை எதிர்பார்க்க முடியுமா?

//இப்ப ஒரு பியூனா வேலை செய்ரவர் கடைசிவரைக்கும் பியூனா இருந்து வாழ்க்கைய முடிச்சுக்க வேண்டியது தான். அதே போல தான் ஒரு தட்டச்சு வேலை செய்பவரும் அப்படித்தான். செக்கு மாடு ஒரே இடத்தில் உழன்று கொண்டு அதன் வாழ்க்கையை முடித்துக் கொள்வது போல வேலைக்கு சென்று சம்பாதிப்பவர் நிலையும். காலை 9 மணிக்கு அலுவலகத்திற்க்கு போய் மாலை 5 .30க்கு வீடு திரும்புவது. இந்த 8 மணி நேர பணியில் அவர்கள் எந்த புது விஷயங்களையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தினமும் செய்யும் ஒரே வேலையை தான் திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பார்கள். இதில் அவர்கள் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல தினமும் சம்பளத்தை உயர்த்தியா தரப்போகிறார்கள்?//

இங்கேயும் அவரவர் முயற்சி மட்டுமே முக்கியமே தவிர அது வேலை பார்ப்பதனாலோ அல்லது சுயதொழில் செய்வதானாலோ இல்லை. புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ளவனை பாதாளத்தில் பூட்டி வைத்தாலும் அங்கேயும் அவன் ஏதாவதை கற்றுக் கொள்வான். வேலைபார்ப்பவனுக்கு யாரும் தடை விதிப்பதில்லை. முயற்சியும் ஆர்வமும் இருந்தால் ப்யூனாக சேர்பவன் அந்நிறுவனத்தின் அதிகாரியாக வர முடியும். முயற்சி மட்டுமே தேவை. பல நிறுவனங்களில் அது நடந்திருக்கவும் செய்கிறது.

//அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் தாங்கள் வாங்கும் ஊதியத்திற்கேற்ற வேலைதான் செய்வார்கள். அவர்களுக்கு நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து பெரிய அளவில் ஒன்றும் பொறுப்பு இருக்க வாய்ப்பில்லை//

அதெல்லாம் அந்த காலம். கம்பெனியின் வளர்ச்சியில்தான் தன் வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது என்பதை இன்றைய ஊழியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இல்லேன்னா அந்த வருட இங்க்ரிமெண்டும் போனசும் இன்செண்டிவும் குறையும் என்பது அவனுக்கு தெரியும்.

//அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் அவரவர் படிப்புக்கேற்ற ஊதியம், பதவிக்கேற்ற ஊதியம் வாங்குவார்கள். சரி, இன்று அதிகமான வேலை செய்தார்கள் அவர்களுக்கு ஒரு 500 ரூபாயை கூட்டி தரலாம் என்றா அவருடைய மேலதிகாரி நினைப்பார்? //

எட்டுமணிநேரத்துக்கு ஒருமணிநேரம் அதிகம் வேலை செய்தாலும் பல நிறுவனங்களில் இன்று ஓவர்டைம் பணம் கிடைக்கும். சுயதொழில் செய்பவனுக்கு எத்தனை மணிநேரம் உழைத்தாலும் அதன் பலன் உடனே கிட்டும் என்று உறுதி சொல்ல முடியாது.

//மாத சம்பளம் வாங்குவோருக்கு ஊதிய உயர்வு வருடத்திற்கொருமுறையோ, இரு வருடங்களுக்கு ஒருமுறையோ. ஆனால் சுய தொழிலில் உங்களுடைய கடின உழைப்பை மூலதனமாக போட்டால், ஊதியத்திற்குக்கு வேலை செய்பவர்கள் ஓய்வூதியமாக பெறும் தொகையை ஓரிரு நாட்களிலேயே ஈட்டி விடலாம். நீங்கள் காலம் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை.//

காலம் முழுக்க கஷ்டப்பட்டு உழைக்க சம்பாதிக்க வேண்டாம் என்ற எண்ணமே சுயதொழில் செய்பவனுக்கு ஆப்பு வைத்து விடும். உங்களணியினர் சொல்வதைப் பார்த்தால் 58 வயதானதும் அம்பானி ரிட்டையர்ட் ஆகி வீட்டில் இருந்துவிடலாமா? பின்னாடியே பிசினசும் இருந்து விடும். வேலைபார்ப்பவனுக்கு அந்த பிரச்சினை இல்லை.

//சுய தொழில் செய்து சம்பாதிக்கும் போது நீங்கள் இந்த நேரத்திற்க்கு தான் போக வேண்டும். இந்த நேரத்திற்க்கு தான் திரும்ப வேண்டும் என்ற கால வரையறை எதுவும் இல்லை. நீங்கள் நேரம் காலம் பார்க்காமல் பணி செய்து உங்கள் வருவாயை உயர்த்தலாம். சுய தொழில் செய்வதால் நமக்கு பரந்த அறிவு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் விஷயமாக பல புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதன் வாயிலாக அவர்களிடம் இருக்கும் புதிய தொழில் நுணுக்கங்களை கற்றுணர்ந்து அவற்றை நம் தொழிலில் புகுத்தி வருவாயை பெருக்கலாம்.//

சுயதொழில் செய்பவனுக்கு அவனது உழைப்பிற்கான ஊதியம் கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம். ஆனால் வேலை செய்பவனுக்கு அவன் உழைக்கும் ஒவ்வொரு மணிக்கும் ஆன ஊதியம் வந்து விடும். அதுக்குப்பேர் ஓவர்டைம் :-)
வேலையில் இருப்பவனுக்கு பரந்த அறிவு கிடைக்காதா? அது எப்படீங்க? வேலை நிமித்தமாக எத்தனை பேரை சந்திக்கிறார்கள் எத்தனை புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இன்று வேலைபார்ப்பவர்கள் தங்கள் வளர்ச்சிக்காக தேடிப்போய் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். தங்களை அப்டேட் செய்து கொள்வது என்பது இன்றைய சூழலில் அனவருக்குமெ தேவையான ஒன்று.

தொழில் விஷயமாக புதிய நபர்களை சந்திப்பவர் உண்மையில் அந்த நிறுவனத்தில் வேலைபார்ப்பவராகத்தான் இருப்பார். முதலாளி போய் பார்க்க மாட்டார். என்னவருக்கு இந்தோனேஷிய அதிபரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்ததே அவர் ஒரு நிறுவனத்தில் வேலை பார்ப்பதால்தான்.

அப்புறாம் எல்லாரும் சுயதொழில் செய்ய ஆரம்பிச்சுட்டா வேலை பார்ப்பது யாருங்க?!

வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் வருவேன் நன்றி வணக்கம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அனைவருக்கும் வணக்கம்.
சுயமா தொழில் தொடங்குவது எல்லோருமே செய்யலாம். முதலாளிக்கு நல்ல அறிவு இருக்கலாம், நல்ல திறமை இருக்கலாம், நல்ல சுறுசுறுப்பு இருக்கலாம், ஆனால் திறம்பட செயல்படும் உழைப்பாளிகள்..., அவர்களை திறம்பட செயல்பட வைக்கும் அதிகாரிகள்..., இவர்கள் இல்லையென்றால் என்ன ஆகும். நாம் பேசுகிறோமே இந்தியா முன்னேறுகிறது என்று... முன்னேற்றம் இருக்குமா? யோசியுங்கள் எதிர்அணியினரே. முதளாளி சாப்பிடும் சாப்பாடு... உழைப்பவர்களின் வியர்வை துளிகள் என்பதை எதிர் அணியினர் மறந்து பேசக் கூடாது. நல்ல வேலையாட்கள் இல்லாத எத்தனையோ தொழிற்சாலைகள் மூடுவிழா கண்டிருக்கின்றன. அதே போல் முதலாளியின் தவறான முடிவினால் தடுமாறிய தொழிற்சாலைகள் தொழிலாளிகளின் கடுமையான உழைப்பால் தப்பி பிழைத்துள்ளன. நிர்வாக பிரிவில் வேலை செய்பவர்களின் அறிவு திறத்தால்தான் எல்லா தொழில்களுமே நன்கு நடக்கின்றன. எனக்கு என்ன வந்தது என்று நிர்வாகப்பிரிவில் வேலை செய்பவர்கள் நினைத்தால் போதும், என்ன ஆகும் தெரியுமா? முதலாளி பஞ்சுமிட்டாய் விற்க போக வேண்டியதுதான்.மீண்டும் வருவேன் நன்றி

அன்புடன்
THAVAM

சுயதொழிலே சிறந்தது என்பது என் வாதம்.

//அப்புறம் எல்லாரும் சுயதொழில் செய்ய ஆரம்பிச்சுட்டா வேலை பார்ப்பது யாருங்க?!//

இதை அப்படியே திருப்பியும் சொல்லலாம்.
"எல்லோரும் வேலை பார்பதற்கு சுயதொழில் செய்கிறவர்கள் இருந்துதான் ஆகனம்." ஏனென்றால் சுயதொழில் முறையிலும் ஒருவர் தொழில் ஆரம்பிக்கிறார் என்றால் அவர் கீழ் வேலை பார்பவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில் துவங்கும் அளவிற்கு அனைத்து வசதிகளும் இருந்தும் (பணம், திறமை, அனுபவம்), நாம் வேலை பார்பதே சிறந்தது என ஒருவர் முடிவெடுத்தால், பலரின் வேலையை அவர் தடுக்கிறார் என்பது தானே பொருள்.

நமது நாட்டில் விவசாயம் சற்று நலிந்தடற்கும் கூட இந்த மிகவும் நோகாமல் வேலை பார்க்கலாம், சம்பளம் வாங்கலாம், நிம்மதியா இருக்கலாம் என்ற கொள்கையே காரணம். அனைவரும் தொழில் புரட்சி ஏற்பட்ட சமயங்களில் நிலத்தை விட்டு ஆளை வேலை, மில் வேலை என போக, பின் முதலாளிகள் அதிகாரம் ஒங்க ஆரம்பித்து, பின் அதை அடக்க UNION முறை கொண்டுவரப்பட்டது. வெறும் வேலை கொடுப்பவர்கலையே நம்பிய நிலை உண்டானதினாலேயே, ஒரு சமயத்தில் வேலை இல்லா திண்டாட்டம் என்னும் ஒரு நிலை ஏற்பட்டு, இப்பொழுது அநேகம் பேர் அயல் நாட்டு தொழில் நிருவங்கலையே நம்பி வேலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று வேலை செய்பவர்களுக்கு கிடைக்ககூடியதாக சொள்ளகூடியே அனைத்து சலுகைகளுமே UNION மூலம் போராடி போராடி பின் கொண்டு வர பட்டவையே என்பதை எவரும் மறுக்க இயலாது அல்லவா.

எப்பொழுது வேண்டுமானாலும் "Field Down" ஆகலாம், எப்போ மொத்தமா நிறைய பேர் வேலை போகுமோ என்ற நிலை இன்று உள்ளது. எனவே திடீர் என சம்பள குறைப்பு நடவடிக்கைகள் கையாள படுகிறது. அதனால் RISK FACTOR என்பது வேலைக்கு போவதில் குறைவு என சொல்ல முடியாது.

எனவே சுயதொழிலே சிறந்தது என்பதே என் கருத்து.

இதுவும் கடந்து போகும்.

என்னை பொருத்தவரை வேலைக்கு போவதே சிறந்தது..

சித்ரா..

செய் அல்லது செத்துமடி..

சித்ரா

வேலைக்கு சென்று சம்பாதிப்பதே நல்லது.அந்த அணியின் சார்பாகவே நான் வாதிட வ்ருகிறேன்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

பெண்களுக்கு சுயதொழிலே சிறந்தது. பெண்கள் நிர்வாகத்திறன்மை (மதியூகம்) மிக்கவர்கள். அவர்களால் புதியாதாக சிந்திக்கமுடியும். குடும்பத்தையும், வீட்டையும் பேலன்ஸ் செய்து சரியாக கொண்டு செல்லமுடியும். தன்னுடைய சக்தியை முழுவதும் தன்னுடைய, மற்றும் தன்னை சார்ந்தவர்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
பணம் என்பது சுயதொழில் செய்யவேண்டும் எண்ணம் திண்ணமாகா உள்ளோர்க்கு ஒரு தடையாக இருக்காது. மேலும் நம்மிடம் உள்ள சொற்ப முதலே நம்மை உயர செய்யும்.
நம்மை சுறுசுறுப்பாக வைப்பது, தன்னம்பிக்கை கொடுப்பது சுயதொழிலே.
யாருக்கும் தலை வணங்க வேண்டியது இல்லை. வாடிக்கையாருக்கு மட்டும் நன்றாக சர்வீஸ் செய்தால் போதும்.
நமக்கும் மரியாதை. செல்லும் இடமெல்லாம் சிறப்பு.

All is well

மேலும் சில பதிவுகள்