பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு என்று தனி மரியாதை உண்டு...

சுயமாக தொழில் தொடங்க பெண்களுக்கு புத்தி கூர்மை அவசியம். தனியாக நின்று எதிர் வரும் சவால்களை சமாளிக்க அவர்களுக்கு , போதிய மனவலிமை வேண்டும்...நமக்கு குடும்ப பிரச்சனைகளை எதிர்கொள்வதில் தான் அதிக நேரம் தேவை படுவதால் பெண்களுக்கு சுய தொழிலை விட வேலைக்கு செல்வதே சிற்ந்தது. என்பது என் கருத்து..

சித்ரா....

செய் அல்லது செத்துமடி..

சித்ரா

பட்டிமன்றத்திற்கு வந்திருக்கும் தோழர் தோழியரே மற்றும் நடுவருக்கு முதலில் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். சுய தொழில் தான் சிறந்தது என்கிற தலைப்பில் நான் வாதட வந்திருக்கிறேன்.நாம் எவ்வளவுதான் கடுமையாக வுழைத்தாலும் வேலை பார்ப்பதால் அதே சம்பளம் தான் கிடைக்கும்.மிஞ்சி போனால் இன்கிரீமென்ட் என ஒரு சின்ன தொகை தான் கிடைக்கும்.அதேவுழைப்பை நாம் சுயதொழில் மூலம் உழைத்தால் நம் வுழைப்புக்கு மேல் ஊதியம் கிடைப்பது வுறுதி.3 வருடங்களுக்கு முன் என் கணவர் வேலையை விட்டு விட்டு பிசினெஸ் ஆரம்பிக்கவில்லை என்றால் அதே சம்பளத்திற்கு இன்னும் பட்ஜெட் போட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைதான் எங்களுக்கு இருந்திருக்கும்.

டென்ஷன் என்றால் அது எந்த தொழிலில் இல்லை என்று சொல்லுங்கள். வேலை பார்பவர்களுக்கு டென்ஷன் இல்லையா ? வேலை பார்பவர்களே வுங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.tensionnudan கலந்த பயமும் அல்லவா வுங்களுக்கு. வேலையில் சிறு தவறு செய்துவிட்டாலோ,லேட்டா officekku போனாலோ மேலதிகாரிக்கு பயந்து நடக்கவேண்டியுள்ளது.

வுங்களுக்கு நன்கு தெரிந்த தொழிலை bankil லோன் போட்டு சிறிய அளவு ஆரம்பித்து அதே வுழைப்பை தொழிலில் காட்டிநோமானால் வெற்றி எப்பொழுதும் நம் பக்கம். என் வாதம் முழுவதும் சுய தொழிலுக்கே என்று என் வாதத்தைமுடிக்கிறேன்

பெண்களுக்கு சுயதொழில் சிறந்தது என்றால்..எதற்கு வேலைக்காக வெளியே செல்ல வேண்டும்?படிக்க வேண்டும்?பேசாமா குடிசைத் தொழில் அரசாங்கமே முன்வந்து கற்று கொடுத்திருக்குமே!எல்லோரும் அம்பானி,பில் கேட்ஸ் ஆகனும்னு புறப்பட்டுட்டா நாடு தாங்காதுங்கோ......

ஒரு ஏழை விவசாயி ஒரு நாள் உழைத்த கூழியில் நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறான்.ஆனால் பணக்காரனின்(சுயதொழில் செய்பவர்கள்)நிலை என்ன?அவனது வியாபாரமெல்லாம் மற்றவர்களை எதிபார்த்தே நடக்கிறது.ஆனால் வேலைக்கு செல்பவர்களும் மற்றவரை சார்ந்துதான் இருக்கிறார்கள்.ஆனால் இது இல்லையென்றால் இன்ன ஒன்று!சுயதொழில் செய்பவர்கள் இவ்வாறு கிளைக்கு கிளை தாவ முடியுமா?அது என்ன சாதரண விசயமா?
சுயமாய் வேலைக்கு செல்பவனுக்கு கருப்பு பணம் பற்றிய பயம் இல்லை.இன்கம் டேக்ஸ் பற்றி கவலை இல்லை.நிர்வாகத்தில் பிரச்சனை இல்லை.வேலைக்கேத்த கூழி கூழிக்கேத்த வேலை! போட்டி இல்லை பொறாமை இல்லை!
"கட்டாந்தரையில் ஒரு துண்டை விரிப்பேன்
தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்த காலமே
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே!"
இது ஒரு சுயமாய் தொழில் செய்யும் ஒரு பணக்காரன் பாடும் பாடலக 'அண்ணா மலை'படத்தில் இடம் பெற்ற பாடல்.இது உணர்த்துவது என்ன என்று விளக்கமாக நான் சொல்லத்தேவையில்லை.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

கீதா . நீ எங்க இருக்க ... நான் சித்ரா..

எப்படி இருக்க?

செய் அல்லது செத்துமடி..

சித்ரா

ஆனால் ஒன்று நடுவர் அவர்களே!மன்னன் படத்தில் கவுண்டமனி சொல்றது போல் நாட்ல இந்த தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலை.புன்னாக்கு விக்கிறவன் குண்டூசி விக்கிறவன் எல்லாம் தோழிலதிபர்ங்குறான்.
எல்லோரும் சுய தொழில் பன்ன நினைச்சா..என்ன ஆகும்???
எல்லோரும் கடைகளை திறந்து வச்சிகிட்டு ஈ ஓட்ட வேண்டியதுதான்!பின்ன அவன் அவன் சுயதொழில்ஙுற பேர்ல கடையோ..அடு சம்பந்தமாக வேற ஏதும் வச்சு பிஸ்னஸ் பன்ன என்ன நடுக்கும் என்பதை எல்லோரும் சிந்தித்து பார்க்க வேண்டும்!
கிராமத்த எடுத்து கொள்ளுங்கள்.....ஒருத்தன் ஒரு இட்லி கடை வச்சா போதும் போட்டிகு எதுத்தாப்ல மூன்று பேரு அதமாதுரி கடை வச்சுருவான்.இது யதார்த்தம்!வாததிற்க்காக சொல்லப்படுவதன்று!
ஆகவே வேலைக்கு செல்வதே சிறந்தது என்று எனது வாதத்தை நிறைவுசெய்கிறேன்!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

"இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?
சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?"

என்பதுதான் தலைப்பே தவிர பெண்களுக்கு, ஆண்களுக்கு என குறிப்பிடப்படவில்லை. ஆகையால் பொதுவாக பேசலாம் என நினைக்கிறேன்.

இதுவும் கடந்து போகும்.

//"கட்டாந்தரையில் ஒரு துண்டை விரிப்பேன்
தூக்கம் கண்ணை சொக்குமே அது அந்த காலமே
மெத்தை விரித்தும் சுத்த பன்னீர் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்த காலமே!"//

'அண்ணா மலை'படத்தில் அவர் சீக்கிரமாக முன்னேற நினைத்ததனால் தான் அந்த நிலை. இதே நிலை வேலைக்கு போவோருக்கும் வரவுக்கு மேல் சிலவு செய்தால் ஏற்படவே செய்யும். இதில் சுயதொழில், வேலைக்கு போவோர் என்ற வேறுபாடு இல்லை. அளவுக்கு மேல் ஆசை போனால் எவருக்கும் இந்நிலையே. ப்யூன் (அ) தன கீழ் வேலை பார்ப்போர் இடம் கடன் வாங்கிவிட்டு இதே போல் தூக்கம் இல்லாமல் தவிக்கும் வேலைக்கு போவோரும் இருக்க தானே செய்கிறார்கள்.

இதுவும் கடந்து போகும்.


எதிரணிக்காரா புரியாம பேசிண்டிருக்கா.
இன்றைய சூழலுக்கு ஏத்தது எது?
எங்க ஊர்ல ப்ரிண்டிங் ப்ரஸ் வெச்சிருக்கறவர் கிட்ட வேலை செஞ்சவாள் நெறைய பேர் சுயமா ப்ரெஸ் வெச்சுட்டா.
அவாள்லாம் வேலைக்கு போய் சம்பாதிக்கறோமேன்னு இருக்க வேண்டியதுதானே?
ஏன்னா அவாளுக்கும் மொதலாளி ஆகனும்னு ஆசை இருந்துருக்கு.

எல்லாருக்கும் வேலைங்கறது சாத்தியமில்லேனு தெரிஞ்சுதான் அரசாங்கமே பெண்கள் சுய உதவி குழுவ தொடங்கியிருக்கு.
வேலைக்கு போறவாள்லாம் மனச தொட்டு சொல்லுங்கோ ஒங்களுக்கு சுய தொழில் பண்ண ஆசை இல்லேனு பாக்கலாம்?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கொடுக்கற வேலைய திறம்பட செய்யற ஒருத்தன் முதலாளியாவதை நோக்கி முன்னேற முடியும்.முதலாளிகள் யாருமே தொழில் நலிவடைந்து வேலைக்கு போகவில்லையா தொழிலாளிகள் முதலாளியாவதும் முதலாளிகள் தொழிலாளிகள் ஆவதும் அவரவர் அறிவுத்திறமையை பொறுத்தது.

அன்புடன்
THAVAM

சுயமா தொழில் பண்ணுறவங்க எல்லாருக்கும் incometax problem இருக்கும் என்றும், தொழிலதிபர்கள் எல்லாரும் கருப்பு பணம் வைத்திருப்பார்கள் என்றும் இன்றைய தமிழ் சினிமாக்கள் சொல்லிகொடுப்பதால் தான் நம் மக்களிடையே வேலைக்கு போவதே மேல் என்கிற கருத்து நிலவுகிறது.சினிமா பாடல்களில் வருவது போலே சுய தொழில் செய்பவர்கள் யாரும் ஒரு நாளில் முன்னேறுவதில்லை. ஒரு நாள்லில் முன்னேறினால் அது ஏதோ குறுக்குவழியில் முன்னேற்றம் காண்கிறார் என்று அர்த்தம். படித்துவிட்டு இன்றைய இளைய சமுதாயத்தினர் வேலையை எதிர்பார்த்து காத்திராமல் சுய தொழில் தொடங்குவது நலம். கொஞ்ச நாட்களுக்கு முன் IT தொழிலில் சரிவு ஏற்பட்டு அதனால் எவ்வளவு பேருக்கு வேலை போனது என்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

மேலும் சில பதிவுகள்