பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

///'அண்ணா மலை'படத்தில் அவர் சீக்கிரமாக முன்னேற நினைத்ததனால் தான் அந்த நிலை. இதே நிலை வேலைக்கு போவோருக்கும் வரவுக்கு மேல் சிலவு செய்தால் ஏற்படவே செய்யும். இதில் சுயதொழில், வேலைக்கு போவோர் என்ற வேறுபாடு இல்லை. அளவுக்கு மேல் ஆசை போனால் எவருக்கும் இந்நிலையே. ///
அவசரமாக முன்னேற நினைப்பது வேலைக்கு செல்பவர்கள் அல்ல.சுய தொழில் செய்பவர்கள்தான்!ஆசை பேராசை வேலைக்கு செல்பவனுக்கு இல்லை.சுயமாய் சம்பாதிப்பவற்களுக்கு அது அதிகம்!(ஒரு உண்மையை ஒத்துக் கொண்ட எதிர் அணிக்கு நன்றி)

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

///தன கீழ் வேலை பார்ப்போர் இடம் கடன் வாங்கிவிட்டு இதே போல் தூக்கம் இல்லாமல் தவிக்கும் வேலைக்கு போவோரும் இருக்க தானே செய்கிறார்கள்.///

சரிதான்.ஆனால் தூக்கு போட்டு சாகுற அளவுக்கு வேலைக்கு செல்பவனுக்கு கடன் தொல்லைஇல்லை .உதாரணம்;ஜீ.வீ.ரத்னம்(மணிரத்னம் சார் அவர்களின் அண்ணன்)
இந்த நிகழ்ச்சிக்கு பிறகுதான் அப்பொதைய முதல்வர் கந்து வட்டிக்கு தடை போட்டதை யாரும் மறந்து விட வில்லை

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

///ஏன்னா அவாளுக்கும் மொதலாளி ஆகனும்னு ஆசை இருந்துருக்கு.

எல்லாருக்கும் வேலைங்கறது சாத்தியமில்லேனு தெரிஞ்சுதான் அரசாங்கமே பெண்கள் சுய உதவி குழுவ தொடங்கியிருக்கு.
வேலைக்கு போறவாள்லாம் மனச தொட்டு சொல்லுங்கோ ஒங்களுக்கு சுய தொழில் பண்ண ஆசை இல்லேனு பாக்கலாம்?///

சுய உதவிகுழு என்பது பெண்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது.ஆண்கள் அதில் பயன் அடைந்ததாய் இதுவரை தகவல் இல்லை.ஏனென்றால் சுயதொழில் என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவான ஒன்று.

சரி ப்ரஸில் வேலை பார்த்தவர்கள் எல்லாம் தனியா ப்ர்ஸ் வச்சுருக்கா..சரிஅம்பானி கிட்ட ,பில்கேட்ஸ்கிட்ட வேலை பார்த்தவர்கள் ஏன் அவர்கள் போல் ஆக முடியவில்ல?

எல்லோருக்கும் வாழ்கையில் முன்னுக்கு வரவேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கிறது.சுயமாய் தொழில் தொடங்கிதான் ஆகவேண்டும் என்றில்லை.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

///சுயமா தொழில் பண்ணுறவங்க எல்லாருக்கும் incometax problem இருக்கும் என்றும், தொழிலதிபர்கள் எல்லாரும் கருப்பு பணம் வைத்திருப்பார்கள் என்றும் இன்றைய தமிழ் சினிமாக்கள் சொல்லிகொடுப்பதால் தான் நம் மக்களிடையே வேலைக்கு போவதே மேல் என்கிற கருத்து நிலவுகிறது.சினிமா பாடல்களில் வருவது போலே சுய தொழில் செய்பவர்கள் யாரும் ஒரு நாளில் முன்னேறுவதில்லை. ஒரு நாள்லில் முன்னேறினால் அது ஏதோ குறுக்குவழியில் முன்னேற்றம் காண்கிறார் என்று அர்த்தம். படித்துவிட்டு இன்றைய இளைய சமுதாயத்தினர் வேலையை எதிர்பார்த்து காத்திராமல் சுய தொழில் தொடங்குவது நலம். கொஞ்ச நாட்களுக்கு முன் IT தொழிலில் சரிவு ஏற்பட்டு அதனால் எவ்வளவு பேருக்கு வேலை போனது என்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு///

தமில் சினிமா உண்மையைதான் சொல்லி கொடுத்தது.பொய் சொல்ல வில்லை.
சரி லஞ்சம் எப்படி வந்தது?வேலை செய்பவர்கள் மூலமாகவா?இல்லை தொழில் என்ற போர்வையில் மக்களிடம் கொள்ளையடிப்பவர்கள் மூலமாகவா?
எங்களை பார்த்து கேள்வி கேட்ட அதே கேள்வியை எதிர் அணியிடம் கேட்கிறேன்.இப்பொது தொழில் செய்யும் எல்லோரும் 'நாங்கள் நியாயமான் முறையில்தான் வியாபாரம் செய்கிறோம் என்று நெஞ்சில் கைவைத்து சொல்ல முடியுமா?
அரசாங்கம் மக்களிடம் கொள்ளையடிப்பது பாதி.புன்னாக்கு வியாபாரிகள் கொள்ளையடிப்பது மீதி!இதில் எழைகளுக்கு ஏது நீதி?இதை கேட்பதற்கில்லை இங்கே நாதி!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

நாம் சுய தொழில் செய்தாலும் சரி வேலைக்கு செல்வோருக்கும் சரி டென்ஷன் இருக்கு இல்லை என்று சொல்லவில்லை, ஆனால், வேலைக்கு செல்வதால் நமக்கு எப்போதும் நிலையான வருமானம் உண்டு, வேலைக்கு செல்வோருக்கு சுய தொழில் செய்யும் அளவிற்கு அறிவு இல்லை என்று அர்த்தம் இல்லை,அவர்கள் அனைவரும் நிலையான வருமானம்தான் சிறந்தது என்ற நிலைதான்.

என்னதான் சுய வேலை செய்வோர் வேகமாக சம்பாதித்தாலும் அவர்கள் ஒரு நிலையில் சாப்பாட்டிற்கே போராடிய நிலை உண்டு, காரணம் அவர்களுக்கு தனது பிஸினஸில் ஏற்பட்ட இழப்புதான் முக்கிய காரணம்.

சுய வேலை செய்கிறேன் என்று நிறைய கடன் வாங்கி குடும்பத்தை தவிக்க விட்டோரின் கதைகள் நிறைய உண்டு, இதை எதிரணியினர் யோசித்து பார்க்க வேண்டும், சுய வேலை செய்வது தவறு என்று சொல்லவில்லை, அதில் பாதிப்புகள் மிக அதிகம்.

பியூனாக வேலையில் சேர்ந்து ஒரு கம்பெனிக்கே GM ஆன ஆட்களும் உண்டு, எல்லாம் திறமையை பொறுத்தே, வேலைக்கு சென்றால் அதெ நிலையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.

மீண்டும் வருகிறேன் வாதத்தோடு

அன்புடன்
பவித்ரா

/// ஒரு நாள்லில் முன்னேறினால் அது ஏதோ குறுக்குவழியில் முன்னேற்றம் காண்கிறார் என்று அர்த்தம். ///
நடுவர் அவர்களே கவனிக்க.
அந்த அண்ணாமலை படத்தில் வேலைக்கு செல்பவனை ஒரே நாளில் முன்னேறியதாக காமிக்கவில்லை.தொழில் செய்து முன்னேற நினைத்தவனைத்தான் அப்படி சித்தரித்து காட்டியது.என்றும் ஒரே நாளில் முன்னெர வேலை செய்பவன் நினைப்பதில்லை.அது சாத்தியமும் இல்லை.குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் சம்பாதிது முன்னேற நினைப்பது புன்னாக்கு தொழிலதிபர்கள்தான் நடுவர் அவர்களே!

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

வேலைக்கு செல்வதே நல்லது.அருமை எதிரணியில் கேளுங்கள்.யாராவது தங்கள் பிள்ளைகளை போட்டி தேர்வுக்கும், வளாக நேர்காணலுக்கும் தயாராக தடை போடுறாங்களா? புதிது புதிதாக வகுப்பில் சேர சொல்கிறார்கள் இல்லையா. ஏன் ஏன் ஏன்?

“வாதத்தோட வாங்க.. நான் கூடையோட காத்துட்டிருக்கேன்”னு முதல் பக்கதுல சொன்னேன். சாயாங்காலம் வந்து பார்த்தேன். இந்த வாதத்திற்கு கூடைலாம் பத்தாதுன்னு லாரிய கூடிட்டு வர போய்ட்டேன். அதான் தாமதத்திற்கு காரணம்:)

அப்ப்பப்பா......எவ்வளவு வாதங்கள்.?....
எத்தன பாய்ண்ட்ஸ்?

வந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து வந்து கலந்துக்கோங்க.....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாங்க மாமி.....
சுய தொழில் பக்காமா? சூப்பரப்பு...

கவர்மென்ட் லோன் கொடுக்குறாங்க என்பது அழகான பாய்ண்ட் மாமி. நிறையா பேர் அப்படி தான் சுய தொழில் ஆரம்பிச்சி முன்னேறி இருக்காங்க....

//ஏன்னா அவாளுக்கும் மொதலாளி ஆகனும்னு ஆசை இருந்துருக்கு.

எல்லாருக்கும் வேலைங்கறது சாத்தியமில்லேனு தெரிஞ்சுதான் அரசாங்கமே பெண்கள் சுய உதவி குழுவ தொடங்கியிருக்கு.//

ஆஹா எவ்வளவு அர்த்துமுள்ள பாய்ண்ட். எல்லாரும் வேலைக்கு போறேன்னு சொன்னா என்ன ஆகுறது?

கலக்குங்க மாமி.....:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கோமு

சுயதொழிலா? வாழ்த்துக்கள். பெரிய வாதங்களோட வாங்க. கவிசிவா,சேக் அண்ணா கூட போட்டி போட வேண்டாமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்