பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

ஜமுனா வாதத்தோட வாங்கன்னு சொன்னா உங்க கதையோட வந்துட்டீங்க...:)

எந்த அணி நீங்க? சீக்கிரம் வாதத்தோட வாங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஜெயா

சுய தொழிலா? பேஸ்...பேஸ்...

ஒரு வரிலாம் பத்தாதே:( பாருங்க எத்தன பேர் பெரிய வாதங்களோட வந்துற்காங்க. அவங்க கூட போட்டி போடுற அளவுக்கு தயாராகி வாங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கல்பனா.... உங்க வாதத்துல திணறி போய்ட்டேன் பா.

//தொழில் விஷயமாக பல புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதன் வாயிலாக அவர்களிடம் இருக்கும் புதிய தொழில் நுணுக்கங்களை கற்றுணர்ந்து அவற்றை நம் தொழிலில் புகுத்தி வருவாயை பெருக்கலாம்.//
நூத்துல ஒரு வார்த்தை. சுய தொழிலில் தான் இந்த முறை கிடைக்கும். விஷயம் தெரிஞ்சவங்க கிட்ட மேலும் கற்றுக்கொண்டு அதை நம் தொழிலில் மேற்கொள்ளலாம். என் எகனாமிக்ஸ் புத்தகத்துலையும் சுயதொழில்க்கு ரொம்ப சப்போர்ட் பண்ணிற்காங்க.

//இதில் அவர்கள் செய்யும் வேலைக்கு தகுந்தாற்போல தினமும் சம்பளத்தை உயர்த்தியா தரப்போகிறார்கள்

இன்று அதிகமான வேலை செய்தார்கள் அவர்களுக்கு ஒரு 500 ரூபாயை கூட்டி தரலாம் என்றா அவருடைய மேலதிகாரி நினைப்பார்

கவனக்குறைவாக ஏதாவது தவறிழைத்து விட்டால் நேற்று நீங்கள் கடினமாக உழைத்ததையும் மறந்து அவமதிக்கவும் தயங்க மாட்டார்//

அருமையான வாதங்கள். எங்களுக்கு பெரிய பேச்சாளர் கிடைச்சுட்டாங்க.

தப்பு பண்ணீட்டா அந்த மொதலாளி படுத்துற பாடு.....
இது ஒன்னே போதுமே சுயதொழில் சிறந்தது என்று சொல்ல...

வாழ்த்துக்கள் கல்பனா

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவிசிவா
என்ன கவி இப்படி போட்டு தாக்கிட்டீங்க!
//காலம் முழுக்க கஷ்டப்பட்டு உழைக்க சம்பாதிக்க வேண்டாம் என்ற எண்ணமே சுயதொழில் செய்பவனுக்கு ஆப்பு வைத்து விடும்.

அப்புறாம் எல்லாரும் சுயதொழில் செய்ய ஆரம்பிச்சுட்டா வேலை பார்ப்பது யாருங்க?!//
ஆயிரத்துல ஒரு வார்த்தை.ஓவர்டைம் பத்தி சொன்னது அருமையோ அருமை! தொடர்ந்து வாங்க. சுய தொழில் பேசுறவங்கள மெரட்ட..

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நிஷா

மூலதனம்,பளு,மன உளைச்சல் பத்தி சொன்னீங்க. குறைவான வருவாய் என்றாலும் நிறைவான வாழ்க்கை வேலைக்கு போனா தான் கிடைக்கும். சரியான வாதம்.

பெரிய ஆள்களை சமாளிக்க அடுத்து பெரிய வாதத்தோட வாங்க!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இப்ப தான் அந்த வரியை பாராட்டிட்டு வந்தேன், இங்கே நீங்க மாத்தி சொன்னதும் இதை பாராட்டாம இருக்க முடில.

எல்லாரும் வேலைக்கு போய் தான் சம்பாதிப்பேன்னு நெனச்சா நாடு தாங்குமா?

விவசாயம் பத்தி சொன்னது சூப்பர்.
இப்ப இருக்குற தலைமுறையினர் விவசாயம் பாக்க ஆர்வம் காட்டாததுனால தான் வேளான்மை குறஞ்சுட்டே வருது. கருத்துக்கள் அருமை

வேலைக்கு போறவங்கள்ளாம் யூனியன் மூலமா தான் தன் தேவை நெறவேத்துறாங்க. ஆனா சுயமா சம்பாதிக்குறவங்களுக்கு அந்த தொந்தரவு இல்லையே!

சுய தொழில் தான் சிறந்ததுன்னு சொல்லிட்டாங்க நம்ம யோகலெட்சுமி.வாழ்த்துக்கள் யோகா. யாரது இவங்கள எதிர்த்து பேச போறது?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சித்ரா

வேலைக்கு போகிறவங்க பக்கமா நீங்க.?

என்ன சித்ரா நான் பெண்களுக்கு என்று தனியா சொல்லலையே!
அனைவருக்கும் பொதுவானது தான்.

கீதா கூட பேசணுமா? அரட்டை 2010 க்கு போய் கூப்பிட்டு பேசுங்க. வருவாங்க.

அடுத்து வாததோட வாங்க:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாங்க சேக் அண்ணா!
வேலைக்கு செல்பவர் பக்கமா பேச போறீங்களா? மாமிய எதிர்த்து போட்டி போட முடியுமா உங்களால?

//எல்லோரும் சுய தொழில் பன்ன நினைச்சா..என்ன ஆகும்???
எல்லோரும் கடைகளை திறந்து வச்சிகிட்டு ஈ ஓட்ட வேண்டியதுதான்//

இதெல்லாம் நடக்குற காரியமா? சுய தொழில் வேண்டும்னு ஒவ்வொரு ஆளும் கடை வச்சு உக்காந்தா(கற்பனைல கூட நல்லா இல்ல) பாடு திண்டாட்டம் தான்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//சரிஅம்பானி கிட்ட ,பில்கேட்ஸ்கிட்ட வேலை பார்த்தவர்கள் ஏன் அவர்கள் போல் ஆக முடியவில்ல?//

இந்த கேள்விக்கு யார்கிட்டவாவது பதில் இருக்கா? வந்து சேக் அண்ணாவுக்கு பதில் சொல்லுங்க பாக்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//ஒருத்தன் ஒரு இட்லி கடை வச்சா போதும் போட்டிகு எதுத்தாப்ல மூன்று பேரு அதமாதுரி கடை வச்சுருவான் //

எங்க ஊர் பக்கம் புரோட்டா கடை பெருகுனதும் இதுனால தான். பாதிபேர் இந்த வேலையே வேணாம்னு சொல்ற அளவுக்கு ஆய்டுச்சு. ஒருத்தன் முன்னேறிட கூடாது. அத பாத்து மத்தவனும் செஞ்சு முன்னேறினவன கவுத்திருவாங்க!

;//ஜீ.வீ.ரத்னம்(மணிரத்னம் சார் அவர்களின் அண்ணன்)//
ஜீ.வி வெங்கடேஷ்வர் இல்லையா? (இஷானி வந்துற போறாங்க!)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்