பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.

வாங்க சுந்தரி

// IT தொழிலில் சரிவு ஏற்பட்டு அதனால் எவ்வளவு பேருக்கு வேலை போனது என்பது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு//
முதல் வாதமே அருமையோ அருமை. எல்லாரும் அப்படி போனா ஒரு நாள் ஆப்பு தான். இந்த பிரச்சனை சுய தொழிலில் இல்லவே இல்லை. யாரும் நம்மள ஒரு கேள்வி கேக்க முடியாது. நம்மல வேலை விட்டு யாராவது தூக்கமுடியுமா?

தொடர்ந்து வாதங்களோட வாங்க சுந்தரி.....

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வாங்க ரேணுகா
சுய தொழில் கட்சியா? பெண்களுக்கு என்று தனியா சொல்லிட்டீங்களே? நான் அப்படி போடலையே:(

எல்லாருக்கும் பொதுவானது தான். அடுத்து சரியான வாதத்தோட வாங்க!

//நம்மை சுறுசுறுப்பாக வைப்பது, தன்னம்பிக்கை கொடுப்பது சுயதொழிலே.//
இந்த சுகம்லாம் சுய தொழில்ல தான் கிடைக்கும். ஆனா வேலைக்கு போறவங்க ஒரே வேலையே பாத்துட்டு சளிப்போட இருப்பாங்க! சரியான பாய்ண்ட்.

பெரிய வாதத்தோட வாங்க,காத்துட்டிருக்கேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

//அவசரமாக முன்னேற நினைப்பது வேலைக்கு செல்பவர்கள் அல்ல.சுய தொழில் செய்பவர்கள்தான்!//
உண்மை தான். எந்த வேலைய செஞ்சாலும் எடுத்தோம் கழ்த்தோம்னு செய்வாங்க சீக்கிரமா முன்னேறனும்னு. எல்லாம் ஒரே நாள்ள கிடைக்குமா? வேலைக்கு போறவங்க பொறுமையா வேலை பாத்தாலும் தக்க சன்மானம் கிடைக்குது.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பவித்ரா

வேலைக்கு செல்பவாரா நீங்கள்?
மன்னிக்கவும் வேலைக்கு செல்பவர் பக்கமா நீங்கள்?

//இப்போது வாதாட நேரம் இல்லை, நேரம் கிடைக்கும் போது வாதத்துடன் வருகிறேன்.//
அடப்பாவி மக்கா..
இந்த வரி கேட்டதும் சிரிப்பு தான் வருது. பாகம்பாகமா போனதுக்கு காரணமே நீங்க தான். இப்ப இப்படி சொன்னா எப்படி?

//சுய வேலை செய்கிறேன் என்று நிறைய கடன் வாங்கி குடும்பத்தை தவிக்க விட்டோரின் கதைகள் நிறைய உண்டு//
அருமையான பாய்ண்ட். நிறையா பேர் இதுனால தான் நாட்ல பைத்தியமா அலையிறாங்க!

//பியூனாக வேலையில் சேர்ந்து ஒரு கம்பெனிக்கே GM ஆன ஆட்களும் உண்டு, எல்லாம் திறமையை பொறுத்தே, வேலைக்கு சென்றால் அதெ நிலையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே//

அதானே பியூனா வேல பாத்தா பியூனா தான் கடைசிவரைக்கும் இருக்கணும்னு யார் சொன்னது? திறமை இருந்தா முதளாலி ஆகலாம்.

மீண்டும் வாங்க பவித்ரா வாதங்களோட

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தவமணி அண்ணா!

வேலைக்கு செல்பவர் பக்கமா?

அருமையான வாதம் அண்ணா!

//கொடுக்கற வேலைய திறம்பட செய்யற ஒருத்தன் முதலாளியாவதை நோக்கி முன்னேற முடியும்//உண்மை தான். சும்மா உக்காந்துட்டே இருந்தா எல்லாம் வரும்மா?

தவமணி அண்ணா சொல்ற பாயிண்டுக்கெல்லாம் யாராவது பதில் சொல்லுங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா

நான் வேலைக்கு போகிறவா்கள் பக்கம் தான் பா...

1.இங்க எல்லாரும் என்ன பேசிருக்காங்கனு தெரியல. நான் எனக்கு தெரிஞ்சத சொல்றேன். சுய தொழில் ஆரம்பிக்கிறது எல்லோராலும் முடியும். ஆனால் அதில் வெற்றி காண்பவா்கள் எண்ணிக்கை மிகக் குறைவுனு தான் சொல்லனும்.

2. சில சமயம் சுய தொழில் பண்றேன்னு சொல்லி வீட்ல இருக்குற நகை நட்டு எல்லாத்தையும் அடகு வச்சு கடைசில வாழ்க்கைல தோத்து போய் காணாமல் போனவா்கள் எத்தனை பேர்.

3. சுய தொழில் பண்ணி அதுல வெற்றியும் கண்டு 100 பேருக்கு வேலையும் கொடுத்து சமுதாயத்துல பெரிய ஆளா வருகிறவா்கள் எத்தனை பேர். ஒரு 10% இருக்குமா.

4. ஆனால் வேலைக்கு போகிறவா்கள் வாழ்க்கை வேறு. ஐடி துறை நலிந்து போய் பல பேர் வேலை இழந்து இருக்கலாம். ஆனால் அவா்களில் எத்தனை பேர் இன்று வரை வேலைக்கு செல்லாமல் இருக்கிறார்கள். எப்படியோ அடுத்து ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருப்பார்கள். அவா்கள் பற்றி ஏன் கவலை. நாளைய உலகம் கணிணி இல்லாமல் இல்லை. அதலால் அதில் வேலைத் திண்டாட்டம் வர வாய்ப்பும் கம்மி.

5. நல்லதோ கெட்டதோ, திட்டோ பாராட்டோ மேலதிகாரிகளிடம் இருந்து வாங்கினாலும் ஒரு நிரந்தர வருமானம் என்பது வேலைக்கு போகிறவா்களுக்குதான் கிடைக்கும். நிம்மதியா வாழ்க்கை வேலைக்கு போகிறவா்கள் குடும்பத்தில் காணலாம்.

6. ஏன் வேலைக்கு செல்கிறவா்கள் உயரதிகாரி ஆகி முன்னேற முடியாதா என்ன. promotion கிடைக்காதா என்ன.

7. வேலைக்குப் போய் குடும்பத்தை காப்பாற்றும் நபர்களே அதிகம். அவா்கள் யாரும் நலிந்துவிடுவதில்லை. ஆக வேலைக்குப்போய் முன்னேறியவர்கள் எண்ணிக்கை குறைந்தது 50 % இருக்கும்.

இப்போது சொல்லுங்கள் ஆமினா விலைவாசி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஏறிக்கொண்டே போகிறது. ஒரு மாதம் கையில் காசு இல்லை என்றால் வியாபாரத்தில் நட்டம் என்றால் குடும்பத்தின் கதி என்ன? ஆனால் வேலைக்கு போகிறவா்கள் பாடு என்றும் ஒரே மாதிரி தான் இருக்கும். அளவாக செலவு செய்து குடும்பம் நடத்தினால் அமோகமாக வாழலாம்.

எல்லாரும் சுய தொழில் செய்வது தான் சிறந்தது என்று கூறினால் அவா்களுக்கு கீழே யாரும் வேலைக்கு வரமாட்டார்கள். அனைவரும் சுய தொழில் தொடங்க சென்றுவிடுவார்கள். சுய தொழில் செய்பவா்களிடம் யாராவது வேலைக்கு வந்தால் தம்பி நீயும் சுய தொழில் செய்து முன்னேறுப்பா. அது தான் இன்றைய கால கட்டத்திற்கு ஏற்றது அப்படின்னு சொல்லி அனுப்பிடுவாங்களா?

ஆமினா 10% லாபம் அடைவா்கள் பக்கம் தீர்ப்பா அல்லது 50% லாபம் அடைபவா்கள் பக்கம் தீா்ப்பா?

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எல்லோருக்கும் காலை வணக்கம்

நேரம் ஆனாலும் பரவாயில்லைன்னு விடிய விடிய முழிச்சி பதில் கொடுத்திருக்கும் நடுவருக்கு APPLAUSE சொல்லியே ஆகணும்.

சரி MATTERUKKU வரேன்

எந்த ஒரு தொழில் நமக்கும் பிடிச்சு, யாருக்கும் அடிமையா இல்லாம, பிறருக்கும் உதவியா, யாரையும் கச்டபடுத்தாம இருக்கோ அது எல்லாம் நல்ல சுயதொழில் தான். அதை செய்கிறவர்கள் எல்லாம் தொழிலதிபர்கள் தான்.

சுயதொழில் அப்படீன்னு சொன்னா தனக்கு பிடிச்ச HOBBY எதுவோ அதையே தன வாழ்கையை நடத்த பொருள் ஈட்டித்தரும் வியாபாரமாகவும் மாத்திக்கிரதுதான். இப்படி செய்யும்போது ஒருவன் முழு ஈடுபாடோட செய்ய முடியும். அதனால முன்னேற்றம் சீகிரத்துல ஏற்படுது. அப்படியே பெரிய முன்னேற்றம் இல்லை என்கிற நிலை வந்தாலும், தனக்கு பிடிச்ச விசயத்த செய்த மன நிம்மதி கண்டிப்பா மீதம் இருக்கும். அதனால் பேராசை படரவங்க, அவசரமாக முன்னேற நினைக்கிறவங்க சுயதொழில் தேர்ந்தெடுக்கறாங்க என்பது தவறு, தனக்கு எதில் திறமையும், அனுபவமும், ஈடுபாடும் இருக்கோ, அந்த தொழில முழுமையா ஏற்று தைரிய லக்ஷ்மியோடு செய்யும்போது, அஷ்டலக்ஷ்மியும் அவங்களிடம் வந்து சேர்றாங்க.

//கொடுக்கற வேலைய திறம்பட செய்யற ஒருத்தன் முதலாளியாவதை நோக்கி முன்னேற முடியும்//

அப்படீன்னா வேலைக்கு போறதுன்னு ஆரம்பிச்சாலும், முதலாளி ஆகணும் என்கிற இலக்கு தான நம்மை அடியில் இருந்து உந்தறது. வேலை தெரிஞ்சுக்க வேலைக்கு போங்க, ஆனா சீக்கிரமா கத்துகிட்டு நம்பிக்கையோடும், உழைப்போடும் முதலாளியாக முயற்சிக்கணும். தொழில் போட்டி இருந்தால்தான் அதில் ஆரோகியமான வளர்ச்சி ஏற்படும். Cell phone தயாரிக்கறது ஒரே நிறுவனமா இருந்தா, இப்படி எல்லோரும் ஆளுக்கு ஒன்னு கம்மி விலையில் வாங்கி வைக்க முடியுமா, அது எல்லாம் high class item என்ற நிலை தான் இருந்திருக்கும். போட்டி ஏற்படரதாள பணம் ஒரே இடத்தில சேர்வது தடுக்கபடுது. ஒரே இடத்தில சேர்ந்தா ஒருவனே எல்லா வித கடையும் ஆரம்பிப்பாங்க, Car Company முதல் காய்கறி கடை வரை.அப்புறம் நீங்களே கட்சி மாறி சுயதொழில் துவங்க நினைச்சாகூட முடியாது. நம்ப சந்திதியர் எல்லோருக்கும் அடிமை வாழ்க்கை தான் மிஞ்சும்.

எதுல தான் தடை ஏற்படறது இல்லை, தடையை மீறி வெற்றியை பிடிக்கும்போது அந்த சந்தோஷம் தனி இல்லையா. தனக்கு பிடிச்ச ஒரு செயலையே வேலையாவும் எடுக்கும்போது, எதுக்கு retirement. தான் செய்ய நினைச்சதை செய்ய முடியலையேன்னு நினைக்கிரவங்கதான் retirement தேவைப்படும். நீங்க உங்களுக்கு பிடிச்ச செயல (HOBBY) செய்யலாம்னு என்னரப்போ, முதுமை ஒத்துழைக்காது. அப்போ எதையோ இழந்துட்டோமோ. வாழ்க்கை முழுக்க mechanicala கழிச்சிட்டோமோ அப்படீன்னு "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" செய்ய ஞானோதயம் ஏற்படும். பிடிச்ச வேலைய கைகால் நல்லாயிருக்கவரைக்கும், தாராளமா செய்துகிட்டே இருக்கலாமே.

சுயதொழிலாளர்கலுக்கு பணம் குறி அல்ல, மனநிறைவே குறி. தேவைகளை குறைத்து, முன்னேற்றத்தில் மனதை செலுத்தினால், உயர்வு நிச்சயம்.

பதிவுகள் தொடரும்.

இதுவும் கடந்து போகும்.

வணக்கம்,
இன்றைக்கு இருக்கும் சூழ்னிலயில் அவசியம் பெண்களுக்கு ஒரு வருமானம் தெவை .ஆனர்ல் குடும்பத்தயிம் பார்கவென்டும்.எனவெ பெண்களுக்கு சுய தொழில் தர்ன் முன்னெற்ற்ட்தை தரும்

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

ஆமர்ம் ,நர்ன் நினைத்ததை அப்படியெ சொல்லிவிட்டிர்கள்.நர்னும் ஒரு சுய தொழில் செய்பவர் என்ற முறையில் உஙக கருதை அமொதிக்கிரென்.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

பெண்களைப் பொருத்தவரை குடும்பம் ,வேலை இரண்டும் இரு கண்களைப்பொன்ட்ற்து.இரண்டிலும் சரியன கவன்னத்தை செல்லுதத வேண்டும் .மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை விட சுய தொழில் செய்யும் பெண்களுக்கெ அதிக மதிப்பு இன்த சமுதர்யத்தில் மதிப்புடன் நட்த்துகின்ட்ரன்ர்.ஒரு நல்ல குடும்ப தலைவியகவும் அவர்கல் ப்ரகர்சிக்க முடியும்

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

மேலும் சில பதிவுகள்