பட்டிமன்றம்-21 சுயதொழிலா? வேலைக்கு செல்வதா?

அனைவருக்கும் வணக்கம்.

ரம்யா வர இயலாத காரணத்தால் இந்த பட்டிமன்றத்தை நான் தொடங்குகிறேன்.

தலைப்பு:
இன்றைய சூழலுக்கு ஏற்றது எது?

சுயமாய் தொழில் செய்து சம்பாதிப்பதா?
இல்லை
வேலைக்கு சென்று சம்பாதிப்பதா?

எல்லோரும் வந்து உங்கள் வாதங்களை தொடங்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

அனைவரும் பட்டிமன்றம் சிறப்பாக நடத்திச்செல்ல உங்கள் ஒத்துழைப்பை தந்து வெற்றி பெற செய்ய அழைக்கிறேன்.


//ஏமாற்றுக்காரர்கள் ..கொள்ளையடிப்பவர்கள்..அரசாங்கத்தை ஏமாற்றுபவர்கள் வேலை செய்யும் வர்க்கத்தில் இல்லை..இது மொத்தமாக தொழில் செய்யும் இடத்தில்தான் இருக்கிறது!//

எதிரணிகாரா என்ன பேசரா?

பேப்பர்ல அடிக்கடி அடிபடரவா ஆரு?
லஞ்ச்ம் வாங்கினவா எல்லாரும் சொந்த தொழில் பண்றாவாளா என்ன?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

வாழ்த்துக்கள் ராதா

வேலைக்கு சென்று சம்பாதிப்பது தான் நல்லது என்று ஆணித்தனமாக கருத்துக்கள் சொன்னீங்க. எல்லா கருத்துக்களும் அருமை.

சுய தொழில்ல நகை போட்டு மீட்க முடியாத நபர்களை நானும் பார்த்திருக்கிறேன். இந்த நிலை கண்டிப்பாக வேலைக்கு செல்பவர்களிடையில் இருக்காது. விலைவாசி சமாளிகணும்னா வேலைக்கு தான் போகணும். சுய தொழில்ல நம்ப முடியுமா? ஒரு நாளைக்கு வரும். பத்து நாளைக்கு எதிர்பாக்கணும். சுய தொழில் பாடு திண்டாட்டம் தான்.

எதிரணியினரே ராதாவுக்கு பதில் சொல்ல யார் வர போறாங்க?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

என்னப்பா டாபிக் எங்கெயோ போறது. இங்க யாரு லஞ்சம் ஞாஸ்தி வாங்குறானா பட்டிமன்றம் வச்சுண்டு இருக்கோம்.

இன்றைய சூழலுக்கு எது சிறந்தது அப்படின்னு தானே.

சுய தொழில் செய்தா எவ்வளவு பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கு தெரியுமா. இன்றைய தேதிக்கு அந்தந்த ஊர் அரசியல் வாதி மனசுவைக்காம யாரும் சுய தொழில்-ல முன்னேற முடியாது. அப்படியே அவாளுக்கு தெரியாம முன்னேறினா..... அதுக்கும் பிரச்சனைக்கு ஆள் இருக்கு

பிரச்சனை இல்லாத வாழ்க்கை, இன்றைய சூழ்நிலைக்கு சிறந்தது எல்லாம் வேலைக்கு செல்வதே.

நடுவரே யோசிச்சு நல்ல முடிவா சீக்கிரம சொல்லுங்கப்பா.....

மாமி இப்படி ஆப்போஸிட் கோல் போட்டுண்டு இருக்கேளே....... மாமா சுய தொழில் பாக்குறாரா என்ன?

இப்படிக்கு
ராதா ஹரி

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

யோகலெட்சுமி
அழகா உங்க தரப்பு வாதத்தை சொல்லிட்டீங்க. வாதங்கள் அழகோ அழகு.

//போட்டி ஏற்படரதாள பணம் ஒரே இடத்தில சேர்வது தடுக்கபடுது//.

//நம்ப சந்திதியர் எல்லோருக்கும் அடிமை வாழ்க்கை தான் மிஞ்சும்.//

எல்லாரும் வேலைக்கே போகணும்னு நெனச்சா காலமெல்லாம் கொத்தடிமைகளா இருக்க வேண்டியது தான்.
சுய தொழிலில் இல்லாத மனநிறைவு வேலைக்கு போறவங்க கிட்ட கிடைக்குமா?
டிட்டைர் ஆன பிறகு பாவம் கஷ்ட்டபடுவாங்க. ஆனா சுயதொழில்ல அப்படி இல்ல. நம்மால நாம் முன்னேறினோம் என்ற மனதிருப்தி கிடைக்கும்.

சூப்பர் யோகா. வாழ்த்துக்கள்.

யாராவது யோகா கருத்துக்கு பதில் வச்சுற்கீங்களா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

தமிழரசி

பட்டிமன்றத்தில் கலந்துக்கொண்டதற்கு நன்றி தமிழரசி.

ஆனா இப்ப பட்டியில் பெண்களுக்கு எந்த தொழில் சிறந்தது என வாதாடவில்லை. நானும் அப்படி குறிப்பிடவில்லை. எல்லாருக்கும் பொதுவாக தான் இபோதைய பட்டிமன்றம்.

இதுவரை சொன்ன கருத்துக்கள் அழகு.

அடுத்த முறை சரியான வாதத்தோட வாங்க.
உங்க வாதங்களை கேட்க ஆவலோட காத்திட்டிருக்கேன். பெரிய பெரிய ஆளுகளுக்கெல்லாம் சவால் விட வேண்டாமா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நன்றி ,
எல்லர் மனசும் ஒரு சின்ன புகழுக்குதர்ன் எங்கிக்கிடக்கு.(sponcered by pasanga film)

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

சரி தான் அதிகமா ஆசை பட்டா கழுத்தை அறுக்கும் நிலை தான் அனைவருக்கும் தோன்றும்.

தனியாளா இருந்ததுனால தான் அவரை நம்மளுக்கு தெரியும். இல்லைனா அப்படி ஒருத்தர் இருப்பது தெரியுமா? இதெல்லாம் சுய தொழிலில்தான் சாத்தியம்.

ஒருத்தர் செஞ்ச தவறுனால சுயதொழிலே நல்லதில்லைன்னு சொல்லிற முடியுமா?

அருமையான வாதத்தை முன் வைத்த சுந்தரிக்கு வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆஹா எல்லாரும் நடுவர இப்படி கொளப்பிட்டீங்களே!!!!

யோகா சொல்வது மறுக்க முடியாதது. இப்படியே திட்டு வாங்கி வாங்கி வேலை பார்த்தா அதுல என்ன நன்மை கெடச்சுற போகுது.தன்மானத்தை தான் இழக்கணும். ஆனா சுய தொழில் அப்படி இல்லை தான்.

வேலைக்கு போறவங்க மிஷின் வாழ்க்கை தான் நடத்துவாங்க. ஆனா சுய தொழில் செய்றவங்க தான் சுகமா வாழ்க்கையை அனுபவிப்பாங்க. எவ்வளவு அழகா சொல்லியிருக்காங்க.

மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள் யோகா.
சேக் அண்ணா என்ன சொல்றாங்கன்னு கேக்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சரியா சொன்னீங்க!

வேலைக்கு போனா ஓய்வு வந்த பிறகும் ஓய்வூதியம்கொடுப்பாங்க. இதுனால நாம் கவலபட வேண்டியதே இல்லை. ஆனா சுயதொழிலில் யார் நமக்கு ஓய்வூதியம் கொடுப்பா? கடன் மட்டுமே துணை வரும். அருமையான பேச்சு....

எதிரணியினர் என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வேலைக்கு சென்று சம்பாதிப்பதே,
வேலைக்கு செல்லும் எல்லாருக்கும் சுய தொழில் செய்யனும்னு எண்ணம் எல்லாம் கிடையாது.
சுயதொழில் செய்யறவங்கல பாத்தா அதிக பட்சமான பேர், வேலை தேடி தேடி வேலை கிடைக்கவில்லை என்பதனால் பிழைப்பிற்காக ஒரு வேலை வேண்டுமே என்று தானே ஒரு தொழில் தொடங்கியிருப்பார்கள், வேலைக்கு செல்வதால் நம்மால் ஈஸியா குடும்பம் மற்றும் வேலை கவனிக்கலாம், ஆனால், சுய வேலை செய்யும் போது, அவ்வாறு முடியாது, நாம் மற்றவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் சமயம் வரும், ஆனால் வேலைக்கு செல்லும் போது, அனைவரும் ஒரு டீம் வொர்க் இருக்கும்.

சுயவேலை செய்வோர் ஒரு நல்லது கெட்டதுக்கு கூட செல்ல முடியாம திணறுவதை பார்க்கிறோம், அப்படியே அவங்க கலந்துகிட்டாலும் மனசு பூரா அதை அவர்கள் சரியா செஞ்சாங்களா இல்லையான்னு யோசிச்சுட்டே இருப்பாங்க என்பது எனது வாதம் நடுவர் அவர்களே.

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்