துபாயில் தங்கம் - சந்தேகம்

துபாயில் தங்கம் - சந்தேகம்

தோழிகளே.. முதன் முதலில் சந்தேகமாய் ஒரு கேள்வியை பதிவாய் போட்டிருக்கிறேன்.. பதில் கொடுங்கள். ;-) என்ன தான் இருந்தாலும் தங்கத்தை பற்றிய சந்தேகத்தை குடும்ப தலைவிகள் தவிர யாரால் தீர்க்க முடியும்.. ?

1.தங்கத்தின் விலை துபாயில் குறைவு என்பது தெரியும்.. ஆனால் எந்தளவு உண்மை?
2. அப்படியெனில் எந்த அளவு வித்தியாசப்படும் ?
3. எத்தனை கேரட் ல் கிடைக்கும்.?
4. நம்ம கல்ட்சருக்கு தகுந்த டிசைன் கிடைக்குமா?
5. வாங்கினால் கஸ்டம்ஸில் ஏதும் பிரச்சனை வருமா?

தெளிவுப்படுத்துங்கள்.. .. நன்றி

இதுக்கு பதில் நம்ம ஆஷிக் சொல்லுவார்.அவர் தான் துபாயில் இருக்கிறார்

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

இதுபற்றி எனக்கு ரொம்பத் தெரியாது. இருந்தாலும் மனதில் தோன்றியது
முன்பு வேண்டுமானால் அப்படி இருந்திருக்கும். இப்போது விலை வேறுபாட்டிற்கு வாய்ப்பு இல்லை. அப்படியே இருந்தாலும், மிக மிகக் குறைவான அளவாகவே இருக்கும். நல்ல தரத்தில் கிடைக்க வேண்டுமானால் வாய்ப்புள்ளது.

கஸ்டம்ஸ் -வாங்கும் அளவைப் பொறுத்தது. ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கொண்டு வரமுடியும். அதற்கு மேல் அனுமதி கிடையாது.
allowable limit ற்கே Duty -ம் கட்ட வேண்டிவரும்.

அன்புடன்,
இஷானி

ஹாய் ரம்யா,

துபாயில் தங்கம் விலை மிக குறைவு என்பது கிடையாது.உலக அளவில் எல்லா இடத்திலும் ஒரே விலைதான். இங்கு நம்ம ஊர் போல் சேதாரம், கூலி என்று அதிகம் கிடையாது. அந்த வகையில் நமக்கு மிக மிக லாபம். நம்ம ஊரில் 5 சவரன் செயினுக்கு 18 லிருந்து 25 சதவீதம். 7 கிராம் சேதாரம் என்று போட்டு ஏமாற்றுவார்கள். அந்த கதை இங்கு இல்லை. நீங்க இங்கு 30 சவரன் வாங்கும் போது இந்தியாவை விட நமக்கு 40 ஆயிரம் வரை இலாபம் இருக்கு. எல்லாமே 916 kdm தங்கம். நம்ம ஊரை பொறுத்த வரை இந்த அளவுக்கு எல்லா ஜுவல்லரி ஷாப்பிலும் தரம் கிடைக்காது. அதனால் கண்ண முடிக்கிட்டு வாங்கலாம்.

சாதரண டிசைனக்கு மேக்கிங் ஜார்ஜ் ரொம்ப கம்மியாக இருக்கும். கல்கட்டா ஒர்க், டிசைனர் ஒர்க் போன்ற நகைகளுக்கு மேக்கிங் ஜார்ஜ் கொஞ்சம் கூடுதலாக போடுவார்கள். நம்ம ஊரோடு ஒப்பிடும் போது அதுவும் மிக குறைவுதான்.

24 கேரட், 22 கேரட், 21 கேரட், 18 கேரட் இப்படி எல்லா விதத்திலும் கிடைக்கும். நார்மலாக தங்க ஆப்ரணம் 22 ல் தான் வைத்து இருப்பார்கள். டைமன் மட்டும் 18 கேரட்.

நம்ம கல்ச்சர் என்ன எல்லா விதமான மாடலும் கிடைக்கும். நீங்க நம்ம ஊர் டிசைன் மட்டும் மிக விரும்பினா அல் ஹசீனாவில் பாருங்க. தமாஸ், ப்யூர் கோல்டு, ஸ்கை ஷோருமில் நல்லாயிக்கும். துபாய பொருத்த வரை எந்த கடையில் வாங்கினாலும் தங்க தரம் குறைவு கிடையாது நம்பி வாங்கலாம்.

வாங்கிய நகை பில்லை பத்திரப்டுத்திக் கொள்ளுங்கள். ஊருக்கு போகும் போது பில்லை ஹேண்ட் பேக்கில் வைத்துக் கொள்ளுங்கள். நம்ம அணிருந்தால் கஸ்டம்ஸ்ல எதுவும் கேக்க மாட்டாங்க. சூட்கேஸ்ல வச்சிருந்தா சில சமயம் பில் கேப்பாங்க. பேமிலியோட போனா எதுவும் ரொம்ப கேக்க மாட்டாங்க.

என்ன ரம்யா இந்த விபரம் போதுமா?

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ஆமி..நன்றி.. எனக்காக ஆஷிக்கை அழைத்ததற்கு .. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இஷானி..

உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.. உங்களவிற்கு தெரிந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தனிஷா..

அடடா... நல்ல விளக்கம் கொடுத்திருக்கீங்க.. நன்றி.. அங்கே வாங்கலாமா என ஒரு யோசனை அவ்வளவுதான். ஆனால் வாங்கி வரத் தெரிந்தவர்கள் ஒருவரும் இல்லை. ;-(

என் அண்னா தான் யூஸ் ல் இருந்து வர போகிறான். அந்த வழியாக வர சொல்லி வாங்கலாமா என யோசிக்கிறேன்..

நான் எதிர்பார்த்தற்கும் அதிகமான தகவலை கூறியதற்கு மிக்க நன்றி.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கல்யாணத்துக்காகவா, நகை வாங்க ஆரம்பிச்சாச்சா? எனக்கு துபாய்ல விலை கம்மின்னு கேள்விபட்டிருக்கேன். ஆனா கண்டிப்பா தெரியல

அன்புடன்
பவித்ரா

தங்கமா...ம்....ஹூம், நமக்கு அத பத்தில்லாம் தெரியாதுங்க!
அன்புடன்
ஆஷிக்

உங்கள நம்பி தான் சொன்னேன். இப்படி சொன்னா எப்படி? விசாரிச்சிட்டு தான் சொல்றீங்களா?

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஏன்? சும்ம இருக்கமுடியாதோ, வர்றவ்ங்க போறவஙக்கிடேயெல்லாம் ஏன் மாட்டிவிடுறீங்க...கொழுப்பு...சாரிம்மா ரம்யா....யாரும் சொல்லேனா நான் விசாரிச்சு சொல்றேன்...அது ஒரு ஆவி அது சொல்றதை எதையும் நம்பாதீங்க.
அன்புடன்
ஆஷிக்

மேலும் சில பதிவுகள்