60வது கல்யாணம்...

நான் இந்த தளத்தை வெகு நாட்களாக படித்து வருகிறேன்... அனைவரின் குறிப்பும் மிக அருமை. மாமி, பாத்திமா,கல்பனா, இஷானி மற்றும் பலர்... என்னையும் உங்கள் குழுவில் சேர்த்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறேன்.
என் மாமனார்,மாமியார் அவர்களுக்கு 60வது கல்யாணம் வருது. அதுக்கு என்ன செய்ய வேண்டும். எந்த முறையில் செய்ய வேண்டும். எப்பொழுது செய்ய வேண்டும். எதாவது ஸ்பெஷல் ஊரில் செய்ய வேண்டுமா ??? கொஞ்சம் விளக்கமாக சொல்லவும்

அவர்களுக்கு நீங்கள் சஷ்டி அப்த பூர்தி செய்யாலாமே, முடிந்தால் திருக்கடையூர் போய் வரலாம், மாமிகிட்ட கேளுங்க, இன்னும் விவரமா சொல்லுவாங்க, மாமி கரெக்டா

உங்க பெயர் என்ன

அன்புடன்
பவித்ரா


வாங்கோ.மொதல்ல என்னை மாமினு கூப்டது நேக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஹாய் பவித்ரா.. மிக்க நன்றி.. என் பெயர் யசோதா. நான் சென்னை வாசி.. அந்த சஷ்டி அப்த பூர்தி எப்படி செய்ய வேண்டும் ..இன்னும் விவரம் வேண்டும் . Konjam சொல்லுங்க

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

எனக்கு தெரியல யசோதா, மாமிக்கு தெரியலாம், கேட்டு பாருங்க

அன்புடன்
பவித்ரா

எனக்கு மாமின்னு கூப்பிடறது ரொம்ப பிடிக்கும் மாமி.. உங்கள் ஊர் எது மாமி???? எல்லோர்க்கும் நல்ல advice தரீங்க

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

யசோதா..

கீழே உள்ள இரண்டு லின்க் லேயும் உங்களுக்கு தேவையான தகவல் இருக்கானு பாருங்க.. தேவா நல்ல விளக்கம் கொடுத்திருப்பாங்க .. ;-)

http://www.arusuvai.com/tamil/node/15367

http://www.arusuvai.com/tamil/node/15067

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சரி பவித்ரா.. கவலை படாதீங்க... உங்கள் பதிலுக்கு மிக நன்றி. பார்க்கலாம்.. வேறு யார் பதில் சொல்ராங்கன்னு .. உங்கள் ஊர் எது ??.. கொஞ்சம் உங்களை பற்றி அறிமுகம் செய்து கொள்ளுங்கள்

எது நடக்கக்கூடாதென்பதற்காக , நீங்கள் கோபப்படுகிறீர்களோ, நீங்கள் கோபப்பட்டு நிதானமிழந்த ஒரே காரணத்துக்காக, அது நடந்தே விடுகிறது" .....

யசோதா,
ரம்ஸ் சொன்ன டீடைல்ஸ் உங்களுக்காக

//ஹாய் கலா, முதலில் உங்க அப்பா, அம்மாவுக்கு என்னோட வாழ்த்துக்கள். சஷ்டியப்த பூர்த்தி (60ம் கல்யாணம்) , 60வது வருடம் முடிந்து 61 ஆம் வருடம் பிறக்கும்போதுதான் செய்வாங்க ( ஆங்கில காலண்டர்படி அல்ல). ஏனென்றால் 60 வருடம் கழித்துதான்,அவர் பிறந்த போது நவக்கிரகங்கள் அவரது ஜாதகத்தில் எந்த இடங்களில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் வருமாம். அதனால் அப்பாவின் ஜென்ம நட்சத்திர நாளில் 60 ஆம் கல்யாணத்தை நடத்த வேண்டும். என் அக்காவும்,தம்பியும் வர முடியாமல் போனதால் நான் மட்டும்தான் என் அப்பா, அம்மாவுக்கு அரேஞ்ச் பண்ணேன். அதனால் கொஞ்சம் விஷயம் தெரியும். ஆனால் ஒவ்வொரு குடும்ப வழக்கமும் மாறுபட்டு இருக்கும். நாங்க கோவிலில்தான் நடத்தினோம். எனக்கும் முதல்ல இதைப் பற்றி ஒண்ணும் தெரியாததால கோவிலில் இருக்கும் குருக்களிடம்தான் கேட்டேன். அவரே வீட்டுக்கு வந்து நாள் குறிச்சு எல்லா ப்ரோசீஜரும் சொன்னார். கல்யாணத்தில் புரோகிதமும் அவரேதான் செஞ்சார். நீங்க முதல்ல உங்க அப்பாவின் நட்சத்திரபடி என்னைக்கு பிறந்த நாள் வருதுன்னு தெரிஞ்சுக்கிட்டு அன்னைக்குதான் நடத்தணும். ஆங்கில வருடத்தை பார்க்காமல் பஞ்சாங்கம் பார்த்து, இந்த நாளில்தான் 60ம் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று சொன்னார்கள். முக்கியமாக 60 ஆம் கல்யாணம் நடத்துவது அவர்களோட சந்ததியினரின் நன்மைக்காகத்தான்னு சொன்னாங்க. இது அவங்க பிள்ளைகளோட கடமையும் கூடன்னு சொன்னாங்க.

சாப்பாடு நீங்க எங்க வேணாலும் அரேஞ்ச் பண்ணிக்கலாம். கல்யாணத்தை கோவிலில் முடிச்சுட்டு, ஆதரவற்றோர் இல்லத்துக்கு போய் உதவிகள் செஞ்சுக்கலாமே. திருக்கடையூரில் 60 ஆம் கல்யாணம் செய்வது மிகவும் விசேஷம்னு சொல்வாங்க. கல்யாணத்துக்கு என்னென்ன செய்வோமோ அதே மாதிரி பட்டுப் புடவை, தாலி, பட்டு வேஷ்டி, சட்டை எல்லாம் பிள்ளைகள்தான் வாங்கணும். சிம்பிளாகவும் செய்யலாம் அல்லது கோவிலில் முழு பூஜை செய்து அவர்களுக்கு நலுங்கு, அபிஷேகம் செய்து முறையாகவும் செய்யலாம். அன்று கல்யாணத்திற்கு வந்தவர்கள் கல்யாணம் முடிந்ததும், மணமக்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொள்வது முறை. அவர்களுக்கு சின்ன கிப்ட்(குங்குமச்சிமிழ், ஜாக்கெட் துணி) வாங்கி பழம், தாம்பூலம் வைத்து கொடுக்கலாம்.//

அன்புடன்
பவித்ரா


ரம்யமா பதில் சொன்னேள்!

ரொம்ப தாங்க்ஸ்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி

உங்களோட பேச்சை யாரால் ஜெய்க்க முடியும்.. நன்றி.. நான் பதில் சொல்லவில்லை.. பழைய தலைப்பில் தேவா அவர்கள் கூறியது நியாபகம்.. எனக்கும் இதை பற்றி ஒன்றும் தெரியாது மாமி..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்