COMPUTER-2

எதோ 1/2 குறை அறிவ வச்சுகிட்டு அப்படி இப்படினு வந்துகிட்டு இருக்கும்போது 200 ஆயிருச்சுனு ஆமினா மனியடிச்சிருச்சு, இரண்டாவது பேஜ் ஆரம்பிச்சிருங்க...இல்லேனா தலகாட்டமாட்டேனு....ஒரு மிரட்டல் வேறு.இது என்ன முடிதிருத்தும் நிலையமா? இங்கே வந்து தலை காட்டுறதுக்கு..சரி ..சரி ஆமினா! எல்லாரையும் இங்கே கூட்டிட்டு வந்து.....நீங்களே குத்து விளக்கேத்தி ஆ..ங் அப்பறம் இந்த ரிப்பனெல்லாம் கடபன்னி...சும்மனாச்சும் ஒரு inauguration அட்மோஸ்பியருக்காக ஒரு ரெண்டு பேருக்கு 100ரூபா கொடுத்து கைதட்ட சொல்லி..ஆரம்பிச்சிருங்க....போகும்போது அந்த குத்து விளக்க வச்சிட்டு போயிருங்க...அது வாடகைக்கு வாங்குனது...அப்பறம் போஸ்ட் கார்ட் சைஸ்ல உங்க போட்டோ ஒன்னு கொடுங்க....ஏன்னா அதை இங்கே மாட்டி “என்னைபார் யோகம் வரும்னு” எழுதி போட்டா வியாபார விருத்தியாகும்னு மேலூர் ஜோசியர் சொன்னாரு.
அன்புடன்
ஆஷிக்

வாங்க தமிழ், ஓ நீங்க வந்தது வாங்க இல்லையோ, விற்கத்தான் வந்துள்ளீர்கள் இல்ல? ஒரு தகவலை விற்க வந்துள்ளீர்கள்.
உங்கள் தவலுக்கு ரெம்ப நன்றி, பெருமையா இருக்கு. ரெம்ப நல்ல தகவல், எனக்கும் இது இப்பதான் தெரியும்..இன்னும் சொல்லுங்க.
ஆனா தமிழில் அல்லது ஆங்கிலத்தில் சொல்லுங்க அல்லது இரண்டும் கலந்து அடிங்க. உங்களுக்கு மட்டும் தெரிந்த பாஷை வேண்டாம் :) ஏன்னா இந்த ஏரியாவ்ல அமினா நடமாட்டம் அதிகமா இருக்கு.
By the Way..
\\எனெனில் இது எல்லொரும் தெரிந்து கொல்ல வேண்டிய விசியம்.\\
மேலேயுள்ள வாக்கியத்திற்கு தமிழாக்கம்:
எதையோ தெரிஞ்சுகிட்டு Murder பன்ன சொல்றாங்க.:))
அன்புடன்
ஆஷிக்

DHUSHYANTHY,
எனக்கு இதுல அவ்வளவா விபரம் இல்லாததுனால நாலு 4 க்கு மேலாகியும் உங்களுக்கு பதில் சொல்லமுடியல.உங்கள் விருப்பம் இதுவானு சரியா தெரியல,ஆனா அதுக்கு தொடர்புடையதாக தோன்றியது.
இங்கே ஒரு 8 போய்ட்டு வந்துருங்க,
http://www.studioline.biz/En/products/overview-photo-classic/default.htm
இலவச License இங்கே இருக்குதாம்.
https://store.studioline.net/activatefotofw3.asp?Language=EN
அன்புடன்
ஆஷிக்

என்ன Brand/Model அது?
அன்புடன்
ஆஷிக்

நல்ல வேளை முதல் பதிவு என்னோடையது!

வாழ்த்துக்கள்!
இந்த இழையும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்!

பி.கு-
இப்படிலாம் மிரட்டினா தானே வழிக்கு வரேங்குறீங்க:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஹாய் ஆஷிக்,

என் லாப்டாப் dell 2006 model.

windows xp pro உபயோகிக்கிறன்.ஆமாம்.எனக்கு எதுக்கு இத்தனை ’ஆமாம் ‘ போடுறிங்க?

I mean 'S'

அன்புடன் அனு

ஹாய் ஆஷிக் அண்ணா...

ந‌ல்லாருக்கீங்க‌ளா? உங்க‌ முத‌ல் ப‌திவு 200ஐ தாண்டிருச்சா என்னால‌ ச‌ரியாவெ அங்க‌ வ‌ந்து பாக்க‌ முடிய‌ல‌ சாரி, இதுக்கு இனி ரெகுலரா வந்து அட்டென்ன‌ஸ் குடுத்த‌ரேன்... உங்க‌ இந்த‌ இழை எல்லாருக்குமே உத‌விருக்கும்னு நினைக்க‌றேன் அத‌னால‌ எல்லார் சார்பாவும் ரொம்ப‌ ந‌ன்றி...

அப்ப‌ற‌ம் இந்த‌ இழையும் சீக்கிர‌மாக‌ 200ஐ தாண்ட என் வாழ்த்துக்க‌ள், அடுத்த‌ அதாவ‌து மூணாம் ப‌திவிற்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்க‌ள்...

மீண்டும் பேச‌லாம்...

இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.

அன்புடன்
லதாவினீ.

(ஹும்..Model என்னனு கேட்டா வருஷத்த சொல்றது)
இது பழையன களைதலும்,, புதியன புகுதலும். நேரம்
Ya! Probably It's Time For Purchase New Battery.
எத்தனை நாளைகுத்தான் அதையே வச்சு ஒப்பேத்திகிட்டு இருக்கிறது.
புதுசு, புதுசு வாங்குங்க. இல்லேனா ஒன்னு பன்னுங்க.அதே மாடல் லேப்டாப் வேற யார்கிட்டேயாவது இருக்கானு பாருங்க, அதுல போட்டு பாருங்க. அந்த மாடல் யார்கிட்டேயும் இல்லேனா சர்வீஸ் ஷாப்ல பேட்டரிய செக் பன்ன சொல்லுங்க.
பட் மாத்தியே ஆகனும்னுதான் நினைக்கிறேன்
அன்புடன்
ஆஷிக்

மூனுபேரும் இங்கே வாங்க, அந்த COMPUTER ல வச்சு நீங்க 3பேரும் ஒரு விஷயத்துக்கு சண்டபோட்டிங்கதானே, இப்ப என்ன பன்னுங்க மூனுபேரும் ஒற்றுமையா இங்கே
http://wiki.pkp.in/forum/t-243247/#post-838146
போய்ட்டு வாங்க.
நானும் ரெண்டு இதை வருஷமா கேள்விபடிகிட்டுதான் இருக்கேன், பட் அதுல லாஜிக் இருக்கு. உடனே போய் பாருங்க ஏற்கன்வே அதை நீக்கனும்னு அங்கே ஆர்பாட்டம் பன்னிகிட்டு இருக்காங்க நீக்குறதுக்குள்ள போய்ட்டு வந்துருங்க.
அன்புடன்
ஆஷிக்

உங்கள நோக்கியவிலிருந்து SMSஐ PCக்கு மாற்ற Nokia PC SUIT ஐ உங்க Computer ல் Install செய்து
அதன் மூலம் Nokia வை USB Cable மூலமா PC யுடன் Connect செய்து முயற்சி செய்து பாருங்கள். பலன் கிடைக்குமென நம்புகிறேன்.
http://www.nokia-asia.com/support/download-software/nokia-pc-suites/compatibility-and-download#download
அன்புடன்
ஆஷிக்

மோஹனா ரவி மேடம்,
கம்ப்யூட்டர் சுத்தப்படுத்துவது குறித்து நீங்கள் கேட்ட ஆலோசனைக்கு கீழே உள்ள தமிழ் சைட்ல போய் பாருங்க
http://www.honeytamilonline.co.cc/2009/02/10.html
அன்புடன்
ஆஷிக்

மேலும் சில பதிவுகள்