ப்ரவுன் ரைஸ் பொங்கல்

தேதி: July 29, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

ஒரு கப் பிரவுன் ரைசில் சாதா அரிசியை காட்டிலும் 3 1/2 கிராம் நார்சத்து மிகுந்து காணப்படுகிறது. இரும்பு, தாது சத்துகளும் நிறைந்து உள்ளதால் இதை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.

 

ப்ரவுன் ரைஸ் - ஒரு கப்
பயத்தம் பருப்பு - கால் கப்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
இஞ்சி - சிறு துண்டு (நறுக்கவும்)
முந்திரி - சிறிதளவு
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
கறிவேப்பிலை, நெய் - தாளிக்க


 

ப்ரவுன் ரைஸ் மற்றும் பயத்தம் பருப்பை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் ப்ரவுன் ரைஸ், உப்பு, பெருங்காயம், பயத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும்.
பேனில் நெய் ஊற்றி சூடானதும் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி சேர்த்து பொரித்து சேர்க்கவும்.
லேசாக நெய் விட்டு கிளறி பரிமாறவும். சுவையான கமகம பொங்கல் தயார்.

தேங்காய் சட்னி, கொத்சு, சாம்பார் ஆகியவை தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். சூடாக சாப்பிடுவது நல்லது இல்லையென்றால் விரைத்து கொள்ளும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எனது குறிப்பை வெளியிட்ட அட்மின் அவர்களுக்கு மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

ப்ரௌன் ரைஸ் பொங்கல் பார்க்கும்போதே உடனே
பண்ணி சாப்பிடனும்போலதானிருக்கு. ப்ரௌன் ரைஸ்
எல்லா ப்ரொவிஷன் ஸ்டோர்களிலும் கிடைக்குமா?

கோமு மேடம்,
எல்லா இடத்திலேயும் இப்போ கிடைக்கிறது
infact ,இந்தியாவில் இருந்து தான் மற்ற இடத்திற்கு ஏற்றுமதி ஆகுது
கண்டிப்பாக செய்து பாருங்க..
உங்கள் வருகைக்கும்,பிநூடதிற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

hi mam, which rice we need to use, raw rice or boiled brown rice.

enjoy everyday

senorita ,
பச்சரிசியே போட்டு செய்யுங்க நல்லா வரும்
தங்கள் வருகைக்கு நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா


எங்காத்ல சனி கெழமை ’ஸுவாமி‘க்கு நேவேத்யம் பண்ணறத்துக்கு பச்சரிசி பொங்கல் பண்ணுவோம்.நான் இதை இப்போதான் பாத்தேன்.எங்க ஊர் அரிசி கடேல ப்ரவுன் கலர் அரிசி வெச்சிருப்பா.இந்த அரிசி ஒடம்புக்கு ரொம்ப நல்லதுனு மக்கள் டி.வி.ல அடிக்கடி சொல்வா.நான் நிச்சயம் இன்னைக்கு முடியாதுனாலும் ரெண்டு நாள் கேச்சு பண்ணி பாத்துட்டு ஒங்களுக்கு சொல்றேன்.;-(

வெண் பொழுங்கல் அரிசில நான் பண்ணிருக்கேன்.

எங்காத்து கொழந்தேள் மொளக பொறுக்கி வெச்சிடும்கள்.அதனால நான் மொளகு, சீரகத்த ஒன்னும் ரெண்டுமா பொடிச்சு போட்டுவேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மோகனா மாமி,
பிரவுன் ரைஸ் என்றவுடன் பெரிசா நினைக்காதீங்க நம்ம ஊர் கைகுத்தல் அரிசி தான்.ரொம்ப polish செய்யாமல் இருக்கும்,உமி கலர் கூட லேசாக இருக்கும் .கண்டிப்பாக வாங்கி செய்து பாருங்க உடலுக்கு நல்லது உங்கள் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்,
கவிதா

கவிதா,
ப்ரவுன் ரைஸ் என்பதும் ப்ரவுன் பாஸ்மதி ரைஸ் என்பதும் ஒன்றா?