பாப்ஸ் உமாவின் ஆலோசனைகள்

தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்,

எல்லோரும் நலமுடம் இருப்பீர் என நம்புகிறேன். நானும் அறுசுவையில் பங்கு கொண்டு வெகு நாட்களாகிவிட்ட படியால் மீண்டும் தலைகாட்ட வந்துள்ளேன். வழக்கம் போல எனக்கும் அறுசுவைக்கும் யூசர்நேம், பாஸ்வேர்ட் பிரச்சனை அதனால் வேறொன்றில் புதிதாய் வந்துள்ளேன் (இது எத்தனையாவது ஐடின்னு யாரும் கேட்கப்படாது!!!) .
அப்புறம் என்னன்னா எனக்கு இத்தனை நாளா வேலை பிசியாகிப்போச்சு இப்போதான் கொஞ்சம் பரவாயில்லை(அப்படின்னு நானே சொல்லிக்கிறேன்).இந்த இழையில் சில முக்கியமாக விஷயங்களை, (ஏற்கெனவே பல முறை பேசியது தான்) பற்றி மீண்டும் பேச வந்துள்ளேன்.

உடல் எடையை எப்படி குறைப்பது - இந்த கேள்வி பலவாறு இடுப்பை குறைப்பது எப்படி? வயிறை குறைப்பது எப்படி? என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யலாம்? இப்படியாக பலவாறு இங்கே கேட்கப்படுகிறது.
மேலும் அழகுகுறிப்பில் இதை பற்றியும் இந்த இழைகளில் அழகு பற்றியும் எங்கே எதை கேட்க வேண்டுமென்று குழம்பியும் பலர் உள்ளனர். நான் அவ்வப்பொழுது எனது இழைகளில் இதை கவனிக்க நேர்ந்தது.வேலை பளுவால் எனக்கு பதிலளிக்க நேரமில்லாமல் போனது.
இதனால் தான் இங்கே பொதுவாகவே ஒரு இழை தொடங்கியுள்ளேன். இங்கே என்கிட்டே என்னவெல்லாம் கேட்க வேண்டுமோ கேளுங்கள் நானும் கண்டிப்பாக முடியும் பொழுது பதில் அளிக்கிறேன் ( அதற்காக எல்லாமும் கேக்காதீங்கப்பா......எனக்கு தெரியாது) எனது துறைகளான " உடல் ஆரோக்கியம்" (எடை குறைப்பது, உடற்பயிற்சிகள்) மற்றும் " அழகு குறிப்புகள்" மட்டும் கேளுங்கள்.
மற்ற பெரியோர்கள் பலர் நல்ல பயனுள்ள ஆலோசனைகள் ஏற்கெனவே சொல்லியிருகாங்க, இனிமேலும் அவங்க கிட்ட என்ன கேட்டாலும் சொல்லுவாங்க.
"முன்பு சந்தேகக்கேள்விகள் கேட்போரின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது,நானும் கேட்டுள்ளேனே! பதிலளிப்போர் மிகவும் குறைவாக இருந்தனர். தற்போது முன்பு இருந்ததை விட பதிலளிக்க பலரும் முன்வந்துள்ளது, தளத்தில் இணைந்துள்ளது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது" என்பது எனது தனிப்பட்ட கருத்து.

ஆரோக்கியம் பற்றிய தலைப்புக்கள்:
********************************
Part 1 - http://www.arusuvai.com/tamil/node/11771
Part 2 - http://www.arusuvai.com/tamil/node/12650
Part 3 - http://www.arusuvai.com/tamil/node/12890

அழகு குறிப்புகள்:
****************
Part 1 - http://www.arusuvai.com/tamil/node/12454
Part 2 – http://www.arusuvai.com/tamil/node/12714
Part 3 - http://www.arusuvai.com/tamil/node/13176
Part 4 - http://www.arusuvai.com/tamil/node/13873

"***எல்லோரும் கொஞ்சம் நன்றாக படித்து பாருங்கள்***" என்று தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இங்கே உள்ள பல பதில்கள் பல பல கேள்விகளுக்கு பொருந்தும் இதையும் அறியாது சிலர் எனக்கு தனிப்பட்ட முறையிலும் மிஞ்சல் அனுப்பியது எனக்கு வருத்தமளிக்கிறது.

அனைவருக்கும் வணக்கம் , எல்லோரும் நலமான்னு சொல்லுங்கப்பா... புதியவர்களுக்கும் எனது வணக்கமும் நல்வரவும்.
எனது அறுசுவை தோழிகள் எல்லோரும் எனக்கொரு அட்டன்டன்ஸ் போடுங்க... நான் அப்பப்போ இடையில வந்து தலை காட்டினேன் அதனால சிலருக்கு தெரியும் நான் வந்தது. இப்போ எல்லோரும் வரலைன்னா...........என்ன பண்ணுவேன் ஒன்னியும் செய்யமுடியாது........( கமல் ஸ்டைல்) .....
வந்துடுங்க எல்லோர் கூடவும் பேசி ரொம்ப நாளாச்சி..........

மீண்டும் சந்திப்போம்
pops.

உமாக்கா
உங்களுக்கு ஒரு பெரிய ஹாய், உங்க லின்க் இன்னும் நான் பாக்கலை, பாத்துட்டு சொல்றேன்க்கா, நன்றி, கண்டிப்பா எல்லாரும் தேடிட்டு இருந்ததை நீங்க ஈஸியா கொடுத்துட்டீங்கன்னு நினைக்கிறேன்

அன்புடன்
பவித்ரா

ஹாய் உமா, நலமா? நீண்ட நாட்களாகிவிட்டது பேசி. மகன் நலமா? அறுசுவையில் இப்ப நிறைய புதுமுகங்கள். நீங்கள் உங்கள் சேவையை தொடர வாழ்த்துக்கள்.
வாணி

ஹாய் பாப்ஸ்! இன்னைக்கு கூட நினைச்சேன்.. ரொம்ப பிஸியா? மகன் நலமா? சீக்கிரம் வாங்க..

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் உமா,
எப்படி இருக்கிங்க‌? ரொம்ப நாளாச்சு உங்களை இங்க பார்த்து. ரோஹித் நலமா? ஒரு 4 நாள் முன்னாடிக்கூட உங்களைப்பத்தி நினைச்சிட்டு இருந்தேன். உங்க சேவை மீண்டும் தொடர, வாழ்த்துக்கள்!.

இலா, நலமா?
சும்மா ஜாலியா ஒரு அரட்டை பகுதி ஆரம்பிச்சு வைச்சிங்க. நல்லா ராசியான ஆளுதான் நீங்க! இப்ப பகுதி 8 போய்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன்! :)

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் உமா,

வணக்கம்.எப்படி இருக்கீங்க? உஙக முந்தைய பதிவுக்ளை எல்லாம் படித்துள்ளேன்.பயனும் அடைந்துள்ளேன்.எனக்கு முகத்தில் கருப்பாக மச்சம் போல் நிரைய உள்ள்து.clearsil acne cream வாங்கினேன்.இன்னும் உபயோகிக்கவில்லை.எனக்கொரு சந்தேகம்.acne &pimple இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? bodymilk & body lotion இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? மச்சம் போல் உள்ளதை வேரு எப்படி நீக்கலாம்? உங்க பதிலை சொல்லுங்க.

அன்புடன் அனு


நீங்க நல்ல ஒரு த்ரெட் ஆரம்பிச்சுருக்கேள். ரொம்ப சந்தோஷம்.
த்ரெட் 100,200,300,..................... தொடர்ந்து போறதுக்கு என்னோட வாழ்த்தை சொல்லறேன்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அனைவருக்கும் நலம், நானும் என் மகனும் குடும்பத்தினர் அனைவரும் நலம்.
வாங்க வாங்க பவித்ரா,வாணி,இலா,சுஸ்ரீ,அனு,மோகனா மாமி உங்களை மீண்டும் கண்டதில் மிக மிக சந்தோஷம்.

மீண்டும் சந்திக்கும் வரை இன்னும் மற்ற அனைவரையும் எதிர்பார்த்திருக்கும்........ ஜீவன்.

மீண்டும் சந்திப்போம்
pops.

தூங்கிடுச்சி.........ஓகே........நல்லா தூங்கட்டும்........ i'll come later.

மீண்டும் சந்திப்போம்
pops.


//தூங்கிடுச்சி.........ஓகே........நல்லா தூங்கட்டும்........//.

உமாவின் ஆலோசனைகளை
உறங்கதான் விடலாமோ!
உற்ற தோழியரே
உடன் இங்கே வந்திவீர்!

பாப்ஸ் மேம் காத்திருக்க
பாராமல் இருக்கலாமோ
பறந்திங்குடனே வந்து
பாங்குடனே கேட்டுடுங்கோ!

மாமியை கூப்டா என்னாகும்னு இப்போ தெரிஞ்சுதா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்