சொல்ல விரும்பினேன் !!

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 100'கு மேல போயிடுச்சு அதான் புது இழை. :) இந்த முறை புது பெயரும் வைக்க எண்ணம்.... வச்சுட்டேன்.

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

நான் இது வரைக்கும் மிரட்டி பிச்சை எடுத்தவங்கல பாத்ததில்ல, ஆனா 2 ரூபாய் மாதிரி எல்லாம் சில்லரையா பிச்சை போட்டா சில பேர் மூஞ்சிய சுழிப்பாங்க பாருங்க, நாம என்னமோ அவங்க காச தரமாட்டேன்னு சொன்னா மாதிரி.

அன்புடன்
பவித்ரா

ஏர்போர்ட்டிலும் கொள்ளையடிக்கறாங்கப்பா. நான் திருவனந்தபுரம் ஏர்போர்ட் வழியாகத்தான் இந்தியா வருவேன். லக்கெஜ் எடுப்பதற்காக பெல்ட் அருகே நாம் வரும் முன் யுனிஃபார்ம் போட்ட சிலர் லக்கேஜ்களை கீழே இறக்கி வைத்து விடுவர் . நாம் ட்ராலியில் ஏற்றி வைக்கும் போது வேண்டாம் என்று சொன்னாலும் விடாமல் அவர்களே ஏற்றி வைத்து விட்டு நம்மிடம் காசு கேட்பர். நாமும் உறவுகளைப் பார்க்கும் அவசரத்தில் இந்திய பணம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். டாலர் கொடுங்க என்பார்கள். நாம் அவர்களை கண்டுகொள்ளாமல் வெளியில் வந்தாலும் விடாமல் பின் தொடர்வர். ஏர்போர்ட் ஊழியர்களும் இவர்களை கண்டு கொள்வதில்லை. ஒவ்வொரு முறையும் தொல்லையாக இருக்கிறது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு வனிதா,

மற்றவர்களுக்கு உதவி செய்யனும்னு நிறைய நினைக்கிறோம், ஆனால், அது சரியானவங்களுக்குப் போய் சேருதான்னுதான் சந்தேகமாக இருக்கு.

சுனாமி வந்தபோது, மதுரையில் தினம் நாலு ட்ரைசைக்கிள் வரும். அதிலே ஒரு பானர், “ சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருள் உதவி பண உதவி தாரீர்” அப்படின்னு. இந்த வண்டியில் வந்தவங்ககிட்ட எவர்சில்வர் சமையல் பாத்திரங்கள், ப்ளாஸ்டிக் வாளிகள், இப்படி பொருட்களாகவும், சில பேர் பணமும் கொடுத்திருக்காங்க. எங்க பகுதியில் இருந்த கோவிலிலும் உதவி செய்ய விரும்புபவர்கள் கொண்டு வந்து கொடுக்கலாம்னு எழுதிப் போட்டிருந்தாங்க. நிறைய பேர் கோவிலிலே கொடுத்து விட்டோம். அப்போ அங்கே வந்த ஒரு பெண்மணி இந்த வண்டிகள் கலெக்‌ஷனைப் பற்றி சொன்னார். சாயங்காலம் ஆன பிறகு, எங்க ஏரியாவைத் தாண்டி ஒரு இடத்தில், இந்த வண்டியில் வந்தவர்கள் எல்லாப் பொருட்களையும் பங்கு பிரித்துக் கொண்டிருந்தார்களாம். எவ்வளவுக்குப் போகும், என்ன பணம் கிடைக்கும் என்று டிஸ்கஷனாம். என்னத்தை சொல்ல!

படிப்புக்கு உதவி செய்வது பெஸ்ட்னு நினைக்கிறேன். ட்ரஸ்ட்களுக்கு பணம் அனுப்புவது சரியாக இருக்கும்னு தோணுது.

பழைய துணிகளை, பாண்ட் ஷர்ட் போன்றவற்றை, வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணிடம் கொடுத்து, உங்க வீட்டில் தேவைப்பட்டாலும் சரி, அல்லது உங்க அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கொடுத்து விடுங்கன்னு சொல்லிடுவோம். சில சமயம் செக்யூரிடிகிட்ட கொடுப்பதுண்டு. சமீபத்தில் பாண்ட், ஷர்ட், சுடிதார் என்று நிறைய சேர்ந்திருந்தது.(கொஞ்சம் பழசு ஆனால் கிழிசல் கிடையாது) ஏதாவது ஆசிரமத்தில் கொடுக்கலாம்னு நினைத்து, இரண்டு/மூன்று நம்பரில் கூப்பிட்டுக் கேட்டோம். (சமீபத்தில் விஜய் டிவியில் ஒரு பெண் போட்டுக்க நல்ல ட்ரெஸ் கிடையாதுன்னு சொன்னதைப் பார்த்ததால் வந்த யோசனை இது.) வந்து கலெக்ட் செய்து கொள்ள, இங்கே யாரும் வாலண்டியர்ஸ் இல்லை, முடிந்தால் நீங்களே கொண்டு வந்து கொடுங்கன்னு சொன்னாங்க. இன்னிக்கு நாளைக்குன்னு போகவே முடியலை. அப்புறம் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சின்ன டெய்லர் ஷாப்பில் இருந்தவங்ககிட்ட கொடுத்தோம்.

சமீபத்தில் மகனும் மருமகளும் மதுரையில் உள்ள தொண்டு நிறுவனத்துக்கு பணம் அனுப்பியதாக சொன்னாங்க. மன நிலை பாதிக்கப்பட்டு, சாலையில் இருக்கும் மக்களுக்கு, உணவு, உடை கொடுத்து, பராமரிக்கும் நிறுவனம் அது. தனியொருவர் இதை நடத்துகிறார். இதற்கு மகன் சொன்ன காரணம் - “பேசத் தெரிஞ்சவங்க, நல்லா சிந்திக்கத் தெரிஞ்சவங்க, எப்படியாவது யார்கிட்டயாவது உதவியை கேட்டு வாங்கிடுவாங்க. ஆனா மன நலம் பாதிக்கப் பட்டவங்களுக்கு - தனக்கு பசிக்குதா இல்லையான்னு கூடத் தெரியாமல் இருப்பாங்க. அவங்களுக்கு உதவி செய்கிறார் ஒருவர் என்கிறபோது அவருடைய தொண்டு நிறுவனத்துக்கு டொனேட் செய்யணும்” என்று சொன்னார்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

ஹஹஹா... கவிசிவா... பாவம் நீங்க நிரைய இடத்துல ஏமாந்துட்டு வரீங்க போல!!! இது போல் இரயில் நிலையத்திலும் நடக்கும். நாம சொல்லாமலே நம்ம பெட்டியை தூக்கிட்டு வாங்க வாங்கன்னு போயிடுவாங்க. பின்னாடியே ஓட வேண்டியது தான். :(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சீதாலஷ்மி...

//இதற்கு மகன் சொன்ன காரணம் - “பேசத் தெரிஞ்சவங்க, நல்லா சிந்திக்கத் தெரிஞ்சவங்க, எப்படியாவது யார்கிட்டயாவது உதவியை கேட்டு வாங்கிடுவாங்க. ஆனா மன நலம் பாதிக்கப் பட்டவங்களுக்கு - தனக்கு பசிக்குதா இல்லையான்னு கூடத் தெரியாமல் இருப்பாங்க. அவங்களுக்கு உதவி செய்கிறார் ஒருவர் என்கிறபோது அவருடைய தொண்டு நிறுவனத்துக்கு டொனேட் செய்யணும்// - உண்மை. நல்ல மகனை பெற்றிருக்கீங்க'னு மட்டுமே சொல்ல வேணும்.

நானும் இங்கு வந்ததும் பழைய ஆடைகள், புடவைகள் எல்லாம் நேரில் கொண்டு போய் கொடுத்தேன். இங்கும் தெருவில் வருவார்கள், விற்று காசாக்கி விடுவார்கள் என்று நான் கொடுப்பதில்லை. இதுக்காக திருவான்மியூரில் இருக்கும் ஒரு இல்லத்தை கண்டு பிடித்து அருகே வசிக்கும் நண்பரை விட்டு நம்பகமான நல்ல இல்லம் என்று தெரிந்ததும் நேரில் போய் கொடுத்துவிட்டு வந்தேன். வீட்டில் எல்லாரும் முதலில் திட்டினாங்க... "வயித்து புள்ளகாரி இப்படி இதுக்கு ஓடனுமா??"னு. செய்து முடிச்சதும்... "பரவாயில்ல கொஞ்சம் உழைப்பெடுத்தாலும் சரியான இடத்துக்கு போய் சேர்ந்தது சந்தோஷம்"னு சொன்னாங்க.

சட்டைகள் பல புதிதாக அளவு சரி இல்லாமல் இருந்தது. எல்லாம் குப்பை எடுக்க வரும் வண்டிகாறர்களுக்கு கொடுத்தோம். அவர்கள் ஆளுகொன்றாக எடுத்து அளவு வைத்து பார்த்தது பார்க்க சந்தோஷமா இருந்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் ஒண்ணு சொல்லட்டா, இந்த மாதிரி இயற்கை சீற்றங்கள் வரும் போது, எல்லாரும் நிறைய துணி கொடுப்பாங்க, ஆனா ஒரு தடவை அங்க இருக்கிற பொண்ணுங்க எல்லாம் அவங்களுக்கு napkin வேணும்ன்னு சொன்னாங்க, அதுவும் இல்லாம அவங்களுக்கு inner wears கூட தேவைப்படும், அதனால இனி இந்த மாதிரி எதாவது பிரச்சினைன்னா இதையும் கொடுத்து உதவுங்கள்.தவறாக நினைக்க வேண்டாம்

அன்புடன்
பவித்ரா

இது ஒரு பழைய கதை!!!

ஈரோடு'ன்னாலே எனக்கு கொஞ்சம் பயமும், கூடவே சிரிப்பும் ;) வரும். அந்த கதையை தான் சொல்லப்போறேன்.

நான் ஹாஸ்டலில் தங்கி படித்தேன். 3 வருடம் 3 யுகமா போச்சு... காரணம் எனக்குன்னு நெருங்கிய தோழிகள் யாரும் கிடையாது. எல்லாருடனும் பேசுவேன், எனக்கென்று ஒதுக்கும் அறையில் இருந்து விடுவேன். மற்றவர் எல்லாம் கேங் சேர்ந்து எப்போது அறை ஒதுக்கினாலும் பிரெச்சனை செய்து தோழிகளுடன் தான் இருப்போம் என்று கேட்டு போவார்கள். என்னிடம் பழக எல்லாரும் உண்டு... விஷேஷ நாட்கள் என்றால் ஹாஸ்டல் வாசிகளுக்கு தான் கொண்டாட்டம். மொத்தம் 10 பேர் தான் வீட்டில் இருந்து வந்தவர்கள், மற்றவர் எல்லாம் ஹாஸ்டல் தான்... சொல்லவா வேண்டும்??? விஷேஷ நாட்களில் புடவை கட்டி, தலை அழகாக சீவி பூ வைத்து அலங்கரித்து, மருதாணி போட்டு கொண்டு கலக்குவாங்க. என்கிட்ட தோழிகள் புடவை கட்டிக்கொள்ளவும், தலை சீவவும், முன் நாள் இரவு மருதாணி போடவும் கண்டிப்பாக வந்துவிடுவார்கள். இரவெல்லாம் விழித்திருந்து ஷிஃப்ட் போட்டு தூங்கி எழுந்து வரும் தோழிகள் கையில் மருதாணி போடுவேன். விடியலில் தான் நான் தூங்க முடியும்... அதுக்கு வேட்டு வைத்து புடவை கட்ட வந்துவிடுவார்கள். இவர்களை எல்லாம் தயார் செய்துவிட்ட பின் தான் அடித்து பிடித்து ஓடி குளித்து நான் தயார் ஆவேன். சில நேரத்தில் பாத்ரூம் கதவை தட்டி கேட்பார்கள்... சீக்கிரம் வா எனக்கு புடவை கட்டணும்'னு. எத்தனை அலைச்சல் என்றாலும் எனக்கு அவர்களுக்கு செய்து விடுவது பிடிக்கும்... அதனால் நிச்சயம் செய்துவிடுவேன்.

ஈரோடு, கோயமுத்தூர், நாமக்கல் தோழிகள் அதிகம் என்பதால் முடி கேட்கவே வேண்டாம்... சூப்பரா இருக்கும். அதை பிடித்து பின்னுவது அங்கு இன்னும் ப்ரசித்தம். நான் பலருக்கு அப்படி தலைசீவி விடுவது வழக்கம். எனக்கு முடி ரொம்ப குறைவு... கழுத்து வரை தான் இருக்கும். அப்படியே சீவி ஒரு பேன்டு போட்டால் வேலை முடிந்தது. ஒரு முறை நான் ஊரில் இருந்து ஹாஸ்டல் போன நேரம்... காலை நேரம்!!! பெருந்துரை போகும் வழியில் சாலை ஓரம் ஒரு பெண் தன் முடியை விரித்து விட்டபடி காத்திருந்தார். பேருந்தில் எனக்கு பின் சீட்டில் இருந்த பசங்க இருவர்...

"டேய்... அழகான கூந்தல்டா...."

"அதை விடுடா... நம்ம முன்னாடி சீட்ட பாரு... அழகா இருக்கு தான முடி??"

"டேய்... அது கூந்தல்'டா... இது குதுர வாலு!!! ரசனையே இல்லடா உனக்கு."

"இதுவும் நல்லா தான்டா இருக்கு..."

என் நல்ல நேரம் இதோட முடிச்சுட்டாங்க!!! என் முடியை பார்த்து அவங்க பண்ண கமன்ட். சிரிப்பு தான் வந்தது. ஆனாலும் இப்படி பேச ஒரு தைரியம் வேணும்.

அதன் பின் ஹாஸ்டலில் யார் தலை பின்ன வந்தாலும் எனக்கு அவர்கள் பேச்சு தான் நினைவு வரும். அடக்க முடியாமல் சிரிப்பு வந்துடும். கண்ணாடியை பார்த்தாலும் குதுர வாலு இப்படி தான் இருக்கும் போலன்னு நினைச்சுக்குவேன். முகம் தெரியாதா (கடைசி வரை யாருன்னு திரும்பியே பார்க்கல) அந்த பசங்க அடிச்ச கமன்ட் மனதை காயப்படுத்தாம சிரிக்கும் விதமா இருந்துதுன்னு தான் சொல்லணும். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி

ஆஹா

உங்களின் ஈரோடு பயம் உள்ள கதை இது தானா? சொல்றேனு சொல்லி இருந்தீங்க.. எப்படியோ பதிவ பாத்துட்டேன்.. ;-)
முடி நீளமா இருக்கவங்களுக்கு அதை மெய்ன்டைன் பண்ண கஷ்டப் படும் போதும், சிக்கல் எடுக்கும் போதும் கழுத்து வரை முடி இருப்பவர்களை பார்த்தால் பொறாமை வெரும்.. எனக்கு அப்படித் தான்.. எனக்கு நல்ல நீளமான அதிலும் க்ர்ள் ஹேர்... க்ர்ள் மெயின்டைன் பண்றது அதும் நீளம் சொல்லவே வேண்டாம். ;(

சில சமயத்தில் வெட்டி விடலாமா என கோவம் வரும்.. ஆனால் எல்லோருக்கும் என் முடி பிடிக்கும். சாதாரணமாகவே க்ர்ள்னா நீளமா வளராது.. உனக்கு இது அழகுனு சமாதானம் சொல்லிடுவாங்க..

நானும் சும்மா தான் வெட்ரேனு சொல்லுவேன். ஆனா ஒரு முடி கொட்டினாலும் சோகமாயிடுவேன். ஏதாவது சாப்பிடாமல் ரகளை செய்தால் அம்மா உடனே இது தலை முடிக்கு நல்லதுனு பொய் சொல்லி சாப்பிட வைக்க பாப்பாங்க ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹா ஹா வனி நல்ல அனுபவம்! அதான் ஈரோடுன்னாலே பயந்தீங்களா?!முன்னாடி நீளமா இருந்த முடி இப்போ எனக்கு குதிரை வாலாயிடுச்சு :-(

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

வர வர சின்னா பேச்சு தாங்கல... வெளிநாட்டு மக்களை கூட்டிட்டு காரில் போனானாம்... நடுவுல ஆடு போச்சுன்னு பொசுக்குன்னு ப்ரேக் அடிச்சிருக்கான். வெள்ளக்காரன் பயந்து போய் "வொய் வொய்??"ன்னானாம். நம்ம சின்னா புத்திசாளி ஆச்சே... இங்க்லீஷ்'ல "மட்டன் க்ராசிங்"னு சொன்னானாம். :( "எனக்கு தெரியும் அக்கா... கோழி போனா சிக்கன், ஆடு போனா மட்டன், பன்றி போனா பிக்"னு சொன்னான்.

இதுக்கு சிரிச்சு முடிச்சே தாங்கல... திரும்ப வரும்போது ரோடுல ஒரு சின்ன கடை, சரியான கூட்டம். இவன் ஏன் அக்கா அங்க கூட்டம்'னு கேட்டதும் என் தங்கச்சி ரொம்ப சீரியசா "பிக் ஃப்ரை, பிக் பிரியாணி விக்குறாங்க"னு சொன்னா. அவளையும் சின்னாவையும் தவிற எல்லாரும் சிரிச்சோம். :((

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்