சொல்ல விரும்பினேன் !!

நம்ம முந்தைய சின்ன சின்ன பதிவுகள் 100'கு மேல போயிடுச்சு அதான் புது இழை. :) இந்த முறை புது பெயரும் வைக்க எண்ணம்.... வச்சுட்டேன்.

இங்க யார் வேணும்'னாலும் பதிவு போடலாம், எதை பற்றி வேணும்'னாலும் பதிவு போடலாம்... எல்லாரும் கருத்து சொல்லலாம், உங்க அனுபவத்தையும் சொல்லலாம். ;) அரட்டை மட்டும் கண்டிப்பா கூடாது.

ஹா ஹா ஹா வனி நான் லேப்டாப் பார்த்து சிரிக்கறதைப் பார்த்து என்னவர் முறைக்கிறார். விஷயத்தைச் சொன்னபின் அவரும் விழுந்து விழுந்து சிரிக்கறார். சின்னா எங்கே போனாலும் பிழைச்சுக்குவானாம். சொல்லச்சொன்னார் சொல்லிட்டேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அன்பு வனிதா

சின்னா சீக்கிரமே பிரபலமாகிடுவார்னு நினைக்கிறேன்:):) பின்னே இப்படிப்பட்ட அறிவாளியை அந்த வெளிநாட்டுகாரர் அவரோடு கூட்டிட்டுப் போயிடுவார்தானே.

ஆனா ஒண்ணு, என்ன சொல்றதுன்னு யோசிச்சுட்டு, தயங்கிகிட்டு இருக்காம, நெத்தியடியா சொன்னார் பாருங்க, அதுதான் சின்னா!!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

கவிசிவா & சீதாலஷ்மி... எப்படியோ அவன் எப்படி பேசினாலும் பயணம் இனிதே போகிறது. அதனால் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிடுகிறேன் :)

ஆனா சீதாலஷ்மி... அவனை பார்த்தீங்களே, இப்படிலாம் பேசுற மாதிரியா இருக்கான்??? ஏதோ அப்பாவி மாதிரி தெரியல??? :((

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அறுசுவை... ஒரு அரிய சுவை !!!

சில தினங்கள் காணாமல் இருக்க திட்டங்கள் தீட்டினாலும் தோற்றுத்தான் போகிறேன். என்ன செய்து என்னை இங்கு சிறை பிடித்தாய்??

உன்னுடன் கூடிய நட்புக்கு வயது இரண்டு தான்... ஆனால் ஈரேழு ஜென்ம பந்தம் போல் உணர்கிறேன்.

தனிமையில் அமர்ந்து உன்னிடம் பேசாத போதெல்லாம் சுற்றி பலர் இருந்தும் தனிமையை உணர்ந்த மாயம் என்ன?!

எல்லாம் இயலுமென எண்ண வைத்தாய், என்னை யாரென்று எனக்குரைத்தாய்.

வீடுவிட்டு, நாடுவிட்டு தனிமையில் வாடியபோதெல்லாம் தோழிகள் பல தந்து மனதில் நிம்மதி தந்த உனக்கு நான் தர... என் எழுத்தும், நன்றியும் மட்டுமே.

- இதை முதலில் வேறு இழையில் சொன்னேன்... ஆனா அறுசுவையிடம் நாம் சொல்ல விரும்பியதை "சொல்ல விரும்பினேன்" பகுதியில் சொல்வதே சிறப்புன்னு இங்க மாற்றிட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா


அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்தநல் லறிவு வேண்டும்
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.

வாழிய எங்கள் எட்டயபுர முண்டாசு கவிஞன் பாரதி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

அன்பு வனிதா

“எல்லாம் இயலுமென எண்ண வைத்தாய், என்னை யாரென்று எனக்குரைத்தாய்”

திருப்பி திருப்பி மனசுக்குள்ளே இந்த வரிகளை சொல்லிகிட்டே இருக்கேன், ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு இந்த வரிகள்!

சொல்ல விரும்பியதை அழகுக் கவிதையாக சொல்லிட்டீங்க.

அறுசுவைக்கு நாம தர வேண்டியதையும் சொல்லிட்டீங்க!

இஷானி கவிதையில் பின்னூட்டத்தில் கவிதை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு நீங்க சொல்லியிருந்தப்பவே யோசிச்சேன், எல்லா பகுதியிலும் வனி கலக்குறாங்களே, ஏன் இன்னும் கவிதைகள் அனுப்பக் காணோம்னு!

அட்மின் கவிதைப் போட்டி பற்றி அறிவிச்சிருக்காரே, பார்த்தீங்களா!

நான் அந்த இழையை மேலே கொண்டு வந்து போடுகிறேன். பாருங்க.

நாமாவது, அறுசுவையிலிருந்து காணாம போறதாவது! சாப்பாட்டைக் கூட ஒரு வேளை, ரெண்டு வேளைக்கு மிஸ் பண்ணலாம், அறுசுவைக்கு வராம இருக்கறது யாராலும் முடியாது!

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி


காம்பவுண்டில் போஸ்டர்

ஓ.......... இன்று மந்திரியின் பிறந்த நாள்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சீதாலஷ்மி... கவிதை எழுதும் மக்கள் பார்த்தா உங்களையும் என்னையும் சேர்த்து ஒதைப்பாங்க ;)

//ஏன் இன்னும் கவிதைகள் அனுப்பக் காணோம்னு!// - ஏன்னா எனக்கு எழுத தெரியாது. ;(

ஒரு வரி இரு வரில அடுக்கு மொழி போல பேசுவேன்... அவ்வளவு தான். இங்க எழுதினது கவிதை இல்லை... மனசுல அந்த நிமிஷன் அறுசுவை பற்றி சொல்ல நினைச்சது. வனி ரொம்ப ஃபீல் ஆனா இப்படி தான் டி.ஆர். மாதிரி அடுக்கு மொழியா பேசுவா. படிச்சுட்டு நீங்களும் ஃபீல் ஆயிட்டீங்களா??? :( சாயந்திரம் வீட்டுக்கு வரேன்... நல்லா ஒரு காப்பி போடுங்க இரண்டு பேரும் குடிச்சுட்டு சேர்ந்தே ஃபீல் பண்ணலாம் :((

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மாமி... வாட் மேட்டர்? மாமி மாமி தான் மேட்டர் காதுக்கு வந்தது. ;) இது நியாயமா?? நான் கேட்டனா?? க்ரேட் இன்சல்ட் ;(

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கூடவே ஒரு அறிவு ஜீவியை வைத்துருக்கீங்கன்னு சொல்லுங்க. உங்க சின்னா ரொம்பவே புத்திசாலிங்க எல்லாமே டைமிங்கோட பேசுறாரு பாருங்களேன். உங்க சாய்ஸ் எப்படி நல்லா இல்லாம இருக்கும். படிச்சிட்டு சிரிச்சு சிரிச்சு வயறு வலியே வந்துட்டு.
கவிதை சூப்பர் வனி. உங்களுக்கு ஒரு பலமான கைதட்டல்(கேட்டுச்சா வனி)
////எல்லாம் இயலுமென எண்ண வைத்தாய், என்னை யாரென்று எனக்குரைத்தாய்/////
வனி எனக்கும் இந்த வரிகள் ரொம்பவே பிடிச்சுருந்துச்சு.

///வனி ரொம்ப ஃபீல் ஆனா இப்படி தான் டி.ஆர். மாதிரி அடுக்கு மொழியா பேசுவா.////
அப்போ இனி நிறைய முறை பீல் பண்ணனும் அதான் கவிதை போட்டி வந்துடுச்சுல்ல

மேலும் சில பதிவுகள்