தலையை சந்தித்தேன்.

மிகச் சிறந்த தலைமை நிர்வாகி,அறுசுவையின் முன்னோடி, அனைவராலும் மதிக்கக்கூடிய இந்திய சொந்தம் நம்ம தலை. .

நான் இந்தியா சென்ற போது நம்ம தலை அட்மின் அவர்களை சந்திக்க வேண்டும் என்னும் ஆவலுடன் போயிருந்தேன்.எனது விருப்பத்தை தொலைபேசி மூலம் அவருக்கு தெரியப்படித்தினேன்.அவரும் முடிந்த வரை முயற்சி செய்வதாக சொன்னார்.பின் எல்லா ஏற்பாடும் அவரே செய்து சந்திப்பதற்கு ஒரு இடத்தையும் அவரே ஒழுங்கு செய்தார்.
அத்துடன் நம்ம சாதிகா, சீதாலட்சுமி மேடம் ஆகியோரையும் சந்தித்து பேச சந்தர்பம் அமைத்து கொடுத்தார்.
அது மட்டுமா எங்கள் எல்லோருக்கும் விருந்துபசாரமும் செய்தார்.தங்கை பிள்ளைகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.
அன்று நம்ம வனிதாவும் வர இருந்தாங்கள்.இரவு என்ற படியால் முடிய வில்லை என்று நினைக்கின்றேன். அவர்களை சந்திக்க முடியாதது ஏமாற்றமாகி போய் விட்டது.

எங்கள் தலைவர் பாபு அவர்களை நேரில் கண்டு பேசிய நான் பாக்கியசாலி!!
பழகுவதற்கு மிக மிக இலகுவானவரும் இனிமையானவரும் எளியவரும்..
அவர் ஒரு திறமை மிக்க நிர்வாகி என அவருடன் பேசி பழகும் போது புரிந்து கொண்டேன்.
சொந்த பணி, குடும்பம், மன்றம் என ஒரே நேரத்தில் எப்படித்தான்
இவரால் திறம்பட செயல்பட முடிகிறதோ என்று அனைவரையும்
ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஆராய்ச்சியாளர். அவரை சந்திப்பதற்கு முன் அவர்பால் இருந்த மரியாதை அவரை சந்தித்த பின்னர் பல மடங்காகியது!!!

இவற்றை எனது அறுசுவை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் சந்தோசம் அடைகின்றேன்.
நன்றி, அன்புடன் யோகராணி.

தாங்கள் கிடக்க பெற்ற பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவில்லையே:(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல எங்களுக்கும்
ஒரு நாள்கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.

Long Live Admin
Warm Regards
Ashiq

யோகராணி ! நல்லா இருந்ததா சந்திப்பு? படம் போட்டா தான் எங்களுக்கு தெரியும்.. குறைந்த பட்சம் என்ன சாப்பாடு அதையாவது போடுங்க:)

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

இலா
அதை தான் சாதிகா சொல்லிட்டாங்களே! அதிக பட்சமாகவே:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆவினா! அடுத்து கதை எதும் எழுதலையா?
எழுதலேனா வாழ்த்துக்கள், Keep it Up
அன்புடன்
ஆஷிக்

என் கதையை தான் நீங்க படிக்கமாட்டேன்னு சொல்றீங்களே அப்பறம் எதுக்கு கதை எழுதணும்?

வாழ்த்துக்கு நன்றி!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சரி சரி விடுங்க...கோவிச்சுக்காதீங்க, கண்டிப்பா படிக்கிறேன்
எழுதுங்க..
அன்புடன்
ஆஷிக்

இலா சாப்பாட்டை பற்றியா கேட்கின்றீர்கள்.எதை சொல்ல எதை விட. இருந்தாலும் சொல்லுகின்றேன்.அது ஒரு செட்டிநாட்டு ரெஸ்ரோரன்ட் என்று நினைக்கின்றேன்.
முதல் வந்தது சூப்
அடுத்து சிக்கின் 65
அடுத்து ஆப்பம், புட்டு, ரொட்டி, நூடில்ஸ் அத்துடன் அவைக்கேற்ற கறிகள்.
அவை சாப்பிட்டு முடித்தவுடன் வந்தது பாருங்கள் தயிர்சாதம்.எப்படி இவ்வளவும் சாப்பிட்டோம் என்று கண் வையாதீர்கள்.எல்லாவற்றையும் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.
கடைசியில் இஸ்கிரீம் என தலை குரல் கொடுக்க எல்லோரும் ஏக மனதாக மறுத்து விட்டோம்.
எப்படி முடியும்.

பின் குறிப்பு; இந்தியாவில் புதுவிதமான உணவுகள் எல்லாவற்றியும் நன்றாக ருசித்தேன். நான் இந்தியாவை விட்டு வரும்போது 5 கிலோ எடை அதிகமாக காணப்பட்டது.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

//அறுசுவையின் முன்னோடி, அனைவராலும் மதிக்கக்கூடிய இந்திய சொந்தம் நம்ம தலை. ....
...எங்கள் தலைவர் பாபு..

//

ஏன் இப்படி...?!! மொத்தப் பதிவும் ஒரு கொலை வெறியில, உள்குத்தோட எழுதின மாதிரி இருக்கே.. :-) விருந்துல எதுவும் குறையா??

சரி.. சரி.., என்னை பத்தி இவ்வளவு உயர்வா சொன்னதுக்கு ரொம்ப நன்றி. ஆனா, பொய்யையும் உண்மை மாதிரி சொல்ற கலையை இன்னும் நீங்க கத்துக்கணும். இப்படியெல்லாம் சொன்னா ஈசியா கண்டுபிடிச்சிடுவாங்க.. ;-)

அதுசரி, நீங்க எப்ப நார்வே போனீங்க? சந்திப்புக்கு அடுத்த நாள் போன் பண்ணினேன். பிஸியாக இருந்தீங்கன்னு நினைக்கிறேன்.

அப்புறம் 'என்னோட சிஸ்டர்' ன்னு சொல்லி அறிமுகப்படுத்துனதால, அது என்னோட தங்கைன்னு நினைச்சிட்டீங்க போல.. அவங்க என்னைவிட அஞ்சு வயசு மூத்தவங்க. வீடு போற வரைக்கும் அக்கா பசங்க, உங்க பேச்சு நடை பத்தியும், நார்வேயில ஆறு மாசம் இருட்டு, ஆறு மாசம் வெளிச்சமா இருக்கிறதா நீங்க சொன்ன விசயங்கள் பத்தியும்தான் ஆச்சரியமா பேசிக்கிட்டு வந்தாங்க.

நீங்க கொடுத்த சாக்லேட்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது(ன்னு சொன்னாங்க.. :-)) உங்களுக்குதான் எந்த கிப்ட் டும் கொடுக்க முடியாம போச்சேன்னு எனக்கு வருத்தம். வேளச்சேரி வந்து எதாவது வாங்கிக்கலாம்னு இருந்தேன். ஆனா, எனக்கு முன்னமே நீங்க வந்து, ஹோட்டல் வாசலிலேயே வெயிட் பண்ணினதால, அதுக்கு பிறகு எங்கேயும் போக முடியாம போச்சு.. மழை வேற கொஞ்சம் சதி பண்ணிடுச்சு.

அடுத்த முறை இந்தியா வர்றப்ப, உங்க குடும்பதோட எங்க ஊருக்கு வந்துடுங்க.. எங்க ஊருல கவனிக்கிற அளவுக்கு விசேசமா எங்கேயும் கவனிக்க முடியாது... :-) உங்களை சந்திச்சதுல எங்க எல்லாருக்கும் ரொம்பவே சந்தோசம். இந்த சந்திப்பில கூட்டம் அதிகம் இல்லாததால, சந்திப்பு கொஞ்சம் நேரம்னாலும், நிறைய பேசின மாதிரி ஒரு ஃபீலிங்.. :-)

//..குறைந்த பட்சம் என்ன சாப்பாடு அதையாவது போடுங்க:).. //
//அதை தான் சாதிகா சொல்லிட்டாங்களே! அதிக பட்சமாகவே:) //

அது எங்க? நான் பார்க்கலையே..!!

மேலும் சில பதிவுகள்