அரட்டை அரங்கம் பாகம் 9

அரட்டை அரங்கம் பாகம் 9

ஷேக் அண்ணா நான் அடுத்த பாகம் ஆரம்பிச்சுட்டேன். உங்கள காலையில இருந்து கூப்பிடுறோம் ஆளைக்காணோம். நீங்கள் வராத காரணத்தினால் நான் ஆரம்பிக்கிறேன். தவறாக இருந்தால் ஸாரி.....

எல்லாரும் வந்து அரட்டைய ஆரம்பிங்க பார்ப்போம். மெகா சீரியல் பகுதி -- 9 இங்கு ஆரம்பம்.
<!--break-->

மாமி நான் ஒரு பதிவை உங்களுக்கு அனுப்பினேன் பார்த்தேளா.

life is short make it sweet.

சீரியஸா பேசாத ஆள் இவ்ளோ சீரியஸா நல்ல விஷயம் சொல்லும்போது ஒத்துக்கணும். நீங்க சொல்றது சரிதான். யாருன்னே முகம் தெரியாத நபர்களிடம் ஏதோ ஒரு நம்பிக்கைல தான் பேசுறோம். அப்படி இருக்கும் போது அந்த நம்பிக்கைக்கு புறம்பா பேசிட்டா அப்புறம் வம்பா போய்டும். எல்லார்கி்ட்டயும் ஒரே மாதிரி பழக முடியாது. இது 100க்கு 100 உண்மை.

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

ஆஷிக் சாந்தியும் சமாதனமும் உங்கள் மீதும் ஆமினா தங்கை மீதும் உண்டாகட்டும்..என்ன பிரச்சனை?இதுக்கெல்லாம் போய் சீரியஸா ஆய்கிட்டு?பி கூல் மேன்...
அப்புறம் தொழில் எப்படி இருக்கு?வீட்டில் எல்லோரிடமும் நான் சலாம் சொன்னதாக சொல்லவும்

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

மாமி

இந்த பவி என் கூட பேசாத பாவி யா இருக்கா. சித்த என்னனு கேட்டு சொல்லுங்கோளேன். இதெல்லாம் விசாரிக்கப்டாதா........

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

வேலைக்கா, ஆனாலும் அருசுவையில் பதிவு போடறேன், அதனாலதான் கண்ணில் பட்ட குறிப்புகளுக்கு பதில் போட்டேன்.

அன்புடன்
பவித்ரா

இதை ஒததுக்க மாட்டா இந்த அக்கா

பழைய பதிவுல போய் பாரு. உன்னை தேடி தேடி அலுத்துப்போச்சு.......

ஆமாம் அண்ணன் எங்க.... விவசாயம் பாக்க போயிட்டாரா?
அண்ணி அரட்டை எல்லாம் அடிக்க கூடாதுன்னு சொல்லிட்டாங்களோ?

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

அப்பாடி நான் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல 7 பக்கத்தை தாண்டிடுச்சு..... வெற்றிகரமா இன்னும் பல பக்கம் போகட்டும்...

அனைவரும் அரட்டைல கலந்துகிட்டு இந்த பாகத்தை முடிச்சுடுங்க பாப்போம்.....

அனைவரையும் நாளை சந்திக்கிறேன்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி


பதிவா?எப்போ?எங்கே?
நெக்கு தெர்ல!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ராதா மாமி பவி
கொஞ்சம் வேலைய முடிச்சுட்டு வந்தா பக்கம் ஏழு வரை போயிடுத்தே

மீரா கிருஷ்ணன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா

ராதாக்கா,ஷேக் அண்ணா பட்டிக்கு ஓடுங்க

அன்புடன்
பவித்ரா

மேலும் சில பதிவுகள்