பீட்ரூட் சப்பாத்தி

தேதி: July 31, 2010

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 4 (5 votes)

 

பீட்ரூட் - 2
கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
பச்சை பட்டாணி - அரை கப்
கோதுமை மாவு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
பச்சை மிளகாய் - 6


 

பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பீட்ரூட்டையும், கேரட்டையும் துருவிக் கொள்ளவும். குக்கரில் துருவிய கேரட், பீட்ரூட், ஊறிய பட்டாணி, உருளைக் கிழங்குடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 விசில் விடவும்.
வேக வைத்தது ஆறிய உடன், அதனுடன் தேவையான அளவு கோதுமை மாவு, அரைத்த பச்சை மிளகாய் சேர்த்து சப்பாத்தி மாவு போல் உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
இது சப்பாத்தி போல் கல்லில் தேய்க்க வராது, அதனால் எண்ணெய் வரும் கவரில் (goldwinner cover) சிறிது எண்ணெய் விட்டு அதை கைகளால் தேய்த்து வட்டமாக சப்பாத்தி போல செய்யவும்.
அதை அப்படியே, தோசை கல்லில் போட்டு எடுக்கவும், நன்றாக வேக வைத்து எடுக்கவும். சுவையான பீட்ரூட் சப்பாத்தி ரெடி. இதை அப்படியே சாப்பிடலாம், இல்லையேல் வெங்காய தயிர் பச்சடி இதற்கு பொருந்தும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பவித்ரா கைவண்ணமா இது!

2 நாளைக்கு முன் தான் கேட்ட மாறி இருந்துச்சு!
அதுக்குள்ளையும் வந்துடுச்சா?

வாழ்த்துக்கள். இது போல் மேலும் பல குறிப்புகள் கொட்ட வேண்டும்.அதை நாங்கள் அள்ள வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

தெளிவான படங்கள். சத்தான உணவு. பீட்ரூட்டில் இதுவும் செய்யலாம் என இப்போது தான் தெரிகிறது.செய்து பார்த்துட்டு ஸ்டார் கொடுக்குறேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

பவி

என்ன பவி..

சமயல் குறிப்பெல்லாம் குடுக்க ஆரம்பிச்சிட்டீங்க.. நல்ல சத்தான குறிப்பு.. இன்னும் நிறைய அனுப்ப வாழ்த்துக்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


நேக்கு ரொம்ப சந்தோஷமாருக்கு
இன்னும் நெறைய சமையல் குறிப்புகள் தந்து அசத்தனும்னு வாழ்த்தரேன்!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

இந்தக் குறிப்புப் பிடித்திருக்கிறது பவி. ;)

‍- இமா க்றிஸ்


ஒடனே வாங்கோ சீக்கரம்.
பீட்ரோட் சப்பாதி ரெடி.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ரொம்ப சந்தோஷமா இருக்கு, என்னோட குறிப்ப வெளியிட்டதற்கு நன்றி, இந்த டிஷ் நானும் என் ரூம் மேட்கிட்ட இருந்து தான் கத்துகிட்டேன், நன்றி அண்ணா,

அன்புடன்
பவித்ரா

ரொம்ப நன்றி உங்களுடைய வாழ்த்துகளுக்கு, எனக்கு ரொம்ப பிடிச்ச டிஷ் இது, முதல் தடவை செய்யும் போது அவ்வளவு சரியா வரலை, ட்ரை பண்ணி பாருங்க.

அன்புடன்
பவித்ரா

உங்க வாழ்த்துக்கு நன்றி, நான் ஓரளவுக்கு சமைப்பேன்ப்பா, எனக்கு பீட்ரூட் அவ்வளவா பிடிக்காது, ஆனா உடம்புக்கு நல்லதுங்கறதால என் தோழியின் ஆலோசனையில் இப்படி செய்வேன்

அன்புடன்
பவித்ரா

ரொம்ப நன்றி, நான் என் குறிப்பு வந்திருக்கான்னு நேத்திக்கு பாத்தேன், இன்னிக்கு பார்க்கலை, உங்க சமீபத்திய கருத்து பாத்துதான் இந்த பக்கமா வந்தேன், நன்றி மாமி, செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க.

அன்புடன்
பவித்ரா

இமா ஆன்ட்டி
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி

(ஆன்ட்டின்னு கூப்பிடலாம்தானே, பிடிக்கலைன்ன சொல்லுங்க)

அன்புடன்
பவித்ரா

பீட்ரூட் சப்பாத்தி ரொப நன்னா இருக்கு. வாழ்த்துக்கள்.


நானும் லெட்டாதான் பாத்தேன்.பாத்ததும் நேக்கு கையும் ஓடல்லை காலும் ஓடல்லை.ஒடனே ஒங்களுக்கு தெரிய படுத்தனும்னுதான் அவசரம்னு கூப்டேன்.சாரிப்பா!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

கோமு நன்றி , எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு

அன்புடன்
பவித்ரா

மாமி
சாரியெல்லாம் எதுக்கு, நீங்க சொன்னதால தான் நான் பார்த்தேன் மாமி,

அன்புடன்
பவித்ரா

அன்பு பவி இப்போதான்மா வுன் குறிப்பை பார்த்தேன்.சூப்பர் .குறிப்பை பார்த்தவுடனே சாப்பிடவேண்டும் என்றிருக்கிறது.வுடனே செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.அடுத்த குறிப்பை விரைவில் எதிர் பார்கிறேன்

பவி

பார்க்கவே ரொம்ப அழகா கலா்புல்லா இருக்கு... செய்து பார்த்துவிட்டு சொல்றேன். இதே மாதிரி இன்னும் நிறைய செய்து அனுப்ப வாழ்த்துக்கள்

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

சுந்தரி அக்கா, ராதாக்கா
உங்க வாழ்த்துக்களுக்கு நன்றிகள், செய்து பாத்துட்டு மறக்காம் சொல்லுங்க, கண்டிப்பா குழந்தைகளுக்கு பிடிக்கும்

அன்புடன்
பவித்ரா

பவி பீட்ருட் சப்பாத்தி நேற்றிரவு செய்தேன் மிகவும் அருமை சூப்பர் வாழ்த்துக்கள்

ponni

செய்து பார்த்து பதிவு போட்டதற்கு நன்றிப்பா,

அன்புடன்
பவித்ரா

ஹாய் பவி,

இன்று உங்களோட பீட்ரூட் சப்பாத்தி செய்தேன். ரொம்ப ரொம்ப டேஸ்டியா, சத்தான ஒரு ஐட்டமா இருந்தது. என்னோட பையனை பீட்ரூட் சாப்பிட வைக்க அவ்வளவு ஈஸியா முடியாது. இன்னைக்கு இந்த சப்பாத்தி போட்டு கொடுத்ததும், அவனுக்கு ரொம்ப பிடித்து இருந்தது. ஐ லைக் இட்! என்று சொல்லி பசங்க இரண்டு பேரும் சாப்பிட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா போச்சு. அருமையான இந்த குறிப்புக்கு ரொம்ப தேங்ஸ் பவி! (குறிப்பை விருப்பப்பட்டியல்ல சேர்த்தாச்சு! இனி அப்பப்ப செய்திடவேண்டியதுதான்!)

பி.கு. குறிப்பின் ஆரம்பத்தில், பொருட்கள் லிஸ்ட்டில், கடுகு கொடுத்து இருக்கிங்க. படத்திலும் இருக்கு. ஆனால், எங்கேயும் உபயோகப்படுத்தவில்லை. ஒருவேளை, வெங்காயம் போட்டு தயிர் பச்சடி என்பதற்காக கொடுத்து இருப்பிங்க போல. எனக்கு ஏதும் குழப்பம் வரவில்லை. ஆனால், யாராவது புதிதாய் செய்பவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அதனால், முடிந்தால் மாற்றிவிட பாருங்களேன். உங்களிடம் சொல்லலாம் என்று தோணியது, அதான் சொன்னேன். குறை சொன்னதாக தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

நல்ல டேஸ்ட் ரெஸிப்பி கலர்ஃபுல் ரெஸிப்பி கொடுத்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். ரோஹித் நல்லா சாப்பிட்டான்;-)

Don't Worry Be Happy.