நம் அறுசுவை உறவினர் (தோழி) களை எப்படி அழைப்பது?

அன்பு அறுசுவை தோழிகளே !

அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம். தோழிகள் மொத்த பேரையும் நான் இங்கே குறிப்பிட்டு நலம் விசாரித்தால் பேர்கள் தான் இங்கே பெரிய விஷயமாக இருக்கும். நான் சொல்ல வரும் விஷயத்திற்கு இடமிருக்காது. அதனால் நான் பொதுவாக விசாரித்து விட்டேன்.

எனக்கு இங்கே ஒரு பெரிய குழப்பமே இருக்கு தோழிகளே. யாரை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. நம்ம கிட்ட பேசுறவங்க பெரியவங்களா? சின்னவங்களான்னு கூட தெரியல. நமக்கு தெரியாமலே கூட நாம சின்னவங்கள அக்கான்னு கூப்பிடுவோம், பெரியவங்கள பேர் சொல்லி கூப்பிடுவோம். இது எனக்கு ஒரு சங்கடமாவே இருக்கு. நாம எல்லா தோழிகளையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது நாம இவங்களயா இப்படி அழைச்சோம்னு ஒரு குற்ற உணர்ச்சியும் வந்துடும். அதற்காக எனக்கு மேடம்னு அழைக்கணும் துளி கூட விருப்பம் இல்லை. நான் அறுசுவை தளத்தை ஒரு குடும்பமாகத் தான் நினைக்கிறேன். அதில் மேடம்னு கூப்பிட்டா ஒரு அன்னியோன்னியம் இல்லாம ஒரு அந்நியம் வந்திடும்னு நினைக்கிறேன். நம்முடைய அட்மின் அவர்களையே நாம் பாசத்துடன் அண்ணா என்று தானே அழைக்கிறோம். அதனால் தோழிகளே என்னுடைய இந்த குழப்பத்திற்க்கு ஒரு தீர்வு கொடுங்கள்.

அட்மின் அண்ணா ! இதற்கு ஒரு தனி இழையான்னு கேக்காதீங்க. இது என்னுடைய மிகப்பெரிய குழப்பம், இதை எல்லோரும் சேர்ந்தால் தீர்த்து வைக்கலாம். அதனால் ஒரு தனி இழையாக போட்டேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

மோகனா-மாமி
செந்தமிழ் செல்வி-செல்வி அக்கா
சீதா லெட்சுமி-சீதா அம்மா
இமா-இமா(மட்டுமே)
வனிதா-அக்கா
பாபு-அண்ணா
செண்பகா-செண்பகா(மேடம் சொன்னா பிடிக்காது)
சேக் முகைதீன் - அண்ணா
செபா-அம்மா
ஜெயந்தி- மாமி

இப்படி தான் கூப்பிடணும் ஆசைபடுறேன். சிலரை அப்படி தான் கூப்பிடுறேன்.
நீங்கள் சொல்வது போல் இன்னும் சிலரை எப்படி கூப்பிட என தெரியவில்லை. வயது மூத்தவர்கள் என அறிந்த பின் பேர் சொல்லி அழைத்துவிட்டோமே என சங்கடமாக இருக்கும்:(

மேட்டருக்கு வரேன். என்னை மேடம் என்று சொன்னால் பிடிக்காது. பேர் சொல்லி அழைப்பது மட்டுமே பிடிக்கும். வயது மூத்தவர்களூம் சரி,இளையவர்களும் சரி.

அக்கா,மேடம் என்று கூப்பிட வேண்டாம் தயவுசெய்து:)

(இப்படி தானே மத்தவங்களுக்கு இருக்கும்?)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கல்பனா..

யாராக இருந்தாலும் பெயர் சொல்லிதான் நான் அழைத்துக் கொண்டுள்ளேன். பெயர் கூறியும் அவர் மேல் நமக்குள்ள மரியாதையை காட்டலாம். நேரில் பார்க்கும் போது எப்படி அழைக்கனும் என்று தோன்றுகிறதோ அப்படி அழைக்க வேண்டியது தான். அக்கா அம்மா என்பதெல்லாம் பாசத்தில் அன்யோனியத்தில் அழைக்கும் ஒன்று. நேரில் பார்த்தால் மட்டுமே டிசைட் செய்ய முடியும். பெயரிலேயே அழைக்கலாம் என்பது என் சாய்ஸ்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

எனக்கு என்னை பெயர் சொல்லி கூப்பிடுவது தான் பிடிக்கும். அக்கா,மேடம் என்பன போன்றவை தோழிகள் என்ற அன்னியோன்யம் இருக்காது. ஆனால் மத்தவங்க தப்பா எடுக்க கூடாதுன்னு தான் சிலரை அக்கானு கூப்பிடறேன். நேரில் பார்த்தால் தான் டிசைட் செய்ய முடியும். உண்மையான் தோழிகளிடம் தான் எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ள முடியும். நான் அறுசுவையில் உள்ள அனைவரையும் எனது நண்பர்களாகவே நினைக்கிறேன். ரம்யா சொல்வது போல் பெயரிலேயே அழைக்கலாம் என்பது என் சாய்ஸ். ஐடியா இதற்குனு ஒரு பட்டி மன்றம் அமைக்கலாமா? :-)

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

;)

‍- இமா க்றிஸ்


அமினாவின் பட்டில கலந்துண்டா ஆத்துல ரெண்டும் தோலை உரிச்சுடுவ்வேங்கறுதுகள்.
ஏன்னா ஒருத்தி பிஸ்னஸ் பண்றா!
இன்னொருத்தி வேலைக்கு போறா!.
எப்போ பட்டி பாத்திமா ?

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மோகனா மாமி நீங்களே நல்ல முகூர்த்தம் பார்த்து சொல்லுங்கோ உடனே ஆரம்பிச்சுடலாம்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.


அன்னைக்கு நாள் சுபிஷ்ஷம்மாருக்கு அன்னைலேந்து வெச்சுக்கலாமோல்யோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஆமினா... தலையை காட்டுங்க... ஒரு குட்டு வைக்கணும். இமா வெறும் இமா, அவங்க பொண்ணு வயசு எனக்கு, நான் அக்கா'வா???!!! :(

வனி'கு பாபு அண்ணா மட்டுமே இங்க அண்ணா. செபா ஆன்ட்டி மட்டுமே ஆன்ட்டி.

மற்றவர் எல்லாம் தோழமைகளே.... அதனால் எல்லாரையும் பெயர் சொல்லி மட்டுமே அழைப்பேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பெயர் சொல்லி அழைப்பது தான் சிறந்தது..ஒருவரிலிருந்து மற்றொருவரை அடையாளப்படுத்தி காட்டுவதற்கு தான் பெயர்.பெயர் சொல்வது தான் மரியாதையும் கூட..சொல்ல போனால் அப்பா அம்மாவை கூட பெயர் சொல்லி கூப்பிடலாமாம்..அப்படியிருக்க ஊர் பேர் தெரியாத தோழிகளை நிச்சயம் பெயர் சொல்லி அழைக்கலாம்

அக்கா!
நான் யாரையெல்லாம் முறை வைத்து கூப்பிடுவேன் என்பதை அங்கே குறிப்பிட்டேன். இன்று இமாவை பற்றி எல்லோரும் பேசியதால் இமா முன்பு ஒரு பதிவில் சொன்னது போல் 'இமா மட்டும்' என குறிபிட்டேன். மற்றபடி ஒன்றும் இல்லை.வீட்டில் உங்களை பெயர் சொல்லி அழைத்துபார்த்தேன். நல்லாவே இல்லை.அதனால் தான் தொடர்ந்து அப்படி கூப்பிடுகிறேன்:)

ஏன் தான் இதுல பதிவு போட்டேன்னு இருக்கு. ஏன் என் பெயர் எழுதுல என 10க்கும் அதிகமான மெயில் வந்துவிட்டது:(

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்