சமிபத்தில் ரசித்தவை

பிரபலமான ஆட்டோ வாசகங்கள்:
நான் சென்னை சென்ற போது ஆட்டோக்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் என்னை மிகவும் கவர்ந்தது.

தமிழகமெங்கும் ஓடுகிற ஆட்டோக்களிடம் லைசென்ஸ் இருக்கிறதோ என்னவோ கண்டிப்பாக அதன் பின்னால் நல்ல வாசகங்கள் இருக்கும். கொஞ்சம்
சுவாரஸ்யமாக இருக்கும்.கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.

நான் பார்த்த சில வாசகங்கள்:

சீறும் பாம்பை நம்பு...
சிரிக்கும் பென்னை நம்பாதே...

வீட்டிற்க்கு ஒரு மரம் வளர்ப்போம்..

நாம் இருவர்.. நமக்கு ஒருவர்..

பெண்ணின் திருமண வயது 21
இன்னும் பல வாசித்தேன் ஞாபகம் வரும்போது வந்து பதிவு போடுகின்றேன்.

நீங்கள் பார்த்த கேட்ட வாசகங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு ப்யூட்டி பார்லர் முகப்பில் போட்டிருந்ததாக..
வாலிபர்களே! இங்கேயிருந்து போற ஃபிகர்களை சைட் அடிக்காதீங்க..
அது உங்க பாட்டியாகூட இருக்கலாம்
ஆஷிக்

கருவறை முதல் கல்லறை வரை சில்லறை வேண்டும்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

லாரிக்குப் பின்னால் கண்ட வாசகம்

"என்னை முத்தமிடாதே
பிறகு ரத்தம் விடாதே"

சாதல் சாதாரணம்
காதல் சதா ரணம்..

'சாகசம் செய்யுமிடம் சாலையல்ல
மெதுவாய் செல்பவன் கோழையல்ல'

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஒரு எதிரி நண்பனாவதற்கு ஆயிரம் வாய்ப்புகள் கொடுங்கள்! ஒரு நண்பன் எதிரி ஆவதற்கு ஒரு வாய்ப்பைக்கூட வழங்காதீர்கள்!!

அன்புடன்,
இஷானி


அறுசுவையில் நான் ரசித்தவை!
அன்பே சிவம் - கவிதா

வாழ்க வளமுடன் _ பிரபாதாமு

நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும். - ஆமினா

சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன் - பவித்ரா

எண்ணம் போல் வாழ்க்கை - கவிதா

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம் -யோகராணி

துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!! - வனிதா

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் மரணம் உன்னை விட்டு விலகி நிற்கும் - ரம்யா

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


அன்பே சிவம் என்ற நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும் என்றும் வாழ்க வளமுடன்.

சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதனே உன் எண்ணம் போல் வாழ்க்கை

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம் என
துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!!

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் மரணம் உன்னை விட்டு விலகி நிற்கும்

அதனால சிரியுங்கோ!சிரியுங்கோ! சிரிச்சிண்டேருங்கோ!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...


உள்ளம் இனிதானால் உலகமே இனிதாகும்

எண்ணம் அழகானால் எல்லாமே அழகாகும்.

இது VRDCC BANKல் படிச்சது!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

ஒரே பீட்டர் விடரேன்னு நினைக்காதீங்க... நான் ரசித்த english quotes தான் கொடுத்திருக்கேன்...இதெல்லாம் நான் என்னோட வெவ்வேறு mail signature-ல use பண்ற quotes... இதுக்கு நெறயா பேத்துகிட்ட இருந்து பாராட்டுக்கலும் கிடைச்சிருக்கு...

I never think of the future - it comes soon enough.

Never take life seriously. Nobody gets out alive anyway.

The best time to plant a tree was 20 years ago. The second best time is now.

Don't worry about the world coming to an end today. It is already tomorrow in Australia.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே...
நிம்மதியாக வாழ முயற்சி செய்...
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.
Saranya SangeethKumar :)

\\\உ
அறுசுவையில் நான் ரசித்தவை!
அன்பே சிவம் - கவிதா

வாழ்க வளமுடன் _ பிரபாதாமு

நல்லதையே நினைத்தால் நல்லதே நடக்கும். - ஆமினா

சுடும் வரை நெருப்பு, சுற்றும் வரை பூமி், போராடும் வரை மனிதன் - பவித்ரா

எண்ணம் போல் வாழ்க்கை - கவிதா

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அறிவாளிக்கு சொல்லே ஆயுதம் -யோகராணி

துணிந்தவர் தோற்றதில்லை!!தயங்கியவர் வென்றதில்லை!! - வனிதா

நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் மரணம் உன்னை விட்டு விலகி நிற்கும் - ரம்யா//

இதுல எங்க மாமி நான்?????????

என்னை மறந்துட்டேளா....

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

அறுசுவை ப்ரொஃபைல் பேஜ்ல வர்ற நிறைய வாசகங்கள் ரசிக்கிற மாதிரி இருக்கும்.

சில சமயம் குமுதம், அவள் விகடன், குங்குமம் இப்படியெல்லாம் கூட வரும். பிடித்த வாசகம் ங்கிறதை கொஞ்சம் தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களோன்னு தோணும். வாசகம் ங்கிறதை வாசிப்பது ன்னு எடுத்துக்கிட்டு சிலர் அப்படி கொடுத்திருப்பாங்க..

இன்னும் சில வாசகங்கள், ஜாஸ்மின், முல்லை, ரோஸ் இப்படியெல்லாம் இருக்கும். என்னடா இதுன்னு யோசிச்சா அப்புறம்தான் தெரிய வந்துச்சு, வாசகத்தை 'வாசம்' னு படிச்சிருக்காங்கன்னு. ஒருத்தர் பிரியாணி ஸ்மெல் னு தெளிவா கொடுத்திருக்காரு.. :-)

இதுகூட பரவாயில்லை. நிறைய பேரு மாருதி, ஸ்கூட்டி பெப், ஸுசுகி ன்னு எல்லாம் கொடுத்திருக்காங்க.. அது வேற ஒண்ணுமில்லை. வாசகம் ங்கிறதை வாகனம் னு படிச்சிட்டதால வந்த பிழை.. :-)

நான் ரசிச்சதில சில 'வாசகங்கள்' -

'தனக்கு உதவியதை மறக்காதே, தான் உதவியதை நினைக்காதே'

'நீ இப்படி இருக்க நீ காரணம் இல்லை, நீ இப்படியே இருக்க நீயே காரணம்'

'Helping Hands are better than Praying Lips'

பயமுறுத்திய வாசகம் -

'trust in god and keep the gun powder ready'

(இது போருக்காக சொன்ன வாசகமில்லையா..!! keep your gun powder dry..)

புன்னகைக்க வைத்த வாசகம் -

"nan samaikatha samayal samayalalla" :-)

- இன்னும் வரும்

மேலும் சில பதிவுகள்