பாத்திமா கொஞ்சம் வாங்க பிளீஸ்

ஹாய் பாத்திமா நான் மஞ்சு,நீங்கதான் முதல் முதலில் வீட்டிலிருந்தே வேலைவாய்ப்பு பற்றி கேட்டு இருந்தீங்க,அருள்மேரிங்கறவங்க MT பற்றி சொல்லி இருந்தாங்கல்ல,நீங்க MT படிக்கிறீங்கலா ஃபாத்திமா?நீங்க MT படிக்கிறீங்கன்னா எனக்கு பதில் சொல்ல முடியும்னு நினைக்கிறேன்,நான் துபாயில் இருக்கேன்,நான் இந்தியா போயிதான் MT படிக்கனும்.இன்னும் 1 வருஷம் ஆகும்,எனக்கு நெட்ல இருந்து பிரீ டுட்டோரியல்ஸ் கிடைச்சிருக்கு

அதுல மெடிக்கல் Suffix,prefix அப்படின்னு எல்லாம் இருக்கு,அதை எப்படி படிக்கனும் அதாவது அதை மனப்பாடம் பண்ணிக்கணுமா?இல்லை Transcription பண்ணும்போது டைப் பண்ணுறதுக்கு அதை தெரிஞ்சிக்கணுமா?எப்படி படிக்கனும்.பிளீஸ் சொல்ல முடியுமா?நான் அருள்மேரியை நிறைய தடவை மெயில் அனுப்பி கேட்டு பார்த்துட்டேன் .ஆனால் அவங்க பதில் அனுப்ப மாட்டேங்குறாங்க.அவங்க கிட்ட இருந்து 1 Reply ம் இல்லை.நீங்க MT படிக்கலைன்னாலும் வேறு யாராவது படித்தாங்கன்னா இதை பற்றி சொல்லுரீங்களா?பிளீஸ் சீக்கிரமா சொல்லுங்க

உங்க பெயர் மஞ்சு'வா? குட்டிரேயம்மா'வா? குழப்புறீங்களே!!

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனிதா எப்படி இருக்கீங்க?நான் மஞ்சு தான்.குட்டி ரேயம்மாவுக்கு நான் கர்ப்பிணி பகுதியில் பார்வேர்ட்(Forwaard)பண்ணி விட்டேன் அவ்வளவுதான்.ஃபாத்திமா எப்ப பதில் சொல்லுவாங்க?

ஹாய் மஞ்சு எப்படி இருக்கீங்கப்பா?

ஸாரி நேற்று என்னால ஆன்லைன் வர முடியலை. மன்னிக்கவும். அருள் மேரி அவங்க கைகுழந்தையை பாத்துக்கனும். சில நாட்களுக்கு முன் நமது அறுசுவை தோழிகளில் ஒருவர் அருள்மேரி யால் இன்னும் ஒரு மாதத்திற்கு அறுசுவை பக்கம் வரமுடியாது அவங்க வீட்டிற்கு ப்ரான்ஸ்ல இருந்து கெஸ்ட் வராங்கனு போட்டு இருந்தாங்கப்பா.

நான் இங்க மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரிப்ஷன் பண்ணலாம்னு ஒரு பயிற்சி நிறுவனத்தை அணுகினேன். அவர்கள் மாதம் 15000 வீதம் 6 மாதம் நல்ல பயிற்சி அளிப்பதாக கூறினார்கள். பாவம் என் ஹஸ்புக்கு மாதம் வருமானம் அதையும் விட கம்மி. அப்புறம் நான் என்ன பண்ணுவேன் வேறு ஒரு கம்பெனியை அணுகினேன். ஆனால் அவர்கள் 3000திற்கு சொல்லி தருவதாகவும். ஆனால் 1 வருடம் அவர்கள் கம்பெனியில் தான் வேலை என்றும் கூருகின்றனர். அத்னால் அந்த திட்டத்தை கை விட்டுட்டேன்.
MT ஆன்லைன் கோர்ஸ் விலை அதை விட அதிதிதிதிகம். நம்ம பட்ஜெட்க்கு அதெல்லாம் ஒத்து வராதுன்னு விட்டுட்டேன்.
நீங்க சென்னை வந்து கற்றுகொள்வதாக இருந்தாலும் நல்ல கம்பெனியாக பார்த்து சேருங்கள்.

//மெடிக்கல் Suffix,prefix அப்படின்னு எல்லாம் இருக்கு,அதை எப்படி படிக்கனும் அதாவது அதை மனப்பாடம் பண்ணிக்கணுமா?இல்லை Tரன்ச்cரிப்டிஒன் பண்ணும்போது டைப் பண்ணுறதுக்கு அதை தெரிஞ்சிக்கணுமா?//

இப்ப நீங்க எதையும் போட்டு குழப்பிக்க வேண்டாம். என்க்கும் அதை பற்றி சரியாக தெரிய வில்லை. நீங்கள் பயிற்சி பெரும் நிறுவனத்திடம் தெளிவாக கேட்டு கொள்ளுங்கள். எதையுமே ப்ராக்டிகலாக செய்து பார்க்கும் போது தான் பல சந்தேகங்கள் எழும். அப்போது தெளிவு படுத்தினால் தான் நம் மனதில் ஆழமாக பதியும். "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்".

நான் முன்பே சொன்னது போல் என் வீட்டில் ஒரு pc தான் உள்ள்து. என் கணவர் வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் வேலை செய்யுறாங்க. அதனால் அவங்க pc உபயோகிக்காத நேரத்தில் தான் நான் computer யூஸ் பண்ணமுடியும். அதுவும் நான் இந்த ப்ளானை கைவிட ஒரு காரணம்.

நான் இப்போது வீட்டில் இருந்த படியே டியூஷன் எடுக்கிறேன். எனக்கு தையல் ஒரளவு தெரியும். இங்கு ஒரு சுடிதார் தைக்க கூட 70, 80 கேக்குறாங்கப்பா. பண்டிகை காலம் வரும் முன் கொஞ்சம் நன்றாக கற்று கொண்டால் அதுவும் ஒரளவிற்கு கை கொடுக்கும் என நம்புகிறேன். அதற்கான் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். அதனால் தான் சில நேரம் அறுசுவை பக்கம் வர முடியவில்லை.

எனக்கு இந்த ஐடியாக்களை கொடுத்த அறுசுவை தோழிகள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.

உங்களுக்கு வேறேதும் விபரம் தேவைபட்டால் சொல்லுங்கள். எனக்கு தெரிந்ததை சொல்லுகிறேன்.

நமது அறுசுவையில் பல வற்றிலும் திறமை வாய்ந்தவர்கள் இருக்காங்கப்பா. நீங்க மெடிக்கல் ட்ரான்ஸ்க்ரீப்ஷன் என்று தலைப்பை மாற்றி பாருங்க. அது விஷயமா தெரிந்தவர்கள் பதில் அளிக்க சுலபமாக இருக்கும். உங்களுக்கும் விபரங்கள் தெரிய வாய்ப்பு இருக்குது. இது விஷயமா புதுசா கேள்வி கேட்பவர்களுக்கும் இந்த பகுதி பயனுள்ள்தாக இருக்கும்.
//பாத்திமா கொஞ்சம் வாங்க பிளீஸ்// இந்த தலைப்பில் இருப்பதால் நீங்களும் நானும் மட்டும் தான் பெரும்பாலும் பேசிக்கற மாதிரி இருக்கும். அதுக்கு தான் சொல்லுறேன். தப்பா எடுத்துக்காதிங்க. நம்ம ஒரு தலைப்பு ஆரம்பித்தா அது மத்தவங்களுக்கும் தகவல் அளிக்க் கூடியதாக இருந்தால் தானே நமக்கு சந்தோஷம்.

உங்களது MT பயிற்சி சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஹாய் பாத்திமா எப்படி இருக்கிங்க?உங்க பதிலுக்கு நன்றி
எனக்கு 1 புரியலை நீங்க 1 கம்பெனி 3000ல படிக்கலாம்,ஆனால் எங்க கம்பனியில் தான் வேலை அப்படின்னு சொன்னதுக்கு எதுக்காக ஒத்துக்கலை,அவங்களே வேலை குடுத்தா நல்லதுதானே?எதுக்காக அந்த முயற்ச்சியை கைவிட்டுட்டீங்க?தேவா அவர்கள் 1 Acoustic company வெப்சைட் அட்ரஸ் குடுத்து இருந்தாங்க,இது கோவையில் இருக்கிற சென்ட்டர் ஆன்லைனில் படிப்பதற்கு நினைக்கிறேன்,இது ஆன்லைனில் படிப்பதற்கு மொத்த செலவு 6000ரூபாய்,அவர்களே ஆன்லைனில் இண்டர்வியூ வைத்து வேலை குடுப்பார்கள் அப்படின்னு சொன்னார்கள்,இது எந்த அளவுக்கு நம்பகமானதுன்னு இந்தியா போய்தான் செக்கப் பண்ணனும்.Anyway Thanks for Ur Information

ஹாய் மஞ்சு நீங்க கேக்குறது சரி தான். ஆனால் நீங்க நினைக்கிற மாதிரி அது அவவள்வு சுலபம் இல்ல. அதாவது ட்ரெயினிங் முடிந்த பிறடு ஒரு வருடம் நாம் அவங்க மாதம் 2000 மட்டும் பே செய்தாலும் வேலைக்கு போய்தான் ஆகனும். அதற்கு முன்னாடியே அக்ரிமென்ட் சைன் வாங்கிடுவாங்க. இன்னும் சில கம்பெனிகளில் நைட் ஷிப்ட் அங்கு வந்து செய்ய சொல்லுவாங்க. இன்னும் பல சிக்கல்கள் இருக்கு. நான் திருமனத்திற்கு முன் BPO கம்பெனியில் வொர்க் செய்தேன். அதனால் அங்கு பழகிய என் தோழிகள் பலர் இந்த சிக்கலில் இன்னும் உள்ளனர். சிலருக்கு நைட் ஷிப்ட் பிரச்சனையால் திருமனம் தள்ளி போகும். கம்பெனி காரர்கள் அவர்களது அக்ரிமென்ட் படி ஒரு வருடம் கழித்து தான் நாம் எதையும் திட்டமிட முடியும். என் கணவருக்கு அதில் விருப்பமில்லை

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

ஹாய் ஃபாத்திமா எப்படி இருக்கீங்க?உங்க கருத்துக்களை தெரிவிச்சதுக்கு ரொம்ப நன்றி,நான் துபாயில் இருக்கேன்,இங்க இப்ப ரம்ஜான் மாதம் தொடங்கப்போகிறது,இங்கே ஒரே கொண்டாட்டம் தான் எங்கே பார்த்தாலும்,எல்லா மால்களிலேயும் Special Offer, தான்.உங்க வீட்டில் எப்படி?
அப்பறம் நான் விருதுநகர் பக்கம்,எங்க ஊரில் MT டிரெயிங்க் சென்ட்டர் எல்லாம் இல்லை,அதனால் நான் ஆன்லைனில் தான் MT படிக்கணும்,நீங்க அருள்மேரி கிட்ட பேசுனீங்கன்னா Medical Suffix,preffix எப்படி படிக்கணும்,அது MTல எப்படி யூஸ் பண்ணனும்னு மட்டும் கேட்டு சொல்லுங்க பிளீஸ்

மேலும் சில பதிவுகள்