கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

ஒன்பது காசுகளில் எட்டு காசுகள் ஒரே எடை என்றால் ,எட்டும் ஒரே மாதிரி தான் இருக்கும் ,ஒன்று மட்டும் வேறு மாதிரி இருக்கும் ,அதை வைத்து கண்டு பிடித்து விடுவேன் .எப்படி ....இது நம்மிடம் புழக்கத்தில் இருக்கும் காசுகளுக்கு மிக பொருந்தும்.இல்லை என்றால் தான் யோசிக்கணும் ....

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

.... கலகிடிங்க பா ரூபி தினேஷ்

பாரதி தேங்க்ஸ் பா reply பணத்துக்கு ஆனா விடை தப்பு

என் ஃப்ர‌ண்டுக்கு பிடிக்காத‌ ப‌ச்சைக‌ல‌ர் ச‌ட்டை
என‌க்கு ரொம்ப‌ பிடிச்சிருக்கு...
என‌க்கு பிடிச்ச‌ சிக‌ப்பு க‌ல‌ர் ச‌ட்டை
என் ஃப்ர‌ண்டுக்கு பிடிக்க‌லை. ஏன்?

Life

ஏன்னா உங்க friend உங்களை விட ரொம்ப ஒல்லி...........

சரியா.....

God bless us.

அவங்களுக்கு இரண்டு கலரும் அலர்ஜியா?

உங்களுக்கு பச்சை, சிகப்பு கலர் பிடிக்கும்
அவங்களுக்கு இரண்டு கலரும் பிடிக்காது

எதிர்பார்த்தால்தானே எமாற்றம்

எனக்கும் ஷாந்தியோட யோசனை தான் சரி என்று படுகிறது ..அப்புறம் இன்னொரு யோசனையும் தோன்றுகிறது ..உங்கள் தோழி கண் பார்வை அற்றவராக கூட இருக்கலாம் என்று தான் .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

சுரேஷ் வெகு மும்முரமாக முகச் சவரம் செய்துகொண்டிருந்தான்.{அதாங்க……. ஷேவிங்}

சுரேஷின் அம்மா அவனிடம் இந்த மாலை வேளையில் எங்கேப்பா கிளம்பிவிட்டாய்.அதுவும் முகச் சவரமெல்லாம் செய்துகொண்டு அலங்காரமாகக் கிளம்புகிறாய்? என்று கேட்டாள்.

சுரேஷின் அப்பாவும் அதைக் கேட்டபடியே அங்கே வந்தார்.

சுரேஷ் இருவரையும் பார்த்துச் சிரித்தபடி, “ ஒன்றும் இல்லை. ஒரு முக்கியமான வேலையாகப் போகின்றேன்.விபரம் காலையில் வந்து சொல்லுகின்றேன்” என்றபடி சிளம்பிச் சென்றான்.

இரவு கழிந்தது. காலை விடிந்தது.
சுரேஷ் திரும்பி வீட்டுக்கு வந்தான்.

முகச் சவரம் நன்றாகச் செய்துகொண்டு கிளம்பிப்போன அவன் இரவு கழிந்து காலையில் வரும்போது நன்றாக வளர்ந்த தாடியுடன் வந்தான்.

அவனது அப்பா அம்மாவும் அதைப் பற்றிக் கவலையே படாமல் இருந்தார்கள்.

நண்பர்களே…..மாலையில் சவரம் செய்துகொண்டு புறப்பட்ட சுரேஷ் இரவு முடிந்து காலையில் வரும்போது எப்படி தாடியுடன் வந்தான்.???????????????

எங்கே உங்கள் சிந்தனையைத் தட்டியெழுப்புங்கள் பார்க்கலாம்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

இரவு கழிந்து காலை என்று சொன்னான் ,ஆனால் அது அடுத்த நாள் காலை என்று சொல்லவில்லையே,வெறும் காலை வந்து சொல்கிறேன் என்று தானே சொல்லி இருந்தான்,எனவே அது அடுத்த வாரம் ,அல்லது பிந்தைய நாட்களின் காலையாக கூட இருக்கும்.எனவே அப்போது தாடி வளர்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லையே .சரி தானே தோழி யோகராணி

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

பாரதி,உங்கள் பதில் கேள்விக்குப் பொருந்தினாலும் நான் நினைத்து எழுதியதின் பதில் அதல்ல.
சரி நானே சொல்லிவிடுகின்றேன்.

சம்பவம் நடைபெற்ற இடம் அலஸ்கா.
அங்கே வருடத்துக்கு ஒருமுறை 40 நாட்களூகு இரவாகவே இருக்கும்.
அந்த இரவு தொடங்கும் சமயத்தில் வெளியில் சென்றவன்தான் அவன். விடிந்ததும் வந்தான் என்றால் அவன் வந்தது 40 நாட்கள் கழித்துதான்.

சரி இதற்கு பதில் சொல்லுங்கள்

ஒரு லாரியின் டயர் தரையில் கிடந்தது.
திடீரென்று பெரும் மழை பெய்யத் தொடங்கியது.
அந்த இடம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து ஒரு நிமிடத்துக்கு ஒரு அங்குலம் வீதம் நீர் மட்டம் உயரத் தொடங்கியது.

கீழே கிடந்த டயரின் உயரம் பத்து அங்குலம்.
டயரையும் நீர் சூழ்ந்தது.

இப்போது உங்களுக்கு ஒரு எளிய கணக்குப் புதிர்.
நீர் மட்டம் அந்த டயரை முழுவதுமாக மூழ்கடிக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்.?????
கூறுங்களேன்.
இது உங்களுக்கு ஒரு எளிய கணக்குப் புதிர்.
நீர் மட்டம் அந்த டயரை முழுவதுமாக மூழ்கடிக்க எத்தனை நிமிடங்கள் ஆகும்.?????
கூறுங்களேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்