கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

டயர் தண்ணீர்ல மிதக்கும் மூள்காது
விடை சரியா?? யோகராணி
பொன்னி

அது தான் நானும் நினைச்சுட்டு இருந்தேன். ஹிஹிஹிஹிஹி

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

சரியான பதில் பொன்னி,
புதிர் கொஞ்சம் சுலபமாகப் போய் விட்டதோ,
சரி இதற்க்கு கூறுங்கள்;

ஒரு ஊரில் ஒருவனுக்கு பறவைகள் பேசும் மொழியைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருந்தது.வெகு தொலைவில் இருந்த தனது அத்தை ஊருக்கு ஒரு வேலையாக தனது மனைவியை அழைத்துச் செல்லாமல் தான் மட்டும் போனான்.
வந்த வேலை முடிந்ததும், அப்படியே அத்தையின் வீட்டுக்கும் போனான். எதிர்பாராமல் வந்த மருமகனைக் கண்டதும் மகிழ்ந்த அத்தை, மருமகனை உபசரித்து, விருந்து வைத்தாள். பிறகு அவன் தனது ஊருக்குப் புறப்பட்டான். அவனிடம், நிறைய பலகாரங்கள் செய்து, ஒரு பெரிய குடத்தில் வைத்துக் கொடுத்து, " மருமகனே...இதில் நிறைய பலகாரங்கள் உள்ளன.போகும் வழியில் சாப்பிட்டுக்கொள். மீதம் உள்ளதை எனது மகளுக்கும் கொண்டுபோய் கொடு" என்று கூறி அனுப்பினார்கள்.
அவனும் நடக்க ஆரம்பித்தான் . மதிய வேளையில் சூரியனின் வெப்பம் தாளாமல், ஒரு குளத்தின் அருகே இருந்த பெரிய ஆலமரத்தின் அடியில் குடத்தை இறக்கி வைத்துவிட்டு, குளத்தில் நீராடி , குடத்தைத் திறந்து, பலகாரங்களை வேண்டிய மட்டும் சாப்பிட்டான். பிறகு களைப்பு நீங்க அங்கேயே படுத்து ஒரு உறக்கமும் போட்டான். மாலைப் பொழுதானதும், எழுந்தான். குடத்தின் மூடியை எடுத்து குடத்தை இறுக மூடினான். தலையில் தூக்கிக்கொண்டு ஊரை நோக்கி புறப்பட்டான்.....அப்போது அந்த மரத்தில் இருந்த இரண்டு பறவைகள், அவனைப் பார்த்தன. " இவன் வழியில் மறுபடியும் தங்கினால் இவன் உயிர் போய்விடும்....வழியில் தங்காமல் வீட்டுக்குப் போனால் இவனது மனைவியின் உயிர் போய்விடும்" என்று கூறிவிட்டுப் பறந்து போயின.
பறவைகள் பேசியதன் பொருளை உணர்ந்த அவன் மிகுந்த குழப்பம் அடைந்தான். தான் வழியில் தங்கினால் தனது உயிர் போய்விடும்..தங்காமல் வீட்டுக்குப் போனால் தனது அன்பு மனைவி இறந்துவிடுவாள். என்ன செய்வதென்றே புரியவில்லை. அதனால் அவன் வீட்டுக்குப் போக மனதில்லாமல் , தனது ஊருக்கு அடுத்த ஊரில் இருந்த ஒரு அறிஞரின் வீட்டுக்குப் போனான்.அந்த அறிஞர் இதற்கு ஏதாவது நல்ல வழி காட்டுவார் என்று நினைத்தான்.
அறிஞரிடம் சென்று விபரத்தைக் கூறினான். கொஞ்ச நேரம் சிந்தித்த அவர் அவனிடம் சில கேள்விகளைக் கேட்டார். அவனும் பதில் கூறினான்
கவலைப்படாதே என்று கூறிய அறிஞர் சில காரியங்களைச் செய்து அவனை அந்த ஆபத்தில் இருந்து காப்பாற்றினார்.

அறிஞர் என்ன செய்திருப்பார்?????

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அறிஞர் அவனிடம் குடத்தில் என்ன வெய்த்திருக்கிறாய் , என்று கேட்டிருப்பார். அவன் கூறி இருப்பான். அதற்க்கு அறிஞர் “ நீ மரத்தடியில் குடத்தை வைத்துவிட்டு உறங்கும் பொழுது ஒரு பாம்பு அந்த குடத்துக்குள் சென்றிருக்கிரது.அந்த குடத்தை நீ வழியில் திறந்தால், அந்த பாம்பு உன்னைக்கொத்திவிடும், உன் உயிர் போய் விடும்.அப்படி குடத்தை திறக்காமல் கொண்டுபோனால் ,வீட்டிற்க்கு போனவுடன் குடத்தை உன் மனைவி திறப்பாள், அப்பொழுது உள்ளே இருக்கும் பாம்பு உன் மனைவியைக்கொத்தி அவள் இரந்து விடுவாள் “என்று சொல்லி இருப்பார்.
எனவே அந்த குடத்தை அருகில் இருக்கும் ஒரு கேணியில் போட்டுவிட்டு செல்லுமாரு சொல்லி இருப்பார்..

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

அனிதா மிகச் சரியான விடையத் தந்துள்ளார். மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறேன். சரி அடுத்த புதிருக்குப் போவோம்.

ராமுவும் சோமுவும் இரட்டையர்கள்.இருவரும் ஐந்தாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தார்கள். எப்போது பார்த்தாலும் இருவருக்குள்ளும் சண்டை சச்சரவுதான்.ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.. இவர்களது அன்னைக்கு இவர்களின் பிர்ச்சினையைத் தீர்த்துவைக்கவே நேரம் போதாது....அன்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறைநாள்.அது போதாதா. லூட்டி அடித்துக்கொண்டு, ஒரே களேபரம்தான். இவர்களது தொல்லை பொறுக்கமாட்டாத அம்மா, கொஞ்ச நேரத்துக்காவது அமைதியாக இருங்கள் என்று கோபமாகப் பேசி, ஒரு செய்தித்தாளை விரித்து, அதன்மேல் இருவரையும் நிற்க வைத்தார்கள். எந்தக் காரணம் கொண்டும், ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்று கட்டளை இட்டார்கள்.நீங்கள் நினைத்தாலும் கூட உங்களால் தொட்டுக்கொள்ள முடியாது.மீறினால் பிரம்படிதான் என்று ஒரு பிரம்பை எடுத்து பக்கத்தில் வைத்துக்கொண்டு, சமையல் வேலைகளை ஆரம்பித்தார்.
நண்பர்களே.....ஒரு செய்தித்தாளின்மேல் இருவரையும் நிற்க வைத்து, தொடக்கூடாது...தொடவும் இயலாது என்று கூறினார்களே....இது சாத்தியமா?
அவர்கள் செய்தித் தாளின்மேல் எந்த விதமாக நிற்க வைத்திருப்பார்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

ஒரு வேளை தலைக்கீழாக நிற்க சொன்னார்களோ?? :)

இல்லை என்றால் இப்படி இருக்கும். செய்தி தாளை விரித்து தானே நிற்க வைத்தார். தாளின் ஒரு மூலையில் ஒரு பையனையும் அதற்க்கு எதிர் மூலையில் இன்னொருவனையும் நிற்க்கவைதிருப்பார். சிறு குழந்தைகளின் கை அவ்வளவு தூரம் எட்ட முடியாதல்லவா??

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

visit www.tamilnewspaper.net to read all the magazins

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
என்றும் அன்புடன்
ஜெயஸ்ரீ

ஒரு வேளை கையை கட்டி நிற்க வைத்திருப்பார்களோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!11111
இல்லை
எதிர் எதிர் முனை பார்த்து நிற்க வைத்திருப்பார்களோ

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

அந்த பேப்பரை இரண்டாக கிழித்து நிற்க வைத்திருப்பாரோ.தனித்தனியாக..சரியா ..
தெரியலையே. தப்பாருந்தா அடிக்காதிங்க நான் ஓடிப்போயிடுறேன்..

வாழு, வாழவிடு..

இருவரையும் பின்னால் நிற்க வைத்திருப்பார் .இருவர் முதுகும் கொஞ்சம் தள்ளி இருக்குமாறு நிர்க்கவைதால் இருவராலும் தொட முடியாது
.T மாதிரி

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

மேலும் சில பதிவுகள்