கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

கையை கட்டி நிற்க வைத்திருப்பார்களோ, அல்லது எதிர் எதிர் முனை பார்த்து நிற்க வைத்திருப்பார்களோ என்று அனித்தாவும், தலைகீழாக நிற்க வைப்பார்கள் என்று லாவண்யாவும் பேப்பரை இரண்டாக கிழித்து நிற்க வைத்திருப்பாரோ என்று ருச்சனாவும், இருவரையும் பின்னால் முதுகும் முதுகும் பார்த்தபடி நிற்க வைத்திருப்பார் என்று ஐஸ்வதாவும் கூறியுள்ளார்கள். .

லாவண்யா, செய்தித் தாள் எவ்வளவு நீளம் இருக்கும் என்பதை நாம் அறிவோம்.அதற்குள் அடங்கும்படி இரண்டு சேட்டைக்காரச் சிறுவர்களை, ஒருவருக்கொருவர் தொட்டுக்கொள்ளாமல் நிறுத்தி வைப்பது என்பது சுலபமான காரியமா?......சரியான விடைக்குச் செல்ல சிந்தனைக் கதவைத் தட்டுங்கள்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

நன்று

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

விமான நிலையம் பற்றி ஒரு புதிர் சொன்னீங்க நாங்களும் எங்களுக்கு தெரிந்ததை சொன்னோம் அது சரியா தவறான்னு சொல்லல அதர்கான சரியான விடைதான் என்ன நீங்களே சொல்லுங்கள்

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ப்ளீஸ் சொல்லிடுங்களேன் மண்டை வெடிக்குது...ருக்சானா அடுத்தபுதிருக்கு விடை சரியா சொல்றேன்.

வாழு, வாழவிடு..

சுவர்ணா, விமான நிலையாம் பற்றிய புதிருக்கு விடை ;
இது எனது சொந்த விமானம் ஆமா.. நீங்கள் புகைக்காமல் இருந்து எத்தனை விமானம் வைத்திருக் கின்றீர்கள் என்று கேட்டன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

சுவர்ணா, சரி நீங்கள் கேட்டுக்கொண்ட படியால் பதிலை நானே சொல்லி விடுகின்றேன்.
வீட்டின் ஒரு அறையின் கதவுக்கு கீழே உள்ள இடைவெளி வழியாகச்
செய்தித்தாளைச் செலுத்தி, குறும்புச் சிறுவர்களை கதவின் இருபுறமும் நிற்க வைத்தார் அந்த அம்மா.

அடுத்தது;

நவீனமான உணவு விடுதி ஒன்று நகரத்தின் நடுவில் இருந்தது.அதில் வியாபாரம் மிகக் குறைவாக இருந்தது. அதனால் மக்களைக் கவர்ந்திழுத்து, வருமானத்தை அதிகம் ஆக்க என்ன செய்யலாம் என்று விடுதி அதிபர் சிந்தித்து, ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்தார்.உடனே அதைச் செயல் படுத்தினார்.
அதன்படி உணவு விடுதியின் வாசலில் ஒரு பெரிய அறிவிப்புப் பலகையை மாட்டினார். அதில், " இந்த விடுதியில் நுழைந்து நீங்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதற்கு உங்களிடம் பணம் வாங்க மாட்டோம். பிறகு இங்கே வந்து சாப்பிடப் போகும் உங்கள் பேரனிடம் பணத்தை வாங்கிக் கொள்வோம்" என்று அறிவிப்பு எழுதப்பட்டிருந்தது.
அறிவிப்பை அங்கே மாட்டிய சமயத்தில், அந்தப்பக்கமாக ஒரு கடைந்தெடுத்த கஞ்சன் ஒருவர் வந்தார். அறிவிப்பைப் பார்த்தார்.ஆஹா....இதுவல்லவா நமக்குத் தோதான இடம் என்று அகமகிழ்ந்துபோனார். உடனே விடுதிக்குள் நுழைந்து, அம்ர்ந்தார்.
பறிமாற வந்த பணியாளரிடம், அறிவிப்பில் எழுதப்பட்டிருப்பது உண்மையா என்று கேட்டார். அவனும் உண்மைதான் என்றான்.
இதைக் கேட்டு மகிழ்ந்த கஞ்சன், இருப்பதிலேயே விலை மிகுந்த உணவு வகைகளை கொண்டுவரச் சொல்லி, வயிறு முட்ட உண்டான்.
எல்லாம் முடிந்ததும், கை கழுவிவிட்டு, வெளியே போக ஆயத்தம் ஆனான்.
ஆனால் அங்கே கல்லாவில் இருந்த விடுதி அதிபர் , ஒரு பெரிய தொகைக்கான பில்லைக் கொடுத்துப் பணம் கொடுத்துவிட்டுப் போகச் சொன்னதும், கஞ்சனுக்கு கடும் கோபம் வந்தது. அறிவிப்புப் பலகையைக் காட்டி , அதில் எழுதியுள்ளதன்படி நான் சாப்பிட்டதற்கு எனது பேரன் வந்து கொடுப்பான் என்றான்.
பொறுமையுடன் கஞ்சனது பேச்சினைக் கேட்ட விடுதி அதிபர், புன்முறுவலுடன் பதில் கூறினார்.
விடுதி அதிபரின் பதிலைக் கேட்ட கஞ்சனுக்கு மயக்கமே வந்துவிட்டது..
ஒன்றுமே பேசாமல் பணத்தைக் கொடுத்துவிட்டு, நடையைக் கட்டினான்.

சகோதரிகளே.............விடுதி அதிபர் கஞ்சனுக்கு என்ன பதில் கூறியிருப்பார்?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

"உங்களின் தாத்தா ஏற்கனவே இங்கே சாப்பிட்டு விட்டு உங்களிடம்தான் பில்லை செட்டில் பண்ண சொன்னார் "என்றார்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

இது உன் தாத்தா சாப்பிட்ட பில் என்றாரா..

வாழு, வாழவிடு..

இருவர் பதிலும் சரியானதே வாழ்த்துக்கள்.
மேலும் புதிர் போடவா????? அல்லது இப்போதைக்கு போதுமா????

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் புதிர் போடுங்கள் யோகராணி....

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்