கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

முன்னொரு காலத்தில் சோழநாட்டினை பராக்ரம சோழன் என்பவன் ஆண்டுவந்தான். அவனது நாட்டில் ஒரு குருடர் ஒருவர் இருந்தார். கண்கள்தான் இல்லையே தவிர அவர் சிறந்த அறிவுக் கூர்மை கொண்டவர். எந்த ஒரு விஷயத்தையும் தீர்க்கமாக ஆலோசித்து சரியான
தீர்வு கூறுவதில் வல்லவர். அவரது புகழ் நாடெங்கும் பரவியது.
பராக்ரம சோழனும் அவரது புகழையும், அறிவுத் திறமையையும் கேள்விப்பட்டான்.அதனால் அவரைச் சோதிக்க நினைத்து, அரசபைக்கு வரவழைத்தான்.அன்று அரசனுக்கு பக்கத்து நாட்டி குறுநில மன்னர் விலை உயர்ந்த ஒரு முத்தை பரிசாக அனுப்பியிருந்தார். அந்த முத்தினை அரசன் குருட்டு அறிஞரிடம் கொடுத்து, அது சிறந்த முத்துதானா என்று ஆராய்ந்து மதிப்பிட்டுக் கூறும்படி கேட்டுக்கொண்டான்.
முத்தைக் கையில் வாங்கிய அறிஞர், கையால் தடவிப்பார்த்தார். பிறகு, " அரசே இந்த முத்து எதற்கும் பயன் இல்லாதது.ஏனென்றால் இந்த முத்துக்குள் ஒரு புழு இருக்கிறது" என்றார்.
இதைக் கேட்ட அரசன் திடுக்கிட்டான். பார்வை சரியாக உள்ள மற்றவர்களுக்குத் தெரியாத இந்த உண்மை பார்வை இல்லாத அறிஞருக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்தான்." எனது நண்பரான குறுநில மன்னர் அனுப்பிய முத்து கேடானது என்று எவ்வளவு துணிவிருந்தால் கூறுவாய். நான் இப்போதே இதை சோதிக்கப் போகிறேன். உள்ளே புழு இல்லாவிட்டால், உனது தலையை சீவி எறிந்துவிடுவேன்" என்றான். அறிஞரும் ஒத்துக்கொண்டார்.
ஒரு காவலனை அழைத்து முத்தை உடைக்கும்படி கூறினான் அரசன்.
உடைத்ததும் உள்ளே இருந்து ஒரு புழு கீழே விழுந்து நெளிந்தது.அனைவரும் வியந்தார்கள்.
அறிஞரிடம் எப்படி புழு இருப்பதை கண்டு பிடித்தீர்கள் என்று கேட்ட அரசனுக்கு அறிஞர் தான் எப்படிக் கண்டு பிடித்தார் என்று கூற அரசனும் மகிழ்ந்து அரவைப் பாராட்டினான்." இனிமேல் நீ அரச விருந்தினராக இங்கேயே தங்கலாம்.அரண்மனையில் சுவையான உணவுகள் கொடுக்கப்படும். ஆனால் அளவு உணவுதான் கொடுக்கப்படும். தண்ணீர் மாத்திரம் நீங்கள் விருப்பப்படி குடிக்கலாம். என்ன மகிழ்ச்சிதானே" என்று அரசன் கூறினான்.
அறிஞனும் மகிழ்வுடன் ஒத்துக்கொண்டான்.

லாவண்யா......அந்த அறிஞன் எப்படி முத்துக்குள் புழு இருப்பதை அறிந்தான்???????

இந்த கதையுடன் சேர்ந்தே அடுத்த புதிரும் தொடரும்

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

பொதுவாக ஊனமுற்றவர்களுக்கு மற்ற எல்லா புலன்களும் நன்றாக வேலை செய்யும். அதனால் கண் தெரியாத அவருக்கு காது நன்றாக கேட்டிருக்கும்...ஆகையால் அவருக்கு அந்த முத்துக்குள் இருக்கும் புழு நெளியும் ஓசை கேட்டு சொல்லிருப்பார்.

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

உங்கள் சிந்தனை சரியான பாதையில் தான் சிந்திக்க வைக்கின்றது.ஆனால் பதில் அதில்லை. நெருங்கி விட்டீர்கள் கொஞ்சம் மூளையை கசக்குங்க.
லாவண்யா.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அந்த முத்தில் ஒரு மிகச் சிறு துளை இருந்தது , மேலும் புழு நெளிவது போன்ற உணர்வு அந்த முத்தை கையில் வைத்திருந்த போது கை உணர்வுக்கு ஆட்பட்டது,என கூறி இருப்பாரோ .

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

உள்ளே புழு இருப்பதனால் முத்து வெதுவேதுப்பாக இருக்கும் .ஆதலால் முத்தினுள் புழு இருப்பதை கண்டுபிடித்து விட்டான்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

அஸ்வதா சரியான பதில் தந்துள்ளார். பாராட்டுக்கள்
எனது பதில்;
(முத்து எப்பவும் குளிர்ச்சியா இருக்கும்,
அதுக்குள்ள உசுரோட புழு இருந்ததால லேசாச் சூடா இருந்தது)

பாரதி உங்கள் முயற்சிக்கு நன்றி.

/////அரண்மனையில் சுவையான உணவுகள் கொடுக்கப்படும். ஆனால் அளவு உணவுதான் கொடுக்கப்படும். தண்ணீர் மாத்திரம் நீங்கள் விருப்பப்படி குடிக்கலாம். என்ன மகிழ்ச்சிதானே" என்று அரசன் கூறினான்.\\\\\\\\\\\இது ஏன்???? புதிருக்கு தேவையில்லாத வசனம் என யோசித்தீர்களா?இந்த புதிர் இன்னும் முடிந்துவிடவில்லை. மூன்று பாகங்களாகத் தொடர உள்ளது.

அடுத்தது;

முத்துக்குள் புழு இருப்பதை அறிந்து கூறிய சில நாட்களுக்குப் பிறகு, உயர்ந்த சாதி அராபியக் குதிரை ஒன்று அரசனுக்குப் பரிசாக வந்து சேர்ந்தது.அந்தக் குதிரை வாளிப்புடனும், காண்போர் கண்களை கவரும் விதமாக கம்பீரமாக இருந்தது.அதைப் பார்த்த அரசனுக்கு, குதிரையின்மேல் ஏறி வலம் வர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.
தன் அருகே இருந்த பார்வை இல்லாத அறிஞனைப் பார்த்து, இந்தக் குதிரை நான் சவாரி செய்வதற்கு ஏற்றதுதானா என்று ஆராய்ந்து கூறும்படி கேட்டுக்கொண்டன்.
அரசனுடன் இருந்த மற்றவர்கள், இந்த தடவை பார்வையில்லாத அறிஞன் கண்டிப்பாக மாட்டிக்கொண்டு உயிர் விடப் போகிறான் என்றே முடிவு செய்தார்கள். பார்வையில்லாத அவன் எப்படி குதிரையை சோதனை செய்யப் போகிறான் என்று மனதுக்குள் கூறிக்கொண்டார்கள்.
ஆனால் அறிஞன் தயங்கவில்லை.குதிரையின் அருகில் சென்று தனது கரங்களால் குதிரையின் உடல் முழுவதும் நிதானமாகத் தடவினான்.
சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான்.
பிறகு " அரசே இந்தக் குதிரை சவாரி செய்வதற்கு ஏற்றதல்ல. இது குட்டியாக இருந்தபோது இதற்கு ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் இப்போது மேலே ஏறுபவர் எந்த நேரத்திலும் கீழே விழ நேரிடும். அதனால் தாங்கள் இதன்மேல் ஏறவேண்டாம்" என்றார்.

அதிர்ச்சியடைந்த அரசன் சிறந்த குதிரை நிபுணர்களை அழைத்தான். சோதனை செய்யும்படி கூறினான். அவர்களும் சோதித்துவிட்டு அறிஞர் கூறியது உண்மைதான் என்றார்கள்.அதனால் மனம் மகிழ்ந்த அரசன், " அறிஞரே....உமது அறிவுக்கு ஈடு இனை இல்லை.இன்றுமுதல் நீர் அரண்மனையில் வேண்டும் அளவு உணவை உண்ணலாம்." என்றான்.

தோழிகளே.......... அறிஞர் வயிறு நிறைய உணவை உண்டு மகிழ்ந்திருக்கட்டும். அவர் எப்படி நல்ல குதிரை இல்லை என்று கண்டுபிடித்தார்? என்று கூறுங்களேன்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

குதிரைக்கும் கண் தெரியாதா?

"ஏனெனில் அந்த குதிரை குட்டியாக இருந்தபோது அதன் தாய் இறந்து விட்டது அதனால் கழுதையின் பாலை இந்த குதிரை குட்டிக்கு கொடுத்தனர்.அதனால் இந்த குதிரையின் காது கழுதைக்கு இருப்பது போல் உள்ளது. கழுதையின் மேல் உட்காருவது கடினம் அதுபோல் தான் இந்த குதிரையும் .குதிரை போல் தெரிந்தாலும் கழுதையின் குணத்தை கொண்டிருகிறது.அதுமட்டும் இல்லை இது குட்டியாக இருந்தபோது இதன் முட்டியின் மீது அடிபட்டதினால் எலும்பு முறிந்துள்ளது.அந்த எலும்பு இபொழுது மிகவும் பலவீனமாக உள்ளது இதன் மீது யார் ஏறினாலும் எடை தாங்காமல் கீழே சாய்த்து விடும் ."என்று கூறினான்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

சரண்யா, அஸ்வதா இருவர் பதிலும் தவறு.
கண் தெரியாது என, அவனுக்கெப்படி தெரியும்.
கழுதையின் பாலைகுடித்தது என அவன் எப்படி அறிந்தான்.எனவே அவனது ஊகத்துக்கு பொருந்துற மாதிரி பதில் அமைய வேண்டும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

குதிரையின் உட்காரும் பகுதியினை சிறிது நேரம் தனது கையின் மொத்த பலத்தையும் வைத்து அழுத்தி பார்த்தார் குருடர்,அதன் கால் இடறி சிறிது நேரத்தில் விழுவதும் அவர் முயற்சியில் கண்டார் .பின் இதே போன்று அதன் மெத்தை பகுதி மட்டும் வலுவிழந்து தோய்ந்து இருப்பதையும் உணர்ந்து இந்த குதிரை சிறு வயதிலேயே அடிப்பட்டு பாதிப்படைந்திருக்கும் என்று தனது யுகத்தை வெளிப்படுத்தினார்.

*********முயன்றதை அடைய அதனை விடாமல் துரத்திக் கொண்டே இரு
கண்டிப்பாக ஒருநாள் முயற்சி திருவினையாக்கும் **********
அன்புடன் ,
பாரதிமதனசெல்வம்

மேலும் சில பதிவுகள்