கொஞ்சம் மூளையை கசக்குங்க-பகுதி 3

"ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகிவிடால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம்மாறி ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ"

அய்யய்யோ..இது புதுசா ஏதோ கவிதை சம்பந்தபட்ட த்ரெட் இல்ல....கொங்சம் வித்தியாசமா இருக்கட்டுமேனுதான்...
பகுதி மூன்றுக்கு சகோதர சகோதரிகள் அனைவரையும் அன்போடு அழைப்பது உங்கள் அன்பு அறிவிப்பாளன் மு.ஷேக் முகைதீன்

பாரதி, உங்கள் பதில் கொஞ்சம் பொருந்துகின்றது,
எனவே நான் எனது பதிலையும் தருகின்றேன்¨.

குதிரையின் ஒரு காலில் உள்ள குளம்பின் இடையே இடைவெளி இருந்ததை கையால் தடவிப் பார்க்கும்போது அறிஞர் உணர்ந்தார். குளம்பில் பிளவு இருந்தால் அட்ந்தக் குதிரைக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து அதனால் குளம்பில் விரிசல் ஏற்பட்டது என்று பொருள். அப்படி விரிசல் ஏற்பட்டுவிட்டால் எந்த சமயத்திலும் அதன் கால் பயனின்றிப் போகும். அதனால் அது ஓட இயலாமல் போகும் என்றதால் அறிஞர் அக்குதிரைமேல் ஏறக்கூடாது என்று கூறினார்.

சரி அடுத்த புதிருக்குப் போவோம்.

மேலும் சில நாட்கள் கழிந்தன.அரசனுக்கு தனது பரம்பரைப் பெருமையைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசை ஏற்பட்டது. அதை தனக்கு சரியாகக் கூற தகுதியானவர் அறிஞர்தான் என்ற எண்ணத்துடன், அறிஞரை அழைத்தான். "எனது தந்தை எப்படிப்பட்டவர் என்று சொல்வாயா" என்று கேட்டான்.
ஒரு கணம் சிந்தித்த அறிஞர், " அரசே....இதற்கான பதிலை அனைவரின் முன்னும் கூற விரும்பவில்லை.தங்களிடம் தனியே கூறுகிறேன்" என்றார் .
அவரைத் தனி அறைக்கு அழைத்துச் சென்ற அரசன், " இப்போது சொல்லுங்கள்" என்றான்.
"அரசே...நான் சொல்வது முற்றிலும் உண்மை.உங்கள் தந்தையார் ஒரு சமையல்காரர்.இப்படிக் கூறுவதற்கு தாங்கள் கோபம் அடையாமல், உங்கள் தாயிடம் நன்றாக விசாரித்துப் பாருங்கள்" என்றார் அறிஞர்.
அரசன் கடும் கோபம் அடைந்தான்.தனது பிறப்பையே குறைவாகக் கூறிய அறிஞரை உடனே கொன்றுவிட முதலில் நினைத்தாலும், இதுவரை அவர் கூறுவதெல்லாம் சரியாக இருந்ததினால், கோபத்தை அடக்கிக்கொண்டு, தனது தாயிடம் சென்று உண்மையில் தனது தந்தை யார் " என்று வற்புறுத்திக் கேட்டான். முதலில் தயங்கினாலும், பிறகு அரசனது தாய், அவனது தந்தை ஒரு சமையற்காரர்தான் என்று ஒத்துக்கொண்டாள். அரண்மனை சமையற்காரருடன் தான் கொண்ட கள்ளத் தொடர்பினால்தான் அவன் பிறந்ததாகக் கூறினாள்.இது யாருக்குமே தெரியாத ரகசியம். அரசன் எப்படித் தெரிந்துகொண்டான் என்றும் கேட்டாள்.
ஒன்றும் பதில் கூறாமல் அறிஞனிடம் வந்த அரசன், தலை குனிந்தபடி, "அறிஞரே, நீங்கள் கூறியது உண்மைதான். ....தங்களுக்கு எப்படி இந்த உண்மை தெரிந்தது"? என்று கேட்டான்.
தான் எப்படி அதை உணர்ந்தார் என்று அறிஞர் அரசனுக்குக் கூறினார்.....
நண்பர்களே......அறிஞர் எப்படி அந்த உன்மையை அறிந்தார்.???

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

"நீங்கள் மன்னருக்கு பிறந்திருந்தால் பொன்னும் பொருளும் தருவதாக சொல்லியிருப்பீர்கள் .ஆனால் நீங்களோ உணவு தருவதாகவே சொன்னீர்கள் அதை வைத்துதான் கண்டுபிடித்தேன் "
என்றான்

நல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..

"அரண்மனையில் சுவையான உணவுகள் கொடுக்கப்படும். ஆனால் அளவு உணவுதான் கொடுக்கப்படும். தண்ணீர் மாத்திரம் நீங்கள் விருப்பப்படி குடிக்கலாம். என்ன மகிழ்ச்சிதானே" என்று அரசன் கூறினான்"

சமையல்காரர்கழ் தான் அளவு உணவு என்று கூறுவார்கள்.மன்னர் பரம்பரையில் பிறந்தவர் அப்படி கூற மாட்டார்கள்.சரியா யோகா????

அருமை அஸ்வதா, சரியாக கண்டு பிடித்து விட்டீர்கள் பத்து பொற் காசுகள் தந்து வாழ்த்துகின்றேன்.

இது மிகவும் சுலபமான புதிர் கண்டுபிடியுங்களேன்.

சென்னையில் ஒரு சுமங்கலி மாதர் சங்கத்துக்கு பத்தாவது ஆண்டு நிறைவு
விழா நடைபெற இருந்தது...அந்த விழாவை எப்படி சிறப்பாக நடத்துவது என்று கூடிப்பேசினார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து கூறினார்கள்.
புகழ் எற்ற நடிகை ஒருவரை தலைமை தாங்க அழைப்பது, நித்யஸ்ரீயின் பாட்டுக் கச்சேரி வைப்பது என்று பலவிதமான திட்டங்கள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அப்போது ஒரு பெண்மணி, விழாவுக்கு என்ன ஆடை அணிந்து வருவது என்ற கேள்வியை எழுப்பினார்.
பலவிதமான கருத்துக்களுக்கு இடையே ஒரு பெண்ணின் புதுமையான கருத்து பெரும்பாலான அங்கத்தினர்களைக் கவர, அதையே செயல் படுத்துவது என்று தீர்மானித்தார்கள்.
அதாவது, அவரவர்களின் கணவரது தலைமுடி என்ன நிறத்தில் உள்ளதோ அதே நிறத்தில் ஆடையணிந்து வரவேண்டும் என்று தீர்மானம்
நிறைவேற்றினார்கள்.
ஒருத்தி, " எனது கணவரின் தலைமுடி கருப்பு நிறம். அதனால் நான் கரும்பட்டுப் புடவை அனிந்து வருவேன்" என்றாள்.
அடுத்தவளோ, "நான் இளம் சிவப்பு பட்டு அணிந்து வருவேன். ஏனென்றால் எனது கணவரின் தலைமுடி இளஞ்சிவப்பு" என்றாள்.
ஒருத்தியோ, " நான் வெண்பட்டுதான் அணியவேண்டும். எனது கணவரின் நலை நரைத்துவிட்டது" என்றாள்.
கடைசியாக ஒருவள் எழுந்து, "இந்த திட்டம் சரிப்படாது.நான் விழாவுக்கு வரவில்லை" என்றாள்.

அவள் ஏன் விழாவுக்கு வர இயலாது என்று கூறினாள். சொல்லுங்களேன்!!!!!

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

அவளது கணவருக்கு முடியே இல்லையா ???(வழுக்கையா)

அந்த பெண்ணின் கணவரது தலை வழுக்கை.சரியா யோகா??

என்ன ரம்யா,சரண்யா ....எளிதான புதிரை உடனே விடுவித்துவிட்டீர்களா?சரி இப்போது ஒரு கடினமான புதிர் [அப்படி நான் நினைக்கிறேன்] எங்கே விடை சொல்லுங்கள் பார்ப்போம்.

பவழத்தீவு என்ற நாட்டில் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது.
பட்டத்து யானையிடம் ஒரு மாலையைக் கொடுத்து ஊருக்குள் அனுப்புவார்கள். அந்த யானை யாருக்கு மாலையிடுகின்றதோ அவர்களே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசராக இருந்து ஆட்சி செலுத்துவார்கள்.ஐந்து ஆண்டுக்காலம் தமது விருப்பம்போல் ஆளலாம். என்ன நினத்தாலும் செய்யலாம். 5 ஆண்டுகள் முடிந்ததும், அந்த நாட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய தீவில் இறக்கிவிடப்படுவார்கள். ஆள் யாரும் வசிக்காத கொடிய விலங்குகள் வாழும் தீவு அது. அந்த தீவில் இறக்கி விடப்பட்டவர் விரைவில் விலங்குகளுக்கு இரையாவார். மீண்டும் பட்டத்து யானை அடுத்த அரசனைத் தேர்ந்தெடுக்கும்.
இப்படி இருக்கையில் ஒருமுறை பட்டத்து யானை அறிவழகன் என்பவரைத் தேர்வு செய்தது. பெயருக்கு ஏற்றார்ப்போல் அவர் அறிவிற் சிறந்தவர். நல்ல ஆட்சியைக் மக்களுக்குக் கொடுத்தார்.அவரும் மகிழ்வுடன் இருந்தார்.
ஐந்து ஆண்டுக்காலம் முடிந்தது. அவரைத் தீவில் கொண்டுபோய் விடுவதற்காக வீரர்கள் வந்து அவரை அழைத்தார்கள்.மிதற்கு முன்பு இருந்த அரசர்களைப் போல் அந்தத் தீவுக்குப் போக பயந்து, அறிவழகனும் அழுது புலம்புவார் என்று அனைவரும் நினைத்தார்கள்.ஆனால் அறிவழகன் மகிழ்வுடன் சிரித்தபடி வீரர்களுடன் சென்றார்.
அந்தத் தீவில் இறங்கி கவலையே இல்லாமல் தீவுக்குள் சென்றார்.

நன்பர்களே....ஏன் அறிவழகன் மற்ற அரசர்களைப் போல் அழுது புலம்பாமல் மகிழ்வுடன் சென்றார்?

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

கொடிய விலங்குகளை தனது ஆட்சி காலத்தில் கொன்று விட்டாரா ???
(ஐந்து ஆண்டுக்காலம் தமது விருப்பம்போல் ஆளலாம். என்ன நினத்தாலும் செய்யலாம்)

எனக்கு இதற்கு விடை தெரியவில்லை தோழி.

ரம்யா மிகச் சரியான விடையைத்தான் கூறியுள்ளார்.
ரம்யாக்கு எனது வாழ்த்துக்கள். இதோ அடுத்த புதிர்

சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் விரைவு ரயில் இரவு 9 மணிக்குப் புறப்பட்டது. இருவர் மட்டும் பயணம் செய்யும் முதல் வகுப்புப் பெட்டியில் இரண்டு பேர் இருந்தார்கள்.அதில் ஒருவன் பக்காத் திருடன். தன்னுடன் பயணம் செய்பவர், பெட்டி நிறையப் பணம் கொண்டு செல்கிறார் என்ற நம்பகமான தகவல் அவனுக்குக் கிடைத்திருந்ததினால், தானும் அந்தப் பெட்டியிலேயே இருக்கை பதிவு செய்துகொண்டு, அவனும் ஒரு பெட்டியை கையுடன் கொண்டு வந்து பயணிபோல் நடித்துக்கொண்டு,.அவருடன் பயணம் செய்தான்.
இடையில் அவர் பெட்டியைத் திறக்கும்போது உள்ளே பணம் நிறைய இருப்பதையும் கண்டான். வாய்ப்புக் கிடைக்கும்போது அந்தப் பெட்டியில் உள்ள பணத்தை திருடிவிட வேண்டும் என்ற எண்ணத்துடன், விழுப்புரத்தில் இருந்து திருச்சி செல்வதற்குள் திருட்டை நடத்தத் திட்டமிட்டான். ஏனென்றால் அப்போதுதான் மற்றவர் ஆழ்ந்த நித்திரையில் இருப்பார்.
வண்டி விழுப்புரம் தாண்டியது. பக்காத் திருடன் எழுந்தான். எதிரே இருந்தவர் ஆழ்ந்த நித்திரையில் இருந்ததைப் பார்த்தான். சிறுநீர் கழித்துவிட்டு வந்து, நிதானமாகத் திருட்டை நடத்தலாம் என்று நினைத்து, டாய்லெட் சென்று திரும்பினான்..சப்தமில்லாமல் அவரது பெட்டியை நகர்த்தினான். திறமையாகப் பெட்டியைத் திறந்தான். ஆனால் உள்ளே பணம் எதுவுமே இல்லை. பதிக்கும் மேல் காலியாக,வெறும் துணிமணிகளும், தின்பண்டங்களுமே இருந்தன.
பக்காத் திருடனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அந்தப் பெட்டியில் பணம் இருந்ததை அவன் ஏற்கனவே கண்டிருந்தான். நிச்சயமாக அவர், இந்த ரயில் கம்பார்ட்மெண்டுக்குள்தான் எங்கோதான் மறைத்து வைத்துள்ளார் என்று முடிவு செய்து, கம்பர்ட்மெண்ட் முழுவதும் தேடினான். எங்குமே கிடைக்கவில்லை. .
இதற்கிடையில் வண்டி திருச்சியைத் தாண்டியது.. திருடனும் சளைக்காமல் ,அவன் தேடிச் தேடிச் சலித்துவிட்டான். எங்குமே கிடைக்கவில்லை. விடிந்தது மதுரையும் வந்துவிட்டது.இரவு முழுதும் உறக்கமின்றி இருந்த பக்காத் திருடன், முகம் கழுவிக்கொண்டு வரலாம் என்று , வாஷ் பேசின் சென்று வந்தான்.
அவன் போய் வந்த பின்பு, மற்ற பயணி எழுந்தார். தனது உடமைகளை எடுத்து வைத்தார். திருடன் கண்முன்னாலேயே பெட்டியைத் திறந்து, உள்ளே இருந்த தனது புதிய வேஷ்டியை எடுத்து உடுத்திக்கொண்டார். உள்ளே பணம் கட்டுக்கட்டாக இருந்ததை திருடன் கண்டான்.
அவனுக்கு ஒரே ஆச்சர்யம். தான் திறந்து பார்த்தபோது இல்லாத பணம், இப்போது பெட்டிக்குள் எப்படி வந்தது என்று வியந்தான்!!!!!. தலையைப் பிய்த்துக்கொண்டன். அவனுக்குப் புரியவே இல்லை.
நண்பர்களே, அவர் பணத்தை எங்கே ஒளித்து வைத்திருந்தார்?
.நீங்கள்தான் அந்தப் பக்காத் திருடனுக்குச் சொல்லவேண்டும்.

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.

மேலும் சில பதிவுகள்