மணி கொலுசு

தேதி: August 3, 2010

4
Average: 3.8 (8 votes)

 

சின்ன மணி(வெள்ளை, சிவப்பு, பச்சை, மஞ்சள் நிறம்)
நரம்பு

 

மணி கொலுசு செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
அவரவரின் காலின் சுற்றளவுக்கு தகுந்தப்படி நரம்பை அளந்து ஒரு இன்ச் கூடுதலாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். இதே அளவிற்கு மொத்தம் மூன்று ஒயர்கள் எடுத்து கொள்ளவும். நரம்பின் ஒரு முனையில் நான்கு வெள்ளை மணிகளை கோர்க்கவும். நரம்பின் மற்றொரு முனையை கடைசியாக கோர்த்த வெள்ளை மணியில் விட்டு இரண்டு நரம்பையும் சமமாக பிடித்து இழுக்கவும்.
சரிசமமாக இழுத்த பிறகு 4 மணியும் நரம்பின் நடுவில் வந்துவிடும். இப்போது இரண்டு நரம்பின் ஏதேனும் ஒரு முனையில் இரண்டு வெள்ளை மணியையும், மற்றொரு நரம்பில் ஒரு வெள்ளை மணியையும் கோர்க்கவும்.
ஒரு மணி கோர்த்த நரம்பை எடுத்து இரண்டு மணி கோர்த்த நரம்பில் இரண்டாவது மணியில் உள்ள துளையில் விட்டு இரண்டு நரம்பையும் சமமாக பிடித்து இழுக்கவும்.
இதேப் போல் நரம்பு முழுவதும் மணியை கோர்த்து நரம்பின் நுனி பகுதிக்கும் ஒரு இன்ச் இடைவெளிக்கு முன்பே மணி கோர்ப்பதை நிறுத்தி விடவும். (அப்பொழுது தான் இரண்டு நரம்பையும் ஒன்றாக முடிச்சு போட முடியும்.)
பிறகு நரம்பின் இரு முனையிலும் ஒவ்வொரு வெள்ளை மணி கோர்க்கவும். இப்போது முதன்முதலில் கோர்த்த வெள்ளைமணியின் துளையில் இரண்டு நரம்பின் முனையும் எதிர், எதிர் திசையில் விட்டு இழுத்து முடிச்சு போட்டுக் கொள்ளவும். மீதம் இருக்கும் நரம்பை வெட்டி விடவும்.
இப்போது இரண்டாவது நரம்பு ஒயரை எடுத்து மணிகள் முடிச்சு போட்ட இடத்தில் கீழே இருக்கும் ஏதாவது ஒரு மணியில் கோர்த்து சமமாக மடித்துக் கொள்ளவும். இரண்டு நரம்பில் ஏதேனும் ஒரு நரம்பின் முனையில் 2 வெள்ளை மணியையும் மற்றொரு நரம்பில் ஒரு வெள்ளை மணியையும் கோர்க்கவும். இரண்டு மணி கோர்த்த நரம்பை எடுத்து மற்றொரு நரம்பில் கோர்த்த மணியில் உள்ள துளையில் உள்ளே விட்டு இழுக்கவும்.
அதன் பிறகு ஒரு நரம்பின் முனையை எடுத்து பக்கத்தில் இருக்கும் மணியில் உள்ள துளையில் விட்டு இழுக்கவும். பின்னர் ஒவ்வொரு நரம்பிலும், ஒவ்வொரு மணி கோர்க்கவும்.
மணியை கோர்த்த பிறகு இடதுப்புறத்தில் இருக்கும் நரம்பை எடுத்து மற்றொரு நரம்பில் கோர்த்திருக்கும் மணியின் உள்ள துளையில் விட்டு இழுக்கவும்.
இதே போல் ஒரு வரிசை முழுவதும் சுற்றி வெள்ளைநிற மணியை கோர்த்துக் கொள்ளவும்.
ஒரு வரிசை முடிந்ததும் வலதுப்புறத்தில் இருக்கும் நரம்பில் ஒரு மணியை கோர்த்து வைக்கவும். மற்றொரு நரம்பை முதன் முதலில் கோர்த்த மணியில் விட்டு அதே நரம்பை வலதுப்புறத்தில் கோர்த்திருக்கும் மணியில் விட்டு இரண்டையும் சேர்த்து முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.
இப்போது மூன்றாவது நரம்பு ஒயரை எடுத்துக் கொண்டு முடிச்சு போட்ட இடத்தில் அடியில் இருக்கும் மணியின் உள்ள துளையில் விட்டு நரம்பை சமமாக மடித்துக் கொள்ளவும். பிறகு வலதுப்புறத்தில் இருக்கும் நரம்பில் 2 சிவப்பு மணியும் மற்றொரு நரம்பில் ஒரு சிவப்பு மணியும் கோர்க்கவும். இரண்டு மணி கோர்த்த நரம்பை எடுத்து மற்றொரு நரம்பில் கோர்த்த மணியில் உள்ள துளையில் உள்ளே விட்டு இழுக்கவும்.
சிவப்பு மணி கோர்த்ததும் 8, 9 வரிகளில் உள்ளது போல் இரண்டு வெள்ளை மணியை கோர்த்துக் கொள்ளவும். பிறகு ஒரு நரம்பின் முனையை எடுத்து பக்கத்தில் இருக்கும் மணியில் உள்ள துளையில் விட்டு இழுக்கவும். இப்போது அந்த இரு நரம்பில் ஒன்றில் வெள்ளை மணி, மற்றொன்றில் பச்சைநிற மணியை கோர்க்கவும். வெள்ளை மணி கோர்த்தது போல் இரண்டு பச்சைநிற மணியை கோர்த்துக் கொள்ளவும்.
இதே போல் இரண்டு வெள்ளை மணி, அடுத்து ஒரு வெள்ளை மணி, ஒரு மஞ்சள்நிற மணி, அடுத்து இரண்டு மஞ்சள் நிற மணி, அடுத்து இரண்டு வெள்ளைநிற மணி, அடுத்து ஒரு வெள்ளைநிற மணி, ஒரு சிவப்புநிற மணி, அடுத்து இரண்டு சிவப்புநிற மணி என்று இது போல் மாறி மாறி நரம்பின் கடைசி வரை கோர்த்துக் கொள்ளவும்.
முடிச்சு போடும் பொழுது அதன் இடைவெளியை பொறுத்து ஒரு வெள்ளைநிற மணியை கோர்த்து நரம்பின் இரு முனையையும் சேர்த்து முடிச்சு போட்டுக் கொள்ளவும். அழகான மணி கொலுசு ரெடி.
இதே போல் மற்றொரு காலுக்கும் செய்து கொள்ளவும். தமிழ்நாட்டில் சிறிது காலம் ஃபேமஸ்ஸாக இருந்தது இந்த மணி கொலுசு. சிறிய குழந்தைகளும், பள்ளி செல்லும் குழந்தைகளும் இது போல் செய்து போட்டு விடலாம். இந்த குறிப்பை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. காயத்ரி அவர்கள்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

நான் அறுசுவை தளத்தை தினமும் பார்ப்பதுண்டு மற்றும் சில கேள்விகள் கேட்டு இருக்கேன் ஆனால் இதுவரைக்கும் பாராட்டி பதவுகள் போட்டது இல்லை.... ஆனால் உங்கள் மணி கொலுசு பார்த்ததும் பாராடாமல் இருக்க முடியவில்லை..... உங்கள் கைவினை மிக அருமை.... மணி கொலுசு எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு.... மிக்க நன்றி.. எங்களுக்கு இதை செய்து காட்டியதற்கு....

ஸ்டெல்லா

மணிகொலுசு

அழகோ! அழகு!

இது மாறி எங்க ஊர்ல விப்பாங்க. விலை கொஞ்சம் ஜாஸ்தி தான்.ஆனால் வீட்டில் நாமே செய்தால் செலவுகுறைவு இல்லையா?

வாழ்த்துக்கள்!
இன்னும் பல கைவினைகள் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

எனக்கு ஒருமுறை இந்த மணிகொலுசு பரிசா கிடைத்தது. என் அக்கா பொண்ணு விரும்பிக் கேட்டதுனால கொடுத்துட்டேன். ஆனா எப்பவும் நினைச்சுப் பாத்துக்குவேன். எனக்காகவே போட்டமாதிரி இருக்கு இந்த மணிக்கொலுசு. கண்டிப்பா செய்து நானும் என் பொண்ணும் கால்ல போட்டுக்கப்போறோம்.

Don't Worry Be Happy.

நீங்கள் காயத்ரி எண்டால்.... என்ட ப்ரெண்ட் காயத்ரியா!! ;)
நல்ல வடிவா இருக்கு கொலுசு.
இப்பவாவது ஒரு குறிப்பு அனுப்பினீங்களே. நன்றி. ;))

‍- இமா க்றிஸ்

இம்மா!
அது என்னங்க டெய்லி எல்லாரும்
தூங்குனதுக்கு அப்பறம் வந்து
நைஸா கடிச்சு வச்சுட்டு
போயிரீங்க.?
அன்புடன்
ஆஷிக்

ஆஷிக்,
எனக்கு இப்போ 4/8/2010 காலை 7.26. ;) கிளம்புறேன். ;) நல்லிரவு. ;)
அன்புடன்
இம்மா - ம்

‍- இமா க்றிஸ்

அழகாக இருக்கிறது .... மணிக் கொலுசு...
செய்து பார்க்கிறேன்....
நன்றி.

அழகாக இருக்கிறது உங்கள் மணிக்கொலுசு.
நன்றி.

காயத்ரி உங்க மணி கொலுசு சூப்பர். ரொம்ப அழகா இருக்கு. தொடர்ந்து பல கைவினைகள் செய்து காட்டவும்.

இது 'அறுசுவை டீம்' கொடுத்த குறிப்பு என்று தெரிந்து கொண்டேன். ஆகவே இவர் என் தோழி காயத்ரி இல்லை. ஆயினும் 'கொலுசு அழகாக இருக்கிறது,' என்று நான் சொன்ன கருத்தில் மாற்றம் எதுவும் இல்லை. பாராட்டுக்கள் காயத்ரி. ;)

‍- இமா க்றிஸ்

நல்லாயிருந்தது இன்னும் நிரைய கைவினை பொருள்கள் செய்ய வாழ்த்துக்கள்.

மணி கொலுசு அழகாக இருக்கிறது. கொஞ்சம் சிரமமாக இருக்கும் போல் தெரிகிறது. முயன்று பார்க்கிறேன் காய்த்ரி. நன்றி

மணி கொலுசு அருமை. இந்த மணி சென்னையில் எங்கு கிடைக்கும் என்று தயவு செய்து சொல்லவும்.

டாரதி

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta