சொரியாசிஸ்

அருசுவை தோழிகளுக்கு அன்பான வணக்கம்,
என் அண்ணன் பசங்களுக்கு தோல் அலர்ஜியினால் கஷ்டபடுகிறார்கள்.
இதைப் பற்றி தெரிந்தவர்கள், இதற்கான மருத்துவம் பற்றி தெரிந்தால், சொல்லுங்கள் friends

அன்புடன் s நஸ்ரின்

சொரியாசிஸ் (Psoriasis) என்றால் என்ன ?

சொரியாசிஸ் என்பது ஒரு சாதாரணமான தோல் அழற்சி நிலையாகும். மக்கட்தொகையில் 1% - 2% மக்கள் இதனால் தாக்கப்படுகிறார்கள்.
தோலில் உள்ள உயிரணுக்கள் வேகமாகப் பிரிவதன் மூலம் இது உண்டாகும். இதன் விளைவாக தோல் மந்தமாகிவிடும், புரையோடும்.
தோலிலுள்ள அதிகரிக்கப்பட்ட பல சிறு இரத்த நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.
சொரியாசிஸ் எவ்வாறு காணப்படும் ?

சொரியாசிஸ் என்பது தோலில், பொடிந்து விழும் புரையுடன் கூடிய சிவப்பு திட்டுகிகளாகக் (patches) காணப்படும்.
உடலின் எந்தப்பாகமும் தாக்கப்படலாம்.
முழங்கை, முழுங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் சாதாரணமாகப் பாதிக்கப்படும்.
சொரியாசிஸ் தொற்றும் தன்மையுடைத்ததா ?

சொரியாசிஸ் தொற்று நோயல்ல. இது மற்றவர்களுக்குப் பரவாது.
குறைந்த சுகாதாரத்தின் காரணமாக இது ஏற்படாது.
சொரியாசிஸை எது ஏற்படுத்தும் ?

சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல் நிலை இவற்றின் இணைப்பினால் ஏற்படுகிறது என்று நம்பப்படுகிறது.
சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 1/4 - 1/3 பங்கினர் அதே நோயுடைய குடும்பத்திலிருந்து வந்தவர்களே ! சிலர் விசயங்களில் மரபு நிலை பங்காற்றுகிறது.
உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, ப்ளூ, ஸ்டீராய்ட் உறார்மோன்ஸ், சில ஆண்ட்டிஹைபர் டென்
சிவ் போன்ற சிப மருந்துகள், சொரிமாகிஸை மேலும் மோசமாக்கும்.
குடிபழக்கம், புகைபிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கி, குணப்படுத்த கடினமாக்கும்.
சொரியாசிஸ் பிற சூழ்நிலைகளுடன் தொடர்புடையதா ?

ஏறத்தாழ 5% சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் ஏற்படும்.
சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், வண்ணமாற்றத்தையும், நகங்கள் தடிப்பையும் ஏற்படுத்தும்.
சொரியாசிஸ் யாருக்கு வரும் ?

சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கும்.
சொரியாசிஸ் வழக்கமாக 20 வது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் முதிய வயதிலும் கூட இது வரலாம்.
ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு கால மாற்றங்கள் ஏற்படும்.
சொரியரிசிஸ§க்கு என்ன மருத்துவங்கள் கிடைக்கின்றன ?

1. மேற்பூச்சுக்கள் (creams)

இவற்றுள், ஈரப்படுத்துவன (mositurisers), கரி எண்ணை டித்ரானால் (dithranol), கால்சிபாட்ரியல் (calcipatriol) டாபிகல் ஸ்டீராய்ட்ஸ் அடங்கும்.
சொரியாசிஸால்கள் பெரும்பாலான மக்கள் லேசான நோயைப் பெற்று, டாபிகல் கிரீம்களைப்பயன்படுத்துவதால் நல்ல நிவாரணத்தைப் பெறுகிறார்கள்.
2. போட்டோதெரபி

அல்ட்ரா வைலட் ஒளிக்கதிர் மருத்துவத்தால் சொரியாசிஸ் நன்கு குணமாகும்.
அல்ட்ரா வைலட் ஒளி அது ஹிக்ஷிஙி அல்லது ஹிக்ஷிகி இருந்தாலும்சரி, தொடர்ந்து பல மாதங்கள், மருத்துவம் செய்துகொண்டால், சொரியாசிஸை நன்கு குணப்படுத்தலாம்.
3. மருந்துகள்

தீவிர சொரியாசிஸ§க்கு, உங்கள் தோல்துறை வல்லுனர் வாய்வழி கொள்ளும் மெதாட்டுரக்ஸாட் (methotrexate) அசிட்ரெடின், சைக்ளோஸ்போரின், சல்பா சலாஜைன் போன்ற மருந்துவில்லைகளை எழுதித்தரலாம்.
இத்தகைய மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நோயாளிகள் இந்தப் பக்க விளைவுகளைப் பரிசோதித்துக் கொள்ள அடிக்கடி இரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை, செய்ய வேண்டியவை

தோலைச் சொரியாதீர்கள் ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.
மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்துவத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள்.
சொரியாசிஸைக் குணப்படுத்த எழுதித்தரப்பட்ட மருந்து வில்லைகளையும், மருந்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.
மருத்துவத்தைத் தொடர்ந்து சீராக எடுத்துக்கொள்ளுங்கள்.
தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், புரையேற்படுவதையும் தடுக்கும்.
சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும். அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.
மன அழுத்தம் சொரியாசிஸைத் தீவிரப்படுத்தும். அமைதியாக யிருக்க, உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும், விருப்பு எடுத்துக்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

செந்தில் இது உங்கள் சொந்த கருத்தா?

இதுபோல் வேறு தளத்தில் பார்த்தேன். அதற்காக கேட்கிறேன்.

எழுத்து மாறாமல் அப்படியே இருக்கிறது.

நீங்கள் அந்த ப்ளாக்/சைட் முகவரி கொடுத்து பார்க்க சொல்லியிருக்கலாமே!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

செந்தில் வேண்டாமே காப்பி பேஸ்ட். புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அட்மின் அண்ணா நிறைய இடத்தில் சொல்லிவிட்டார். ஆமினா, வனிதா மற்றும் பிற தோழிகளும் அடிக்கடி எடுத்துக் கூறிவிட்டார்கள். திரும்பத் திரும்பக் கூறுவது கடினமாகவும் மனதிற்கு சங்கடமாகவும் உள்ள விசயம். இது யாரையும் வருத்தமடையச் செய்வதற்கு அல்ல. தளத்தின் நலனைக் கொண்டு எடுக்கும் முடிவு. பிறருக்கு உதவும் என நீங்கள் செய்யும் செயல் தள்த்தினைப் பாதிக்காதிருப்பது நல்லது.

ஆணிவேரை வெட்டிக்கொண்டே நீரூற்றி என்ன பயன்.

யாரையும் தவறாக நினைக்க வேண்டாம்.

அன்புடன்,
இஷானி

”கண்டேன் சீதையை” என்று இராமரிடம் எப்படி எந்த சூழ்நிலையில் அனுமன் கூறினாரோ அதேபோன்ற நிலையில்தான் நானும் இங்கு பதிந்திருக்கிறேன்.ஏனெனில் சொரியாசிஸ் என்பது எவ்வளவு கொடுமையான நோய் என்பது அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்...

லிங்க் கொடுத்து அதை தேடிப்பார்க்கும் அளவிற்கு நம் தோழிகளுக்கு தெரிந்திருந்தால், அவர்களுக்கு இங்கே கேள்வி எழுப்ப வேண்டிய அவசியமே இருக்காது.

மறுப்பு தெரிவித்த தோழிகள் எந்த அளவுக்கு alert ஆக இருக்கிறார்கள் என்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியே. அதே நேரத்தில் அவர்களின் அறியாமை குறித்து நான் வருந்துகிறேன்.

கவிதை, கட்டுரை போன்ற மற்றவர்களின் சொந்த படைப்பை அப்படியே நாம் இங்கே என்னுடையது என்று வெளியிடுவது தவறு.

இதுபோன்ற அறிவுசார்ந்த விஷயங்களை, கருத்துக்களை யாரும் என்னுடைய சொந்த கருத்து என்று சொந்தம் கொண்டாட முடியாது. அதை அப்படியே நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் அனுமதி உண்டு என்பதையும் நான் உங்களனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் நான் இங்கு பதிந்தவுடன் உடனே மறுகருத்து போடும் தோழிகள் முன்னரே உங்களுக்கு தெரிந்த லிங்கை அவசரத்தில் இருக்கும் தோழிக்கு உதவிட போட்டிருக்கலாமே.... (ஆம்புலன்ஸ் போன்று உதவியிருக்கலாமே) அரட்டைக்கு மட்டும் தான் முன்னுரிமையோ...

இந்நேரம் நிறைய தெரியாத விஷயங்களை நான் கற்றது கைமண்ணளவில் பகிர்ந்திருப்பேன்.. தெரியாத தோழிகள் அறிந்து கொண்டு பயனுற்றிருப்பார்கள்... அதை என்னால் தொடரமுடியாத மனநிலைக்கு நான் தள்ளப்பட்டுவிட்டேன்...

மேலும் அட்மின் அவர்களிடத்தில் நான் வேண்டுவது யாதெனின், நான் ஏதெனும் தவறு செய்திருப்பதாக நீங்கள் கருதினால் என்னை அறுசுவை மன்றஉறுப்பினர் நிலையிலிருந்து நீக்கிட நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. Good bye.....

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

Dear senthilkumar,
I really appreciate your boldness and I
congratulate you.

Best of luck. Anbudan poongothaikannammal

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நீங்கள் என்னை மறைமுகமாக(ஆம்புலன்ஸ்) சொன்னது தெரிகிறது. இல்லை என்றாலும் மறுப்பு சொன்ன முதல் நபர் என்பதால் இதனை சொல்கிறேன்.

இங்கே அனுபவத்தின் அடிப்படையில் தான் எங்கள் கருத்துக்களை சொல்ல முடியும். அந்த நோய் இதுவரை தோழிகளுக்கு தெரியாமல் இருந்தால் அவர்கள் கூற முடியாது. கணினி மயமான இந்த காலத்தில் லிங்க் கொடுத்து போய் பாருங்க என்று சொன்னால் கண்டிப்பாக போய் பார்ப்பார். படிப்பறிவு குறைவான நானே இப்படி பதிவு போட முடிகிறது என்றால் நன்கு படித்தவர்களுக்கு சொல்லவா வேண்டும்?

அறிவு சார்ந்த விஷயங்களை யாரும் உரிமைக் கொண்டாட முடியாது தான். ஆனால் ஒருவர் கஷ்ட்டப்பட்டு சேகரித்த அதே அறிவு சார்ந்த விஷயத்தை எந்த சிரமமும் இல்லாமல் ஒருவர் எடுத்து மற்றவர்களுக்கு கொடுப்பதை என்னவென்று சொல்வது?
சொன்னது தவறே இல்லையென்றாலும் அதை ஏன் அப்படியே காப்பி,பேஸ்ட் பண்ண வேண்டும். என் நண்பர்களுக்கு அறிவு சார்ந்த விசயத்தை சொன்னால் கூட அவர் “அப்படி சொன்னார், இவங்க இப்படி பேசுனாங்க”, என்று என் நடையில் நான் சொல்வேன். இவ்வாறு இல்லாமல் அதை என் அறிவாலேயே சேகரித்தது போல் நான் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் வரும் பாராட்டில் என்ன அர்த்தம்?
நீங்கள் இந்த பதிவு கொடுக்கும் போது கடைசி வரி வரை படித்தேன். ஒரு இடத்திலும் கூட எங்கிருந்து எடுத்தீர்கள் என குறிப்பிடவில்லை. ஆக இதை பற்றி தெரியாத நபர்கள் பாராட்டை உங்களுக்கு தான் தெரிவிப்பார். கஸ்ட்டப்பட்டு அறிவு சார்ந்த விஷயங்களை சேகரித்த அந்த நபருக்கு என்ன பலன் இருக்கிறது?
இதை எங்கள் ஊரில் பழமொழி சொல்லி கேலி செய்வார்கள்.அதை குறிப்பிட விரும்பவில்லை.
உங்களுக்கு கூறும் அந்த பாராட்டை உண்மையில் விவரம் சேர்த்த நபருக்கு சொன்னால் அவருக்கு அது ஊக்கமாக அமையும் இல்லையா?
நீங்கள் ஏன் இதை காப்பி பண்ணியதை பற்றி சொல்லவில்லை?

//மேலும் நான் இங்கு பதிந்தவுடன் உடனே மறுகருத்து போடும் தோழிகள் முன்னரே உங்களுக்கு தெரிந்த லிங்கை அவசரத்தில் இருக்கும் தோழிக்கு உதவிட போட்டிருக்கலாமே//
பதிவுகள் வெளிவந்தவையா,வராதவையா என சொல்ல எல்லா தளங்களையும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எழுதிய வரியை கூகுளில் சர்ச் செய்தாலே போதும். எங்கிருந்து வந்தது என தெரிந்துவிடும். அப்படி பார்த்ததால் தான் நான் பதிவு போட்டேன்.

இதே போன்று ஒருவர் விளக்கம் கேட்டதற்கு தான் அட்மின் அண்ணா பெரிய விளக்கமே கொடுத்தார். நீங்கள் சொன்ன அதே அறிவு சார்ந்த விஷயம் பற்றி தான் அவரும் சொன்னார். உங்களுக்கும் நன்கு தெரியும்.
பிறகு மீண்டும் இப்படியொரு பதிவு போடுவதில் என்ன அர்த்தம்?

இதையும் தாண்டி சில சிக்கல்களை அறுசுவை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. காப்பாற்ற வேண்டிய நாமே குழியில் புதைக்கலாமா?

நீங்கள் எனக்கு நல்ல நண்பர். எந்த தீய எண்ணத்திலும் நான் மறுப்பு பதிவுகளை போடவில்லை. இதை புரிந்துக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

Chill Man!

இவ்வளவு கோவம்/அவசரம் எதற்கு? உங்களின் ஆர்வத்தையோ உதவும் எண்ணத்தையே யாரும் குறை சொல்லவில்லை. அப்படி சொன்னாலும் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. நீங்கள் C&P பண்ணிட்டு கடைசியில் இங்கு இருந்து எடுக்கப்பட்டது என்று ஒரு வரியை போட்டு இருந்தால் இது ஒரு விசயமாகவே ஆகி இருக்காதே...

மருத்துவ குறிப்புகளை இது போன்ற அவசர தேவைகளுக்காக எடுத்தாலுவதில் பாபு அண்ணாவுக்கும் ஏதும் வருத்தம் இருக்காது என்றே எண்ணுகிறேன். ஆனால் இது போன்று எடுக்கப்பட்ட Source குறிப்பிடாமல் இருப்பதன் மூலம் அவருக்கு பல சங்கடங்கள் கண்டிப்பாக ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எதற்கு இவ்வளவு கண்டிப்பாக சொல்லுகிறார்கள் என்பதை ஒரு நிமிடம் யோசித்தாலே போதும் அவர்கள் தரப்பு உங்களுக்கு புரியும். ஏதும் தவறு நடந்து விட கூடாதே என்ற அச்சம் தான் உங்களுக்கு பதில் அளித்தவர்களின் பதிலில் எனக்கு தெரிகிறது. தனிபட்ட முறையில் எடுத்துக் கொள்ள வேண்டாமே. நாம் செய்தது தவறு என்று நமக்கு பட்டால் அதை தவறு என்று ஒத்துக் கொள்வதில்லை என்ன தயக்கம்.... இப்படி போட்டது தவறே அல்ல என்று வாதம் வைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலே இதை சொன்னேன்.

Be Supportive Man... Lets Rock ! Cheers

நட்புடன்
நாகை சிவா

"Follow your heart and your dreams will come true."

நீங்கள் கற்றதை யாரும் இங்கே பகிர வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதை உங்கள் சொந்த நடையில் சொல்லுங்கள் என்றே சொல்கிறோம்.
அந்த தளம் நடவடிக்கை எடுத்தால் யாருக்குப் பிரச்சினை? அதையெல்லாம் மனதில் கொண்டே காப்பி பேஸ்ட் வேண்டாம் என்கிறோம். அதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிரீர்கள்?

இங்கே நாங்கள் கொடுக்கும் சமையல் குறிப்புகளக் கூட நாங்கள் இன்னொருதளத்தில் நாங்கள் வெளியிடுவதில்லை. அது அறுசுவையை பாதிக்கும் என நன்றாக தெரியும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

செந்தில்குமார், நான் கேட்க நினைத்ததை தவறாக பதிந்து விட்டேன் என்று நினைக்கிறேன்.
நான் கேட்க நினைத்தது இதுதான்.

உங்களுக்கு தெரிந்தவர்கள் யாருக்காவது இதன் பாதிப்பு இருந்து குணமாகியிருக்கிறார்களா?இதற்கான சிகிக்சை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்.

அன்புடன் s நஸ்ரின்

மேலும் சில பதிவுகள்