காய்ச்சல் குணமாக

காய்ச்சல் குணமடைய வீட்டு வைத்தியம்

குணா என்ன காய்ச்சல்னு சொல்லல. சாதாரண காய்ச்சல் என்றால் முதலில் வென்னீரால் ஒத்தடம் கொடுங்கள். சூடு குறையும்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

சுப்ரீம் கோர்ட்டு வீட்டிலிருக்கும் மனைவிக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மாமி

பார்கவி என்ன சொல்றாங்க? என்ன சொல்ல வராங்க? எனக்கு ஏதும் புரியலையே!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

வீட்டிலிருக்கும் மனைவிக்கும், சம்பளம் கொடுக்கவேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிடவேண்டும் இது குறித்து எல்லாரும் கருத்திடவேண்டும் என சொல்கிறார்கள் ஸாரி நினைக்கிறார்கள், அப்படினு நான் நினைக்கிறேன்
என்றும் அன்புடன்
ஆஷிக்

“தெரிக்கவும்” என்று சொல்லியிருந்தால் புரிந்திருக்கும்.
“தெரிவிக்க வேண்டும்” என்று சொன்னதால் கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

ஆமினா & ஆஷிக்

அது அப்படி இல்லை... பார்கவி சொல்ல வந்தது என்னவென்றால்,

கடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது இல்லத்தரசிகள் பொருளாதார ரீதியில் எவ்வித வருமானமும் ஈட்டாதவர்கள் என்ற வகையில் அவர்களை பிச்சைக்காரர்களோடும், சிறைவாசிகளோடும் ஒப்பிட்டு கணக்கெடுப்புத் துறை மதிப்பிட்டுள்ளது. வருந்தத்தக்க இல்லத்தரசிகளின் மதிப்பை மறுநிர்ணயம் செய்யும் நேரம் இப்போது வந்துள்ளது. பார்லிமென்ட் இதுகுறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும்' என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், அருண் அகர்வாலும் அவரது 39 வயது மனைவி ரெனுவும் தங்கள் காரில் சென்று கொண்டிருந்த போது, உ.பி., மாநிலம் ஹர்தோய் என்ற இடத்தில் லாரி மோதி விபத்து நேரிட்டு, ரெனு இறந்து போனார்.அருண், தன் மனைவியின் உயிரிழப்புக்கு , 19 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக இன்சூரன்ஸ் நிறுவனம் தர வேண்டும் என்று கோரி, வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாணையமும், அலகாபாத் ஐகோர்ட்டும் அவரது மனுவை நிராகரித்து விட்டன.அவை தமது தீர்ப்பில்,"ரெனு ஓர் இல்லத்தரசி. அவருக்கு மாதந்தோறும் வருமானம் எதுவும் வரவில்லை. மேலும், அவரது குடும்பம் அவரைச் சார்ந்தும் இல்லை. அதனால் அவரது மதிப்பு மாதத்துக்கு 1, 250 ரூபாய்தான் பெறும்' என்று கூறிவிட்டன.
மோட்டார் வாகன சட்டம் 1988ன்படி, ஓர் இல்லத்தரசியின் மதிப்பு, அவரது வருமானம் ஈட்டும் கணவரின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதை அவை சுட்டிக் காட்டியிருந்தன.இதனால் அருண், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அவரது வழக்கை ஏற்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரெனுவின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக ஆறு லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்டது.மேலும், இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஏ.கே. கங்குலி ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:கடந்த 2001ல் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை, இந்தியாவின் 36 கோடி பெண்களை, வருமானம் ஈட்டாதவர்கள் என்ற பிரிவின் கீழ் சேர்த்துள்ளது.

பிச்சைக்காரர்கள், சிறைவாசிகள், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரை பொருளாதார ரீதியில் எவ்வித வருமானமும் ஈட்டாதவர்கள் என்ற வகையில் சேர்த்ததைப் போலவே அவர்களோடு இல்லத்தரசிகளையும் சேர்த்தது, உணர்ச்சியற்ற செயல். இது தொழிலாளர்களையும், பெண்களையும் அவமானப்படுத்துவதாகும்.அதேநேரம், இதேபோல் நடக்கும் பாலியல் ரீதியிலான பாகுபாடு நம்மைக் கவலை கொள்ளச் செய்கிறது. ஓர் இல்லத்தரசியின் வீட்டுவேலைகளை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் அவரது பொருளாதார மதிப்பை, மோட்டார் வாகனச் சட்டங்கள் மற்றும் இதர சட்டங்கள் வழங்குவதற்கான வழிவகையைக் கொண்டு வர வேண்டிய தருணம் இது. இதுகுறித்து பார்லிமென்ட் சிந்திக்க வேண்டும்.

சட்டங்கள், இல்லத்தரசிகளின் வேலைகளான சமையல், பாத்திரங்கள் கழுவுதல், குழந்தைகளைக் கவனித்தல், தண்ணீர் எடுத்து வைத்தல் போன்றவற்றை ஒரு வேலையாகவே கருதவில்லை என்பதை ரெனு தொடர்பான வழக்கு நமக்கு காட்டுகிறது. இல்லத்தரசிகள் வீட்டு வேலைகளில் செலவிடும் நேரத்தை ஒரு பணியிலோ அல்லது அவர்களது கல்வியிலோ செலவிட முடியும் என்பதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம். அவர்களது வீட்டு வேலைகளை அங்கீகரிப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள்தான், பெண்கள் மத்தியில் வறுமை அதிகரிக்கவும் சமுதாயத்தில் அவர்களின் துயரம் தொடரவும் காரணமாகின்றன.ஒரு மூன்றாம் நபரை சம்பளத்துக்கு அமர்த்தி வீட்டு வேலைகளை செய்யச் சொல்வதை விட, இல்லத்தரசிகளின் பணி மிகவும் உயர்ந்தது. ஒரு சமையல்காரருக்கு தரும் சம்பளம் அல்லது கடையில் வாங்கும் உணவுக்குக் கொடுக்கப்படும் பணம் அல்லது ஒரு குடும்பத்துக்கு வேண்டிய உணவை வாங்க செலவிடப்படும் பணம் என்ற அடிப்படையில் இல்லத்தரசிகளின் சமையல் பணி மதிப்பிடப்பட வேண்டும்.இல்லத்தரசிகளிடமிருந்து பெறப்படும் பரிசுப் பொருள் கூட, ஓர் இல்லத்தரசி அல்லது பெற்றோர் என்ற அடிப்படையில்தான் மதிப்பிடப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

இது நாளிதழில் படித்த செய்தி...

குழந்தை - கடவுள் தந்த பரிசு;
தாய் - பரிசாக கிடைத்த கடவுள்.

நட்புடன்,

பொன்.செந்தில்குமார்.

ஆமீனா உங்களத்தான் தேடிகிட்டு இருந்தேன்....
நீங்க ஏன் வரல? :(
என்றும் அன்புடன்
ஆஷிக்

நன்றி செந்தில் குமார்
:)) விவாகாரமான ஆளுய்யா நீரு
உமது Friend
Ashiq

இது பற்றி கூட நான் படித்தேன்.

தேசிய வருமான கணக்கெடுப்பில் உள்ள சிக்கல்கள் என்ற தலைப்பில் வந்த கட்டுரையில் கூட இல்லத்தரசிகளின் வருமானத்தை கணக்கிட இயலாததால் உண்மை தேசிய வருமானம் கணக்கெடுப்பில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது என்று!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

மேலும் சில பதிவுகள்