தோழிகளே ! எனக்கு இயற்கை வீட்டுத் தோட்டம் இழையை பார்த்தவுடனே, நம்ம தோழிகள் வீட்டில் என்னென்ன பூச்செடிகள், மரங்கள், கொடிகள் வைத்திருக்கிறார்கள் என்று அறிய ஆவலாக உள்ளது. முன்னாடி செடி, கொடி, மரம் வைத்து இப்போது அவை இல்லையென்றாலும் பரவாயில்லை அவற்றை பற்றியும் சொல்லுங்கள். செடிகளை பற்றிக் கேட்பதால் காது குளிர்வதோடு மட்டுமல்லாமல் மனதும் குளிர்ந்துவிடும். ப்ளீஸ் தோழிகளே! எல்லாரும் உங்க தோட்டத்தை பற்றிய விவரங்களை இங்கே சொல்லுங்களேன்.
பசுமை வீடுகள்
அழகான பெயர், பசுமை வீடுகள். நல்லதொரு முயற்சி. பசுமை வீடுகள் வாழ்க!, வளர்க!.
அன்புடன்
THAVAM
தவ்ஸ் அண்ணா, இப்படி சொன்னா
தவ்ஸ் அண்ணா, இப்படி சொன்னா எப்படி? உங்க வீட்ல இருக்கிற செடி, கொடி, மரங்கள பத்தி சொல்லுங்க.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
காங்கோ கல்பனா
எங்களோடது பெரிய பண்ணை இல்லம். பத்து ஏக்கர்ல பண்ணை இருக்கு, சுமார் எழுபது தென்னை மரங்கள் இருக்கு மற்ற மரங்கள்னா வேம்பு, கருவேல், புளிய மரம் இப்படிப்பட்ட மரங்கள் எண்ணிக்கை தெரியவில்லை. மற்றபடி பூச்செடிகள்ல ரொஜா,மல்லி செடிகள் இருக்கு காய்கறி தோட்டம் போட்டு இருக்கேன் முருங்கை மரங்கள் இருக்கிறது. எல்லாம் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன். நன்றி.
அன்புடன்
THAVAM
எங்க வீட்ல இருந்த செடி, கொடி,
எங்க வீட்ல இருந்த செடி, கொடி, மரங்களின் விபரங்கள்:-
பூச்செடிகள் :
கனகாம்பரம்,நித்யமல்லி, அடுக்கு மல்லி, குண்டு மல்லி, பால்சம் பூ, சம்பங்கி பூ, ஊசி மல்லி, சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு,வெள்ளை நிறங்களில் ரோஜா செடிகள், சாமந்தி பூ, வெள்ளை கலர் பூ, தேன் பூ, மஞ்சள், சிகப்பு, வெள்ளை நிறங்களில் செம்பருத்தி பூ செடிகள், வெள்ளை, ஆரஞ்சு மற்றும் சிகப்பு கலந்த சாமந்தி.
காய் செடிகள் :
வெண்டை,கத்தரி,தக்காளி,கருணை கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு
கீரை செடிகள்
தண்டுக்கீரை, முளைக்கீரை, மணத்தக்காளி கீரை,பச்சை மற்றும் சிகப்பு நிற பசலை, பொன்னாங்கண்ணி கீரை
கொடிகள் :
அவரை, பாகற்காய், பீர்க்கங்காய்
மரங்கள் :
மா,பலா,வாழை, தென்னை,முருங்கை, அரை நெல்லிக்காய், சப்போட்டா, சீதா, கொய்யா
இவை எல்லாம் இருந்தன. இப்போது இவற்றில் ஒரு சில தான் உள்ளன.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
தவ்ஸ் அண்ணா, சுருக்கமா, ஒரு
தவ்ஸ் அண்ணா, சுருக்கமா, ஒரு நந்தவனத்துல இருக்கறீங்கன்னு சொல்லுங்க.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
தவமணி அண்ணா
தவமணி அண்ணாச்சி, கேட்கவே ஆசையா இருக்கு. ஊரில் இருந்த போது எங்கள் வீட்டு தோட்டத்தில் தென்னை மரங்கள் ( குறைந்தது 8 ), 2 மாமரங்கள், மல்லிகை, ரோஜா, செம்பருத்தி செடிகள், செவ்வந்தி, முருங்கை, பப்பாளி, அலரிப்பூ, வாழை மரங்கள், இது தவிர நிறைய பூச்செடிகள் என்று நிறைய இருந்திச்சு.
இப்ப வெளிநாட்டில் ஓரளவு பூச்செடிகள் இருக்கு. ஆனால் காய்கறி தோட்டம் போட வேண்டும் என்ற நெடுநாள் ஆசை சரிவரவில்லை. எங்கள் பக்கம் முயல்கள் ஜாஸ்தி. வந்து சாப்பிட்டுவிடுவார்கள். ஸ்ட்ராபெரி சில சமயங்களில் அப்படியே செடியில் விட்டு விடுவோம் ( இது என் கணவரின் உத்தரவு ) முயல்களுக்கு உணவாக.
வாணி
ஹாய் கல்பனா...
நல்லாருக்கீங்களா? பசுமை வீடுகள் பெயரே ரொம்ப நல்லாருக்கு, காதும் பேரை கேட்டாலே குளிர்ந்து தான் போகுது... நான் சென்னைல இருக்கும் போது ரோஸ் செடி ரெண்டு மூனு வெச்சுருந்தேன், நல்லா பூத்துச்சு. அப்பறம் ஊட்டி டேய்லியா செடி நிறைய வெச்சுருந்தேன்(மெரூன், வெள்ளை, மஞ்சள் கலர்ல)... கருவாப்பிள்ளை, வால்சம் செடிகள், கற்பூரவள்ளி, கேரட், பாவக்காய், பீட்ரூட், முள்ளங்கி செடிகள் எல்லாம் அப்பப்ப போடுவோம்.
உடுமலை வந்தன்ன வீட்ல வாழை, மல்லி, ஜாதி, டிசம்பர் செடி, மாதுளை, பப்பாளி, மாமரம் எல்லாம் வெச்சுருந்தோம்.
வினித் வீட்டுக்கு வந்தன்ன ரோஸ் செடி மட்டும் தான் இருந்துச்சு. ஆனா தென்னந்தோப்பு இருந்துச்சு ஒரு இளநீர்லாம் ஒருத்தரால குடிக்க முடியாது செம பெரிசா இருக்கும். அப்ப எங்க மாமனார் இருந்தாரு அவர் லாபத்தை எதிர்பாக்க மாட்டார் சும்மா காடு இருக்கேன்னு எதயாச்சு போட்டு விடுவார். நான் மாசமா இருந்த டைம்ல தர்பூசணி போட்டுருந்தாரு அடடா எத்தனை காய் தெரியுமா நான் டைய்லியும் தர்பூசணி ஜூஸ்சா குடிச்சேன். மாந்தோப்பு கூட இருந்துச்சு நல்லா கட்டுகட்டுன்னு கட்டுவோம் மாம்பழத்தை எல்லாம்... ம்ம் அது ஒரு ஜாலி... இப்ப அவரும் இல்லை தோப்பு காடும் இல்லை எல்லாத்தையும் வித்துட்டோம்...
சரி மிச்சத்தை நான் நாளைக்கு வந்து சொல்லரேன் இப்ப கிளம்பரேன்... நாளைக்கு வர டைம் இருக்குமான்னு தெரியலை வெளிய எங்காச்சு போலாம்னு இருக்கோம் அதனால எல்லாருக்கும் பெரிய பாய்...
மீண்டும் பேசலாம்.....
இருப்பதின் அருமை இல்லாத பொழுது தெரியும்.
அன்புடன்
லதாவினீ.
லதாவினீத், இத இதத்தான் பா
லதாவினீத், இத இதத்தான் பா எதிர்பார்த்தேன். நீங்க சொல்றத கேட்கும் போதே நாங்களும் தர்பூசணி, இளநீர், மாங்காய் எல்லாம் சாப்ட மாதிரி இருந்தது பா.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
பசுமை வீடுகள்
நல்ல தலைப்பு ஆமினா. அதில் வரும் பதிவுகளும் படிக்கவே ரொம்ப மனதுக்கு சந்தோஷத்தை கொடுக்குது.
எங்க வீட்டிலேயும் நிறைய செடிகள் இருந்துச்சு, சின்ன கொள்ளைபுறம் தான் ஆனாலும் நல்ல மண்வளம். பக்கத்து வீட்டுலயும் பின்புறம் உள்ள வீட்டுலயும் வீடுகட்டியதால் அதில் இடிக்கப்பட்ட காரை மற்றும் பூசும் போது உள்ள சிமெண்ட் இவை எல்லாம் கலந்து கொள்ளைபுறமே சிமெண்ட் மேடாக மாறிவிட்டது. அப்போது உள்ள செடிகள், கனகாம்பரம்(சிவப்பு, மஞ்சள்), முருங்கை மரம், செம்பருத்தி செடி, அடுக்கு செம்பருத்தி, மாதுளை மரம், கொய்யா மரம், மாமரம், பப்பாளி மரம், அவரைக்கொடி, பாகற்காய், சின்ன ஊசி மிளகாய், டிசம்பர் செடி. காலை வேலைகளில் அங்கே போய் அமர்ந்து அந்த செடி கொடிகளை பார்த்துக் கொண்டு இருந்தாளே மனதுக்கு அப்படி ஒரு ரம்மியமாய் இருக்கும்.
ஆனால் இப்போது எங்கள் வீட்டில் இருப்பது மாதுளை, கொய்யா, மாமரம், செம்பருத்தி இவை மட்டுமே கனகாம்பரம் இப்பதான் துளிர்கிறது.
coconut tree, mango tree(2),
coconut tree, mango tree(2), kanagambaram, moneyplant, vatthalai plant,rose, Thulasi,jamine all are in my house.
TRY TRY TRY
DON'T BE SHY
THEN YOUR POSITION WILL BE HIGH.