அன்பு தோழிகளே என் அம்மாவிற்கு கடந்த சில மாதங்களாக மூட்டு வலி அதை அவங்க கவனிக்காமல் விட்டதால் இப்போது வலி மிகவும் அதிகம் ஆகி விட்டது. ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் அவங்களுக்கு RHEUMATOID FACTOR 15.0 uI\ml இருப்பதற்கு பதிலாக 701.4uI\ml ஆக உள்ளது. இது மிகவும் அதிகமா? எனக்கு மிகவும் பயமாக உள்ளது. இதற்கு என்ன சிகிச்சை உள்ளது என்று யாருக்கும் தெரியுமா?உதவுங்கள் தோழிகளே ப்ளீஸ். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை
இந்த ரிப்போர்ட்டை ஒரு நியூராலஜிஸ்ட் இடம் காட்டினோம். அவங்க வேறொரு மருத்துவரிடம் பார்க்க சொல்லிட்டாங்க. அந்த டாக்டர் கிட்ட செவ்வாய் கிழமை தான் அப்பாயின்ட்மென்ட் அது வரை என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. என்ன செய்யலாம். இது பற்றி தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும்.
யாரும் பார்க்கவில்லையா?
என்னப்பா யாரும் பதில் போடல. யாரும் பார்க்கவில்லையா? தெரிந்தவர்கள் தயவு செய்து கூறுங்கள். ப்ளீஸ். இதை பற்றி கொஞ்சம் விபரமாக சொல்ல முடியுமா? தம்பிக்கு இன்னும் 2 மாதத்தில் கல்யாணம் இருப்பதால் அம்மா சர்ஜரி ஏதும் சொல்லிட்டா என்ன பண்ரதுனு பயப்படராங்க. உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள். ப்ளீஸ்
பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த கொடையாளன்.
அம்மா விரைவில் குணமடைய
தோழிக்கு செந்தமிழின் வணக்கம்.அம்மா விரைவில் குணமடைய கடவுளை வேண்டிக்கொள்கிரேன்.இது மருத்துவம் சம்பந்த்தப்பட்டது என்பதனால் யாரும் எளிதில் பதில் கூற முடியாது.எனினும் நீங்கள் கூறீ இருப்பதை பார்த்தால் அம்மாவுக்கு மூட்டில் அதிக அளவு நீர் கோர்துள்ளது என நினைக்கிரேன்.இதற்க்கு பயப்பட வேண்டாம்.அதனை மூட்டில் இருந்து ஒரு (NEEDLE) ஊசி மூலம் உற்ஞ்சி எடுத்து விடுவார்கள்.ஆனால் நான் கூறும் கருத்து சரியா என தெரியவில்லை.கவலைபட வேண்டும்
WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ
ஃபாத்திமா
கவலை வேண்டாம் ஃபாத்திமா. சர்ஜரி தேவைப்படாது. மருந்துகளிலேயே குணப்படுத்தி விடலாம். முதலில் மருத்துவரைப்பாருங்கள். உடனடி நிவாரணம் அலோபதியில் கிடைக்கும். அதன் பின்னர் சித்த மருத்துவம் எடுத்துக் கொண்டால் பூரண குணம் கிடைக்கும். ஆனால் சித்தமருத்துவரை தேர்ந்தெடுக்கும் போது போலிகளிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
ஃபாத்திமா
ஃபாத்திமா கவலைபடாதீங்க..எனது உறவினருக்கு உள்ளது..அடிக்கடி ஜாயின்ட்ஸில் வலியும் நீர் கட்டுவதுமாக அவஸ்தை படுவதை பார்த்திருக்கிறேன்..குளிர் காலத்தில் மழை காலத்தில் அவ்ஸ்தை சிறிது அதிகமாக இருக்கும்..மற்றபடி வெயில் காலத்தில் ரொம்ப சுகமாக இருப்பதாக சொல்வார்கள்...அதிகம் குளிர்ச்சியாக எதையும் படாமல் பார்த்துக் கொண்டால் நல்ல நிவாரணம் தெரியும்..மற்றபடி இதற்கு அவருக்கு மருந்து மட்டும் தான் சர்ஜரியெல்லாம் இல்லை.
இதற்கு அவர் ஆயுர்வேத மருத்துவத்தில் கிடைக்கும் குழம்பு போன்ற தேய்த்து குளிக்கும் மருந்து பொருட்களை உபயோகிப்பார்கள்..நல்ல பலன் கிடைக்குமாம்..கவலை படாதீர்கள்
hi fathima
எனக்கு இதை பற்றி சரியா தெரியவில்லை.ஆனால் பயப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும். உங்கள் அம்மா விரைவில் குணமடைய இறைவனிடம் வேண்டுகிறேன்