மூச்சுபயிற்சி நல்லதா?

மூச்சுபயிற்சி நல்லதா?
ஆல்பா மூச்சுப்பயிற்சி எப்படி செய்வது?

Enakkum idai patri therindu kolla asai than.Yaaravadhu udavungal thozhi gale. Nandriyudan.

nisarbanu

மூச்சுப்பயிற்சி சரி. அது என்ன ஆல்ஃபா மூச்சுபயிற்சி கொஞ்சம் சொல்லுங்களேன்.

அன்பு காவேரி,

எனக்கும் ஆல்ஃபா பயிற்சின்னா என்னன்னு தெரியலை. ஆனா, மூச்சுப் பயிற்சி ரொம்ப நல்லதுங்கறது தெரியும்.

திரு சுகி சிவம் அவர்கள் எழுதிய ஒரு தொடரில் நான் தெரிஞ்சுகிட்டது இது -

குழந்தை மாதிரி அயர்ந்து தூங்கணும்னு சொல்வாங்க. குழந்தைகள் தூங்கும்போது பார்த்திருப்பீங்க. சீராக மூச்சு இருக்கும்.

நாம் ரொம்ப உணர்ச்சி வசப்படறப்போ, கோபப்படறப்போ, அதிகமான எடை தூக்கறப்போ, வேகமாக நடந்தால், ஓடி வந்தால், நம்முடைய மூச்சு விடும் விதம் கவனிச்சால் தெரியும். மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குதுன்னு சொல்வோம். அதாவது, மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜன் போதவில்லைன்னு பொருள்.

கோபப்படறப்போ ஒன்றில் இருந்து நூறு வரை எண்ணுங்கன்னு சொல்வாங்க. ஏன்னா, அப்படி செய்யறப்போ மூச்சு விடுவது சீர்பட்டு விடும். கோபமும் தணிந்து, ரிலாக்ஸ் ஆகி விடலாம்.

தூக்கம் வரலைன்னா, கை, கால்களை தளர்வாக வைத்துக் கொண்டு, மூச்சை நன்றாக உள்ளிழுத்து, பின் வெளிவிடுமாறு சொல்வாங்க. இப்படி 6-7 தடவை செய்யும்போதே நுரையீரல் சுத்தமான காற்றினால் நிரப்பப் பட்டு, நல்ல தூக்கம் வரும்.

மூச்சு விடுதல்ங்கறது இயல்பாக நடந்துகிட்டு இருக்கறதால நாம அதை கவனிக்கறதேயில்லை. ஆனா, மிகவும் கவனம் எடுத்து, சீராக மூச்சு விடுவதை பயிற்சி செய்தோம் என்றால், அது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

யாருப்பா அது நடுநடுவில் மூச்முச்னு முட்டுரது.தெரிஞ்சா சொல்ல மாட்டொமா??உக்கூம்....
அந்த மூச்ச கொஞ்சம் நிறுத்திட்டு இல்ல இல்ல நிறுத்தி நிதானமா சொல்லுங்க எனக்கும் கொஞ்சம் தேவைப்படுது..

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

இதெல்லாம் ஒரு குருவை வைத்துக் கொண்டு அவரின் யோசனைப்படி செய்யனுங்க

அன்புடன்
THAVAM

பொதுவா இதுபோல பயிற்சி நல்ல ஆசான் மூலம் கத்துக்கரதுதான் நல்லது.
அப்படி ஆசான்களைத்தேடி போக முடியாத இடத்தில் இருப்பவர்கள் சில ஈசி
யான முறை களை முயற்சித்துப்பார்க்கலாம். நான் தினமும் மூச்சுப்பயிற்சி
பிராணாயாமம் எல்லாமும் எனக்குத்தெரிந்த அளவில் செய்து வருகிரே.ன்
காலை படுக்கைலேந்து எழுந்துக்கரோம் இல்லியா அங்கியே காலை நன்கு
மடக்கி உக்காந்து மூச்சை பலமாக உள்ளிழுக்கவ்ம். அதை அப்படியே ச்ற்று நேரம்
தம் பிடித்து வைத்திருந்து மெள்ள ,மெள்ள வெளியே விடவும். மூச்சை இழுக்கும்
போது வயிறு ஃபுல்லா காற்றை நிரப்பிகொள்வதால் வயிறு சிறிது உப்பிக்கொள்ளும்
வெளியே விடும்போது வயிரு ஒட்டிப்போகும். மெதுவாக இப்படி 10 முறை செய்து
வரவும்.

மூச்சு பயிற்சி பற்றி ஹைஷ் அண்ணா மறை பொருள் ரகசியங்கள் இழையில் தெளிவா நிறைய சொல்லியிருக்காங்க. பயிற்சி முறைகளும் சொல்லியிருக்காங்க.அந்த இழையை பார்க்கவும்.

http://www.arusuvai.com/tamil/node/12198

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

மூச்சு பயிற்சி, யோகா இவை அனைத்துமே ஒரு நல்ல ஆசான் கிட்ட தான் முறையாக பயிற்சி எடுத்துக்கனும். நான் கற்றுக் கொண்டதில் எனக்கு தெரிந்ததை பகிர்ந்துக் கொள்றேன். மூச்சு பயிற்சி, கோமு மேடம் சொன்னது போல நாம் மூச்சியை உள்ளிழுக்கும் போது வயறு உப்பி இருக்க வேண்டும். வெளியில் விடும் போது வயறு சுருங்கிக் கொள்ளும். அடுத்து, நாம் முதலில் பழகிக்க மூச்சுயை இழுக்கும் போதும் விடும் போது நம்பரை சொல்லிக் கொண்டே இழுக்கவும் விடவும் செய்யலாம். இதில் கவனிக்க வேண்டியது உள்ளிழுப்பது 1 லிருந்து 10 வரை சொன்னால் வெளியில் விடும் போது அதன் எண்ணிக்கை 1 லிருந்து 20 வரை இருக்க வேண்டும். ரொம்ப மெதுவாக தான் வெளி விடவேண்டும். மூச்சு பயிற்சி செய்யும் போது முதுகு தண்டுவடம் வளையாமல் நிமிர்ந்து இருந்து செய்யனும்.

ஆல்பா மூச்சுப்பயிற்சி என்பது
1.குறிப்பிட்ட இடத்தில் தினமும் குறிப்பிட்ட ஒரே இடத்தில் அமர்ந்து மூச்செ உள்ளே இழுத்து வெளியே விடுவதெ ஒன்று ,இரண்டு என 10வரெ எண்ணவும்.
2.கண்களெ மூடி காதின் வழியே என்ன சத்த்ம் கேட்கிறது என்று கவனிக்கவும்.வாயில் என்ன ருசி தெரிகிறது என்று கவனிக்கவும்.
மூக்கு ,கண் இப்படி ஒவ்வரு உறுப்புகளெயும் கவனிக்கவும்.

3.பின் உங்கள் உடம்பு தளர்வா உள்ளதாக மனதிற்குள் எண்ணவும்.
4.இப்பொழுது நீங்கள் ஒரு உயரமான இடத்தில் இருப்பதாக எண்ணிக்கொள்ளவும்.
அவ்விடத்திலிருந்து கீZஎ குனிந்து பார்ப்பது போல் கற்பணெ செய்து கொண்டு
கீழே பார்த்தால் மக்கள் நெருக்கம் அதி கமாக உள்ளதாகவும்,சிறிது சிறிதாக குறெந்து யாருமே இல்லெயாக கற்பனெ செய்யவும்.
5.இப்பொழுது உங்கள் மனம் வெற்றிடமாக உள்ளதாக எண்ணவும்.
6.அதில் உங்களுக்கு பிடிதத எஆதாவது ஒரு நடந்த நிகழ்ச்சி மருபடியும் கண்முன்பாருங்கள்.
7.இப்பொழுது உங்களுக்கு எந்த விஷ்யெம் நடக்க வேண்டி உள்ளதோ அதெ கண்முன் வரவெத்து நிரவேறுவது போல் கற்பனெ செய்யவும்.உதாரணமாக வீடு காட்ட வேண்டும் என்று நீங்கள் நினெத்தால் பணம் கிடெப்பது போல் நினெக்காமல்,வீடு கட்டி அதில் என்ன சாமான் வெக்கிறீர்கள்,எப்படி குடிYஏறுகிறீர்கள்.எப்படி எல்லாம் வாழுவதாக நினெக்கிறீகள் அதாக கற்பனெயில் வாழுவதக கண்முன் படம் ஓட்டவும்.
8.பின் வெள்ளெ ஒளி வானத்திலிருந்து உங்கள் உடம்பிற்குள் செல்வதாகவும் சுற்றிலும் பராவுவதாகவும் நினெ.
அடுத்து பச்செ ஒளி பரவுவதாக நினெ.
அடுத்து தங்க ஒளி பராவுவதாக நினெ.
9.கடெசியாக மூச்செ உள்ளிழுத்து வெளியே விட்டு பத்திலிருந்து ஒன்று வரெ எண்ணவும்.
10.இந்த பயிற்சி 30நிமிடமாக இருக்கவும்.
நான் புக்கில் படித்தது.யாராவது குருமூலம் கற்றவர்கள் உள்ளீர்களா?

மேலும் சில பதிவுகள்