பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா?

அறுசுவை தோழிகளே...

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் இனிதாக தொடங்கப்படுகிறது..

உயர்ந்தது எது? உறவா?(அம்மா அப்பா மட்டும் இல்லாம மற்ற அனைத்து சொந்தங்களும்..) நட்பா?

அவசர ஆபத்துக் காலத்தில் உதவுவது நண்பர்களா, சொந்தங்களா ? இந்த இரண்டிலும் உயர்ந்தது, ஏற்றது எது ?

உங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. ;-)

நடுவரே இதோ வந்துட்டேன். அப்பா அம்மா தவிர்த்த மற்ற உறவுகள்னா என் ஓட்டு நட்புக்குத்தான். வாதங்களோட வந்துக்கிட்டே இருக்கேன். அறுசுவை நட்புகள் கண்டிப்பாக எம் அணிக்கு கைகொடுப்பார்கள் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சிறந்த தலைப்பு . இந்த பட்டி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இன்னும் எந்த கட்சி என முடிவு செய்யவில்லை. தோழிகள்,தோழர்கள் வந்த பின் முடிவு செய்கிறேன்:)

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நடுவரே... நல்லதொரு தலைப்போடு வந்திருக்கீங்க... வாழ்த்துக்கள். நம்ம எந்த கட்சின்னு குழம்பிட்டோம் வழக்கம் போல... இருங்க கொஞ்ச நேரம் கழித்து எந்த அணி வெற்றி பெரும்'னு தோணுதோ அங்க தாவிடறேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கவிசிவா ஆரம்பித்து வைத்து விட்டார்கள். அண்ணண் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே, நடுவர் அவர்களே நண்பர்களே என்ற அணியில் இணைகிறேன்.

அன்புடன்
THAVAM

முடிவு பண்ணிட்டேன்... அப்பா, அம்மா'வ நான் உறவுகளா நினைக்கலப்பா... அவர்களால் கிடைத்த சொந்தங்கள், கணவர் வழி வரும் சொந்தங்களை மட்டுமே உறவுகள்'னு நினைக்கிறேன். காரணம் பெற்றோர், உடன் பிறப்பு, கணவர் எல்லாம் இரத்தத்தில் கலந்தவங்க, உறவுன்னு எட்ட வைக்க முடியல. அதனால் பெற்றோர், உடன் பிறப்பு, கணவர் தவிற மற்றவரை எல்லாம் உறவாக நினைத்து, என் ஓட்டு "நட்பு" அணிக்கு போடுறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

////வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே//// வாருங்கள் நண்பர்களே ஒன்றாக வாதாடுவோம். நல்ல நட்பை இதன் மூலம் வளர்ப்போம்.

ஆண்டவா.....

எல்லாரும் இப்படி நட்புக்கே ஓட்டு போட்டால நடுவர் என்ன செய்வது ;-) இவர்களை போட்டியிட ஆளே இல்லையா ? என்ன கொடுமை சார் இது ...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நட்பா, உறவா என்று பார்த்தால் என் வரையில் நட்புதான் பெரியது என்று உறவை உதாசினப்படுத்த முடியவில்லை. உறவுதான் பெரியது என்று நட்பை கீழே தள்ளவும் முடியவில்லை. சுவராஷ்யமான தலைப்பு. வாதாடுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Don't Worry Be Happy.


நடுவரே!
’’உறவுக்கு கை கொடுப்போம்

உரிமைக்கு தோள் கொடுப்போம்’’

‘வருவேன் வருவேன் மீண்டும் வருவேன்

தருவேன் தருவேன் தக்க பதில் தருவேன்’

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நடுவர் அவர்களே, உங்களுக்கு என் முதற்கண் காலை வணக்கம். சுவாரசியமான தலைப்பைதான் தந்துள்ளீர்கள். பட்டிமன்றம் சிறப்பாக நடைப்பெற என் வாழ்த்துக்கள். நான் வாதாடப்போகும் தலைப்பு "நட்பே" . நான் என்னுடைய வாதங்களோடு இதோ வந்துக்கொண்டே இருக்கிறேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

மேலும் சில பதிவுகள்