பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா?

அறுசுவை தோழிகளே...

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் இனிதாக தொடங்கப்படுகிறது..

உயர்ந்தது எது? உறவா?(அம்மா அப்பா மட்டும் இல்லாம மற்ற அனைத்து சொந்தங்களும்..) நட்பா?

அவசர ஆபத்துக் காலத்தில் உதவுவது நண்பர்களா, சொந்தங்களா ? இந்த இரண்டிலும் உயர்ந்தது, ஏற்றது எது ?

உங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. ;-)

நடுவர் அவர்களுக்கும் அன்பான நட்புள்ளம் கொண்ட தோழிகளுக்கும் உங்கள் அன்புத் தோழியின் வணக்கங்கள்.

அப்பா அம்மா அண்ணன் தம்பி எல்லாரும் வனிதா சொல்வது போல் நம் ரத்தத்தில் கலந்தவர்கள். அவர்களை என்னில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. மற்ற உறவுகள்......அது கொஞ்சம் சிக்கலானதுதான். அந்த உறவுகளில் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். எதையுமே எதிர்பாராததுதான் உண்மையான நட்பு.

அறுசுவையில் நமக்கு இருப்பது அன்பான நட்பே அன்றி வேறெந்த உறவும் இல்லை. நமக்கு ஒரு பிரச்சினை கஷ்டம் சந்தேகம் எது வந்தாலும் ஆலோசனை கேட்கவேண்டும் என்று யோசித்த உடன் நாம் வருவது அறுசுவைக்குத்தானே! ஏன் உறவுகளைக் கேட்பதில்லை. உறவுகள் தூரத்தில் இருக்கின்றனர் என்று சாக்கு சொல்லக்கூடாது எதிரணியினரே! இன்று உலகமே சுருங்கி நம் கைத்தொலைப்பேசியில் அடங்கி விட்டது. ஒரு ஃபோன் செய்தால் போதுமே! ஏன் செய்வதில்லை? அங்கு நமக்கான தீர்வு கிடைப்பது சந்தேகமே என்பது மட்டுமல்லாமல் கேலிப்பேச்சுக்களையும் கேட்க வேண்டுமே என்ற எண்ணம்தானே நம்மைத் தடுத்து நட்பைத்தேடி அறுசுவைக்கு ஓடி வர வைக்கிறது. இதிலிருந்தே தெரியவில்லையா நட்பின் அருமை.

உறவுக்கு கை கொடுப்போம்...எதிரணியினர் சொல்கின்றனர். நீங்க கைதான் கொடுப்பீங்க. நாங்கள் நட்புக்கு உயிரையும் கொடுப்போம்.

இன்று பெற்றோரைப் பிரிந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருக்கும் எங்களைப்போன்றவர்களுக்கு ஆபத்து காலத்தில் நட்புகள்தான் உதவுகின்றனர். இன்று வெளிநாடுகளில் வாழும் நம்மவர்களுக்கு பிரசவத்திற்கு முன் பேபி ஷவர் என்ற பெயரில் வளைகாப்பு நடத்துவதில் ஆரம்பித்து பிரசவ காலத்தில் ஷிஃப்ட் போட்டுக்கொண்டு உதவுவது வரை நண்பர்கள் மட்டுமே. பெற்றோர் உடன் இருந்தாலும் அவர்களுக்கும் சேர்த்தே நண்பர்கள் உதவுவார்கள்

உறவினருடன் மனம் விட்டுப் பேச முடியாது. என்றோ ஒருநாள் அது நமக்கு ஆப்பு வைக்கலாம். ஆனால் நட்பில் எல்லாம் நம்பிக்கையாக சொல்ல முடியும். இன்று எங்கள் பெற்றோர் தனியாக இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தேவையென்றாலும் உதவ ஓடி வருவது என் அண்ணாவின் நண்பர்கள்தான். இதனாலேயே எங்களால் இங்கு ஓரளவு நிம்மதியாக இருக்க முடிகிறது

என் திருமண நிச்சதாம்பூல விழாவுக்கு என் அண்ணனால் வரமுடியாத நிலை. ஒரு அண்ணனாக என்னென்ன வேலைகளெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்தது அவரின் நண்பர்கள்தான். பல உறவினர்களும் வந்தனர். ஆனால் உதவி... என்றால் அதைச்செய்தது நண்பர்கள்தான். நண்பர்கள் மட்டுமல்ல அவர்களது மனைவிகளும் கூட வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் செய்தனர். அந்த நேரத்தில் என் அம்மா முதுகுவலியால் கடுமையாக அவதிப்பட்ட நேரம். வந்தவர்களுக்கு ஒருவாய் காஃபி கூட கொடுக்க முடியாத நிலையில் எல்லாவற்றையும் நான் செய்து கொண்டிருந்தேன். இதைப்பார்த்த அடுத்த கணம் அவர்களது மனைவி எங்கள் வீட்டில். வந்த உறவுகள் கதைபேசிக்கொண்டு மட்டுமே இருந்தார்கள். இதுதான் உறவுகளுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம்.

நட்பில் நாம் சொல்லாமலேயே நம்மைப் புரிந்து கொள்வார்கள். உறவுகளில் அதை எதிர்பார்க்க முடியாது.

இன்னும் வாதங்களோடு வருவேன் எதிரணிக்கு பதில் கொடுக்க :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மோகனா

அப்பா..ஒரு வழியா எதிரணிய உருவாக்கிட்டீங்க.. எனக்கு தேவை பட்டி சூடு பிடிப்பது தான் ;-) வேறு என்ன நான் கேட்க போகிறேன்.. ? ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வணக்கம்,
நான் செந்தமிழ்,இந்த தலைப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.ஏனெனில் இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இந்த கருத்து அவசியம் அராயப்பட வேண்டிய ஒன்று. உறவுகளே உயர்ந்தது..... என என் வாதத்தினை ஆரம்பிக்கிரேன்.

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ


நடுவரே!
//அம்மா அப்பா மட்டும் இல்லாம மற்ற அனைத்து சொந்தங்களும்..)//
இப்படி சொன்னது நீங்க

//அப்பா அம்மா அண்ணன் தம்பி எல்லாரும் வனிதா சொல்வது போல் நம் ரத்தத்தில் கலந்தவர்கள். //
இப்படி சொல்லறது எதிரணிகாரா!

இன்னும் விட்டா மாமா,அத்தை, பாட்டி, தாத்தானுல்லாம் சேத்துப்பா போலிருக்கு..

உறவுதான் ஒசரம்னு நான் அடிச்சு சொல்வேன்.
நட்பு மட்டுமே போறும்னா எதுக்கு குடும்பம் கொழந்தை குட்டி எல்லாம்?.
ஒன்னுமில்லை வெளில போறோம். நாம எப்போ திரும்பி வருவோம்னு வாசலையே பாத்துண்டுருக்கறது யாரு?
கணவன் அல்லது மனைவி .
நமக்கு எதாவது ஆச்சுனா ஒறவுகாராலுக்குதான் மொதல்ல சொல்ரோம்.
ஏன்னா அவாதான் நமக்காக கவலை படரவா.
நட்பு நட்புனு சொல்றாளே அவா கிட்ட நண்பனோ நண்பியோ அவாத்ல போய்
கொறஞ்சது நாலு நாள் தங்க சொல்லுங்கோ.
முடியுமா? முடியாது, அவாத்ல கூட இருக்கறவா சம்மதிக்கனும்.
’’என் கூட இருக்கறவா சம்மதிகல்லை. அதனால நான் அவாளை எல்லாம் விட்டுட்டு ஒங்கூட வந்துடறேன்னு சொல்லிட்டு நட்பு வரமுடியுமா?’’

அதனால ஒறவுதான் ஒசத்தி ஒசத்தி ஒசத்தி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

நட்புக்கு ஜாதி மத பேதம் இல்லை. நாளைக்கே நம்ம வீட்டில் ஒன்னு காதல் திருமணம் செய்தால் பிரெச்சனை செய்து நம்மை தலைகுனிய வைத்து கைகொட்டி சிரிக்கும் உறவுகள். தோல் கொடுத்து ஆதரவு தந்து தூக்கி விடும் நண்பர்கள் கை.

நான் இதை செய்தேனே, நீ எனக்கு எதை செய்தாய் என்று கேள்வி கேட்க்கும் உறவுகள். நீ திட்டினாலும், அடித்தாலும் உனக்காக ஓடி வருவேன் என்று உதவுபவன் நண்பன்.

கடன் கேட்டால் ஓடி ஒலியும் உறவு... கேட்காமலே பணம் தந்து உதவும் நட்பு.

தனக்காக உன்னை மாற்றி கொண்டு விட்டுகொடுத்து போக சொல்லும் உறவுகள். உன்னை நீயாகவே ஏற்று கொண்டு நேசிக்கும் நட்பு.

இன்னும் அடுக்கிட்டே போலாம்... அவசர வேலை... மீண்டும் வருகிறேன் நடுவரே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என்னப்பா இது எல்லொரும் நட்பு நட்பு என வோட்டு போட்டுக்கிட்டு இருக்காங்க..மாமி மாமி நீங்க உறவுகள் பக்கம்தானே....வாங்கப்பா எல்லோரும் வந்து உறவுக்கு குரல் குடுங்கப்பா......

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

தோழிகளுக்கு வணக்கம். உறவுகளே சிறந்தது என்ற அணியில் வாதிடவே விரும்புகிறேன்.தோழி செந்தமிழ் கூறி உள்ளது போல் இன்றைய சூழலில் அவசியம் ஆராயப்பட வேண்டிய விஷ்யம் தான் இது.

பொதுவாக இரத்த பந்தம் இல்லாமல் நமக்கு ஏற்படும் “உறவு” தான் நட்பு.மேலும் அது நாமாகத் தேடிக் கொள்வது.நம் மனதிற்குப் பிடித்துப் போகும்/ஒத்துப்போகும் நபர்களுடன் ஏற்படுவதுதான் நட்பு.நமக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்த்தெடுத்து விட்டு அது தான் உயர்ந்ததது/சிறந்தது என்று கூறுவது சரியாகப் பட வில்லை.உறவுகளே சிறந்தது என்பதே என் வாதம்.

நடுவர் அவர்களே உயர்ந்தது என்றுமே உறவு தான். நம் பிறப்பு முதல் கடைசி வரை தோள் கொடுப்பது உறவு தான். இடையில் வந்து தொலைந்து போவது நட்பு தான்.உறவு இருக்கும் இடத்தில் தான் உரிமை இருக்கும்.இன்னும் வாதங்களோட் வருகிரேன்

நான் நட்பே சிறந்தது என்கிற அணியில் பேசபோகிறேன்.நாம் தேடாமலே வருவது வுறவுகள்.நாம் ஒருவரை பார்த்து அவர்கள் குணங்களால் ஈர்க்கப்பட்டு நெருங்குவதே நட்பு.பார்த்து என்ன பார்க்காமலே நம் அறுசுவையில் இத்தனை நண்பர்கள் தோழிகள் இல்லையா. இதுவே ஒரு சிறந்த வுதாரணம். முகம் தெரியாத நண்பர்களிடம் நாம் நம் சொந்த விசயங்களைகூட ஷேர் பண்ணிக்கிறோம். இதிலிருந்தே தெரிய வில்லையா நட்பின் சிறப்பை. மேலும் என் வாதத்தை அடுத்த பதிவில் தொடர்கிறேன்

அப்பப்பா அதற்குள் பட்டி சூடு பிடித்து விட்டதா ? சரி அது தானெ எனக்கு வேண்டும்.. ;-)

//உறவுக்கு கை கொடுப்போம்...எதிரணியினர் சொல்கின்றனர். நீங்க கைதான் கொடுப்பீங்க. நாங்கள் நட்புக்கு உயிரையும் கொடுப்போம்.//

அடடா என்ன ஒரு வரி.. நட்பில் உயிரை கொடுக்க வருவார்கள் என நட்பின் பெருமையை ஒரே வரியில் கூறிவிட்டார் கவிசிவா?
எதிரணி பதில் சொல்லுங்க .. இன்னும் ஸ்ட்ராங்கான வாதத்துடன்

//நட்பில் நாம் சொல்லாமலேயே நம்மைப் புரிந்து கொள்வார்கள். உறவுகளில் அதை எதிர்பார்க்க முடியாது.//

உறவுகளில் எதிர்பார்க்க முடியும்னு ஆணித்தரமா சொல்ல வேண்டாமா? வாங்க பாப்போம் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்