பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா?

அறுசுவை தோழிகளே...

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் இனிதாக தொடங்கப்படுகிறது..

உயர்ந்தது எது? உறவா?(அம்மா அப்பா மட்டும் இல்லாம மற்ற அனைத்து சொந்தங்களும்..) நட்பா?

அவசர ஆபத்துக் காலத்தில் உதவுவது நண்பர்களா, சொந்தங்களா ? இந்த இரண்டிலும் உயர்ந்தது, ஏற்றது எது ?

உங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. ;-)

வாங்க தமிழ்

உங்கள மாதிரி ஒரு ஆளைத்தான் தேடிக்கிட்டு இருந்தேன்.. கலக்குங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மதிப்பிற்குரிய நடுவர் அவர்களுக்கும் பங்கு பெறும் அனைவருக்கும் வணக்கம்!

மிக நல்ல தலைப்பு. பட்டி மன்ற தலைப்பை பார்க்கும்போது, எந்தப் பக்கம் பேசுவது, இரண்டுமே சரிதானேன்னு தோணனும். அப்பதான் இரண்டு பக்கத்திலும் நிறைய அழுத்தமான கருத்துகளுடன் வாதாட முடியும். பட்டிமன்ற நட்சத்திரம் ஜெயலக்ஷ்மியின் பதிவு இந்தத் தலைப்பின் சிறப்பை சொல்கிறது. இந்தப் பதிவின் மூலம் அவங்களுக்கு ஏதாவது ஒரு பக்கத்தில் வந்து, வாதாடும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.

காலையில் பதிவு பார்த்தேன். நட்பு உயர்ந்தது என்பதில் சந்தேகமேயில்லை. நானும் முதலில் நட்பு கட்சியில் பேச நினைத்தேன். ஆனால், நிறைய பேர் நட்பின் சிறப்பை பேசத் தயாராக இருக்காங்க. அதனால், இப்போ உறவின் மேன்மையை எடுத்து சொல்லணும் என்பதற்காக உறவுகள் கட்சியில் பேச விரும்புகிறேன்.

கருத்துகளைத் தொகுத்துக் கொண்டு வருகிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

வாங்க வந்துட்டீங்களா ? வாதத்தோட

//நட்பு மட்டுமே போறும்னா எதுக்கு குடும்பம் கொழந்தை குட்டி எல்லாம்?.//

அட நல்ல கேள்வி ஆச்சே.... !

நம்ம அருமை மோகனா.. உறவுதான் ஒசத்தினு ஏலம் போட்டு அழுத்தி சொல்லிட்டாங்க.. நட்பே என்ன சொல்ல போறீங்க ?

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நானும் உறவுக்கு கைகொடுப்போம் பக்கம்தான். நட்பும் உசத்திதான்.
ஆனா ஒருபக்கம்தான் வாதாடனுனா என் ஓட்டு உறவுகளுக்கே. அம்மா
அப்பாவை விட்டுடலாம். கணவன் மனைவி பக்கம் பார்க்கலாமே. எங்கியோ
பிறந்து வளர்ந்த இருவர் திருமண பந்தத்தில் இணைந்த பிறகு ஓர் உயிர்
ஈருடலாகத்தானே வாழ்கிறார்கள்.புருஷனுக்கு ஒன்னுன்னா பொண்ட்டாட்டிக்கு எவ்வளவு ஃபீலாயிடரது. அவருக்கு பசி தாங்காது, குழந்தைகலை கோச்சுண்டா பிடிக்காது என்று பார்த்துப்பார்த்து அவரையும் சந்தோஷப்படுத்தி நாமும் சந்தோ
ஷமடைவது, உறவுகளில் தானே சாத்தியம். என்ன கோவத்லயும் கணவர் நம்மை கடிந்து கொண்டாலும் அவ்வளவு பெர்சா நமக்கு தோணாது. பாவம் என்ன டென்ஷனோ அதுதான் கொபப்படரார். ஆற ,அமற, விசாரிச்சுக்கலாம் என்று
பிரச்சினைகளை ஆறப்போடுவதும் உறவுகளில் தான் முடியும்.என் தம்பி பொண்டாட்டி, என் அண்ணா பொண்டாட்டி, எந்தங்கச்சி குழந்தைக என்று
எவ்வளவு பெருமையா அறிமுகப்ப டுத்திக்க முடியரது. எல்லா குடும்பங்களிலும்
உறவுக்காரா முரைச்சுண்டு இருக்கரதில்லை. ரொம்ப அன்னியோன்னியமா
இருக்கும் உறவுக்காரா ஃபேமிலி ஆட்களை கண்டு நான் பிரமிச்சு போயிருக்கேன்.
பாக்கப்போனா பர்சனலா எனக்கு கூடப்பிறந்தவான்னு யாரும் இல்லை.
எங்க ஃபேமிலி ஆட்கள் என்பது ரொம்பவே குறுகிய வட்டம்தான். ஆனா நான்
பார்த்த ஒரு ஃபேமிலியில் அதுவும் ஒரு கூட்டுக்குடும்ப ஃபேமிலியில் நான்
பார்த்து அடைந்த சந்தோஷம்தான் என்னை உறவு பக்கம் பேசவே இழுக்கிரது.

வனிதா

அட்டகாசமா ஒரு கவிதை மாதிரி இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை சொல்லிட்டாங்க.. அவங்களுக்கு அவசர வேலையாம் .. இதிலேயே நல்ல நல்ல பாயிண்டுனா பொறுமையா வந்தாங்கனா எப்படி போகும்னு எதிரணியினரே முடிவு பண்ணிக்கங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாங்க சாந்தினி..

வுமன் ஆஃப் தி மேட்ச் ஆச்சே.. சொல்லவா வேணும்.. ஏது நல்ல அணி உருவாயிடுச்சு போல.. ;)

//உறவுகளே சிறந்தது//

அப்படினு எதுகை மோனையோட சொல்லிட்டாங்க .. ஹ்ம்ம்

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கீதா

//நம் பிறப்பு முதல் கடைசி வரை தோள் கொடுப்பது உறவு தான். இடையில் வந்து தொலைந்து போவது நட்பு தான்.உறவு இருக்கும் இடத்தில் தான் உரிமை இருக்கும்//

அட யோசிச்சு பாத்தா சரினு சொல்ல வெக்குதே.. வாங்க வாங்க ..வாதம் தானே வேண்டும் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


நடுவரே!
எதிரணியினரை நன்னா யோசிச்சு சொல்ல சொல்லுங்கோ பாக்கலாம்.
உறவு சம்மதிக்கலேனா ஏது நட்பு?
நேக்கு நட்புனு சொல்லிக்கறவாளா இருக்கறவா யாருனு தெரியுமோ!
என் ஓர்ப்படி,தம்பி ஆம்படையாள்,நாத்தனார் மற்றும் என் சொந்தக்காரா அத்தனை பேரும்தான்.!
எதிரணிகாரா நட்பை வெளில தேடரா!
அவாளால நாத்தனாரயோ, ஓர்படியையோ, தம்பி ஆம்படையாளையோ ஏன் நட்போட பாக்க முடியல்லை.
அதுக்கு காரணம் அவா ஈகோதான்.
நண்பன் சொன்னா கேப்பாளாம்.
நாத்தனார் சொன்னா வேப்பங்காயாம்

அதனால ஒறவுதான் ஒசத்தி ஒசத்தி ஒசத்தி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

சுந்தரி

முகம் தெரியாத ஒருவரிடம் நம்மை பற்றி பகிர்ந்து கொள்கிறோம்னா அது நட்பால் தானேனு சொல்றாங்க.. என்ன கூறுகிறீர்கள் எதிரணி

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சீதாலக்ஷ்மி அவர்களே..

வாங்க வாங்க.. நீங்கள் உறவு பக்கமா..? பெரிய கூட்டணியே உறவின் பக்கம் சென்று கொண்டுள்ளது.. நட்பிற்கு சிறிது கடினம் தானோ .. ? ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்