பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா?

அறுசுவை தோழிகளே...

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் இனிதாக தொடங்கப்படுகிறது..

உயர்ந்தது எது? உறவா?(அம்மா அப்பா மட்டும் இல்லாம மற்ற அனைத்து சொந்தங்களும்..) நட்பா?

அவசர ஆபத்துக் காலத்தில் உதவுவது நண்பர்களா, சொந்தங்களா ? இந்த இரண்டிலும் உயர்ந்தது, ஏற்றது எது ?

உங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. ;-)

உறவுகளை அரவணைத்துச் செல்வது என்பது ஒரு கலை.. அந்தக் கலை அழிந்து வருகிறது என்பது தான் உண்மை. காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத போது
நண்பர்கள் தான் உதவுவார்கள். இல்லை என்று கூறவில்லை. ஆனால் அப்படிக் காதல் திருமணம் புரிந்தவர்கள் பெரும்பாலும் பெற்றோர் தேவை இல்லை எனக் கூறி அப்படியே
வாழ விரும்புவது இல்லை. குடும்பத்தாருடன் இணையவே விழைகின்றனர்.

நாம் தேர்வு செய்யும் நட்பு நல்ல நட்பாக இருக்கும் வரை பிரச்சினை இல்லை. ஆனால் கூடா நட்பினால் இழந்தவர்கள் பலர். மேலும் நல்ல நட்புகளை நாம் குடும்ப அங்கத்தினராகவே தான் பார்கிறோம். ஒரு உறவாகவே தான் பார்க்கிறோம். அண்ணனின் நண்பனை அண்ணாகவும்( காதலன்/காதலி ஆவது எல்லாம் தனிக் கதை :P இருந்தாலும் அவர்களும் உறவு வட்டத்திற்குள் தான் வந்து சேர்வார்கள் கடைசியில் :)),தங்கையின் நண்பர்களை தங்கையாகவும்,பெற்றோரின் நண்பர்களை மாமா.அத்தை என உறவு வட்டத்திற்குள் தானே இணைக்கிறோம்.உறவு என்பதே நிலையானது. பேச்சு வார்த்தை இல்லாமல் போவது, சண்டை சச்சரவு என ஆயிறம் வந்தாலும் உறவும், உறவு
முறையும் அழியாது.

நட்பிற்கு ஜாதி மதம் கிடையாது.உண்மை தான். ஆனால் நட்பு பிடிக்க வில்லை என்றால் விலகிக் கொள்ளலாம்.அதில் ஒரு தேவையும் ,தேவை அற்ற தன்மையும் அடங்கி இருக்கிறது. ”வேணும்னா வச்சுக்கலாம் வேண்டம்னா விலகிக் கொள்ளலாம்” என்ற வசதி இருப்பதாலேயே அது எனக்குச் சிறந்ததாகத் தெரிவில்லை...

கோமு

நீங்களும் உறவா....? சரி.. ..ஒரு கூட்டு குடும்ப அன்பே என்னை உறவை பற்றி பேச ஈர்த்ததுனு அனுபவப் பூர்வமா சொல்லிட்டாங்க.. இன்னும் வாதத்தோட வாங்க ..;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

/அந்த உறவுகளில் எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்/
ஆம் உண்மை தான். ஒரெ ஒரு எதிர்பார்ப்பு அன்பு மட்டுமே . 20 வயதில் நமக்கு 40 நண்பர்கள் இருந்தால் 40 வயதில் 4 நண்பர்கள் தான் இருப்பார்கள். இதே உறவு என்றால் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகும்.
/நீங்க கைதான் கொடுப்பீங்க. நாங்கள் நட்புக்கு உயிரையும் கொடுப்போம்./ஆதரவு தேடும் நேரம் என்றால் நாம் விழும் நேரம் தான். அந்த நேரத்தில் எழும்ப கை கொடுத்தால் தான் உதவியாக இருக்கும் தோழி.உயிர் கொடுத்தால் அல்ல

நட்பு கூட்டணியே இங்க வாங்க சீக்கிரம்..

//ஏன் நட்போட பாக்க முடியல்லை.//

உறவுகளிலேயே ஏன் உங்களால் நட்பை தேட முடியவில்லைனு நச்சுனு கேட்டுட்டாங்க மோகனா.. எதிரணியினரே விளக்கம் ப்ளீஸ்.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நான் நட்பு பக்கம். பாக்கப்போனா என்னைசேர்ந்த உறவு ஜனங்க ரொம்பவே
நிறைய இருக்காங்க. ஆனா கூட நான் நட்பு பக்கம் பேச வந்திருக்கேன்.
வேலை நிமித்தமா நாம எல்லாம் வெளி ஊரு, வெளி மானிலங்கள் என்று
செல்ல வேண்டி இருக்கு. போற் இடங்களில் எல்லாம் நமக்கு பக்க பலமாக
இருப்பது நண்பர்கள் வட்டாரம் தான். உயிர்காப்பான் தோழன் என்று பழமொழி
சும்மா பேச்சுக்காக சொன்னதில்லை.

அய்யோ அய்யோ

இந்த சாந்தினி என்னமா விளக்கம் குடுத்திருக்காங்க.. உறவுகளை அரவணைத்து செல்வது ஒரு கலை.. என்ன ஒரு பாய்ண்டு.. காதல் திருமணத்தை நட்பின் உதவியால் செய்தாலும் உறவுகளை அவர்கள் திரும்ப பெற நினைப்பது உண்மைதானே.

//”வேணும்னா வச்சுக்கலாம் வேண்டம்னா விலகிக் கொள்ளலாம்”//

நட்ப பாத்து இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டாங்களே.. எதிரணியினரே பொங்கி எழுங்கள்... ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

உமா

வாங்க... எனக்கென்னவோ உமா சொல்வது தான் சரி எனப் படுகிறது..

அட போற எடமெல்லாம் உறவ கூடவா கூட்டி போறீங்க.. அங்க நட்பு தானே பக்க பலமா இருக்குனு கேக்கறாங்க.. பதில் சொல்லுங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//பொதுவாக இரத்த பந்தம் இல்லாமல் நமக்கு ஏற்படும் “உறவு” தான் நட்பு.மேலும் அது நாமாகத் தேடிக் கொள்வது.நம் மனதிற்குப் பிடித்துப் போகும்/ஒத்துப்போகும் நபர்களுடன் ஏற்படுவதுதான் நட்பு.நமக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்த்தெடுத்து விட்டு அது தான் உயர்ந்ததது/சிறந்தது என்று கூறுவது சரியாகப் பட வில்லை//
நீங்கள் கணவரையும் உறவு அணியில் சேர்த்து விட்டதால் கேட்கிறேன் கணவரும்(மனைவியும்) தேடி தேர்ந்தெடுக்கப்பவர்தானே? அப்போ அவரை சிறந்தவர் உயர்ந்தவர் என்று பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லையே!

//நடுவர் அவர்களே உயர்ந்தது என்றுமே உறவு தான். நம் பிறப்பு முதல் கடைசி வரை தோள் கொடுப்பது உறவு தான்.//

கடைசி வரை தொல்லைக்கொடுப்பதுன்னு வேணும்னா சொல்லுங்க ஒத்துக்கறேன். தோள் கொடுப்பான் தோழன்னுதான் சொல்லியிருக்காங்க. தோள் கொடுப்பான் உறவினன்னு சொல்லலை.

//நேக்கு நட்புனு சொல்லிக்கறவாளா இருக்கறவா யாருனு தெரியுமோ!
என் ஓர்ப்படி,தம்பி ஆம்படையாள்,நாத்தனார் மற்றும் என் சொந்தக்காரா அத்தனை பேரும்தான்.!
எதிரணிகாரா நட்பை வெளில தேடரா//

உறவுதான் உசத்தின்னு சொல்லிக்கிட்டே உறவுகள்கிட்ட நட்பா இருக்கறாங்களாம். நட்பு உறவை விட உசத்தி இல்லேன்னா உறவாவே இருக்க வேண்டியதுதானே. ஏன் அவர்கலிடம் நட்பை எதிர்பார்க்கிறீர்கள்? இதிலிருந்தே தெரியலியா நட்புதான்னு சிறந்ததுன்னு.

//அதுக்கு காரணம் அவா ஈகோதான்.
நண்பன் சொன்னா கேப்பாளாம்.
நாத்தனார் சொன்னா வேப்பங்காயாம்//

நீங்களே சொல்லிட்டீங்க உறவில்தான் ஈகோ இருக்குன்னு. அப்புறம் எப்படி உறவு சிறந்ததாக இருக்க முடியும்?

//வேணும்னா வச்சுக்கலாம் வேண்டம்னா விலகிக் கொள்ளலாம்” என்ற வசதி இருப்பதாலேயே அது எனக்குச் சிறந்ததாகத் தெரிவில்லை...//

இதுதாங்க உறவுக்கும் நட்புக்கும் உள்ள வித்தியாசம். கூடா நட்புன்னு புரிஞ்சிடுச்சுன்னா விலகிடலாம். ஆனா உறவுகளைத் தூக்கி எறிய முடியாது. சுமையாக தூக்கித் திரியணும். அதனால் வரும் சிரமங்களையும் அனுபவிக்கணும். இதெல்லாம் தேவையா? வேண்டாம்னு எறியவும் முடியாது வேணும்னு சேர்த்துக்கவும் முடியாது. இருதலைக்கொள்ளி எறும்பா தவிக்கணும். அப்புறம் எப்படி உறவுகள்தான் சிறந்ததுன்னு சொல்ல முடியும்?

//20 வயதில் நமக்கு 40 நண்பர்கள் இருந்தால் 40 வயதில் 4 நண்பர்கள் தான் இருப்பார்கள். இதே உறவு என்றால் எண்ணிக்கை கூடிக்கொண்டேதான் போகும்.//

அந்த நான்கு நண்பர்களும் நெருக்கமானவர்களாக இருப்பார்கள். உறவுகளின் எண்ணிக்கை மட்டுமே அதிகரிக்கும் ஆனால் எல்லோரிடமும் நெருக்கம் இருக்குமான்னா இருக்காது. எணிக்கை அதிகரிக்க அதிகரிக்க பிரச்சினைகளும் அதிகரிக்கும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கீதா

உறவு எதிர்பார்க்கும் தான் .. அந்த எதிர்பார்ப்பு அன்பு ஒன்றேனு அழகா சொல்றாங்க..

ஆமா கரெக்ட் தானே உயிர் கொடுத்து என்ன செய்வது?.. உயிர் போய்விட்டால் எப்படி உதவ முடியும்.?. தேவையான நேரத்தில் கை தானே கொடுக்க வேண்டும்..ஹீ ஹீ ஹீ.. எனக் கேட்கிறார் கீதா...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

கவிசிவா

பொங்கி எழுந்துட்டாங்க..
//தோள் கொடுப்பான் தோழன்னுதான் சொல்லியிருக்காங்க. தோள் கொடுப்பான் உறவினன்னு சொல்லலை.//

உண்மை தான்

//உறவுதான் உசத்தின்னு சொல்லிக்கிட்டே உறவுகள்கிட்ட நட்பா இருக்கறாங்களாம். நட்பு உறவை விட உசத்தி இல்லேன்னா உறவாவே இருக்க வேண்டியதுதானே. ஏன் அவர்கலிடம் நட்பை எதிர்பார்க்கிறீர்கள்? இதிலிருந்தே தெரியலியா நட்புதான்னு சிறந்ததுன்னு.//

இது தான் கிடுக்கிபுடி.. ஆமா உறவோடயே இருக்க வேண்டியது தானே..
அடடா உறவிலே ஈகோ இருக்குனும், கூடா நட்புனா விலகிக்கலாமுனும் சொல்லிட்டாங்க.. எதிரணியே என்ன சொல்றீங்க.. உங்க பாயிண்டிலேயே அவங்க பாயின்ட் பாயின்ட்டா புடிக்கறாங்க...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்