பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா?

அறுசுவை தோழிகளே...

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் இனிதாக தொடங்கப்படுகிறது..

உயர்ந்தது எது? உறவா?(அம்மா அப்பா மட்டும் இல்லாம மற்ற அனைத்து சொந்தங்களும்..) நட்பா?

அவசர ஆபத்துக் காலத்தில் உதவுவது நண்பர்களா, சொந்தங்களா ? இந்த இரண்டிலும் உயர்ந்தது, ஏற்றது எது ?

உங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. ;-)

//சாந்தினி..
நீஙக் உண்மையாவே பயப்படுத்திட்டீங்க.. //

பயப்படும் அளவுக்கு என்ன செய்தேன் ரம்யா??!! :(

சாந்தினி

வாதத்தால் மற்றவரை பயப்பட வைப்பது தானே சிறந்த பேச்சாளர் ;) பட்டியை பொறுத்தவரை.. எப்படி தீர்ப்பு சொல்ல போறேனுதான் பயப்படுத்திட்டிங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இந்த பட்டிமன்றத்தில் என்னால் கலந்துகொள்ள இயலவில்லை. நல்ல தலைப்பைத் தேர்ந்தெடுத்து பட்டிமன்றத்தை மிகவும் திறம்பட நடத்திச் சென்றிருக்கின்றீர்கள். ஒரு கடின வேலையை செய்து தீர்ப்பையும் அழகாக கூறியுள்ளீர்கள். நல்ல தீர்ப்பு. நல்ல தீர்ப்புரை. வாழ்த்துக்கள்

தீர்ப்பை மட்டும்தான் படித்தேன். நிறைய வாதங்களை இன்னும் படிக்கவில்லை. சிலவற்றை மட்டுமே படித்தேன். பக்கம் பக்கமா இருக்குறத பார்த்தாலே கண்ண கட்டுது. நிறைய அனல்பறக்கும் வாதங்கள். அடிபட்டவங்க நிறைய பேர் இருக்காங்க போல. நேர்ல நடந்திருந்தா “ஏய் எத்தன தடவ சொல்றேன். மண்டையில ஏறல” ன்னு எதிரணிய புடிச்சு அடிய போட்டிருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அவ்ளோ emotions. எப்படித்தான் எல்லாத்தையும் படிச்சு தீர்ப்பு சொன்னீங்களோ?

பட்டிமன்றத்தில் பங்கு கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,
இஷானி

கரக்ட் இஷானி, பக்க பக்கமா இருக்கிறது படிக்க ரொம்ப கஷ்டமாயிருந்தாலும், எல்லாரும் சொந்தங்களால ரொம்ப பட்டு அத இங்க கொட்டி ஆறுதல் அடைஞ்சிருக்காங்கேனே தோணுது. மனசுல இருந்தத வெளியில கொட்டி தீர்த்துட்டாங்க. எப்படியோ அவங்க மன பாரம் இந்த பட்டியோட தீர்ந்தா சரி.

Don't Worry Be Happy.

இஷானி

உங்களுக்கு தெரியுமா? முதன்முதலில் என்னை நடுவராக பங்கு பெற கூறியவர் நீங்கள் தான்.. பாராட்டுக்கு நன்றி..

சரிதான் குடுமி சண்ட தான் போடல போங்க ;)

எனக்கும் படிக்கும் போது கண்ண கட்டுச்சு.. கரெக்ட்டா அந்த வாரம் வேலையும் கூட, ஒர் தொடர்ந்து நாலு மணி நேரம் அப்டேட் செய்யாவிட்டால் முன்று பக்கம் வரை சென்றுவிடிகிறது பதிவு.. எப்படியோ டைம் டு டைம் படிச்சு கரை சேத்துட்டேன். ;) அடுத்த முறை அவசியம் கலந்துக் கொள்ளுங்கள். ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

இமா, இலா, இளவரசி

இவங்க மூனு பேரும் மிஸ்ஸிங்.. இமா & இலா அடுத்த பட்டியில் கண்டிப்பா கலந்தக்கனும்னு ஒரு பதிவுல பாத்த நியாபகம்.. ஆனா கலந்திக்கல ;(

இளவரசி தான் வர இன்னும் ரெண்டு மாசம் ஆகும்னு ஊருக்கு போயிட்டாங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்