பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா?

அறுசுவை தோழிகளே...

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் இனிதாக தொடங்கப்படுகிறது..

உயர்ந்தது எது? உறவா?(அம்மா அப்பா மட்டும் இல்லாம மற்ற அனைத்து சொந்தங்களும்..) நட்பா?

அவசர ஆபத்துக் காலத்தில் உதவுவது நண்பர்களா, சொந்தங்களா ? இந்த இரண்டிலும் உயர்ந்தது, ஏற்றது எது ?

உங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. ;-)


எதிரணியினரே!

//உயிர்காப்பான் தோழன்//

ஆமா ஆனா காப்பத்தின உயிரை தக்க வெச்சுக்க நாம நாடி போறது எங்க?

ஒறவுகள்கிட்டெதானே!

அப்போ காப்பத்தினவா ஒசத்தியா?

காப்பத்ன உசுரை கடைசி வரைக்கும் காப்பாத்தரவா ஒசத்தியா?

எங்கேயும் போக வேண்டாம். ந்ம்ம அறுசுவைல எல்லாரும் நண்பர்கள்தானே!

அப்பொ ஏன் அக்கா, அண்ணானு கூப்படனும்?

அண்ணானு கூப்டா வர நெருக்கம் நண்பானு கூபடறதுல வர்ரதில்லை

நண்பன் கோச்சுண்டா ’ மச்சி அவ்ன் எங்கூட பேசமாட்டென்ராண்டா’னு எவ்வளவு ஃபீல் பண்றேள்?

அதுல நூத்துல இல்ல இல்ல ஆயிரத்துல ஒரு பங்கு மாமியாரோ இல்லை மத்தவாளோ கோச்சுண்டா மூஞ்சிய தூக்கி வெச்சுண்டு மோட்டு வளைய பாத்துண்டு ஒக்காந்துண்டு இருப்பேளே தவற ஆத்துக்கரர் கிட்டே’’ ஒங்கம்மா என்கூட பேசலை. என்கூட பேச சொல்லுங்ககொ’’னு சொல்லிருக்கேளா’

அத்னால ஒறவே ஒசத்தி ஒசத்தி ஒசத்தி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

//அப்பொ ஏன் அக்கா, அண்ணானு கூப்படனும்?

அண்ணானு கூப்டா வர நெருக்கம் நண்பானு கூபடறதுல வர்ரதில்லை

//

இது சரியான கேள்விதான் நல்லா கேளுங்க..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


எதிரணியினரே!
//என் திருமண நிச்சதாம்பூல விழாவுக்கு என் அண்ணனால் வரமுடியாத நிலை. ஒரு அண்ணனாக என்னென்ன வேலைகளெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்தது அவரின் நண்பர்கள்தான்.//

ஏன் ’’அண்னா’’வோட ந்ண்பர்கள் வரனும்னு யொசிச்சேளா.?
அடுத்த வீட்டு நண்பர்கள் வல்லியே?

//பல உறவினர்களும் வந்தனர்.//
ஆனால் உதவி... என்றால்//
ஒதவி செய்யாதவாளை ஏன் கூப்பிடனும்.?

//அதைச்செய்தது நண்பர்கள்தான். நண்பர்கள் மட்டுமல்ல அவர்களது ’’மனைவி’’களும் கூட வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் செய்தனர். //
மனைவி அனுமதிகாட்டா அவாளால் ஒத்தாசை பண்ணிருக்க முடியுமா?

//அந்த நேரத்தில் என் அம்மா முதுகுவலியால் கடுமையாக அவதிப்பட்ட நேரம். வந்தவர்களுக்கு ஒருவாய் காஃபி கூட கொடுக்க முடியாத நிலையில் எல்லாவற்றையும் நான் செய்து கொண்டிருந்தேன்//
ஒரு வார்த்தை சொல்லி ஒதவினு கேட்டேளா?

ஈகோ தடுத்துருக்கும்.நீங்க கேட்டாதான் செய்வா. உரிமையோட அத்தை இதை செய்ங்கோ? மன்னி இதை செய்ங்கோனு சொல்லாம இருந்துட்டு நன்னா அவாளை குத்தம் சொல்றேள் போங்கோ. பேஷ் பேஷ் !

அதனால ஒறவே ஒசத்தி ஒசத்தி ஒசத்தி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

//அப்போ காப்பத்தினவா ஒசத்தியா?

காப்பத்ன உசுரை கடைசி வரைக்கும் காப்பாத்தரவா ஒசத்தியா?//

அடடா என்னா கண்டு பிடிப்பு. உசிரு போனதுக்கப்புறம் உறவுகள் வந்து பிரயோஜனமே இல்லியே! இதுதாங்க உறவு. உதவினவளை தூக்கி எறியறதே உறவுகள்தான்.

//எங்கேயும் போக வேண்டாம். ந்ம்ம அறுசுவைல எல்லாரும் நண்பர்கள்தானே!

அப்பொ ஏன் அக்கா, அண்ணானு கூப்படனும்?

அண்ணானு கூப்டா வர நெருக்கம் நண்பானு கூபடறதுல வர்ரதில்லை//

அதெல்லாம் வயதுக்கு கொடுக்கும் மரியாதையே தவிர உறவை சொல்லி கூப்பிட்டால்தான் நெருக்கம் வரும்கறதுக்காக இல்லை.

//நண்பன் கோச்சுண்டா ’ மச்சி அவ்ன் எங்கூட பேசமாட்டென்ராண்டா’னு எவ்வளவு ஃபீல் பண்றேள்?

அதுல நூத்துல இல்ல இல்ல ஆயிரத்துல ஒரு பங்கு மாமியாரோ இல்லை மத்தவாளோ கோச்சுண்டா மூஞ்சிய தூக்கி வெச்சுண்டு மோட்டு வளைய பாத்துண்டு ஒக்காந்துண்டு இருப்பேளே தவற ஆத்துக்கரர் கிட்டே’’ ஒங்கம்மா என்கூட பேசலை. என்கூட பேச சொல்லுங்ககொ’’னு சொல்லிருக்கேளா’ //

திருப்பியும் சேம் சைட் கோல் போடறீங்களே! ஒங்கம்மா என்கூட பேசலை. என்கூட பேச சொல்லுங்ககொ’’னு சொல்லாம இருக்கறதுலயே தெரியலியா அந்த உறவுக்குள் நெருக்கம் இல்லேன்னு. அப்புறம் எப்படி அதை உசத்தின்னு சொல்றீங்க?

//ஏன் ’’அண்னா’’வோட ந்ண்பர்கள் வரனும்னு யொசிச்சேளா.?
அடுத்த வீட்டு நண்பர்கள் வல்லியே?//

அடுத்தவீட்டில் நம் நண்பர்கள் இருந்திருந்தால் வந்திருப்பார்கள். நட்பு இருக்கறவர்களால்தான் செய்ய முடியுமே தவிர ரோட்டில் போறவன் வாறவன் எல்லாம் உதவி செய்யணும்னு எதிர்பார்க்க முடியாது.

////பல உறவினர்களும் வந்தனர்.//
ஆனால் உதவி... என்றால்//
ஒதவி செய்யாதவாளை ஏன் கூப்பிடனும்.?//

கூப்பிடலேன்னா அதுக்கும் இந்த உறவுகள் பிரச்சினை பண்ணுமே! அதுக்கு என்ன சொல்றீங்க?

////அதைச்செய்தது நண்பர்கள்தான். நண்பர்கள் மட்டுமல்ல அவர்களது ’’மனைவி’’களும் கூட வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் செய்தனர். //
மனைவி அனுமதிகாட்டா அவாளால் ஒத்தாசை பண்ணிருக்க முடியுமா? //
அப்போ உதவுபவர்களை தடுப்பவர்களும் உறவுகளில் இருக்கிறார்கள்னு ஒத்துக்கறீங்களா?

/////அந்த நேரத்தில் என் அம்மா முதுகுவலியால் கடுமையாக அவதிப்பட்ட நேரம். வந்தவர்களுக்கு ஒருவாய் காஃபி கூட கொடுக்க முடியாத நிலையில் எல்லாவற்றையும் நான் செய்து கொண்டிருந்தேன்//
ஒரு வார்த்தை சொல்லி ஒதவினு கேட்டேளா?//

நீங்களே சொல்லிட்டீங்க உறவுகள்கிட்ட உதவீன்னு கேட்டு நின்னாத்தான் செய்வாங்கன்னு. ஆனா நண்பர்கள்கிட்ட கேட்கவே தேவையில்லை. அவர்களாகவே புரிந்து உணர்ந்து செய்வார்கள். அதுதான் நட்பு.

//ஈகோ தடுத்துருக்கும்.நீங்க கேட்டாதான் செய்வா. உரிமையோட அத்தை இதை செய்ங்கோ? மன்னி இதை செய்ங்கோனு சொல்லாம இருந்துட்டு நன்னா அவாளை குத்தம் சொல்றேள் போங்கோ. பேஷ் பேஷ் !//

ஏன் அந்த ஈகோ வந்தது அது உறவுகளாக இருக்கப்போய்தானே! சரி நான் தான் கேட்கவில்லை. அவர்கள் நீங்க சொல்ற உசத்தியான உறவுகள்தானே! தானே செய்ய வேண்டியதுதானே அவர்களுக்கும் அதே உரிமை இருக்கு இல்லையா? ஏன் செய்யலை. உறவுகளுக்குள் இருக்கும் ஈகோதானே. அந்த ஈகோ நட்பில் இல்லையே அதனால் நட்பே சிறந்தது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நடுவர் அவர்களே நட்பு எதையும் நம்மிடமிருந்து எதிர்பார்க்காது. அதே நம் வுரவினர்கள் நாம் வூருக்கு வருகிறோம் என்று தெரிந்தாலே போதும் நாம் என்ன வாங்கி வருகிறோம் என்று எதிர் பார்க்க தொடங்கிவிடுகிறார்கள்
மேலும் நாம் கொஞ்சம் முன்னேறினால் போதும் பொறமை வந்துவிடும் அவர்களுக்கு. இதற்கு வுதாரணமே என் சொந்த சித்தப்பா என் அப்பவோ நன்றாக படித்து வெளியூரில் வேலை.சித்தப்பாவோ விவசாயம். அது அவருக்கு வுள்ளுக்குள் பொறமை இருந்து கொண்டு தான் இருக்கும்.என் கணவர் வீட்டார் என் ஜாதகத்தை என் சித்தப்பாவிடம் கேட்டிருக்கிறார்கள். அவரோ பக்கத்துவீட்டு பெண் நன்றாக இருப்பாள் என்று அவளை காண்பித்து இருக்கிறார். என்ன கொடுமை பாருங்க சார் சொந்த அண்ணன் மகளின் வாழ்கையை கெடுக்க நினைத்த இந்த வுறவை என்னவென்று சொல்வது.(என் கணவரின் வீட்டார் அவர் பேச்சை காதில் வாங்காதது வேறு கதை)

நம் எதிரணி தோழி சொன்னது போல் நண்பர்கள் வீட்டில் ஒரு மூன்று நாள் தங்கி பார்த்தால் தெரியும் என்றார். அது போலே வுரவினர்கள் வீட்டில் தங்கி பாருங்கள் எதனை நாள் வுட்காரவைத்து சோறு போடுகிறார்கள் என்று பார்ப்போம்.தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயுரும் வேறே என்று ஒரு பழ மொழியே இருக்கு தெரியுமா எதிரணி தோழிகளே

நம் வுரவினர்களிடம் நம் வீட்டு ரகசியங்களை சொல்லிபாருங்கள் அது நம் வுறவு வட்டாரத்திற்கே தெரிந்துவிடும்.அதுவே நம் வுயிர் தோழிகளிடம் ஏதாவது ரகசியம் சொன்னால் அது காக்கப்படும். அதுவே நட்பு. நமக்கு ஏதாவது பிரச்சினை என்றால் அதற்கு தீர்வும் சொல்வார்கள்
என் அணி தோழிகள் சொல்வது போல் இவ்வளவு தூரத்தில் வந்திருக்கும் எங்களுக்கு நட்பின் துணையுடனே எங்கள் வாழ்கை இனிமையாக இருக்கிறது. மேலும் என் வாதத்தை அடுத்த பதிவில் தொடர்கிறேன்


நடுவரே!
ஒரு கல்யாணம் நடந்தா மொத்ல்ல யார்யாரெய்யெல்லாம் கூப்படரோம்.?
நம்ம ஒறவுக்காராளதான்.

நீங்க கல்யான பத்ரிக்கைல பாத்தேள்னா கடேசில ‘உறவினர்களும் மற்றும் ந்ண்பர்களும்’னு போட்ட்டுருப்பா.
ஒறவுதான் மொத்ல்ல. அப்பறம்தான் நட்பெல்லாம்

காதல் கல்யாணம் செஞ்சுக்கறவாளுக்கு நட்பு கை கொடுத்துட்டு கையை கழுவிட்டு பேடும்.அதுக்கு அப்பறம் கல்யாணம் பண்ணிண்டவா கதி என்ன?

நீங்கள்ளாம் ‘காதலுக்கு மரியாதை’னு ஒரு படம் பாத்துருப்பேள்.
அதுல ஹிரோயின் தன் ஒறவுக்காகவும் தன் காதலன் ஒறவுக்காகவும்
காதலை தியாகம் செய்வா.

அதனால ஒறவே ஒசத்தி ஒசத்தி ஒசத்தி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

//நீங்க கைதான் கொடுப்பீங்க. நாங்கள் நட்புக்கு உயிரையும் கொடுப்போம்//

உயிரையே விட்ட பிறகு எதற்கு நட்பு? துக்கத்தில் கை கொடுப்பது முக்கியமா? அல்லது என் தோழன் கச்ட்டத்துல இருக்கான்.அதுனால உயிர் கொடுக்க போறேங்குறது முக்கியமா?

வளைக்காப்பு முதல் பிரசவம் வரை நண்பர்கள் வந்தாலும் அவளுக்கு இருக்கும் உறவினர்கள் ஏக்கம் போக்க முடியுமா?

உறவினர்களிடம் மனம் விட்டு பேச முடியாதாம். நண்பர்களிடம் மனம் விட்டு பல விசயங்களை பகிர்ந்துக்கொண்டதால் ரகசியங்களும் பரகசியமாகும் அதனால் மணவாழ்வில் பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புண்டு என்பதை நீங்கள் அறியவில்லையா?

நண்பர்கள் மட்டும் போதும்.அவர்களே எல்லா விசேஷங்களீலும் கலந்துக்கொள்வார்கள். உறவு தேவையில்லை என ஒதுக்கி வைத்துவிட முடியுமா? அத்தகைய விசேஷங்களில் அணியாய் இருப்பது உறவினர்கள் மட்டுமே!

என் தோழி,தோழன் இருக்கான் அது போதும் என குருகிய வட்டத்தில் உங்கள் எண்ணங்கள் இருப்பதால் தான் உறவுகளை காக்க முடியவில்லை. அவர்களை மட்டும் வைத்து உங்களால் காரியங்கள் செய்ய முடியுமா?
“சொந்த பந்தங்கள் எல்லாரும் கண்டிப்பா கல்யாணந்திற்கு கூப்பிடுங்கள் என்று தான் சம்மந்தி வீட்டார் சொல்வார்களேயன்றி நண்பர்களை அழைத்து வாருங்கள் போதும் என யாரும் சொல்வதில்லை நடுவரவர்களே!

எங்கள் வீட்டில் என் நண்பர்கள் வந்தால் புது இடம் என எதையும் செய்ய முன்வருவதில்லை. சாப்பிடும் நேரம்,கதை பேசும் நேரம் மட்டுமே வருவார்கள். அங்கு காய்கறி நறுக்குவது முதல் எச்சி இலை எடுக்கும் வரை எங்கள் உறவினர்கள் தான் முகம் சுழிக்காமல் பார்ப்பார்கள். ஏனென்றால் இந்த வேலை சுழற்சி. அதே போல் தான் நாங்கள் அவர்கள் வீட்டில் செய்ய விரும்புவோம். நண்பர்களுக்கு நம்மை அன்றி யாரை தெரியும்? உறவினர்களால் மட்டுமே மற்ற உறவினர்களை கண்டறிந்து உபச்சாரம் செய்ய முடியும். நண்பர்களிடம் அந்த பொறுப்பை கொடுத்தால் வரும் நபர்களை பத்தோடு பதினொன்னாக எளிதாக உதாசினப்படுத்துவார்கள்.

காதல் திருமணத்தை பற்றி எதிரணியினர் சொல்கிறார்கள். கண்டிப்பாக உதாசினப்படுத்ததான் செய்வார்கள். அதே காதலர்கள் பெற்றோர்கள் சம்மதம் வாங்கி திருமணம் செய்யட்டும். முதலில் வாழ்த்துவதும், முறையாய் எல்லா சடங்குகளை செய்வதும் அவர்கள் தான்.

//நான் இதை செய்தேனே, நீ எனக்கு எதை செய்தாய் என்று கேள்வி கேட்க்கும் உறவுகள்//
நண்பன் கேட்க மாட்டானா? நீங்க ஏதும் செய்யாமல்தான் அவர்கள் உங்கலுக்கு உதவுகிறார்களா?
இப்ப நான் செய்தால் நாளை எனக்கு செய்யமாட்டாயா என பிரதிபலன் பாக்கும் குணம் நண்பர்களிடம் இல்லையா?

//கடன் கேட்டால் ஓடி ஒலியும் உறவு...//
கடன் கேட்பதர்காக மட்டுமே பழகும் நட்பு

உறவினர் கிட்டவாவது கொடுத்த பணத்தை வாங்கி விடலாம். நண்பர்களிடம் கொடுத்தால் அவன் பின்னால் அழைய வேண்டியது தான். கடைசில பணம் வாங்கிட்டு எங்கே போனான்னு சொல்லவே முடியாது. உறவுகள்ல அப்படி இல்லை நடுவர் அவர்களே!

ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க வேண்டும் என்பதாலேயே முடிந்த மட்டில் உடனே கொடுத்துவிடுவார்கள்.

ஒரு உறவினர் ஏழை என்றால் மகளுக்கு மொய் என்ற பெயரில் பணம் கொடுப்பதும், செலவில் பாதியாய் ஏற்பதும் உறவில் தான் நடக்கும். ஒரு வேளை நம் ஏழ்மையில் வாடினால் பின்னாள் நமக்கு செய்வார்கள்.

இன்று பல நட்புகள் பாதியிலேயே தொலைகிறது. கடைசி வரை வருவது உறவு தான். மனகசப்புகள் வந்தாலும் உடனே பேசி தீர்க்க மற்ற உறவினர்கள் உண்டு. நட்பில் பிடிக்கவில்லை என்றால் தூசி மாறி தட்டி விட்டு போய்ட்டே இருக்கலாம். உறவுகள் காலம் காலமாக மாறாதது. நட்பு கூட்டம் சீசன் போல் நெகிழந்துக்கொண்டே இருக்கும்!

உறவே சிறந்தது!

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

கவிசிவா

//அதெல்லாம் வயதுக்கு கொடுக்கும் மரியாதையே தவிர உறவை சொல்லி கூப்பிட்டால்தான் நெருக்கம் வரும்கறதுக்காக இல்லை//

க்ரெக்ட் தான்.. ஒரு மரியாதைக்காக கூப்பிடுவதுதான்.. அண்ணன் என மரியாதைக்கு கூப்பிடுவதால் அவர் என்ன கல்யாண் சீரா செய்ய போகிறார்.. ;-)

//திருப்பியும் சேம் சைட் கோல் போடறீங்களே! ஒங்கம்மா என்கூட பேசலை. என்கூட பேச சொல்லுங்ககொ’’னு சொல்லாம இருக்கறதுலயே தெரியலியா அந்த உறவுக்குள் நெருக்கம் இல்லேன்னு. அப்புறம் எப்படி அதை உசத்தின்னு சொல்றீங்க?
//

அய்யோ எதிரணிக்கிட்ட இருந்தே பாய்ன்ட்டா பிடிக்கறீங்களே

ஆமா.. ஏன் ஈகோ இல்லாத உறவு தானே அவர்களே முன் வந்து செய்ய வேண்டியது தானே.. என்ன கொடும சார் இது ;)..நல்ல கேள்வி.. எங்கே என் உறவு எதிரணி..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//உறவுதான் உசத்தின்னு சொல்லிக்கிட்டே உறவுகள்கிட்ட நட்பா இருக்கறாங்களாம். நட்பு உறவை விட உசத்தி இல்லேன்னா உறவாவே இருக்க வேண்டியதுதானே. ஏன் அவர்கலிடம் நட்பை எதிர்பார்க்கிறீர்கள்? இதிலிருந்தே தெரியலியா நட்புதான்னு சிறந்ததுன்னு.//

இதுக்கு அர்த்தம் உறவிலேயே நட்பும் இருக்கு.. இதை புரிஞ்சுக்காதவங்கதான் நட்பைத் தேடி வெளில போறாங்கனு என்பது...

//உறவுகளைத் தூக்கி எறிய முடியாது. சுமையாக தூக்கித் திரியணும். அதனால் வரும் சிரமங்களையும் அனுபவிக்கணும். இதெல்லாம் தேவையா? வேண்டாம்னு எறியவும் முடியாது வேணும்னு சேர்த்துக்கவும் முடியாது. இருதலைக்கொள்ளி எறும்பா தவிக்கணும். அப்புறம் எப்படி உறவுகள்தான் சிறந்ததுன்னு சொல்ல முடியும்?//
உறவைக் கையாளத்தெறியாதவங்க தான் இப்படிலாம் புலம்புவாங்க..
உங்க உறவினர்கள் கிட்ட நீங்க நடந்துக்கிற முறைலதான் அது நல்ல படியா அமையறதும் இல்லாம போறதும்.

//நீங்கள் கணவரையும் உறவு அணியில் சேர்த்து விட்டதால் கேட்கிறேன் கணவரும்(மனைவியும்) தேடி தேர்ந்தெடுக்கப்பவர்தானே? //
நாமே தேடிக் கொள்வது அல்ல அது. நம் பெற்றோரால் செய்யப் படுகிறது அது.அவ்வாறு பர்க்கப் படும் வரனும்
முறைப் பெண் / பையனை உறவு வருவது போல் பார்த்து தான் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளவர்கள் நாம்.

//நட்பு எதையும் நம்மிடமிருந்து எதிர்பார்க்காது.//
இப்படி ஒரு உறவை எதிர்பார்த்துதானே நீங்க நட்பு பாரட்டறீங்க!!! நண்பன் எதையாவது எதிர்பார்க்கிறான் அப்படினு தெரிஞ்சா அப்போ நட்பைத் தூக்கி போட்டுவீங்களா
நீங்க?

//நம் வீட்டு ரகசியங்களை சொல்லிபாருங்கள்//
ரகசியம் என்பது காப்பாற்றப் பட வேண்டியது. அதைப் போய் நீங்க ஏன் வெளில சொல்றீங்க?

வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள் தான் எல்லாம் என்கிறீர்கள். உண்மை தான். அந்த நண்பர்கள் எல்லோரும் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே!!
புதிதாகப் போன இடத்தில் உங்களுக்கு ஒரு பிடிப்பு, பாதுகாப்புத் தேவைப்படுகிறது.அதனால் ஒற்றுமையாக விட்டுக் கொடுத்து இருகிறீர்கள். அதே விட்டுக் கொடுத்தல்
ஓற்றுமையை உறவினர்களிடம் காட்டுங்களேன் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.

சுந்தரி...

என்ன உறவினர்கள் இப்படி செய்து விட்டார்களா? கஷ்டம் தான் ;-(

மூன்று நாளாவது நண்பர் வீட்டில் தங்கலாம்.. உறவினர் வீட்டில் மூன்று மணி நேரம் கூட நிம்மதியாய் தங்க முடியாதாம்.. ஹ்ம்ம் சரிதான்

உறவினர்களிடம் வீட்டு ரகசியத்தை சொன்னால் உறவு வட்டாரத்துக்கே தெரிந்து விடுமாம்.. என்ன சொல்லுங்கப்பா.. நடுவருக்கு ஒரு சோடாவோ கூல்ட்ரிங்ஸோ வாங்கி கொடுத்து ஐஸ் புடிங்கையா...

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்