பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா?

அறுசுவை தோழிகளே...

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் இனிதாக தொடங்கப்படுகிறது..

உயர்ந்தது எது? உறவா?(அம்மா அப்பா மட்டும் இல்லாம மற்ற அனைத்து சொந்தங்களும்..) நட்பா?

அவசர ஆபத்துக் காலத்தில் உதவுவது நண்பர்களா, சொந்தங்களா ? இந்த இரண்டிலும் உயர்ந்தது, ஏற்றது எது ?

உங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. ;-)

மோகனா

கல்யாணம் , காதலுக்கு மரியாதைனு எத்தன உதாரணம் கொடுக்கறாங்க.. நட்பே அள்ளி விடுங்க.. உங்க உதாரணத்தையும் கொஞ்சம் ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


நடுவரே!

நாங்க ஒசத்திலதான் நட்பை தேடரோமே தவிர நட்பை ஒசத்தலை.

வெளி நாட்லேந்து வரவா அவளோட நண்பர்களாத்துக்கா போறா?
இல்லையே.

தன்னோட சொந்த பந்தங்கள் ஆத்துக்கு போறா?

எதிரணிகாரா சொல்றாமாறி நட்பே ஒசத்தினா சொந்த பந்தங்க்கள் எதுக்கு?

என்னம்மோ பேச வந்துட்டங்கோ பேச்சு...........
நட்பு இல்லம இருக்க முடியும் ஆனா சொந்தம் இல்லாம இருக்க முடியுமா?

//அதெல்லாம் வயதுக்கு கொடுக்கும் மரியாதையே தவிர உறவை சொல்லி கூப்பிட்டால்தான் நெருக்கம் வரும்கறதுக்காக இல்லை//

வயசுக்கு மரியாதைனா என்னை போல சார், மேடம்னு கூப்புட வேண்டியதுதானே?

சும்மா பேசனுமேனு பேசரவாகிட்ட என்னத்தை பேசி புரிய வெக்கறதுனு நேக்கு தெர்லை

அதனால ஒறவே ஒசத்தி ஒசத்தி ஒசத்தி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

பழைய நடுவரே

உறவு பக்கமா.. ? ஒரெ புகைச்சலா இருக்கு... பட்டி ஒரே நாள்ல 5 பகுதிய தாண்டி போயிடுச்சு..

//வளைக்காப்பு முதல் பிரசவம் வரை நண்பர்கள் வந்தாலும் அவளுக்கு இருக்கும் உறவினர்கள் ஏக்கம் போக்க முடியுமா?
//

நல்ல கேள்வி.. புள்ள அனுபவிச்சு இருக்கும் போல.. வெளி நாட்டு தோழிகளே சொல்லுங்கள்

//இன்று பல நட்புகள் பாதியிலேயே தொலைகிறது. கடைசி வரை வருவது உறவு தான்.//

ஆமி.. ஒரு பெரிய பதிவில் உறவின் சிறப்பை புட்டி புட்டு வெச்சிட்டாங்க.. எதிரணியினரே ஆரம்பிங்க.. அப்பா இப்பதான் சண்ட விறுவிறுப்பாகுது.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சாந்தினி

//இப்படி ஒரு உறவை எதிர்பார்த்துதானே நீங்க நட்பு பாரட்டறீங்க!!! நண்பன் எதையாவது எதிர்பார்க்கிறான் அப்படினு தெரிஞ்சா அப்போ நட்பைத் தூக்கி போட்டுவீங்களா
நீங்க?//

நான் கேட்க வேண்டிய கேள்வியை இவர் கேட்டுவிட்டார்.. அட அதானே.. நண்பன் எதிர்பார்த்தால் தூக்கி எறிந்து விடுவீர்களா..

//வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள் தான் எல்லாம் என்கிறீர்கள். உண்மை தான். அந்த நண்பர்கள் எல்லோரும் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே!!
புதிதாகப் போன இடத்தில் உங்களுக்கு ஒரு பிடிப்பு, பாதுகாப்புத் தேவைப்படுகிறது.அதனால் ஒற்றுமையாக விட்டுக் கொடுத்து இருகிறீர்கள். அதே விட்டுக் கொடுத்தல்
ஓற்றுமையை உறவினர்களிடம் காட்டுங்களேன் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.//

என்ன சிந்தனை..என்ன சிந்தனை.. இ லைக் இட் ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நீங்கள் எல்லாரும் சொல்லுவது போல உறவுனு வரவுங்க எல்லாரும் நமக்கு ரத்தபந்தத்தால வந்தவங்க. அதனால தானோ என்னோமோ எல்லாமே ஏதோ ஒரு எதிர்பார்ப்போடவே செயல்படுவாங்க. சொத்து, பணம்னு வந்திட்டா ஏதுங்க ஒட்டு, உறவு. இந்த பணத்தாலயும் சொத்தாலயும் எத்தனை அக்கா தங்கச்சிங்க, அண்ணன் தம்பிங்கலாம் தங்களுக்குள் இருக்கும் அந்த பாச பந்தத்தையும் மறந்துட்டு கோர்ட்டு கேஸுனும் போய் நிக்கிறாங்க.
ஆனா ஒரு நண்பன் என்பவன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கஷ்டம்னாலும் சந்தோஷம்னாலும் கூட இருப்பவன். எதிர்பார்ப்பும் இல்ல ஏமாற்றமும் இல்ல தேவையில்லாத சண்டையும் இல்ல.

///நமக்கு எதாவது ஆச்சுனா ஒறவுகாராலுக்குதான் மொதல்ல சொல்ரோம்.
ஏன்னா அவாதான் நமக்காக கவலை படரவா.///
ஆமாங்க மொதல்ல தான் வருவாங்கா ஆனா கடைசி வரை இருப்பவர்கள் யார் நண்பர்கள் தான். அய்யோ எங்கே மருத்துவ செலவுக்கு அதுக்கு இதுக்குனு பணம் கேட்டுடுவாங்களோன்னு வந்ததும் வராததுமா நலம் விசாரிச்சதும் கிளம்பிட்டே இருப்பாங்க.
///இடையில் வந்து தொலைந்து போவது நட்பு தான். உறவு இருக்கும் இடத்தில் தான் உரிமை இருக்கும்.///
எத்தனை உறவினர்களிடம் நீங்கள் உரிமையோடு உங்கள் கஷ்டங்களையும், சந்தோஷங்களையும் சொல்லி ஆறுதல் அடைகிறீர்கள். சந்தோஷமா இருக்கேன்னு சொன்ன ஆஹா எங்க அவங்க கண்ணுபோட்டுவாங்களோ இல்ல, கஷ்டம்னா எங்க பணம் அது இதுனு வந்துடுவாங்களோன்னு நினைக்கிறாங்க. கஷ்டப்படுறோம்னு சொன்னா எங்க நம்மள பத்தி தரைகுறைவா நினைச்சுடுவாங்ளோனு நினைப்பு.
ஆனா நண்பன் கிட்ட அப்படி இல்ல மச்சான் இப்ப ரொம்ப கஷ்டமா இருக்குடா கையில பணமே இல்ல டா என்ன பண்ண போறேன்னு தெரியல இப்படியாக பொழம்பலும் உண்டு, இப்ப கொஞ்சம் லைஃப் ஸ்மூத்தா போகுது இதே போல நல்லப்படி இருந்தா அப்படியே கொஞ்சம் அப்படி இப்படினு மேலே வந்துடலாம்டா இப்படி சந்தோஷமும் பட்டுக்கலாம்.

நம்ம தமிழ்நாட்டோட சிறந்த பண்பாடே விருந்தோம்பல் ஆனா இப்ப எத்தனை பேர், எங்க உறவினர்கள் வந்து தங்கிடுவாங்களோன்னு சிங்கிள் பெட் ரூம் ப்ளாட்ல இருந்துட்டு இருக்காங்க தெரியுமா?

என்னோட தம்பி படிச்சுட்டு 2 வருமா வேலையே கிடைக்காமல் ரொம்பவும் சிரமம்பட்டுகிட்டு இருந்தான் சென்னையில். அப்பலாம் அவனுடைய நண்பர்கள் தான் அவர்கள் ரூமிலேயே தங்க வைத்துக் கொண்டு, சாப்பாட்டுக்கு செலவு செய்து பக்கபலமாக இருந்தனர். இந்தநாள் வரை அவர்கள் யாருமே அதை பற்றி ஒரு வார்த்தை சொல்லிக்காட்டியதும் கிடையாது பணத்தை திருப்பி கேட்டதும் கிடையாது. ஆனால் எங்கள் உறவுகாரர்கள் அத்தனை பேர் சென்னையில் இருந்தும் ஒருவர் கூட வா நான் பார்த்துக் கொள்கிறேன், எங்க வீட்டில் தங்கிக் கொள் என்று கூறவில்லை அதை நாங்கள் எதிர்பார்க்கவும் இல்லை அது வேறுவிஷயம் இல்ல இங்க எல்லாரும் உறவு உறவுங்குறாங்களே எந்த உறவுமே உங்களிடம் இருக்கும் பணத்தையும் அந்தஸ்தையும் பார்த்து தான் கூட வருவார்கள்.

நம்முடைய இன்ப துன்பங்களில் எந்தவித எதிர்பார்ப்புமின்றி நமக்கு கடைசி வரையில் இருப்பது நட்பு மட்டுமே. தெய்வப்புலவர் திருவள்ளுவர் அவர்களே நட்புக்கு மரியாதை செய்யும் விதத்தில் நட்புக்கென தனி அதிகாரத்தையே வைத்துள்ளார்.

"உடுக்கை இழந்தவன் கைப்போல் ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

நாம் உடுத்தியிருக்கும் உடை சிறிது நழுவினாலும் உடனே நம்முடைய மானம் காக்க அங்கே கை விரைந்து சென்று மானத்தை காக்கும். அதுபோல தான் ஒருவன் கஷ்டத்தில் இருக்கும் சமயத்தில் அவனுடைய நண்பன் வந்து காப்பாற்றுவானேயன்றி உறவுகள் அல்ல.

என் வாழ்வில் உறவினர்களால் நிகழ்ந்த ஒரு கசப்பான நிகழ்ச்சியை நான் இங்கே பகிர்ந்து கொள்ள விழைகிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும், ஆணுக்கும் திருமணம் என்பது வாழ்நாளில் மிக முக்கியமான அங்கமாகும். பண பலம் இல்லாவிட்டாலும் படை பலம் வேண்டும் என்பார்கள். ஆனால் இங்கே படை பலம் சும்மா வந்து சேர்வதில்லை. பணம், காசு, வீடு, வாசல் போன்றவற்றை பார்த்து தான் வந்து சேர்கிறது. நாம் குடிசையில் இருக்கும் போது எந்த உறவும் நம்மை வந்து பார்ப்பதில்லை ஏன் விசாரிக்க கூட நேரம் இருக்காது. ஆனால் நாம் கொஞ்சம் பண வசதியோடு பசுமையாக தெரிந்தால் ரத்த உறவுகள் மட்டுமல்லாமல் தூரத்து உறவுகளும் சொந்தம் கொண்டாட வந்துவிடுவார்கள்.

என்னுடைய திருமணத்தின்போது காலையில் மணவறையில் எனக்கு தோழியாக எந்த சொந்தமும் வர முன்வரவில்லை. அப்புறம் நான் மட்டுமே மணவறையை தனியாக சுற்றி வந்தபோது புரோகிதர் தனியாளாக சுற்றி வரக்கூடாது. யாரையாவது துணைக்கு அழைத்து வாருங்கள் என்று கூறினார். எல்லா சொந்தங்களும் வேடிக்கை தான் பார்த்ததே ஒழிய எவரும் எனக்கு துணையாக வர முற்படவில்லை அப்போது தான் என்னுடைய உயிர் தோழி ஊரிலிருந்து வந்து மண்டபத்திற்குள் நுழைந்தாள். நான் தனியாக சுற்றி வருவதை பார்த்தவுடன் தன்னுடைய பயணக்களைப்பையும் பொருட்படுத்தாமல் என்னுடைய தோழியாக மணவறையை என்னுடன் சுற்றி வலம் வந்தாள்.

இதில் ஒரு முக்கியமான விஷயத்தை நான் இங்கே சொல்லக் கடமைபட்டுள்ளேன் நடுவர் அவர்களே. எனக்கு மணவறை தோழியாக எனக்கு தோள் கொடுத்த என்னுடைய உயிர் தோழிக்கு இன்னும் மணமாகவில்லை. அவளுக்கு அந்த வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இன்முகத்துடன் என் திருமணவிழாவில் கலந்து கொண்டு எல்லா சடங்குகளையும் முடித்து கொடுத்த பிறகே அவள் ஊர் திரும்பினாள்.

நடுவர் அவர்களே, இங்கே கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் எதில் அதிக எண்ணிக்கையில் நம் தோழிகள் கலந்து கொண்டுள்ளார்கள் என்று பாருங்கள். நட்பே சிறந்தது என்பதற்கு இதை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது.

மீண்டும் உயிர்ப்பேன்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

//நீங்கள் எல்லாரும் சொல்லுவது போல உறவுனு வரவுங்க எல்லாரும் நமக்கு ரத்தபந்தத்தால வந்தவங்க.//

சரிதான் உறவு இரத்த சம்பந்தம் கொண்டது. அதனாலேயே அது எல்லாவற்றையும் எதிப்பார்க்கிறது..
//நம்ம தமிழ்நாட்டோட சிறந்த பண்பாடே விருந்தோம்பல் ஆனா இப்ப எத்தனை பேர், எங்க உறவினர்கள் வந்து தங்கிடுவாங்களோன்னு சிங்கிள் பெட் ரூம் ப்ளாட்ல இருந்துட்டு இருக்காங்க தெரியுமா?//

எப்படிப்பட்ட கேள்வி கேட்டாங்கப்பா இவங்க.. உங்களோட வீடு எத்தன பெட் ரூம்.. சும்மா ஒரு ஜென்ரல் நாலேட்ஜ்க்கு ;-)

உறவு என்பது பணத்தை பார்த்தே வரக்கூடியது என்று அழுத்தமாக கூறுகிறார் இவர்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

நடுவர் அவர்களே வுயிர் கொடுப்பான் தோழன் என்கிற பழமொழி வுங்கள் அனைவருக்கும் தெரியும்.அங்கு வுயிர் கொடுப்பான் வுரவினன் என்று யாரும் சொல்லவில்லையே.இந்த வுரவினர்களால் எங்களுக்கு நிறைய கசப்பான அனுபவங்களே மிச்சமானது.எங்கள் வுரவினர் ஒருவர் துபாயில் இருக்கிறார். என் தம்பியை A .c மெகானிக் படி வுன்னை துபாய் அழைத்து செல்கிறேன் என்றார்.அவனும் படித்தான் அவரோ சொன்னவார்த்தை
மறந்து வேறு ஒருவரை துபாய் அழைதுசென்றுவிட்டார்
. அவன் படித்த படிப்பிற்கோ இங்கு அவளவாக value இல்லாமல் வேறு வழில்லாமல் இங்கேயே சொந்தமாக கேபிள் தொழில் ஆரம்பித்துவிட்டான்.அதே அவன் பிட்டர்,வெல்டர் ஏதாவது படித்திருந்தால் வெளிநாட்டில் வேறு வேலை பார்த்திருப்பான். இப்பொழுது என் சின்ன தம்பி soudi போய்விட்டான் இப்ப அதே வுறவு மறுபடியும் எங்களுடன் ஒட்டிவுரவாடுகிரார்கள்.இதே இன்று வுறவின் நிலை

என்னங்க பெரிய உறவு. ஜெயில்ல ஆயுள் தன்டனை அடைந்தவனை போய் கேளுங்க நல்லா சொல்வான் உறவைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒருவர் மனைவியின் சகோதரனுக்கு திருமணம் செய்யப் போன கொடுமைக்கு ஆயுள் அனுபவிக்கிறார் இதுதான் உறவா? சொத்து தகறாறில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர். சொத்து பிரச்சனை யாருக்கு வரும். உறவுக்குள்தானே. நம்ம மாமி இருக்காங்களே அவங்க ரோட்ல போறப்போ எவனாவது ஹேண்ட் பேக்க பிடுங்கி கொண்டு ஓடினா அவனை மடக்கி பிடித்து மாமியின் ஹேண்ட் பேக்கை பத்திரமா வாங்கி தர்றாங்களே பப்ளிக் அவங்க உங்க உறவா?. எத்தனையோ பெண்களின் காதல் திருமணங்கள் நடந்ததெல்லாம் உறவுகளாலா?.

அன்புடன்
THAVAM

கல்பனா

திருக்குறளில் நட்பை அழகாக சுட்டி காட்டிவிட்டார். பணம் இருந்தால் மட்டுமே உறவு எட்டிப் பார்க்கிறார்கள் என்றும்.. தனது அருமை தோழியை இங்கு முன் நிறுத்தியுமுள்ளார். இதிலிருந்தே தெரிகிறது இவர் தோழியின் மேல் வைத்திருக்கும் நட்பும்.. அவர் தோழியின் பாசமும்..

அட இதுதாங்க நட்புன்றது..உறவினர் இருக்கையில் தனக்கான சுதந்திரத்தையும் , பாசத்தையும் அவரே எடுத்துக் கொண்டாரே அதிலிருந்தே தெரியவில்லையா நட்பின் புனிதம்..

என சொல்லாமல் சொல்லிவிட்டார். இதற்கு எதிரணி நல்ல ஆணித்தரமான கருத்தை முன் வைத்தே தீர வேண்டும்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்