பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா?

அறுசுவை தோழிகளே...

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் இனிதாக தொடங்கப்படுகிறது..

உயர்ந்தது எது? உறவா?(அம்மா அப்பா மட்டும் இல்லாம மற்ற அனைத்து சொந்தங்களும்..) நட்பா?

அவசர ஆபத்துக் காலத்தில் உதவுவது நண்பர்களா, சொந்தங்களா ? இந்த இரண்டிலும் உயர்ந்தது, ஏற்றது எது ?

உங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. ;-)

சுந்தரி..

உறவினர்களால் இங்கே நிறைய கசப்பான அனுபவமே உள்ளது போல... வெரி பேட்...பாருங்க அவரது உறவினர் கொடுத்த வாக்கை மறந்துவிட்டார்.. உயிர் கொடுப்பான் தோழன் .. உயிர் எடுப்பான் உறவினர்னு சொல்ல வறாங்க.. ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தவமணி

//நடு நிலமை தவறா நடுவரே//

இதுக்கே அந்த பக்கம் தீர்ப்பு சொல்லலாம் போல.. ;-) ஐஸ் ஐஸ் பேபி...

நல்ல ஒரு கருத்தை இவர் முன் வைத்துள்ளார்.. இது வரை யாருமே சொல்லாத ஒன்று.. சொத்து பிரச்சனையால் கொலை எத்தனை ?.. யார் காரணம்.. உறவுதானே...

அதே போல சாலையில் ஒரு திருட்டு, பிரச்சனை என்ற போது உறவா வருகிறது..?
குட் குட்

ஒரு பணிவன வேண்டுக்கோள்..

யாரையும் பெயரையோ. இல்லை நாம் சாதரணமாக அழைக்கும் வழக்கத்திலுள்ள பெயரையோ(பெட் நேம்) உதாரணத்திற்காக கூட பயன்படுத்தாமல் சென்றால் பட்டி நல்ல முறையில் நடைபெறும்.. மன்னிக்கவும்..நன்றி..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

//இதுக்கு அர்த்தம் உறவிலேயே நட்பும் இருக்கு.. இதை புரிஞ்சுக்காதவங்கதான் நட்பைத் தேடி வெளில போறாங்கனு என்பது...//

உறவுகள் சரியில்லாததால்தனே நட்பைத் தேடி வெளியில் வருகிறோம். அப்புறம் எப்படி உறவே சிறந்ததுன்னு சொல்ல முடியும்?

//உறவைக் கையாளத்தெறியாதவங்க தான் இப்படிலாம் புலம்புவாங்க..
உங்க உறவினர்கள் கிட்ட நீங்க நடந்துக்கிற முறைலதான் அது நல்ல படியா அமையறதும் இல்லாம போறதும்.//

உறவுகளைக் கையாளத்தெரியணும்னா எப்படி அவங்க குணம் என்ன எப்படி எடுத்துப்பாங்களோன்னு யோசிச்சு யோசிச்சு பழகறதும் பேசறதுமா? அப்படி யோசிச்சு யோசிச்சு பேசறதும் பழகறதும் உண்மையானதா இருக்குமா? அப்போ நடிக்கத் தெரிஞ்சாத்தான் உறவுகள் நிலைக்குமா?

ஆனா நண்பர்கள்கிட்ட நம் மன உணர்வுகளை உள்ளதை உள்ளபடி சொல்லலாம். நட்பில் நடிப்பும் முகமூடியும் தேவையில்லை.

//////நீங்கள் கணவரையும் உறவு அணியில் சேர்த்து விட்டதால் கேட்கிறேன் கணவரும்(மனைவியும்) தேடி தேர்ந்தெடுக்கப்பவர்தானே? //
நாமே தேடிக் கொள்வது அல்ல அது. நம் பெற்றோரால் செய்யப் படுகிறது அது.அவ்வாறு பர்க்கப் படும் வரனும்
முறைப் பெண் / பையனை உறவு வருவது போல் பார்த்து தான் திருமணம் செய்யும் வழக்கம் உள்ளவர்கள் நாம்.//

அப்போ காதல் திருமணம்? பெற்றோர் தேடித்தந்தாலும் நமக்கும் பிடித்திருந்தால்தானே அந்த திருமணம் நடக்கும். அது தேர்ந்தெடுப்பது இல்லையா? சொந்தத்துக்குள்ள கல்யாணம் பண்ணாதீங்கன்னு சொல்ற காலம் இது. நீங்க என்னடான்னா முறைப்பையன் முறைப்பொண்ணுன்னுகிட்டு.

////நம் வீட்டு ரகசியங்களை சொல்லிபாருங்கள்//
ரகசியம் என்பது காப்பாற்றப் பட வேண்டியது. அதைப் போய் நீங்க ஏன் வெளில சொல்றீங்க?//

சில நேரங்களில் சில விஷயங்களில் நமக்கு நம்மைத் நன்கு புரிந்த தெரிந்தவர்களின் ஆலோசனைத் தேவைப்படும். அதுமாதிரி விஷயங்களை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது ரகசியங்கள் வெளியில் வராமல் இருப்பதோடு பிரச்சினைக்கு தீர்வும் கிடைக்கிறது. ஆனால் உறவுகளில் ரகசியம் காக்கப்படுவது சந்தேகமே!

//வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள் தான் எல்லாம் என்கிறீர்கள். உண்மை தான். அந்த நண்பர்கள் எல்லோரும் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் தானே!!//
நிச்சயம் அந்த குறுகிய எண்ணம் நட்பு பாராட்டுபவர்களிடம் இல்லை. எனக்கு சீன இந்திய இந்தோனேஷிய தோழிகள் இருக்கிறார்கள். எல்லா நாட்டினருடனும் நட்பாக இருக்க முடியும். நட்புக்கு மதம் இல்லை மொழி இல்லை இனம் இல்லை ஜாதி இல்லை நாடு இல்லை. இதெல்லாமே உறவுக்குத்தான் இருக்கு.

//புதிதாகப் போன இடத்தில் உங்களுக்கு ஒரு பிடிப்பு, பாதுகாப்புத் தேவைப்படுகிறது.அதனால் ஒற்றுமையாக விட்டுக் கொடுத்து இருகிறீர்கள். அதே விட்டுக் கொடுத்தல்
ஓற்றுமையை உறவினர்களிடம் காட்டுங்களேன் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்//

இந்த விட்டுக்கொடுத்தல் நட்பில் இரண்டு பக்கமிருந்தும் நடக்கிறது. ஆனால் உறவுகளில் விட்டுக்கொடுத்தல் என்பது பெரும்பாலும் ஒருபக்கம் மட்டுமே இருப்பதால்தான் சிக்கல் வருகிறது. ஒருவர் மட்டுமே எப்போதும் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இவருக்கு நிச்சயம் உறவின் மீது வெறுப்புதான் ஏற்படும். நாம் எல்லோருமே சாதாரண மனிதர்கள்தான். யாரும் மகான்கள் அல்ல.
//வெளி நாட்லேந்து வரவா அவளோட நண்பர்களாத்துக்கா போறா?
இல்லையே.

தன்னோட சொந்த பந்தங்கள் ஆத்துக்கு போறா?//
வெளிநாட்டில் இருந்து வந்தா அப்பா அம்மா வீட்டுக்குத்தான் போறோம்(அப்பா அம்மா உறவுகள் லிஸ்டில் சேர்க்கக்கூடாதுன்னு நடுவர் சொல்லிட்டாங்க)

//நட்பு இல்லம இருக்க முடியும் ஆனா சொந்தம் இல்லாம இருக்க முடியுமா?//

உறவுகள் இல்லாம பலர் நல்ல நட்புகளோடு சந்தோஷமாகவே இருக்காங்க. ஆனா நட்பு இல்லாத மனிதர்களைத்தான் பார்க்க முடியாது.

////அதெல்லாம் வயதுக்கு கொடுக்கும் மரியாதையே தவிர உறவை சொல்லி கூப்பிட்டால்தான் நெருக்கம் வரும்கறதுக்காக இல்லை//

வயசுக்கு மரியாதைனா என்னை போல சார், மேடம்னு கூப்புட வேண்டியதுதானே?//

சார் மேடம்ங்கற ஆங்கிலத்தைத்தான் அழகு தமிழில் அவரவர் வயதுக்கேற்ப அம்மா அண்ணாங்கறோம். அப்படி உறவுதான் உசத்தின்னா நாம எதுக்கு இங்கே வந்து எல்லோரோடும் நட்பு பாராட்டணும்? ஒரு நாள் நம் தோழிகளின் பதிவைக் காணலேன்னா ஏன் மனசு கஷ்டப்படணும்? இத்தனைக்கும் நம்மில் பலரும் நேரில் பார்த்தது கூட இல்லை. எப்படி நமக்குள் இப்படி ஒரு பிணைப்பு ஏற்பட்டது? நட்புதானே காரணம்.

இதுதான் நட்பின் வலிமை!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

சகோதரி எந்த உள்நோக்கத்தோடும் நான் அவர்களின் பெயரை கூறவில்லை. நகைச்சுவைக்காகவே மாமி என்று கூறினேன் தவறுதான் மன்னிக்கவும்

அன்புடன்
THAVAM

இப்போ நான் சொல்லப் போகும் கருத்து அப்பா சொல்றார் நான் என் மகனுக்கு அப்பா இல்லிங்க நண்பண். இப்படி சொல்ற அப்பாக்கள்தான் அதிகம்

அன்புடன்
THAVAM

இப்போ நான் சொல்லப் போகும் கருத்து அப்பா சொல்றார் நான் என் மகனுக்கு அப்பா இல்லிங்க நண்பண். இப்படி சொல்ற அப்பாக்கள்தான் அதிகம்

அன்புடன்
THAVAM

கவிசிவா

பக்கம் பக்கமா வாதத்தை அள்ளி வீசுறாங்கப்பா ;)

உறவுகள் அணியினரே.. உறவில் சரியான புரிதல் இருந்தால் எதற்கையா நாங்க நட்ப தேடி போறோம்? யோசிச்சு.. பாத்தூ பாத்தூ பழக உறவு எதுக்கு..? தானாக இயல்பாக இருப்பது தானே உறவு.. ஆனா இல்லையே.. என்ன செய்ய?

//நட்பில் நடிப்பும் முகமூடியும் தேவையில்லை.//
ஆழமான சிந்திக்க தூண்டும் வரி..

என்னங்க நீங்க மருத்தவம் தெரியாம இருக்கீங்க.. சொந்ததுக்குள்ள கல்யாணமே வேண்டாம்ங்கறான்.. நீங்க மாமம்பொண்ணு கதை சொல்றீங்க..

//ஒரு நாள் நம் தோழிகளின் பதிவைக் காணலேன்னா ஏன் மனசு கஷ்டப்படணும்? இத்தனைக்கும் நம்மில் பலரும் நேரில் பார்த்தது கூட இல்லை. எப்படி நமக்குள் இப்படி ஒரு பிணைப்பு ஏற்பட்டது? நட்புதானே காரணம்.//

நடுவரோட மனச டச் பண்ணிடுச்சுப்பா இந்த பொண்ணு.. ..

உறவு அணியே இல்லைனு சொல்லுங்க பாப்போம்... ;-)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

தவமணி..

உள்நோக்கத்தில் நீங்கள் கூறவில்லை என அனைவருக்கும் தெரியும்.. ;-)

கவலை வேண்டாம்.. ஒரே ஆண் எத்தனை பெண் அணியினர், பெண் எதிரணியினரை சமாளிக்கறீங்க.. பட்டைய கெளப்புங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

அய்யோ

நடுவருக்கு ஒரே மயக்கமா வருது..

கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன்.. ஆள வுடுங்கப்பா..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)


நடுவரே!
1 பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

2 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.

3 அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
.
4 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

5 கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

6 பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.

7 காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

8 பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

9 தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.

10 உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.

இதெல்லாம் திருக்குறளில் வள்ளுவன் சொன்னது
தலைப்பு என்னனு தெரியுமோ?
‘’சுற்றம் தழால்” அதாவது ‘உறவினர்’’.

அதனால ஒறவே ஒசத்தி ஒசத்தி ஒசத்தி!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்