பட்டிமன்றம் - 22 - உயர்ந்தது எது? உறவா? நட்பா?

அறுசுவை தோழிகளே...

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் இனிதாக தொடங்கப்படுகிறது..

உயர்ந்தது எது? உறவா?(அம்மா அப்பா மட்டும் இல்லாம மற்ற அனைத்து சொந்தங்களும்..) நட்பா?

அவசர ஆபத்துக் காலத்தில் உதவுவது நண்பர்களா, சொந்தங்களா ? இந்த இரண்டிலும் உயர்ந்தது, ஏற்றது எது ?

உங்களின் வாதத்தை தொடங்கி பட்டிமன்றத்தை சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. ;-)

நடுவரே... நான் இன்று ஒரு சிறு வேலை நிமித்தம் வெளியே போறேன்... என் அணியினர் என்னை தேடாதிங்கப்பா, அணி தலைவி கவிசிவா... வந்து இரவு பதிவு போடுறேன். :) எதிர் அணி... காத்திருங்க எங்க அணியினர் வந்து பதில் குடுப்பாங்க நச்சுன்னு, இல்லன்னா நானே வரேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//நட்பு நட்புங்கறேளே ஒங்களை தாய் நாட்டுக்கு விரும்பி வர வைக்கறது யாரு? //

உறவு உறவுன்றேளே ஒங்களை தாய் நாட்ட விட்டு விரட்டி விட்டது யாரு?

நட்புடன்
ஆஷிக்

///உறவு உறவுன்றேளே ஒங்களை தாய் நாட்ட விட்டு விரட்டி விட்டது யாரு?///

தாய் நாட்டை விட்டு உறவு விரட்டவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.... பணத்திற்காக மட்டுமே வெளிநாட்டைத் தேடுகிறோம். பணத்திற்காக தானே மனைவி மக்களை பிரிந்து வாழ்கிறோம்.

ஆனால் தாய் நாட்டுக்கு விரும்பி வரக் காரணம் நட்பல்ல... நட்பைப்பார்ப்பதற்காக அல்ல... நட்பைப் பார்க்கவா ஆயிரக்கணக்கில் செலவழித்து தாய்நாடு வருகிறீா்கள்.... இல்லையே.. மனைவி, மக்கள், சொந்த பந்தங்களை பார்க்கத்தானே வருகிறீா்கள். அண்ணன், தம்பி கல்யாணம், அக்கா, தங்கை திருமணம் என்றால் உடனே கிளம்பி வருவீா்கள் தாய்நாட்டிற்கு. ஆனால் நண்பன் திருமணம் என்றால் எத்தனை பேர் தாய்நாட்டிற்கு கிளம்பிச்சென்று வாழ்த்திவிட்டு வருகிறீா்கள்....

"செய்க தவம், தவமாவது அன்பு செலுத்துதல்"

ராதா ஹரி

எந்த விழாக்கள் என்றாலும் உறவுகளுக்கே நாம் முதன்மை கொடுக்கிறொம். அருமையாக வாதாடும் எதிரணியினரை கேளுங்கள். அவர்கள் இல்ல அனைத்து விழாக்களுக்கும் முதலில் யாரை அழைக்கிறார்கள் என்று.சீர் செய்வது என்றாலும் மாமன் சீர், அண்ணன் சீர் என்று தன் உரிமையுடன் செய்வார்கள். அப்படி அத்தனையும் பெற்றுக்கொண்டு சிறப்பாக வாழும் நம் எதிரணியினர் நன்றி மறந்து எப்படி பேசுகிறார்கள். உறவு என்பது எதனுடனும் ஒப்பிட முடியாத ஒரு உலகம்.அதில் சில நண்பர்கள் வரலாம் போகலாம். உறவு என்பது நம் உணர்வில் கலந்து உள்ளத்தில் நிலைத்த ஒன்று.சுருக்கமாக சொன்னால் நண்பர்கள் நாம் அணியும் ஆபரணங்கள் போன்றது. சிலருக்கு அது பார்ப்பதற்கு அழகாக தோன்றலாம். அவ்வளவு தான். அதுவும் மாறும்.//உங்கள் உறவுகள் வலுப்பட நட்புதான் துனைசெய்கிறது,
ஆனா எங்கள் நட்புகள் வலுவிலுக்கத்தான் உங்கள் உறவுகள் ஆவன செய்கிறது//கூடா நட்பு வேண்டாம் என்று தான் நல்லெண்ணம் கொண்ட உறவுகள் கூறும்.

//ஆனா எங்கள் நட்புகள் வலுவிலுக்கத்தான் உங்கள் உறவுகள் ஆவன செய்கிறது.//

உறவு தடுக்குதுன்னு உறவு மேல பழிய போடதீங்க, உறவு நட்பை விட சிறந்ததா இருப்பதனாலேயே, உங்களால் மீறி வர முடியல. உங்க நட்பு உறவைவிட சிறந்ததா இருந்தா, மீறி வரட்டுமே.

நட்பையே "நட்புறவு " அப்படீன்னு சொல்லும்போதுதானே அதன் மகத்துவம் அதிகமாகுது.

இதுவும் கடந்து போகும்.

//நட்பையே "நட்புறவு " அப்படீன்னு சொல்லும்போதுதானே அதன் மகத்துவம் அதிகமாகுது.//
நாங்க என்ன சொல்றோம்னா.....
உறவையே "நட்புறவு " அப்படீன்னு சொல்லும்போதுதானே அதன் மகத்துவம் அதிகமாகுது.
இருங்க இந்த உறவுக்காரங்களெக்கல்லாம் ஈவ்னிங்க் வந்து வச்சுக்கிறேன்
ஆஷிக்

வணக்கம்,
நடுவர் அவர்களே, என்னுடய வோட்டு உறவுகளுக்குதான்.என்னதான் எதிரணியினர் நட்பு நட்பு என்று கூறிக்கொன்டிருந்தாலும் உண்மை அதுவாகாது.இன்ரைக்கு உள்ள சூழ்நிலையில் நண்பர் ஒருவர் உள்ளார் என்றால் கூடவே நாம் கூடவே எதிரியை வைத்திருக்கிறோம்.நண்பர்கள் தன்னுடன் இருக்கும் நண்பன் ஒருவன் முன்னேருவதை விரும்புவதில்லை.அவனை என்றும் தனக்கு கீழேயே வைத்திருக்க வேண்டும் என நினைக்கிரான்.அதேபோல் பணம் என்று வந்தவுடன் தன் பெற்றொரிடம் கேட்கவேண்டும்,அவரிடம் கேட்க வெண்டும் என்பான்,அதே நண்பன் தன் உறவுகளுக்கு உங்களைக்கேட்டா பணம் கொடுக்கிரான்,தன்னுடய உறவினர்களுக்கு நாம் தானே குடுக்க வேண்டும் என்பான்.அதயும் நம்மிடமே கூறுவார்கள்.நண்பர்க்ளால் கெட்டழிந்த குடும்பங்கள் எண்ணிக்கை அதிகம்.
ஆனால் உறவினர்கள் ஒரு போதும் அந்த மாதிரி செய்ய மாட்டார்கள்தான் ஒரு இடத்திற்க்கு வேலைக்கு சென்றால் தன் மாமன் ,மச்சான், தம்பி, தன் உறவினர்கள் அனைவருக்கும்
ஏதாவது ஒரு வேலை வாங்க்கிக் கொடுத்துவிடுவான்,அதே நண்பர்கள் யாராவது செய்வார்களா, செய்யமாட்டார்கள்.ஏனெனில் அவனுக்கு நீங்கள் சரிசமமாக வேலை செய்வது பிடிக்காது.ஈகோ தலை தூக்கிக்கொள்ளும்.ஆனால் உறவுகள் தன்னுடய சொந்தம் மென்று வந்துவிட்டால் தன்னுடய நகையினை அடகு வைத்தாவது குடுத்து உதவுவார்கள்.
நண்பர்களால் தாழ்ந்தவர்ளே அதிகம்:::::::::::
உறவுகளால் உயர்ந்தவர்களே அதிகம்:::::::::::::::

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான வுலகத்திலே என்ற வரிகள் அனைவருக்கும் தெரியும்.நிஜத்திலும் அது வுண்மையே.அது எதிரணி நண்பர்களுக்கும் தெரியும். வுடன் பிறந்தவர்களானாலும் ஒரு வயதிற்குமேல் அவர்கள் சுய நலத்தையே பார்கிறார்கள்.அதே நட்பு எனபது திருமண பந்தத்தயும் கடந்தது. இதற்கு வுதாரணம் என் தோழி ஹேமா சின்ன வயதிலிருந்து இப்பொழுதுவரை நாங்கள் வுயிர் தோழிகள். மனதிற்கு கஷ்டமாக இருக்கும் நேரங்களில் வுடன் பிறந்தவர்களுக்கு கூட நாங்கள் தெரிய படுத்துவதில்லை என் வுயிர் தோழியிடமே பகிர்ந்து கொள்கிறேன்.இந்த வுணர்வு வுறவுகளே என்று வாதிடும் என் அன்பு எதிரணி நண்பர்களுக்கு கூட வுண்டு எனபது என்னக்கு தெரியும்

வுன் நண்பனை பற்றி சொல் வுன்னை பற்றி சொல்கிறேன் என்ற வரி வுங்களனைவருக்கும் தெரியும். இதே வரி வுன்வுரவுகளை பற்றி சொல் வுன்னை பற்றி சொல்கிறேன் என்று ஏன் எழுதப்படவில்லை . நம் ரத்த பந்தங்களை பற்றி தெரிந்தால் கூட நம் குணநலன்களை அடுத்தவர்களால் ஊகிக்கமுடியாது. அதே சமயம் எப்பொழுதும் நம்முடன் இருக்கும் நண்பனின் குண நலன்கள் நம்மில் ஒத்திருக்கும். ஒருவன் கெட்ட குணநலன்களுடன் இருந்தாலும் அவனுடன் சேரும் தோழர்கள் நல்லவர்களாக இருந்தால் அவனும் திருந்திவிடுவான். அதே வுறவுகள் எவ்வளவுதான் சொன்னாலும் அறுவை வந்துவிட்டது என்று நினைத்து கொள்வான் .இதிலிருந்து என்ன தெரிகிறது தோழர்களே நட்பால் முடியாத காரியம் இல்லை.

வாலிபர்கள் பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் இருந்தால் பெற்றோர்கள் அவன் நண்பனை பார்த்து நீயாவது கொஞ்சம் எடுத்துசொல்ல கூடாதாப்பா என்று சொல்லும் வார்த்தைகள் இன்று வீட்டுக்கு வீடு நடக்ககூடிய ஒன்றே. வுறவுகளின் பேச்சையே கேட்கதவன் ஒரு சம்பந்தமும் இல்லாத நண்பன் பேச்சை கேட்கிறான் என்றால் நட்பின் புனிதம் இதிலிருந்து விளங்குகிறதா நண்பர்களே.

நம் எதிரணி தோழிகளுக்கு நண்பர்கள் என்றாலே கறிவேப்பிலை மாதிரி வுபயோகிப்பார்கள் போலும் ஆனால் நாங்கள் எங்கள் நண்பர்களை கோயில் கோபுரம் போல வுயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறோம். பார்த்து இதை பார்த்த வுங்கள் நண்பர்கள் வுங்கள் மனதை தெரிந்துகொண்டு வுங்களை விட்டு விலகிவிடப்போகிரார்கள்.

நடுவர் அவர்களே நட்பே சிறந்தது,நண்பர்களே வுயர்ந்தவர்கள் இதை ஆணித்தரமாக அடித்து சொல்கிறேன். தொடர்ந்து என் வாதத்தை அடுத்த பதிவில் தொடர்கிறேன்

எந்த பக்கம் பேசரதுங்கறதுக்கே ஒரு பட்டி மன்றம் வைக்கணும் போல நடுவர் அவர்களே, பயங்கர குழப்பம். என்னை பொறுத்தவரை ரெண்டுமே ஒன்றுக்கொன்று சலைத்ததில்லை, இருந்தாலும் எதாவது ஒரு பக்கம் தானே பேச முடியும், அதனால என்னோட ஓட்டு உறவுக்கே!

வாழ்க்கைக்கு நட்பு தேவைதான் இல்லை என்று சொல்லவில்லை, கொஞ்சம் யோசித்து பாருங்கள் எத்தனை பெண்கள் திருமணம் ஆகி கடைசி வரை தோழிகளுடன் தொடர்பில் உள்ளீர்கள், பெண்களால் ஒரு நிலைக்கு மேல் தொடர முடிவதில்லை.

இருக்கலாம் சில பேர் இருக்கலாம், ஆனால் ரொம்பவே சிரமம், தலைப்பு பெண்கள் நட்பை பொறுத்ததல்ல என்பதை நான் அறிவேன், என்னை பொறுத்த வரை என் தோழி தோழர்கள் அனைவரும் என் குடும்பத்தில் ஒருவர்.

எல்லாரும் கல்லூரி முடிச்சதுக்கு அப்புறம், அதாவது கடைசி வருடம் பார்த்தீர்கள் என்றால் அனைத்து தோழர்கள் வீடுகளுக்கும் சென்று வருவோம், அதற்கு காரணம் நாம் நமது தோழமையுடன் சேர்ந்து அவர்கள் உறவையும் வேண்டும் என்பதினால் தானே நடுவர் அவர்களே, உறவுகளில் சிலர் பொய்க்கலாம், உறவே கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம் என்பது புரியவில்லை.

நண்பர்கள் கூட நாமாய் தேடி செல்லும் உறவுதானே நடுவர் அவர்களே. நட்பு சிறந்ததே அதுவும் உறவாய் நீடித்தால்

அன்புடன்
பவித்ரா

நட்பா உறவா

இந்த பட்டி முடியருதுக்குள்ள நடுவர முடிச்சுருவாங்க போல இருக்கே.;). பட்டி பக்கம் பக்கமா போறத பாத்தாவே தீர்ப்பு எப்படி சொல்ல போறேனு பயமா இருக்கு,,,, ஹ்ம்ம்ம்

இப்பவே கண்ண கட்டுதே ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்