நீதிக்கதைகளை ஒளிபரப்பு செய்யலாமே?.

வணக்கம்,நான் செந்தமிழ்.
இன்றைக்கு குழந்தைகள் அனைவரும் விரும்பி பார்க்கும் குழந்தைகளுக்கான சேனல்கள் அனைத்தும் மற்ற மொழிகளில் இருந்தும்,வெளிநாட்டு நிகழ்ச்சிகளின் மொழிபெயர்ப்புகளையே வெளியிடுகின்றன.நம் பாரம்பரிய கதைகளையும், நீதிக்கதைகளையும்,அறிவுகூறும் நல்ல கதைகளையும் தினமும் ஒளிபரப்பு செய்யலாமே?.எவ்வளவுதான் நாம் CD,DVD வாங்கிக்கொடுத்தாலும் குழந்தைகள் சேனல்கலையே விரும்புகின்றனர்.இதற்கு என்ன மாதிரியான் மாற்றங்களை நாம் சேனல்களில் எதிர்பார்க்கலாம்..

இது உங்கள் முதல் இழை என்று நினைக்கின்றேன், அதற்கு வாழ்த்துக்கள்,

எனக்கு தெரிந்து தெனாலிராமன் போன்ற நீதிக்கதைகள் மற்றும் ஹனுமான் கதைகள் முதலியன் சில குழந்தைகளுக்கான சேனல்களில் ஒளிபரப்பு செய்கின்றனர்.

தோழிகள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்

அன்புடன்
பவித்ரா

வணக்கம்,பவி
நன்றி,நீங்கள் கூறும் நிகழ்ச்சி குறிப்பிட்ட வடமாநில சேனல்களில் மட்டுமே ஒளிபரப்பு செய்கின்ரனர்,நம் தமிழ்நாட்டு சேனல்களில் அத்தகைய நிகழ்ச்சிகள் வருவது கிடையாது.நான் கூறுவது விலங்குகள் மற்றும் சிறுவர்களை வைத்து கூறப்படும் நீதிக்கதைகள்..

WHERE THERE IS THE LOVE,THERE IS THE GOD-
THAT'S LOVE
SENTHAMIZ

தமிழ்
எனக்கு சுட்டி டிவில பார்த்த ஞாபகம், அதான் சொன்னேன்

அன்புடன்
பவித்ரா

பவித்ரா சொல்றதும் உண்மை..சுட்டி டிவி யில் போடுறாங்க...ஆனால் பெரும்பாலும் தமிழ் நீங்க சொல்றது போலே..மொழி மாற்றம் செய்ய பட்ட கதைகள் தான்..ஆனால்..நீதி கதை..அறிவு கதைகள் எல்லாம் நாம சின்ன பிள்ளைய இருந்தபோது பார்த்த தெனாலிராமன் கதைகள்..ராமாயணா...மகாபாரதா..மாதிரி அப்படி பார்த்துட்டு அப்போ இருந்தோம் நாம்.. இப்போ இருக்கும் லேட்டஸ்ட் பசங்க பொறுமையா பார்த்து புரிஞ்சுப்பாங்கலானு சந்தேகம் தான்..காரணம்..இப்போ டக்னாலோஜி ரொம்பவே முன்னேறிருச்சு..கார்டூன்ஸ்..ஜெடிக்ஸ்..அனிமேஷன் னு கொஞ்சம் advanced ஆ இருக்காங்க இப்போலாம் பசங்க...நான் கூட பார்த்திருக்கேன்..நீதி கதைகளே இப்போலாம் மாடர்ன் கதைகளாக உருமாற்றம் செஞ்சு ஒளிபரப்புராங்களே..ஜெடிக்ஸ் இல் vikki aur vedhaal..எபிசொட் டில் ஒவ்வெரு க்ளைமாக்ஸ் ம் ஒரு அழகான நீதியை உணர்த்தும் கொஞ்சம் ஹுமர் கலந்து...!நம் தமிழில் நேரடியாக தயாரித்து ஒளிபரப்பும் குழந்தைகள் விருப்பங்கள் கம்மி தமிழ் அரசி ..அதுக்கு பதிலாய்..அவங்க..செம அழுகாச்சி சீரியல் எடுத்துரலாம் திட்டம் போட்ருவாங்க..எந்த மொழி உருவாக்கம்னாலும்...இன்றைய trend க்கு சில அற்புதமான நிகழ்ச்சிகள் இருக்குது பா..!!

Madurai Always Rocks...

பார்த்தேன்! பார்த்தேன்! பார்த்தேன்! விழியது

பூத்தேன்! பூத்தேன்! பூத்தேன்! இனி இங்கே

உந்தன் குரல்தான் கேக்கலியே!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...

மேலும் சில பதிவுகள்