மைக்ரோவனில் சாண்ட்விச் செய்ய முடியுமா?

தோழிகளே,

எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.மைக்ரோவனில் சாண்ட்விச் செய்ய முடியுமா?ஏனெனில் நான் இப்போதுதான் மைக்ரோவன் வாங்கியுள்ளேன்.என் கணவர்க்கு லஞ்ச் செய்து குடுத்து அனுப்ப வேன்டும்.

சாண்ட்விச்! டோஸ்டா!!

முயன்றதில்லை. மைக்ரோவேவில் பாண் சுட வைத்தால் உடனே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் தன்மை மாறிவிடுமே! நன்றாக இராது.

ம்... பார்க்கலாம், மற்றவர்கள் என்ன சொல்கிறார்களென்று.

‍- இமா க்றிஸ்

சாண்ட்விச் சூடு பண்ணலாம்... அதுவே அத்தனை சரியா இருக்காது... இமா சொன்ன மாதிரி ரொம்ப நேரம் வைத்திருக்க இயலாது. அதனால் என்னுடைய பதில் "சரியா வராது".

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்