த்ரெட்டிங் செய்வது எப்படி?

தேதி: August 11, 2010

5
Average: 4.1 (16 votes)

 

த்ரெட்டிங் நூல்

 

முதலில் ஒரு பஞ்சை கொண்டு புருவத்தில் உள்ள ஈரப்பசை மற்றும் எண்ணெய் பசையை துடைத்து எடுத்து விடவும். பிறகு சிறிது பவுடரை இரு புருவத்தில் தடவிக் கொள்ளவும். அவரவரின் முகத்திற்கு ஏற்றாற் போல் புருவத்தை வடிவமைக்க வேண்டும். ஒரு சிறிய ப்ரஷ்ஷால் புருவத்தை சீவி சரி செய்துக் கொள்ளவும்.
பிறகு த்ரெட்டிங் நூலை கையில் எடுத்துக் கொண்டு நூலின் முனையை வாயில் பிடித்துக் கொள்ளவும். அதன் பின்னர் நூற் கண்டை இடது கையில் பிடித்துக் கொள்ளவும். வலது கையால் நூலை இழுத்து பிடிக்கவும். அப்படியே வலது கையில் இருக்கும் நூலை 8 அல்லது 10 முறை சுற்றவும். அதன் வடிவமைப்பு வலது புறம் சிறியதாகவும், இடது புறம் பெரியதாகவும் இருக்கும்.
புருவத்தின் கீழ் பகுதியில் இடமிருந்து வலம் தான் முடியை நீக்க வேண்டும். இப்போது த்ரெட்டிங் செய்து கொள்பவர் வலது கையால் மேல் புறத்தையும் இடது கையால் கண்களை மூடி பிடித்துக் கொள்ளவும்.
புருவத்தின் கீழ் பகுதியில் முடியின் வளர்ச்சிக்கு எதிர் திசையில் கையில் சுற்றி வைத்திருக்கும் நூலை இடது கையில் இருக்கும் 8 முறை சுற்றிய இடத்தின் உள் அந்த முடியில் வைக்கவும். வைத்து வலது கையில் பிடித்திருக்கும் நூலை கட்டை விரலால் அழுத்தவும். இப்போது முடி நீங்கி விடும்.
அடுத்த அடுத்த முடியை நீக்கவும். கீழ் பகுதி முழுவதும் அதன் வடிவத்திற்கேற்ப முடியை நீக்கிக் கொள்ளவும்.
இப்போது மேல்பக்க முடியை நீக்க வேண்டும். இதற்கும் இடமிருந்து வலது பக்கமாக முடியை நீக்க வேண்டும். இரு புருவத்துக்கும் மத்தியில் உள்ள சின்ன சின்ன முடியையும் நீக்கிக் கொள்ளவும்.
இதேப் போல் வலதுப்பக்கம் உள்ள புருவத்தின் முடியையும் நீக்கிக் கொள்ளவும்.
த்ரெட்டிங் செய்து முடித்ததும் மீண்டும் ப்ரஷ்ஷால் புருவத்தை சீவி விடவும். இப்போது புருவம் முகத்திற்கு ஏற்றாற் போல் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
நாகையில் அழகுநிலையம் மற்றும் பயிற்சி மையம் வைத்து அதனை சிறப்பாக நடத்தி வரும் திருமதி. நிர்மலா அவர்கள், அறுசுவை நேயர்களுக்காக இந்த த்ரெட்டிங்கை செய்து காட்டியுள்ளார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

சுலபமா சொல்லி கொடுத்துற்கீங்க!

வாழ்த்துக்கள்.

நேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி!
அன்புடன்
ஆமினா

நிர்மலா மேடம்,
நல்ல குறிப்பு
அறுசுவையில் நிறைய விஷயம் சொல்லுங்க
மேலும் குறிப்புகள் தர வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்,
கவிதா

பயனுள்ள குறிப்பு. பாராட்டுக்கள் அறுசுவை டீம் & நிர்மலா.

‍- இமா க்றிஸ்

is there any way to do self thredding or any machines available ? please let me know

ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta