அரட்டை அரங்கம் 2010 பகுதி -‍ 19

அரட்டை அரங்கம் 2010 பகுதி ‍ 19

இங்க‌ வ‌ந்து தொட‌ருங்க‌ அர‌ட்டையை...

அரட்டை 19- ஐ தொங்க முத ஆளா நானே வந்துட்டேன். என்ன இன்னும்
யாரைய்மே காணோம்?

இலா, மதிய வணக்கம். லஞ்ச் ஆச்சாப்பா?

கோமு, இரவு வணக்கம். என்னப்பா தூங்கலியா?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

இலா,

குட் மார்னிங்.

அரட்டை 18 - 200 பதிவுகள் ஆகிடுச்சே, அடுத்த இழை தொடங்கக் காணோமேன்னு நினைச்சேன். ஆரம்பிச்சாச்சு.

பட்டிமன்றத்துக்கு எந்த சைட்னு தீர்மானிச்சாச்சா?

ராவணன் படம் பாத்தேன் இன்னைக்கு. எனக்கு பிடிச்சுதான் இருந்தது. நீங்க இந்த படம் பாத்தீங்களா?

அன்புடன்

சீதாலஷ்மி

கல்பனா,

அங்கே உங்க பதிவு பார்த்தேன். குட்நைட் சொல்லிட்டு கிளம்பலாம்னு நினைச்சேன். இலாவைப் பார்த்ததும் இங்கே ஒரு குட்மார்னிங் சொல்லியாச்சு.

சரி, நான் கிளம்பறேன். நீங்க எல்லாரும் பேசிட்டு இருங்க. நான் காலையில் வந்து பார்க்கிறேன். சரியா

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா, குட் நைட். நாளைக்கு கண்டிப்பா பேசலாம். உங்க பேத்தி பேர் சொல்லவே இல்லை.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஹாய் ! எல்லாரும் நலமா?
இங்க அரட்டை தொடங்கிட்டு வேறே எங்கயோ போயிட்டேன்...

வாங்க மிசஸ் கோமு ! எப்படி இருக்கீங்க?

கல்பனா! இது இப்பொ லஞ்ச் டைம் தான் ஆனா இன்னும் யோசிக்கலை என்ன செய்யன்னு...

சீதாம்மா! நல்லிரவு! பட்டிக்கு வர ரெண்டு நாளாகும் எனக்கு .. கொஞ்சம் வெளியூர் போக வேண்டி இருக்கு அதுக்கு ரெடியாகிட்டு இருக்கேன்.. என் பக்கம் உறவுக்கு தான்.. இந்த வீட்டில பொறக்கணும்.. இவங்கல்லாம் உறவாக இருக்கணும் என்பது கடவுள் நமக்கு அளித்தது.. அங்க சாய்ஸ் இல்லை.. அப்படி சாய்ஸ் கொடுக்கற அளவுக்கு இருந்தா நான் கடவுளாக இருந்தால் முடியும்... If I knew all the answers I would be God !

இப்போ திடீர்ன்னு(3 வருஷமா) ஒரு நல்லெண்ணம் :)) ஆன்லைன் டவுன்லோட் படங்கள் பார்ப்பதில்லைன்னு.. கஷ்டபட்டு ப‌டமெடுக்றாங்கன்னு... ஒரிஜின‌ல் டிவிடி கிடைத்தால் பார்க்க‌ணும்...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

கல்பனா,
நல்லா இருக்கீங்களா? நட்பின் பக்கம் இருந்துகிட்டு எல்லாரையும்
ஓட ஓட விரட்டீறீங்களே.வெரிகுட்.நட்பு பக்கம் வலு சேர்ப்பதில்
பெரிய சக்தியா இருக்கீங்க, நட்பு வெற்றிபெற வாழ்த்துக்கள்.
நட்புடன்
ஆஷிக்

ஹாய் ஆஷிக், உங்களுக்கு முதல்ல என்னோட மனம் கனிந்த புனித ரமலான் வாழ்த்துக்கள். எப்படி இருக்கீங்க?

//நட்பின் பக்கம் இருந்துகிட்டு எல்லாரையும்
ஓட ஓட விரட்டீறீங்களே.வெரிகுட்.நட்பு பக்கம் வலு சேர்ப்பதில்
பெரிய சக்தியா இருக்கீங்க//

நிறைய பொய் சொல்ல ஆரம்பிச்சுட்டிங்க போலிருக்கு. நானெல்லாம் பெரிய சக்தி இல்லீங்க. ராமருக்கு உதவிய ஒரு சின்ன அணில் மாதிரி எங்க அணிக்கு என்னால முடிஞ்சத செய்றேன் அவ்வளவுதான். நம்ம விட ஜாம்பாவன்ங்கள்ளாம் ரெண்டு பக்கமுமே இருக்கறாங்க பா. நான் அப்படி நல்லா பேசுறதா நீங்க பீல் பண்ணினா அதுக்கு காரணமும் உங்கள மாதிரி நல்ல பிரெண்ட்ஸ் தான். நீங்க குடுக்கற Encouragement தான் என்னை இப்படி பேச வச்சதுன்னே வச்சுக்கங்க. உங்க வாழ்த்துக்கு நன்றி ஆஷிக் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

thank you Kalbana,
உங்களுக்கும் எனது ரமமலான் வாழ்த்துக்கள்
நானும் உங்களுக்கு சப்போர்ட்க்கு வரனும்னுதான் நினைக்கிறேன்
ஆனா சில பேர பாத்தா பயமா ஆயிருது அதான்.எதாவது சொல்லிருவாங்களோனு
சில நேரம் எனக்குமே பேசதெரியலேனு நினைச்சு தயக்கமா ஆயிருது
அதான், இருந்தாலும் முயற்சி பன்றேன்.
by the way..
நீங்க நோன்பு கஞ்சிய பத்தி எதோ கேள்வி கேட்டிங்களோ
கேட்டிருந்தீங்கனா இங்கே போய் பாருங்க
http://www.arusuvai.com/tamil/node/15910#comment-113200
நட்புடன்
ஆஷிக்

ஆஹா! ஆஷிக் இப்ப தான் முதன் முறையா உங்கள் பெயர் குறிப்பிட்டு பதிவு போடறேன்.. உங்க பதிவெல்லாம் பாத்தா பயப்படற ஆள் மாதிரி தெரியல.. சில நேரங்களில் உங்க கருத்துக்களை ரொம்பவே அழுத்தமா சொல்லுறீங்க்ல்ல... இப்ப பயம்ன்னு சொன்னது பதுங்குவதற்க்கா???
பயப்ப‌டாதீங்க... யாரும் உங்கள அடிக்க மாட்டாங்க.. தெகிரிய‌மா போங்க பட்டிக்கு :):):)

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை இருக்கு " Swallow your pride " என்று... திட்டினா சிரிச்சிகிட்டே வாங்க பழக்கிட்டா போச்சு...

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்