யாராவது ஆலோசனை சொல்லுங்கள் இரவில் சமைப்பது.

என் கணவர் காலை 7 மணிக்கு வேலைக்கு கிளம்புகிறார், நான் 5.30 மணிக்கு எழுந்து சமைத்து விடுவேன், சில சமயம் பருப்பு,மொசசை குழம்புகள் வைக்கும் போது குக்கரில் வைப்போமில்லையா நான் சிங்கப்பூரில் வசிப்பதால் அதிகாலை விசில் ஒலி வரக்கூடாது என்கிறார்கள், நான் இரவே வேகவைத்து எடுத்து காலையில் தாளித்துகொள்ளலாமா?யாராவது ஆலோசனை சொல்லுங்கள்.

;)))

இங்கும் இது போல்தான். நாங்களும் காலை மாலையில் சத்தமான வேலைகளைத் தவிர்ப்போம். இது மட்டுமல்ல, சமையல் வாசனை கூட மற்றவர்களுக்குப் பிரச்சினையாக இல்லாமல் பார்த்துக் கொள்வோம். எல்லாம் நாளை எமக்கும் இது போல் ஒலி இடைஞ்சல்கள் வராது இருக்க வேண்டும் என்கிற நல்லெண்ணம்தான். ;) ஊரோடு ஒத்து வாழ்த்தால் சந்தோஷமாக இருக்கலாம் இல்லையா!

‍- இமா க்றிஸ்

நாங்க போனமாதம் சிங்கப்பூர் போய் வந்தோம். எங்க உறவினர்களும் கூட
வந்தார்கள். எல்லாருமே சொந்தக்காரங்க வீட்டில்தான் தங்கினோ.ம். குழந்தைங்க 5பேரு, நாங்க பெரியவங்க 7 பேருன்னு வீடே கலகலதான். சிங்கப்பூர்ல பாக்கவேண்டிய இடங்கள் எல்லாம் பகல் பூராவும் சுற்றிபார்த்துவிட்டு இரவுதான்
வீடு திரும்புவோம். சப்பிட்டு முடித்து ஏதானும் கார்ட்ஸோ ஏதானும் விளையாடுவோம். ஒரு நாள் தாயக்கட்டை உருட்டி தாயம் விளையாடினோம்
10மணிக்கு கீழ் வீட்டுக்காரா வந்து கதவை தட்டி உங்க வீட்லேந்து கொட, கொடன்னு ரொம்ப சத்தம் வரது. எங்கலுக்கு தூக்கம் டிஸ்டர்ப் ஆரதுன்னு.
இங்கெல்லாம் இரவு சத்தமே போடக்கூடாது என்று கோபமாக அட்வைஸ்
பண்ணிட்டு போனார்கள். தாயக்கட்டை சத்தமே கூடாதுன்னு சொல்ரவா குக்கர் விசில் சத்தத்தை எல்லாம் எப்படி தாங்கிப்பா. இல்லியா.

ஹலோ! பொன்னி நானும் தஞ்சைதான்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

மேலும் சில பதிவுகள்